பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு
பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய ஒரு மனிதரைக் கண்டு இன்று
அதர்மவாதிகள் பயப்படுகிறார்கள். அவரை ஆபாசத் திரைப்படம் மூலம் சித்தரித்து தங்கள்
காழ்ப்புணர்வை காட்டிக் கொள்கிறார்கள். இவர்களது எதிர்ப்புக்குக் காரணம் அவரல்ல,
மாறாக அவர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய அசைக்கமுடியாத தாக்கமே! ஆம், அவர் அந்த
சிறு மணற்பரப்பு மக்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒழுக்கக் கல்வி உலகெங்கும் பரவி
காலங்களைக் கடந்து நிற்பதே இவர்களது வெறுப்புக்குக் காரணம். அவரிடம் பாடம்
பயின்றவர்கள் பூமியில் வாழும் வரை அதர்மவாதிகளால் மக்களை ஏய்த்துப் பிழைக்க
முடியாது, தங்கள் சுயநல சுரண்டல் திட்டங்களை செயல்படுத்த முடியாது. அந்த உத்தமர் அன்று
கற்றுக் கொடுத்த கல்வி தலைமுறை தலைமுறையாகத் தன் விழிப்புணர்வுப் பணியைத் தொடருமானால்
சகிக்க முடியுமா இவர்களால்?
அதனால்தான் இன்று நாம் காணும் எதிர்ப்பும் காழ்ப்புணர்வும்! இனி உலகம்
உள்ளளவும் வரக்கூடிய அநீதியின் காவலர்களுக்கு சிம்மசொப்பனமாகவே இவர் இருப்பார்.
இவரைப் பற்றிய பயமும் காழ்ப்புணர்வும் அவர்களிடம் தொடரவே செய்யும்! ஏன் தெரியுமா? ஆம்,
அவரைத்தான் இறைவன் தன் இறுதித் தூதராக அனுப்பியுள்ளான். அதர்மம் பூமியில்
ஆங்காங்கே தன் கோரதாண்டவத்தை நிகழ்த்தும் போது அதை எதிர்ப்பதும் அழிப்பதும் எவ்வாறு?
மீண்டும் பூமியில் தர்மத்தை நிலை நாட்டுவது எவ்வாறு என்பவற்றை உலக மக்களுக்கு
கற்றுக் கொடுக்கவே அந்த உத்தமரை இறைவன் ஆசிரியராக. நியமித்தான்.
.முஹம்மது நபி (அவர்மீது இறைவனின் சாந்தியும் அருளும் உண்டாவதாக) அவர்கள் உலக மக்களுக்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைவனின்
தூதர் என்பதற்கு இன்றைய இந்த நிகழ்வுகளே சான்று பகர்கின்றன. அவருக்கு முன்னர்
அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் குறிப்பிட்ட கால கட்டத்தில் குறிப்பிட்ட மக்களுக்காக
அனுப்பப் பட்டிருந்தார்கள். அவர்கள் தத்தமது காலகட்டங்களில் அதர்மத்தை வென்று தர்மத்தை
நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள். ஆனால் அவர்களைப் போல அல்லாமல் இறுதித் தூதரின்
எல்லை உலகளாவியதும் காலங்களைக் கடந்ததும் ஆகும். அவர் அவரது வாழ்நாளில் தர்மத்தை
நிலைநாட்டிவிட்டுச் சென்றார். ....இனி தர்மம் எவ்வாறு நிலைநாட்டப்படும்? ஆம்,
அதைத்தான் அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அவர் மூலம்
இறைவன் வழங்கிய உறுதிமிக்க வேதமாம் திருக்குர்ஆனும் அவரது முன்னுதாரண வாழ்க்கை
வழிமுறையுமே அதற்கான நம் கருவிகள்! அவற்றை விவேகத்தொடும் பொறுமையோடும் கையாண்டால்
அதர்மத்தையும் வெல்லலாம், அதர்மவாதிகளையும் திருத்தலாம்!
ஆனால் பரிகாச செயல்கள் கண்டு துவண்டு விடக்கூடாது, ஏனெனில் இப்போராட்டத்தில்
இது வழமையானது. இப்பரீட்சையை ஏற்படுத்திய இறைவன் நபிகளாரைப் பார்த்து கூறுவதை
கவனியுங்கள்:
நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம்
(தூதர்களை) அனுப்பிவைத்தோம். எனினும் அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த
மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ்
விஷமத்)தைப் புகுத்தி வடுகிறோம்.. (திருக்குர்ஆன் 15:10-12)
http://quranmalar.blogspot.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக