இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 பிப்ரவரி, 2013

வானம் என்ற பாதுகாப்புக் கூரை! அதை நினைவூட்ட வந்த எரிகல் மழை!




அல்லாஹ்வே உங்களுக்கு இந்த பூமியை வசிப்பிடமாகவும், வானத்தை கூரையாகவும் அமைத்தான். (திருக்குர்ஆன் 40:64)

இந்த வசனத்தில் பூமியைச் சூழ்ந்திருக்கும் ஆகாயம் பூமிக்கு ஒரு கூரையாக
அமைக்கப்பட்டுள்ளது எனும் செய்தியைத் திருக்குர்ஆன் கூறுகிறது. திருக்குர்ஆனுடைய  இந்தக் கூற்று அண்மைகாலம் வரையிலுமே நாத்திகர்களால் விமர்சிக்கப்பட்டு வந்துள்ள செய்தியாகும்  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 பூமி மனிதனுக்கு வசிப்பிடமாக்கப்பட்டுள்ளது , மேலும் ஆகாயம் என்பது
வெறும் ஒரு வெற்று வெளியின் பெயரல்ல. உண்மையிலேயே அப்படி ஒன்று  படைக்கப்பட்டுள்ளது என்ற அறிவியலை அறிவிப்பதோடு பூமியைப்
பொருத்தவரை ஆகாயத்திற்கு ஒரு சிறப்பான பணியை வழங்கியுள்ளதாகவும் இறைவன் அவனது நூலாம் திருக்குர்ஆனில் கூறுகிறான்.  பூமியைச்  சூழ்ந்துள்ள ஆகாயம் பூமிக்கு ஒரு கூரையாக  அமைய வேண்டும் என்பதே அந்தப் பணியாகும். நாம் வீடுகளுக்குக் கூரைகளை அமைக்கிறோம்.
ஆனால் பூமிக்கு எதற்காக கூரை? பூமிக்குக் கூரை இல்லையென்றால் பூமிக்கும் ஏதேனும்  தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டா?
சீறிவரும் விண்கற்கள்

நமது பூமி சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகும். நான்காவது மற்றும் ஐந்தாவது கோள்கள்  முறையே செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவையாகும். இவ்விரு கோள்களுக்கு இடையில்  ஆயிரக்கணக்கான குறுங்கோள்களுடன் (Minor Planets) கோடானு கோடி கணக்கான விண்கற்கள்
மிக அகல மான வட்டப் பாதை வழியாக சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை இவ்வாறு சூரியனைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும்போது அவற்றுள் சில பாதை விலகி பூமிக்கு அருகில்  வந்து விடுகின்றன. அப்போது அவை பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியின் மீது
விழுந்து விடுகின்றன எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள்.

அறிவியலாளர்களின் மேற்கண்ட கூற்றிலிருந்து இந்தக் கல்மழையிலிருந்து பூமி  காப்பாற்றப்பட வேண்டும் என்றும் இல்லையேல் அது பூமிக்கு ஆபத்தாக முடியும் என்பதும்  எளிதாகப் புலனாகும். ஏனெனில் விண்கற்களின் வேகம் அவ்வளவு அபாரமானதாகும். விண்கற்கள் பெரும்பாலும் சிற்றுருவம் கொண்டவையே ஆகும். அவை சிறு கூழாங் கற்களின் (Pabbles)
பருமனிலிருந்து மணற்துளி வரையிலானவைகளாகவே காணப்படுகின்றன. இருப்பினும் இவை  அமிதமான வேகம் கொண்டவைகளாக இருப்பதால் இதன் தாக்குதல் பூமிக்கு  கூரையில்லாதிருப்பின் மிக ஆபத்தாகவே அமையும்.
ஒரு விண்கல் ஒரு அங்குலத்தின்  நாற்பதில் ஒருபங்கு பருமன் மட்டுமே இருந்த போதிலும் அது வினாடிக்கு 40 மைல் வேகத்தைப் பெற்று விட்டால் ஒரு அங்குலம் பருமன் கொண்ட இரும்புத் தகட்டை கூட துளைத்து விடும் ஆற்றல் பெற்றதாக அது மாறிவிடும்.
 உயிரின வாழ்விற்கு ஆகாயக் கூரையின் அவசியம்

இப்படி விண்வெளிக் கப்பல்களையே துளைக்கும் ஆற்றல் இந்த மணற்துளி போன்ற நுண்ணிய கிரகங்களுக்கு (Minute Planets-இவை சூரியனைச் சுற்றி வருகின்ற காரணத் தாலேயே இவைகளுக்கு கிரகங்கள் எனும் பெயர் கூறப்படுகிறது.) இருக்குமாயின் புவிவாழ்  உயிரினங்களின் உடலைத் துளைப்பது அப்படியொன்றும் கடினமான காரியம் இல்லை என்பது
தர்க்கத்திற்கு இடமில்லாத உண்மையாகும்.

இவ்வளவு ஆபத்தான உலோகத் தகட்டையே துளைக்கும் ஆற்றல்
பெற்ற 10 கோடி விண்கற்கள் ஒவ்வொரு நாளும் பூமியின் மீது வீழ்ந்து கொண்டிருந்தால்  இந்த பூமியில் மனிதர்கள் மட்டுமின்றி எந்த ஒரு உயிரினமும் வாழ்தல் சாத்தியமாஉலோகத்தை விட ஆற்றல் வாய்ந்த உடலுள்ள உயிரினம் ஏதேனும் இவ்வுலகில் உண்டா? ஆயினும் இந்த பூமியில் நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக தொல்லையின்றி சுகமாக வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம். இது எப்படி சாத்தியமாகிறது? என்பதை சிந்தித்துப் பார்க்க  வேண்டும். இதிலிருந்து பூமியை நோக்கிப் பாய்ந்து வரும் விண்கற்களுக்கும் பூமிக்கும் இடையில் ஒரு கூரையைப் போன்று செயல்படும் ஒரு பொருள் இருக்கிறது என்பது மிகத் தெளிவான செய்தியாகும்.
``ஒவ்வொரு நாளும் 100,000,000 - ஐவிட அதிகமாக பூமியின் மீது வீசப்படும் விண்கற்கள் இடைவிடாத அருவி போன்று காற்று மண்டலத்தில் பொழிகின்றன. நமது பூமியைச் சூழ்ந்துள்ள  காற்றுப் போர்வை (Air Blanket) இல்லாதிருப்பின் அவை பூமியின் தரைபகுதியை இடை விடாத தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கும். விண்கற்கள் என அழைக்கப்படும் இவை காற்றில்
ஏற்படும் உராய்வின் காரணமாக வெப்பப்படுத்தப்பட்டு உருகி அல்லது எரிந்து சாம்பலாக மாற்றப்பட்டு பூமியின் விரிவான பரிமாணத்தில் தங்களது பங்கைச் செலுத்தும் பொருட்டு  காற்று மண்டலத்தில் அடையாளம் தெரியாதபடி தங்கிவிடுகிறது.
(
பக்கம் - 131, நியூ ஹாண்ட் புக் ஆஃப் ஹெவன்)

இரத்தின சுருக்கமான இந்த விளக்கம்  விண்கற்களை, பூமியை தாக்கவிடாமல் காற்று மண்டலம் எவ்வாறு தடுக்கிறது என்பதைக் கூறுகிறது.
இந்த பூமியைச் சூழ்ந்துள்ள வானம் நமக்குக் கூரையாகச் செயல்படவில்லையாயின்...! இங்கு  எந்த ஒரு உயிரின மேனும் வாழ்ந்திருக்க முடியுமா?

விண்கற்களைப் பற்றி இதுவரை நாம் அறிந்த அறிவியல் உண்மைகளில் எந்த ஒன்றுமே  பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் அறியப்பட்டிருக்கவில்லை. பூமியைச் சூழ்ந்திருக் கும் காற்று மண்டலம் வீட்டுக்கு கூரை போன்று ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே  இருக்கிறது என்றும் அதற்கப்பால் காற்று மண்டலம் இல்லையென்றும் ஒருவர் அறிந்திராவிட்டால் பூமிக்குக் கூரை உண்டு என அவரால் கூறி இருக்க முடியுமா?

மேலும் பூமியின் மீது கல் மழையும் பெய்து கொண்டிருக்கிறது என்றும் காற்று மண்டலமே  அதைத் தடுத்து பூமியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்திராவிடில்  பூமிக்குக் கூரையுண்டு என அவரால் கூறியிருக்க முடியுமா?

காற்று மண்டலத்தை பூமியின் கூரை என்று கூறியதிலிருந்து இந்த வீடான பூமி போகும்  இடத்திற் கெல்லாம் அதன் மீது பொருத்தப்பட்டாற்போன்று இந்தக் காற்று மண்டலமும்  போகிறது என்றும், பூமி சுழலும்போது காற்று மண்டலமும் அதனுடன் சுழல்கிறது என்றும்  ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் பூமியின் மீது ஒரு கூரை இருக்கிறது என்று அவரால்  எப்படிக் கூறியிருக்க முடியும்?

மிக நிச்சயமாக குறைந்தபட்சம் மேற்கண்ட அறிவியல் செய்திகளையெல்லாம் தெரிந்து  கொள்ளாமல் பூமிக்குக் கூரை உண்டு என்று ஒருவரால் கூற முடியாது. எனவே இது நிச்சயமாக  இறைவேதமே என ஏற்பதில் இன்னும் என்ன தயக்கம்? ஒரு மானிடனுடைய அறிவிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் இவ்வளவு ஆழமான அறிவியல் உண்மைகள் பிறப்பெடுக்க முடியுமா?
(நன்றி: ஏ. கே. அப்துல் ரகுமான்)

இறைவனின் அருட்கொடையை நினைவூட்ட வந்த எரிகல் மழை!

ரஷ்யாவில் எரிகல் சிதறல் மழை; 950 பேர் காயம்

பிபிசி செய்தி : 15 பிப்ரவரி, 2013  
ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள யூரல் மலைத்தொடரின் அருகே விண்ணிலிருந்து தீச்சுவாலையுடன் விழுந்த எரிகல் ஒன்றிலிருந்து பயங்கர வேகத்தில் வீசி எறியப்பட்ட சிதறல்கள் பல இடங்களில் விழுந்து வெடித்ததில் 950க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஆறு நகரங்களில் எரிகல் சிதறல்களால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் சார்பாக பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒரு ஒளிக் கீற்றாக எரிகல் காற்று மண்டலத்தில் சீறிச் செல்வதையும், அதன் வால் பகுதியில் பயங்கர வெளிச்சத்துடன் தீப்பிழம்பு வெடிப்பதையும் வீடியோ படங்கள் காட்டுகின்றன.
யூரல் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் என்ற ஊரில் அலையலையாய் வந்த எரிகல் சிதறல் மழையால் ஏற்பட்ட அதிர்வலையில் கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்தன, கார்களின் அலாரங்கள் அலர ஆரம்பித்தன.
என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்காக வெளியில் ஓடிவந்த மக்களின் உடல்களில் கண்ணாடித் துகள்கள் பாய்ந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எல்லோரும் பரபரப்பாக தொலைபேசியில் ஒரே நேரத்தில் பேச முற்பட, அந்தப் பகுதியில் கைத்தொலைபேசி மின் அலைச் சேவை பளு தாளாமல் சற்று நேரத்துக்கு செயலிழந்து போனது.
இந்த எரிகல்லின் சில துண்டுகள் செர்பகுல் என்ற ஊர் அருகே இருக்கின்ற நீர்த்தேக்கத்தில் விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இறைவனின் எச்சரிக்கை:
முன்னர் கூறப்பட்ட அறிவியல் உண்மையை இந்த செய்தியோடு பொருத்திப் பாருங்கள். இறைவன் விண்கற்களின் தாக்குதலில் இருந்து பூமிப் பந்தின் மீது வாழும் உயிரினங்களைக் காக்க காற்றுமண்டலம் என்ற பாதுகாப்புக் கவசத்தை ஏற்பாடு செய்திருந்தாலும் அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாது தான்தோன்றித்தனமாக வாழும் மக்களுக்கு இவ்வாழ்வின் நோக்கத்தை நினைவூட்டுவதற்காக தனது பாதுகாப்பைத் தளர்த்தவும் செய்வான் என்பதை அல்லவா இந்த செய்தி நமக்கு அறிவுறுத்துகிறது. இதோ இறைவன் அதையும் குறிப்பிடுகிறான்.
67:17. அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக