இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 அக்டோபர், 2012

சைவமே சரி! – என்பது சரியா?


தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் இவற்றைப் படைத்தவன் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள இறைவன் அனுமதி அளித்திருக்கிறான்.

அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

'மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.' (குர்ஆன் 2:168)
உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம் – இறைவன் இந்த பூமியைப் படைத்து - அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் - தாவரங்களையும் படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இறைவன் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது.
இறைகட்டளைக்கு மாற்றமாக அசைவம் உண்பதைத் தடுத்தால் என்ன நிகழும்?
கால்நடைகள் பெருகும்
உலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. அவ்வாறு பெருகினால் மரங்களும் செடிகளும் புல்பூண்டுகளும் வேகமாக அழியும்..... தொடர்ந்து மழை பொழிவது நின்றுவிடும்.... கட்டுக்கடங்காத வறட்சி பெருகும்.....  தொடர்ந்து பூமி வாழ்வு தடைபடும்.

மாமிசம் மனிதனுக்குத் தேவை 

மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும்.
உடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமான அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. உடல் உழைப்பு இல்லாதோருக்கு சைவமே போதுமானதாக இருக்கலாம். ஆனால் கடின உடல் உழைப்பு செய்யும் தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் அசைவம்  கட்டாயம் தேவைப் படுகிறது. மேலும் துருவப் பிரதேசங்களிளும் கடலோரங்களிலும் வாழ்வோரிடம் சைவத்தைத் திணிக்க முடியாது.
மனித உடலமைப்பு

 மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.
நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் - மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம். மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் - தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.

 மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.
தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு - தாவர வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஆனால் மனித செரிமான அமைப்பு மாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களின் செரிமான அமைப்பை - இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க வேண்டும்?.

சைவமும் உயிர்களைக் கொல்கிறதே!
முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம். எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

 தாவரங்களாலும் வலியை உணர முடியும்:
தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் - தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 Hertz க்கு குறைவான சப்தத்தையும் 20000 Hertz க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது. அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.


36:71-73  “நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா?  அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும்  உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர். அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் அவற்றில் உள்ளன. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?”

8 கருத்துகள்:

 1. ஆனால், தாவரங்கள் அசையும் விலங்கினம் அல்ல. அதுமட்டுமல்ல அதற்க்கு வலியை உணரும் தன்மை கிடையாது. ஒரு மரத்தை வெட்டினால் அது துடி துடித்து அழுவதில்லை !

  மேலும், ஒருவன் உயிர்வாழ ஒரு உணவை உட்கொண்டு ஆகவேண்டும்,. இயக்கையாகவே மனிதனது உடலமைப்பு சைவ உணவை உட்கொள்ளகிறமாதிரியாக தான் படைக்கப்பட்டுள்ளான்.

  மேலும், இந்த காய்கனிகளை சமைத்து இறைவனுக்கு நெவேத்தியம் செய்து அது பிரசாதமாக மாற்றுவதன் மூலம் அதிலுள்ள சிறிய அளவில் உள்ள பாவங்களும் நீக்கப்பட்டு முழுமையான ஆன்மீக உணவாக மாறுகிறது !

  இதையே வேதங்கள் சிபாரிசு செய்கிறது !

  பதிலளிநீக்கு
 2. இஸ்லாம் - குரான் சொல்லும் சைவ உணவு..

  புனித குரானின் கூற்றுப்படி, முன்னேற்றம் இரண்டு வழிகள் உள்ளன. விலங்குகள் கொலை பரிந்துரைக்கப்படவில்லை.

  குர்ஆன் – 2 விதமான மக்களை பத்தி சொல்கிறது. அவை :
  :
  1. மனநிறைவு மற்றும் இன்பம், ஆசை உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத மக்களுக்கு இறைச்சி சாப்பிட வழிவகை வழங்கப் பட்டுள்ளது

  2. எல்லாம் கைவிட்டு கடவுளின் அன்பைக் பெறுவதற்கு..


  குரான் வசனங்கள் சொல்கிறது..

  குரான் 3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்"

  குரான் 3:15. (நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு;

  குரான் 3:152 சொல்கிறது....
  ' நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;"

  .
  இறைச்சி சாப்பிட தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத மக்களுக்கு வழிவகை வழங்கப் பட்டுள்ளது, ஆனால் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் மெதுவாக இப்படிப்பட்ட ஒரு கெட்ட பழக்கம் (சுவை) கொடுக்கவே உள்ளன. அதனால் அது பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால் வாழ்க்கை, தேவனுடைய காதல் மிக உயர்ந்த கச்சிதமாகவும் விரும்பினால் அந்த, மாமிசம் சாப்பிடும் forbidd ஆகும்

  உதாரணமாக, நாம் காணலாம் புனித குர்ஆன் வசனம் -5:3.

  இதனால் நாம் இறைச்சி சாப்பிட அனுமதி இல்லை என்று குர்ஆன் இந்த வசனத்தில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

  இதே போல் தான், ஹிந்து மக்களும், விலங்குகளை - காளி, சுடலைமாடன், என்கிற சிறு தெய்வங்களுக்கு பலியிட்டு அதை சாப்பிட அனுமதிக்கிறது. இது ஏன் என்றால், அதனால் தான் அவர்களின் புலன் ஆசைகள் படிப்படியாக கட்டுபடுத்த முடியும்.

  பதிலளிநீக்கு
 3. இது தவிர, அது சூரா "Al-Ma'ida" குறிப்பிடப்பட்டுள்ளது மெக்கா எல்லைக்குள், மிகவும் புனிதமான இடத்தில், விலங்குகளின் கொன்றது தடை செய்யப்பட்டுள்ளது. குரான் - 5:1.

  புனித வட்டாரங்களில் உள்ள புனிதமான இடத்தில், விலங்குகளின் கொன்றது தடை செய்யப்பட்டுள்ளது . அவைகள்

  1. புனித வட்டாரங்களில் உள்ள மெக்கா
  2. சிறப்பு யாத்திரை ஆடையில் (இஹ்ராம்)

  இது சூரா "Al-Ma'ida" என்று விளக்கினார் வசனம் - 5:95 , .

  இவ்வாறு மிருக வதையை ஒரு பாவம் எனவே, அதை மெக்கா போன்ற பரிசுத்த இடத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.


  இறைச்சி சாப்பிட தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத மக்களுக்கு வழிவகை வழங்கப் பட்டுள்ளது, உங்களுக்கு முன்னேத்தம் வேண்டாம் எனில் முதல் வழியை பின்பற்றலாம். ... அது உங்கள் இஷ்டம் ..


  புனித குர்ஆனில் இறைவன் பின்வருமாறு கூறுகிறார்:

  22:37. (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்.


  ஆனால், குரானில் மக்களை சாப்பிட அனுமதிக்கிறது, ஆனால் அவைகள் மனிதனை படிப்படியாக புலன் அசைகளிலிருந்து விடுவிக்கத்தான் இனத்தை நான் மேலே கூறுயதிலிருந்து அறியலாம்..


  எனவே, அவர் இருந்த காலகட்ட மக்கள் அப்படி, உடனே நீங்கள் சாப்பிடக்கூடாது என்று கூறினால் கஷ்டம். அதனால் தான் இப்படி படிப்படியாக சொல்கிறார்..

  இப்படி தான் இந்து மதத்திலும் சொல்கிறது ..

  தமோ குணத்திலுள்ளவனுக்கு மாமிசம் சாப்பிட ஆசை உண்டானல் அவன் அதை தேவர்களுக்கு ( காளி, சுடலைமாடன்,அய்யனார் போன் )பலியிட்டு பின்பு சாப்பிட சொல்கிறார். இது ஏனெனில் அப்போது தான் அவனுது புலன் ஆசைகளை படிப்படியாகக் குறைக்கவே தான் இப்படி சில இடங்களில் சில மனிதர்களுக்காக சொல்லப்பட்டது. ஆனால் சத்வ குணத்தலுள்ளவன் இதை விலக்கி இருப்பதே நல்லது.


  எனவே, முடிவு நீங்கள் தான் எடுக்கவேண்டும்.. இந்த மாமிசங்களை என்னை அடையாது என்று இறைவன் சொல்கிறார்... அப்புறம் ?


  அது தானே நான் மேலே இரண்டுவித பக்தி நிலைகளை பற்றி கூறினேன். இதில் எது வேனுமானாலும் தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பமே!

  அல்லாஹவின் பக்தி வேண்டுமா?
  புலனின்பம் வேண்டுமா ?

  என்பதை உங்கள் விருப்பம்!

  நீங்கள் இப்படி தான் இருக்கவேண்டுமென கண்டிப்பாக கூறவில்லை. அவர் நமது சுதந்திரத்திலேயே இதை விட்டு விட்டார்...

  எனவே முடிவு உங்கள் கையில் தான்

  பதிலளிநீக்கு
 4. மாமிசம் மனித உணவா?

  இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?

  இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
  2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .

  இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

  சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

  அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

  இனி ஆராய்ச்சி செய்வோம்.

  *1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு* .

  சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.

  அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.

  *2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.*

  சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன.
  அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.

  *3. கால் விரல்கள்:-*

  சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.

  அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

  *4. குடல் அமைப்பு:*

  சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது.
  காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும்,

  அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.

  *5. சமநிலையான உடல் உஷ்ணம்:-*

  சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது.

  ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

  *6. மலத்தின் தன்மை*

  சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது.

  அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம்.

  இனி மனநிலையில் ஆராயலாம்.

  *1. வாழும் முறை :*

  சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான்.

  ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)

  *2. இயல்பு :*

  சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.
  அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.

  *3. ஆக்கப்பூர்வமான வேலைகள் :*

  சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.

  *மன இறுக்கம்:-*

  அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?

  ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.

  உதாரணமாக,
  ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும்.

  இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும்.

  இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான்.

  இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது.

  மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான்.

  ஆனால்,
  ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை? )
  உதாரணமாக சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்

  மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிய வேண்டியது.

  இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே என அறிகிறோம்.

  எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும்,
  கோபம் இல்லாமலும், மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்வது காலச் சிறந்தது.

  பதிலளிநீக்கு
 6. *சைவம், அசைவம் ஓர் உண்மை விளக்கம்*


  தண்ணீரை உறிஞ்சி குடிக்கும் பிராணிகள் சைவ பிராணிகள். உறிஞ்சி குடிக்க குடல் நிலமாக இருக்கும் உணவு செரிக்க நேரமாகும்.

  தண்ணீரை நக்கி குடிக்கும் பிராணிகள் அசைவ பிராணிகள்.
  அசைவ பிராணிகளின் குடல் சிறியதாக இருக்கும். சீக்கிரமாக செரித்துவிடும். அதனால் மாமிசம் உண்டால் சீக்கிரம் ஜீரணம் ஆகாது அல்லவா, அதனால் மாமிசம் உண்கின்றன.

  மனிதன் தண்ணீரை கையில் அல்லி உறிஞ்சிதானே குடிப்பான் மனிதனும் சைவபிராணித்தான்.
  தாவரங்கள் தண்ணீரை உறிஞ்சி வாழும் உயிரினம் இது சைவம்.

  ஆனால் ஒரு உயிரை கொன்று உண்பது அசைவம்.  அசைவ பிரியர்களிடம் ஒரு உயிரை கொன்று மாமிசம் உண்கிறாயே இது பாவம் அல்லவா என்று ஒரு சைவர்கள் கேட்டால் அதற்கு கறி தின்பன் பதில் கூறுவான் பாரே, நீ மட்டும் கீரை, காய், கனி தின்கிறாயே அதுயும் ஓர் உயிர்தானே அதுவும் பாவம் என்பான். நீ தாவரத்தை கொன்று திண்ணலாம் நான் விலங்கை கொன்று தின்றால் என்ன என்பான்.
  ஒரு விலங்கை கொள்ளும் போது அய்யோயோ நம்மை கொள்ளவருக்கிறான் என்று கண் பார்த்து பயப்படும், மனம் உணர்ந்து அவதிப்படும், அல்லோலப்படும்.

  வாய்யால் கத்தி கத்தி கதறி கதறி துன்புறும்.

  வெட்டும்போது தசை வலியை உணரும், ரத்தம் செல்லும் நரம்புகள் வலியை உணரும், ரத்தம் கொட்டும், அந்த வலி உணர்வானது தோல், நரம்பு வழியாக மூளையில் வலியாக ஞாபகம் வைத்துக்கொள்ளும். மனம் அவஸ்தை படும், இந்த உயிர் துன்புறும், வாயால் கத்தி கதரும். இது தான் கொடிய வலியென்று அதன் மூளையில் பதியும்.


  இது எவ்வளவு கொடுமை.
  ஆனால் தாவரங்களுக்கு பார்க்க கண் இல்லை, கத்துவதற்கு வாய் இல்லை, வெட்டும்போது ரத்தம் வாராது நாற்றம் வீசாது, நரம்பு இல்லை வலி உணராது. மூளை இல்லை ஞாபகம் வைத்துக்கொள்ள. தாவரங்கள் ஒருபோதும் வலியை உணராது.


  ஒரு மரத்தில் எல்லா கிளைகளையும் வெட்டினால் அது மீண்டும் முளைத்துவிடும். விலங்குகளின் கை கால்களை வெட்டினால் மீண்டும் முலைக்குமா என்ன.

  தாவரங்களின் இலை தழைகளை பரித்தால் அது மீண்டும் முளைத்துவிடும் விலங்கின் தலையை வெட்டினால் முளைத்துவிடுமா என்ன,
  நாம் இலைகளை பரிக்கமால் இருந்தாலும் அது தானாக உதிர்ந்து விடும், கனியை பிரிக்காமல் இருந்தால் அது பழுத்து உதிர்ந்து விடும்.

  விலங்கிற்கு தலை உதிர்ந்திடுமா மீண்டும் முளைத்திடுமா, கை கால் உதிர்ந்திடுமா, மீண்டும் முளைத்திடுமா
  இல்லை.
  பழம் தின்று கொட்டை யை போட்டால் அது முளைத்துவிடும். விலங்கின் மாமிசம் தின்று எலும்பை போட்டால் உயிர்தெழுமா?

  பழம் தின்னும் பறவையின் கழிவில் உள்ள விதை மீண்டும் முளைக்கும். அதனால் தான் தாவரங்கள் அழியாமல் மீண்டும் வந்துவிடுகின்றன.
  எல்லோரும் சைவத்தின் தன்மையையும் உண்மையையும் உணர்ந்து சமையலில் சைவத்திருக்கும் வாருங்கள்.

  இறை - உணவு அது உடலை வளர்க்க
  இறை - கடவுள் அது உயிரை வளர்க்க

  உடல்வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே

  பதிலளிநீக்கு
 7. மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.' (குர்ஆன் 2:168)

  ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் பரிசுத்தம் கிடையாது. அது அசுத்தமானது. மாட்டின் சாணம் போட்டு அது தொடையில் ஒட்டிக்கொள்ளும்.
  மாடுகள் தாவரங்களை தின்றால் அது அழியாது.அதன் விதைகள் சாணம் வழியாக வித்தக்கப்படுகிறது. மீண்டும் துளிர்விட்டு முளைக்கும். குர்ஆன் தெளிவாக படித்து உண்மையை உணரவும்.

  பதிலளிநீக்கு