ஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும்
மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான
பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு
எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த
மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண்
குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக
சண்டை இட்டுக் கொண்டனர், நிறவெறி,
கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல்
மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது
இப்படிப்பட்ட ஒரு
காலகட்டத்தில்தான் நபிகள் நாயகம் அவர்களது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால்
நியமனம் செய்யப் படுகிறார்கள்.
அமைதியின்மை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்த அந்நாட்டில்
நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாம் என்ற ஒரு சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தி
அதன்பால் மக்களை அழைத்தார்கள். இஸ்லாம் என்றால் கீழ்படிதல் என்றும் அமைதி என்றும்
பொருள். அதாவது படைத்த இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால்
இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமையிலும் அமைதியை – அதாவது சொர்க்கத்தை அடையலாம்
என்பது இக்கொள்கை முன்வைக்கும் தத்துவமாகும்.
இக்கொள்கையின் முக்கிய போதனை படைத்த இறைவனை மட்டுமே வழிபட
வேண்டும் என்பதும் அவனை நேரடியாக இடைத் தரகர்கள் இன்றியும் வீண் சடங்கு
சம்பிரதாயங்கள் இன்றியும் வணங்க வேண்டும் என்பதும் ஆகும். அது மட்டுமல்ல இறைவன்
அல்லாத எதனையும் அதாவது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ அல்லது உயிரும்
உணர்வுமற்ற கற்களையோ உருவங்களையோ வணங்குவதும் அவற்றைக் கடவுள் என்று அழைப்பதும்
அவற்றிடம் பிரார்த்திப்பதும் பெரும் பாவமாகும் என்றும் இக்கொள்கை கூறுகிறது.
ஆனால் முன்னோர்களின்
பழக்கவழக்கங்களே சரி என்று மூடமாக
நம்பியிருந்தவர்களும் கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்டிக் கொண்டிருந்தவர்களும் தங்களுக்கு எதிரியாக இக்கொள்கையைக்
கண்டார்கள். விளைவு? நபிகளாரும்
அவரோடு சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களும்
பயங்கரமான எதிர்ப்புகளையும் சித்திரவதைகளையும் சந்திக்க நேர்ந்தது. . பதிமூன்று வருடங்கள் தொடர்ந்து பொறுமையோடு தீயோரின் அடக்குமுறைகளை
எதிர்கொண்டாலும் ஒருகட்டத்தில் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகவே, இறைவனின் கட்டளைப்படி நபிகளார் மக்காவைத் துறந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில்
அமைந்துள்ள மதீனா நகருக்குச் செல்ல நேர்ந்தது.
அங்கு ஏற்கனவே இஸ்லாம்
பரவியிருந்ததால் அவருக்கு ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்றார்கள். அது
மட்டுமல்ல மதீனாவில் இஸ்லாம் வளர வளர ஒரு இறை நம்பிக்கையாளர்களின் சமூக அமைப்பும்
அரசும் அமையும் அளவுக்கு வலிமை பெற்றார்கள். ஆனால் மக்காவின் கொடுங்கோலர்கள்
அங்கும் படை எடுத்து வந்து தாக்க நபிகள் நாயகமும் ஆதரவாளர்களும் தற்காப்புப் போர் புரிய
நேரிடுகிறது. தொடர்ந்து நடந்த போர்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன.
இறுதி வெற்றி சத்தியத்திற்கே. மக்கவும் வெற்றி கொள்ளப் படுகிறது. கொடுமை
செய்தவர்களுக்கும் நபிகளார் இறுதியில் பொது மன்னிப்பு வழங்க அனைவரும் சத்தியத்தை
ஏற்க்கிறார்கள்.. அராபிய நாடு முழுவதும் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் தனது 63-வது வயதில்
நபிகள் நாயகம் இவ்வுலகை விட்டுப் பிரிகிறார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் தனது
நபித்துவ வாழ்வின் போது அதாவது 40-வது வயதிலிருந்து 63-வது வயது வரை சந்தித்த
பல்வேறு சூழ்நிலைகளின்போது அவருக்கு இறைவன் புறத்திலிருந்து அறிவுரைகளாகவும்
கட்டளைகளாகவும் சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்ட திருவசனங்களின் தொகுப்பே
திருக்குர்ஆன் என்பது.
HISTORY CHANNEL VEDIO
https://www.youtube.com/watch?v=7w4TH-giaps
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
HISTORY CHANNEL VEDIO
https://www.youtube.com/watch?v=7w4TH-giaps
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
=============
மாஷாஅல்லாஹ்
பதிலளிநீக்குmasha allah
பதிலளிநீக்குMashallah
பதிலளிநீக்கு