இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 பிப்ரவரி, 2013

உருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள்

Related image

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே மனிதர்களின் வணக்கத்துக்குத் தகுதியானவன். அவன் மட்டுமே சர்வவல்லமை கொண்டவன், நமது பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியவன். இவ்வுலகுக்கு அவ்வப்போது வந்த அனைத்து இறைத்தூதர்களும் அந்த இறைவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக எளிமையான முறையில் வணங்கவே கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் அந்த சர்வவல்லமை கொண்ட இறைவனுக்கு பதிலாக உயிரற்ற உணர்வற்ற பொருட்களைக் காட்டி இவற்றை கடவுள் என்று கற்பித்து வணங்கும்போது அதன் விளைவாக மக்களின் உள்ளங்களில்  இருந்து இறையச்சம் அகன்று போவதால் சமூகத்தில் பாவங்கள் மலிகின்றன. ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் வணங்கப்படும் நிலையில் ஒரே மனித குலம் பல ஜாதிகளாகவும் பிரிவுகளாகவும் கூறுபோடப்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்நிலை மாற ஒரே வழி ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என்ற கொள்கையை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வது மூலமே சாத்தியம். இதைத்தான் இறைவனின் இறுதித் தூதர் மூலமாக மறு அறிமுகம் செய்யப் பட்ட இஸ்லாம் என்ற மார்க்கம் உலகெங்கும் செய்து வருகிறது.
இன்று உங்கள் கண் முன்னால் என்ன நடந்து கொண்டிருக்கிறது சிந்தித்துப் பாருங்கள்! உணர்வற்ற  உயிரற்ற உருவங்களையும்  சமாதிகளையும் காட்டி இவர்தான் கடவுள் அல்லது  இதுதான்  கடவுளின்   உருவம்  என்றோ  சொன்னால்  எவ்வளவு  பெரிய  பொய் அது! அதிகமான பேர் அந்தப் பொய்யை நம்பி விட்டால் அது உண்மையாகி விடுமா ஆதியும் அந்தமும் அற்ற என்றென்றும் உயிர் வாழும் சர்வ வல்லமை கொண்ட இறைவன் எங்கே? மனித கரங்கள் உருவாக்கிய உயிரற்ற உருவங்கள் எங்கே? எதனோடு எதனை ஒப்பாக்குகிறார்கள் பாருங்கள்! ?
மோசடிகளில் எல்லாம் மிகப் பெரிய மோசடி இது:
இந்த மாபெரும் பொய்யை மையமாக வைத்து மிகப்பெரிய மோசடி அரங்கேறுகிறது. கண்டதெல்லாம் கடவுள் என்று மக்கள் நம்பத் தலைப்படும் போது அதைச்சுற்றி இடைத் தரகர்கள் உருவாகிறார்கள். பின்னர் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றாகிறது. அவர்கள் தம் மனம் போனபடி மக்களை ஏய்த்து தம் வயிற்றை நிரப்பிக் கொள்ள பாவ பரிகாரம், தோஷ பரிகாரம் என்றெல்லாம் பெயர் சொல்லி பாமரர்களின் சம்பாத்தியங்களையும் செல்வங்களையும்  கொள்ளை அடிக்கிறார்கள். படைத்த  இறைவனை வழிபடுவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை. அவனை நேரடியாக வணங்குவதற்க்குத்தான் இறைத்தூதர்கள் கற்றுத்தந்தார்கள். அவனை அழைப்பதற்கோ, நம் தேவைகளை கேட்பதற்கோ நமக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தரகர்களும் தேவை இல்லை.எந்த வித வீண் சடங்குகளுக்கும் அங்கு இடமில்லை. ஆனால் படைத்தவனை விட்டு விட்டு போலி தெய்வங்களை வணங்க முற்படும்போது இறைவழிபாடு என்பது கடினமாக்கபடுகிறது. வீண் சடங்குகளும் மூட நம்பிக்கைகளும்  இடைத்தரகர்களும் இடையே நுழைந்து இது  மாபெரும் வியாபாரமாக்கப் படுகிறது. மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்கான எளிமையான மார்க்கமாக இது மாறிவிடுகிறது. மிக மிக வேகமாகப் பரவும் நாசக்கார மோசடி இது. எந்த அளவுக்கு என்றால் நாட்டின் இயற்க்கை வளங்களும் பொருள் வளங்களும் மனித வளங்களும் சூறையாடப்பட்டு  நாடு பிற்போக்கான நிலைக்கு தள்ளப்படுகிறது. வளங்கள் பல இருந்தாலும் வறுமையும் பஞ்சமும் தலைவிரித்து ஆடும் நிலை ஏற்படுகிறது.
இதற்கு உலகிலேயே மிகப்  பெரிய உதாரணம் எது தெரியுமா?  வேறு ஏதுமல்ல, நமது தாய்த்திரு நாடுதான்! இயற்கை வளங்களாலும், செயற்கை வளங்களாலும், மனித வளத்தாலும் அறிவு வளத்தாலும் ஒருசேர  தன்னிறைவு பெற்றுள்ள நாடு  நம்நாட்டைப் போல் உலகில் எங்குமே இல்லை. உலகிலேயே முன்னிலை வல்லரசாக திகழ வேண்டிய நம்மை பின்னுக்குத் தள்ளி வைத்திருப்பது எது? நாம் அனைவரும் அவசரமாக ஆராய வேண்டிய கேள்வி இது.
கீழ்கண்ட கேள்விகளுக்கு நாம் விடை தேடினாலே நமக்கு உண்மை தெரிந்து விடும்.
அ. இந்நாட்டில் எந்த வித உற்பத்தியோ சேவையோ மக்களுக்கு தராமல் மக்களின் பணத்தை மட்டும்  கறந்து கொண்டிருக்கும் வியாபாரம் எது?
ஆ. மக்களின் குருட்டு நம்பிக்கைகளைத் தவிர வேறு எந்த வித முதலீடும் மூலதனமும் இல்லாமல் மூலைக்கு மூலை, நாளுக்கு நாள் பெருகி வரும் வியாபாரம் எது?
இ.  நாட்டின் பொருளாதாரத்துக்கோ மக்களின் நலனுக்கோ எவ்வித பங்களிப்பும் செய்யாது பெரும் ஊதியங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் நபர்கள் யார்?
ஈ.  நாட்டின் கறுப்புப் பண முதலைகளுக்கும் சுரண்டல்காரர்களுக்கும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் அலைகழித்துக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டாளிகள் யார்?
இவற்றுக்கும் இன்னும் இவை போன்ற கேள்விகளுக்கும் நாம் பெறும் ஒரே  விடை - இறைவன் அல்லாதவற்றை கடவுளாக சித்தரித்து செய்யப்படும் மோசடி வியாபாரமும் அந்த வியாபாரிகளும் ஊழியர்களும்தான்.
இறைவன் அல்லாதவற்றை வணங்கும் போது,  நாட்டின் செல்வம் எவ்வாறு கொள்ளை போகிறது என்பதை உணர சில உதாரணங்களை இங்கு நாம் எடுத்து வைக்கிறோம். இந்த மோசடி எல்லா மதங்களின் பெயராலும் நடைபெறுகிறது. உதாரணங்களை இஸ்லாத்தின் பெயரால் தர்கா என்ற மோசடியில் இருந்து ஆரம்பிப்போம். பொருட்செலவு இல்லாத சடங்குகள் இல்லாத - இறைவனை நேரடியாக வணங்குவதற்கு உரிய இடம் பள்ளிவாசல். ஆனால் இதற்கு நேர் விபரீதமானது தர்கா என்பது. இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் சிலர் முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர  இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  இதில் தர்காக்களின் பங்கு என்ன என்பதை அறிய கீழ்க்கண்ட தகவல்களை உதாரணமாகத் தருகிறோம்.: 
1) டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India) 26 செப்டம்பர் 2009 :
    அஜ்மீர்  தர்கா என்பது இந்தியாவில் பிரபலமாக அறியக்கூடிய ஒன்று. இங்கு அன்றாடம் வந்து செல்லும் பக்தர்கள் ஏராளம் . "இந்த தர்காவிற்க்கு ஆயிரக்கணக்கில் பக்தர்களும், அரசியல் வாதிகளும் , திரையுலக நட்சத்திரங்களும் வருகின்றனர். கோடிக்கணக்கில் இதற்க்கு வருமானம் வந்தாலும் அதற்கு கணக்குகள் வைக்கப் படுவதில்லை. இந்த தர்காவின் பெரும்பாலான காதிம்கள் என்று அறியப்படும் பொறுப்பு தாரிகள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களுக்கு உலகெங்கும் பரவிக்கிடக்கும் சொத்துக்கள் உள்ளன. உதாரணமாக பல காதிம்களுக்கு வெளிநாடுகளில் நிலங்களும் சொத்துக்களும் உள்ளன."
  இன்று சுமார் 5000 காதிம்கள் உள்ளனர். இவர்கள காஜாவின் பரம்பரையில் வந்தவர்கள் அல்லது காஜாவுக்கு சீடர்களாக இருந்தார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இவர்களை காதிம்களாக ஆக்கவில்லை. 
2) NCR Tribune சண்டிகரில் இருந்து வெளியாகும் பத்திரிகை (24.ஜூன் 2003) கீழ்கண்ட தகவலை தருகிறது.
டில்லி உயர்நீதி மன்றத்தில் தலைநகரில் அமைந்துள்ள ஹஜரத் நிஜாமுத்தீன் அவுலியாவின் தர்கா நிர்வாகத்துக்கு எதிராக அரசு சாரா நிறுவனம்  (NGO) ஒன்று பொதுநல வழக்கு(PIL)  ஒன்றைத் தொடுத்துள்ளது. தர்காவின் தினசரி வருமானம் ரூ. 20000 த்துக்கும் குறைவதில்லை. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு இலட்சத்தைத் தாண்டி விடுகிறது. இந்த வருமானத்தின் பெரும்பகுதி பிர்ஜாதக்களாலும் அவர்களின் ஏஜெண்டுகளாலும் கையாடல் செய்யப் படுகிறது. தினசரி நன்கொடைகளின் சரியான கணக்கு வைக்கப் படுவதில்லை.
இப்போது நீங்கள் இந்தியாவில் உள்ள மொத்த தர்காக்களின் எண்ணிக்கையையும் மனதில் கற்பனை செய்து கணக்கிட்டுப் பாருங்கள். நம் நாட்டின் பொருளாதார நாசத்திற்கு தர்காக்களின் பங்கு எவ்வளவு என்பதை உங்களால் உணர முடியும்.
 இஸ்லாத்தின் பெயரால் இம்மோசடி நடப்பது போலவே மற்றுள்ள  மதங்களிலும்  எவ்வாறு மக்கள் இறைவனின் பெயரால் கொள்ளை அடிக்கப் படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட ஒருசில தகவல்களைச்  சுருக்கமாகக் காண்போம். (விரிவாக ஆராய நீங்களே அதிகம் தகுதி வாய்ந்தவர்கள்!)
நமது நாட்டின் ஒரு சில கோவில்களின் வருட வருமானத்தை உதாரணத்திற்காக கீழே தருகிறோம்.
திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் ரூ  750  கோடி 
ஷிருதி சாய் பாபா கோவில், மகாராஷ்டிரா -ரூ.210 கோடி 
சித்தி விநாயகா கோவில், மும்பை - ரூ.46 கோடி 
மாதா வைஷ்ணவி தேவி கோவில் ஜம்மு- ரூ. 500 கோடி 
சபரிமலை அய்யப்பன் கோவில் ரூ. 250 கோடி
குருவாயூர் கோவில் கேரளா - ரூ.2.5 கோடி
அக்ஷர் தாம் கோவில், குஜராத் - ரூ.50 லட்சம் 
இவ்வாறு நீங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்தியாவின் மொத்த கோவில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
நாம் விசாரித்ததில் கர்நாடகாவில் 2,07,000 கோவில்களும் மகாராஷ்டிராவில் 4,50,000 கோவில்களும் உள்ளன என அறிந்தோம். மற்ற மாநிலங்களும் இந்த எண்ணிக்கையில் சளைத்தவை அல்ல என அறிவோம். மொத்த எண்ணிக்கையை நீங்களே அனுமானித்துக் கொள்ளவே இந்த தகவல்.
இன்று இந்தியாவில் உள்ள கோவில்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு இவற்றின் சராசரி வருமானங்களைக் கணக்கிட்டு பார்த்தால் நம் நாட்டின் வளங்களும் மக்களின் உழைப்புகளும் எங்கே போய் கொட்டபடுகின்றன என்ற உண்மை உங்களுக்கு புலப்படும். சமீபத்தில் புட்டபர்த்தியில் சாய்பாபா ஆசிரமத்திலும் திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் அறைகளிலிருந்தும் கண்டெடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பை அனைவரும் அறிவீர்கள்! 
உண்மையான இறைவனை வணங்குவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை, சடங்குகளும் சம்பிரதாயங்களும் தேவை இல்லை என்பதை அறிவோம். ஆனால் மக்கள் உயிரும் உணர்வும் அற்ற சமாதிகளையும் சிலுவைகளையும் சிலைகளையும் நாடும் போது அவர்கள் எப்படிப்பட்ட மோசடிகளுக்கு இரையாகிறார்கள், நாட்டு மக்களின் உடமைகளும் உழைப்புகளும் எப்படி கொள்ளை போகின்றன என்பதை சுட்டிக்காட்டவே இந்த உதாரணங்களை உங்கள் முன் வைக்கிறோம். யாரையும் புண்படுத்துவது நமது நோக்கமல்ல. 
திருப்பதி கோவிலின் உதாரணத்தில் சில உண்மைகள்: 
திருப்பதி வெங்கடேஸ்வரருக்கு, மன்னிக்கவும்... அவரது சிலைக்கு, அண்மையில் கர்நாடகா அரசில் அங்கம் வகித்த பெல்லாரி ரெட்டி சகோதரர்களால் 16 கிலோ எடையுள்ள வைரங்கள் பதிக்கப் பட்ட தங்க கிரீடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு 45 கோடிகளாகும்.இது இன்று வரை இச்சிலைக்கு  வழங்கப்பட்டுள்ள எட்டாவது கிரீடமாகும். இன்று இங்கு தேங்கிக் கிடக்கும் நகைகளின் மதிப்பு 50,000 கோடிகளுக்கும் மேலாகும். ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி வருடத்திற்கு  25,000  பவுண்டு வருமானத்தை  சம்பாதித்திருக்கிறது என்பது வேறு விஷயம்!
நமது நாட்டு மக்களின் நிலை:
சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளான நிலையிலும், உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடாகவே இதுவரை இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 26 கோடியே 3 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.இவர்களில் கிராமப்புறங்களில் 19 கோடியே 32 லட்சம் பேரும், நகரங்களில் 6 கோடியே 71 லட்சம் பேரும் வசிக்கின்றனர். இவர்களில், 75 சதவீத ஏழைகள் கிராமங்களில் வாழ்கின்றனர்.இந்தியாவில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை குறித்து உலக வங்கியும் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இதில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 41.6 சதவீதமான 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது
 நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் நமது நாட்டின் 40 சதவிகிதத்திற்கும்  மேற்பட்ட குடிமகன்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும்போது நாட்டின் செல்வங்கள் இவ்வாறு தன்மீது எது கொட்டப் படுகிறது, தனக்கு எதை அணிவிக்கிறார்கள் என்பதையே அறியும் உணர்வுகளில்லாத திடப் பொருட்கள் மீது கொட்டப்படுவது எவ்வளவு பெரிய வஞ்சனை!  கருணையற்ற செயல்! அவற்றை வைத்து இடைத்தரகர்கள் என்ற  போர்வையில் வயிறு வளர்க்கும் இம்மாபெரும் மோசடியாளர்களுக்கு ஈடான வேறு யாரையாவது  உங்களால் காட்ட முடியுமா?
மனித உடல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமானால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்தம் எங்காவது உறைந்து இறுகி விட்டால் உடலின் இயக்கங்கள் ஸ்தம்பித்து நோய் வந்து அழிந்து விடும். அதேபோல் ஒரு நாட்டின்  பொருளாதாரம் சீராக இருக்க. வேண்டுமானால் நாட்டின் செல்வம் உடலுக்குள்  இரத்தம் இறுகி விடுவது போல் உறைந்து விடக்கூடாது. மீண்டும் நம் நாடு பொருளாதாரத்தில் மீட்சி பெற வேண்டுமானால் இறைவனின் பெயரால் சுரண்டப்படும் இந்தக் கொள்ளைகளை தடுத்து நிறுத்த அனைத்து மதத்தவர்களும் பாடுபட வேண்டும். படைத்தனை  விட்டு விட்டு நாம் யாரையும் வணங்க மாட்டோம் என்ற முடிவுக்கு நாம் அனைவரும வந்தேயாக வேண்டும்.
நமது நாட்டின் பெரும்பகுதி பொருளாதாரத்தை முடக்கிப் போடுவது மட்டுமல்ல, நாட்டின் பெரும் பெரும் ஊழல பேர்வழிகளுக்கும் கறுப்புப் பணமுதலைகளுக்கும் அவர்கள் போலீசில் சிக்காமல் அடைக்கலம் கொடுப்பதும் இந்த இடைத்தரகர்கள்தான். கடவுளை எங்கள் மூலமாகத்தான் அணுக வேண்டும என்று கூறிக்கொள்ளும் இவர்கள் நடத்தும் ஆசிரமங்களும் மடங்களும் அடிக்கடி பெரும்புள்ளிகளால் விஜயம் செய்யப்படுவதையும் பெரும்பெரும் தொகைகளை செலுத்தி இவர்களின் பாதங்கள் தரிசிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு வருகிறோம்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இயங்கி வரும், “க்ளோபல் பைனான்ஷியல் இன்டெக்ரிட்டிஎன்ற ஆய்வு மற்றும் ஆலோசனை அமைப்பு, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் இந்தியப் பணம் மற்றும் இந்தியச் சமூக ஏற்றத்தாழ்வு குறித்து ஆய்வு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் இணையதளத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவின் ஆறு லட்சம் கோடி ரூபாய் பணம், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் அந்நாட்டில் வளர்ந்து வரும் ஊழலும், கறுப்பு பொருளாதாரமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடந்த 2004ல் இருந்து 2009 வரை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதமாக இருந்துள்ளது. அதே நேரம், ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே உள்ளனர். ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளும், தனியார் துறை அதிகாரிகளும், மக்கள் நலன் என்ற பெயரில் ஊழல் செய்த பணத்தை அரசியலிலும், தனியார் துறையிலும் திருப்பி விடுகின்றனர். 
 இக்கொடுமைகள் நம் கண்முன் பரவலாக நடக்கக் கண்டும் நாம் ஏன் வாளாவிருப்பது சரியா? ஒருபுறம் நாட்டு வளங்கள் கொள்ளை போவதும், மறுபுறம் மக்களின் இறையச்சத்தை சிதைப்பது, மக்களிடையே பிரிவினைகள் உண்டாக்குவது, மூடநம்பிக்கைகளுக்கு வித்திடுவது என பல தீமைகளுக்குத் தாயாக விளங்கும் உருவவழிபாட்டை இன்னும் தொடருவது சரியா? முடிவெடுக்க வேண்டியவர்கள் நீங்கள்!
உங்களைப் படைத்த இறைவனோ உங்களுக்கு அருகாமையில் இருக்கிறான் என்று தன் இறுதிமறையில் கூறுகிறான்:
நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம"  (திருக்குர்ஆன்   50:16)
* (நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், ""நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால்அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன்''  (திருக்குர்ஆன் 2:186)
-------------------- 
http://quranmalar.blogspot.com/2014/01/blog-post_13.html 
யாதும் ஊரே யாவரும் கேளிர்!

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக