இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 அக்டோபர், 2012

இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!


ஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது!
v  உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது அது!
v  மனிதகுலத்தைப் பிரித்தாளும் இனம் மொழி நிறம நாடு குலம் கோத்திரம் ஜாதி போன்ற தடைகளை உடைத்தெறிந்து அவர்களை ஒன்றிணைக்கும் புரட்சி இலக்கியம் அது!
v  உலகில் வேறெந்த இலக்கியங்களும் வாதிடாத சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாக வாதிடுகிறது அது! பாருங்கள்!
v  மிக மிக உயர்ந்தவனே தனது ஆசிரியன் என்று வாதிடுகிறது அது!
 45:2. இவ்வேதம் யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய இறைவனிடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
v  நூறு சதவீதம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடுகிறது அது!
2:2 இது (இறைவனின்) திருவேதமாகும் இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
v  முற்றிலும் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடுகிறது அது!
4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
v  மனிதகுலம் அனைத்தையும் அழைத்து உபதேசிக்கிறது அது!
10:57 மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் இறைவிசுவாசிகளுக்கு நேர்வழிகாட்டியாகவும் நல்லருளாகவும் உள்ளது.
v  பகுத்தறிவு கொண்டு சிந்தித்து ஏற்றுக்கொள்ளச்  சொல்கிறது அது!
 38:29 (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள்      இதன்  வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும்  அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
45:20. இது மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும் உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும் அருளாகவும் இருக்கிறது
v  ஏற்காதவர்களை எச்சரிக்கவும் செய்கிறது!
 2:23-24 இன்னும் நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். அது இதை மறுப்பவர்களுக்காக  சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
 ஆம் அன்பர்களே! பகுத்தறிவுக்கு சவால் விடுத்து தன்னை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளச் சொல்லும் இந்நூல் வேறு ஏதுமில்லை இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் நம் அனைவருக்காகவும் அனுப்பிய திருக்குர்ஆன்தான் அது! இந்த நூலை நாம் யாரும் அலட்சியம் செய்ய முடியாது, ஒவ்வொருவரும் கட்டாயமாக படித்தே ஆக வேண்டும்!
 கட்டாயமாக படிக்க வேண்டுமா? ஏன்?
  ஆம் ஏனெனில் இது நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனிடமிருந்து நமக்கு அனுப்பப்பட்ட கடிதம்! நம்மை எதற்காக அவன் படைத்தான்? நாம் எப்படி இங்கு வாழ வேண்டும்? அவ்வாறு வாழ்ந்தால் அதன் பயன்கள் என்ன? வாழாவிட்டால் என்ன விளைவுகள் உண்டாகும்? என்பன பற்றியெல்லாம் உறுதியான மொழியில் சந்தேகத்துக்கு இடமில்லாத முறையில் நம் இறைவனே எடுத்துரைக்கும் நூல் இது!
  மேலும் நாம் இங்கு வாழும் வாழ்க்கை தற்காலிகமானது என்றும் இங்கு இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தால் அவர்களுக்கு பரிசாக மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என்றும் கட்டுப்படாமல் தான்தோன்றிகளாக வாழ்வோருக்கு தண்டனையாக நரக வாழ்வு உண்டு என்றும் எச்சரிக்கிறது திருக்குர்ஆன்.
 அன்;றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் அவை இறைவனுக்குப் பொருத்தமானவையாக இருந்தால் அவை புண்ணியங்களாகவும் அவன் தடுத்தவையாக இருந்தால் அவை பாவங்களாகவும் பதிவாகின்றன.
  இறுதித் தீர்ப்பு நாளின்போது புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப்படும். எனவே புண்ணியம் எது பாவம் எது என்பதை இன்று தெளிவாக பிரித்தறிவிக்கும் நூலாக வந்துள்ளது திருக்குர்ஆன்.
  மேற்கண்ட காரணங்களால் இன்று இப்பூமியின் மேற்பரப்பில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இதைக் கட்டாயமாக படித்தால் மட்டும் போதாது பின்பற்றி வாழவும் கடமைப்பட்டுள்ளான்!
எங்களுக்கும் வேதங்கள் வந்துள்ளனவே அவற்றைப் பின்பற்றினால் போதாதா?
      எங்கள் வேதம் உங்கள் வேதம் என்று ஏதும் இல்லை. அனைத்துமே நம் வேதங்களே! ஏனெனில், நாம் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைக்கப் பட்டு உலகெங்கும் பல்கி பெருகியவர்களே. வேதங்களை முன்னர் வந்தவை பின்னர் வந்தவை என்று மட்டுமே பிரிக்கலாம். ஏனெனில் அனைத்துமே ஒரே இறைவனால் அருளப்பட்டவையே! முந்தைய இறைவேதங்கள் அக்காலத்து மக்களுக்காக அருளப்பட்டவையாதலால் அவை காலாவதியாகிவிட்டன. அது மட்டுமல்ல அவ்வேதங்கள் அந்த இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின் பிற்கால மக்களால் மாற்றப்பட்டன. இன்று நாம் இவ்வேதங்களில் எது இறுதியாக வந்ததோ அதை அறிந்து நாம் அனைவரும் பின்பற்றியாக வேண்டும்.
திருக்குர்ஆன் மாற்றப்படவில்லையா?
  இல்லை. சுமார் 1430 வருடங்களுக்கு முன்னால் அராபியாவில் மக்கா நகரில் வாழ்ந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களுக்கு அவரது 40 வயது முதல் அவர் மரணித்த 63-வது வயது வரைப்பட்ட காலகட்டத்தில் ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது. தனது கவிதையும் உரையும் கலந்த ஒரு ஒப்பற்ற நடையால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலம் முதலே மக்கள் மனங்களைக் கவர்ந்தது. இறைவிசுவாசிகளால் அது அடிக்கடி ஒதப்படலானது
  திருக்குர்ஆனின் வசனங்கள் மூலமொழியிலேயே உலகெங்கும் முஸ்லிம்களால் அவர்களது ஐவேளைத் தொழுகைகளிலும் தொழுகைக்கு வெளியேயும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதை நீங்கள் காணலாம். குறிப்பாக ரமலான் திங்களில் பெரும்பாலோர் முழுக் குர்ஆனையும் ஓதி முடிப்பர். 'குர்ஆன்' என்ற பதத்தின் பொருளே 'ஓதப்படும் ஒன்று' என்பதுதான்.
பக்குவமாகப் பாதுகாக்கப்படும் வேதம்
  இறங்கிய காலம் முதல் இன்று வரை உலகெங்கும் எண்ணற்ற மக்களால் மனனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திருக்குர்ஆனின் மூலவசனங்கள் ஒலி வடிவிலேயே உலகெங்கும்  மனித மனங்களிலும் திருக்குர்ஆன் பிரதிகளிலும் பாதுகாக்கப் படுகிறது. உலகில் எந்த மூலையில் எம்மொழியில் நீங்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகளை எடுத்துப்  பார்த்தாலும்  அதில் அரபு மொழி மூலத்தையும் காணலாம்.
உலகம் அழியும் நாள் வரை உலக மக்களுக்கு இதுதான் வேதம் என்பதால் இறைவனே இதன் பாதுகாப்பிற்கும் பொறுப்பேற்றிருக்கிறான்.
15:9 திண்ணமாக இந்த நல்லுரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும் நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம்.
 இன்று காணக்கிடைக்கும் முந்தைய வேதங்களின் பிரதிகளை நீங்கள் எடுத்துப் பார்பீர்களானால் வெறும் மொழி பெயர்ப்புகளைத்தான் பார்க்க முடியும் மூலத்தைக் காண முடியாது. அதற்கு மூல வசனங்கள் பாதுகாக்கப்படவில்லை  என்பதும் மூல மொழிகளே இன்று இறந்துபோன மொழிகளாக உள்ளன என்பதுமே காரணம்!
திருக்குர்ஆன் முஹம்மது நபி அவர்களால் எழுதப்பட்டதா?
. இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதவும் படிக்கவும் தெரியாதவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் மூலம் அருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது. இவ்வேதத்தில் முஹம்மது நபி உட்பட எந்த மனிதர்களின் வார்த்தையும் எள்ளளவும் கலக்காமல் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது. முஹம்மது நபி அவர்களின் கூற்றுக்கள் மற்றும் அவரைப் பற்றிய செய்திகள்  அவரது தோழர்களால் பதிவு செய்யப்பட்டு 'ஹதீஸ்' என்று தனி தொகுப்பாக விளங்குகின்றன.
திருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன?
1 ஓரிறைக்கொள்கை :
2. வாழ்வின் நோக்கமும் மறுமை வாழ்வும்: 
3. இறைத்தூது 
4. மனித குல ஒற்றுமை
5. இறைவன் அல்லாதவற்றை அறவே வணங்கக் கூடாது
 மேற்கண்ட முக்கிய போதனைகள் போக திருக்குர்ஆன் மனித வாழ்க்கை சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நம்மைப் படைத்தவனே தரும் மிக மிகப் பக்குவமான தீர்வுகளை வழங்குகிறது. இல்லறம் திருமணம் ஆண்-பெண் பிரச்சினைகள் குழந்தை வளர்ப்பு தூய்மை உடல் நலம் தொடங்கி வியாபாரம் பொருளாதாரம் கொடுக்கல்-வாங்கல் பாகப்பிரிவினை குற்றவியல் நீதித்துறை அரசியல் என மனிதனின் தனி நபர் வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் அழகிய தீரவுகளை வழங்குகிறது திருக்குர்ஆன்
 அவற்றை ஏற்று அதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்வோருக்கு இம்மையிலும் அமைதி கிடைக்கிறது. மறுமையிலும் சொர்க்க வாழ்வு கிடைக்கிறது. அலட்சியம் செய்வோருக்கு இம்மையில் அமைதியின்மையும்  மறுமையில் நரகவாழ்வும் காத்திருக்கிறது!

4 கருத்துகள்:

  1. உயரிய சிந்தனை உண்மையின் நிலைப்பாடு நல்ல பழக்க வழக்கங்களை போதிக்கிறது

    பதிலளிநீக்கு
  2. உன்மை.பிறவேதங்களில் மொழி பெயர்ப்பு மட்டுமே பார்க்க முடியும்.அசல்பிரதி குர் ஆன் மட்டுமே உள்ளது

    பதிலளிநீக்கு
  3. உண்மைெ வெளிப்பாடு

    பதிலளிநீக்கு