இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 நவம்பர், 2016

வீரப் பெண்மணி நுஸைபா - வீரவரலாறு!

வீரப் பெண்மணி நுஸைபா பின்த் கஅப்ரளியல்லாஹு அன்ஹா
نسيبة بنت كعب رضي الله عنها
[ பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வீரவரலாறு!
இப்படி ஒரு வீராங்கனையை நிச்சயமாக உலக வரலாற்றில் வேறெங்கும் நாம் கண்டிருக்கவே முடியாது.
ஒரு வரி விடாமல் படியுங்கள்! ]
யத்ரிப் (மதீனா) நகரில் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வந்தது. தந்தை, தாய், இரு மகன்கள் என்ற அளவான குடும்பம். எப்பொழுதும்போல் அவர்களது பொழுது ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள் மக்காவிற்கு யாத்திரை சென்று வந்த யத்ரிப் மக்கள் சிலர் தம்முடன் மக்காவாசிகள் ஓரிருவரை அழைத்து வந்திருந்தனர் – முஸ்அப் இப்னு உமைர், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் – ரலியல்லாஹு அன்ஹுமா.
‘இவர்கள் சொல்வதைக் கேளுங்களேன்’ என்று மக்காவாசிகளைத் தம் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள் வந்தவர்கள். துவங்கியது முஸ்அப் இப்னு உமைரின் பணி. ஏறக்குறைய யத்ரிபின் அனைத்து வீட்டுக் கதவுகளையும் அவரது செய்தி தட்டியது. காந்தமாய் மாறிப்போனார் அவர். அதன் பலன் அடுத்த யாத்திரை காலத்தில் 73 ஆண்களும், 2 பெண்களும் கொண்ட மதீனத்துக் குழு, மக்கா சென்றது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க. அந்தக் குழுவில் மேற்சொன்ன குடும்பமும் அடக்கம்.
மக்காவிற்குச் சென்று புனித யாத்திரை முடித்த அந்தக் குழுவினர் இரண்டாம்நாள் ஊர் உறங்கிய நள்ளிரவு நேரத்தில் அகபா பள்ளத்தாக்கில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் இரகசிய சந்திப்பு நிகழ்த்தினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது. அதன் முடிவில் நபியவர்களுக்கும் அந்த யத்ரிப் குழுவினருக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது.
இரண்டாம் அகபா உடன்படிக்கை:
தங்களது "உயிர், பொருள், செல்வம்" அனைத்திற்கும் மேலாய் நபியை ஏற்றுக் கொள்வதாகவும் காப்பாற்றுவதாகவும் அவர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தனர்.
அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த சத்தியப் பிரமாணத்தில் கலந்து கொண்டனர். ஸைத் இப்னு ஆஸிம், அவரின் மனைவி உம்மு உமாரா எனும் நுஸைபா பின்த் கஅப் அல்-மாஸினிய்யா,அவர்களின் இரு மகன்கள் அப்துல்லாஹ் இப்னு ஸைத் மற்றும் ஹபீப் இப்னு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹும்). உம்மு உமாரா என்பது புனைப்பெயராகத்தான் நுஸைபாவுக்கு ஏற்பட்டு இருந்ததே தவிர அவருக்கு உமாரா என்ற பெயரில் மகனோ மகளோ இல்லை.
அந்தக் குழுவில் இரண்டு பெண்கள் என்று பார்த்தோமல்லவா? உம்மு உமாராவுடன் இடம்பெற்றிருந்த மற்றொரு பெண் உம்மு முனீஃ என்ற அஸ்மா பின்த் அம்ரு இப்னு அதீ.
இந்தப் பெண்கள் இருவரும் பிரமாணம் அளிக்கும் முறை வந்ததும், “ஆண்களது பிரமாணத்தை ஏற்றுக்கொண்ட அதேநிபந்தனைகளுடன் பெண்களின் பிரமாணத்தையும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்நியப் பெண்களின் கைகளைப் பிடிக்கமாட்டேன்” என்று தெரிவித்துவிட்டார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அதன்படி அதே நிபந்தனைகளுடன் அந்த இரு பெண்மணிகளும் பிரமாணம் அளித்தனர். சத்தியமான பிரமாணம்.
அதன் பிறகு, குழு மதீனா திரும்பி, தம் வாசலை அகலத் திறந்து வைத்தது – மக்காவிலிருந்து வரப்போகும் முஸ்லிம்களுக்காக. நிறைய முஸ்லிம்கள் யத்ரிபிற்குப் புலம் பெயர்ந்தனர். முத்தாய்ப்பாய் அமைந்தது நபியவர்களின் ஹிஜ்ரத். யத்ரிப் மதீனாவானது.
நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்தபின் நிகழ்வுற்ற முதல் யுத்தமான பத்ருப் போரில் நுஸைபாவின் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு கஅப் அல் மாஸினீ ரளியல்லாஹு அன்ஹு எனும் வீரர் கலந்து கொண்டார். சில காலத்தில் ஹபீபின் தந்தை ஸைத் இப்னு ஆஸிம் இறந்து விட்டதால், நுஸைபா, கஸிய்யா இப்னு அம்ரு என்பவரை மறுமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு தமீம் என்றொரு மகனும், ஃகவ்லா எனும் மகளும் பிறந்தனர்.
பத்ருப் போர் முடிந்த அடுத்த ஆண்டே நிகழ்ந்தது அடுத்த போர் – உஹதுப் போர். இந்தப் போரில் நுஸைபா, அவரின் கணவர் கஸிய்யா, நுஸைபாவின் மூத்த மகன் அப்துல்லாஹ் இப்னு ஸைது ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
"கலந்து கொண்டார்கள்" என்ற அளவிலான சிறு வாக்கியத்தில் முடித்துவிட முடியாத வீர நிகழ்வாய் வரலாற்றில் இடம் பெற்றுப்போனது அது.
உஹதுப் போரின் ஆரம்பத் தருணங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாகத்தான் இருந்தன. மலையுச்சியில் காவலுக்கிருந்த முஸ்லிம் வீரர்கள் ‘போர் முடிந்துவிட்டது’ என நினைத்து, தங்களுக்கு நபியவர்கள் இட்ட கட்டளையை மறந்து கீழே இறங்கி ஓடிவந்ததும்தான் போரின் போக்கு மாறிப்போனது. அதுவரை முஸ்லிம் போர் வீரர்களுக்கு குடிநீர் அளிப்பது, காயங்களுக்குச் சிகிச்சை புரிவது போன்ற ஒத்தாசை சேவைகளில் மட்டும் இதரப் பெண்களுடன் ஈடுபட்டிருந்தார் நுஸைபா.
விரைவில் எதிரிகளின் கை ஓங்கி, நிலைமை மோசமாகி, முஸ்லிம் வீரர்களின் கட்டுக்கோப்புக் குலைந்து போனதும் நுஸைபாவின் வீரம் பொங்கி எழுந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சுற்றி மிகச் சில தோழர்களே நின்றிருந்தனர். பதட்டம், ஆத்திரம், கவலை என்று அனைத்தும் உணர்வில் கலந்துபோய் தம் கணவர், மகன் ஆகியோருடன் தாமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி ஓடினார் நுஸைபா.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச்சூழ்ந்து காத்து நின்று போர் புரிந்து கொண்டிருந்தார்கள் சில தோழர்கள். அவர்களுடன் சேர்ந்து கொண்டார். தகுந்த கேடயம்கூட அப்பொழுது அவரிடம் இல்லை. அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாய்த் தோன்றவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காக்க வேண்டும்; அவர்களுக்கு எந்த பாதகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவர் நினைவு முழுதும் அந்த ஒரே ஒரு கவலை மட்டுமே ஆக்கிரமித்திருந்தது.
நிராயுதபாணியாக இருக்கும் நுஸைபாவின் நிலையைக்கண்டு, ஓடிக்கொண்டிருந்த ஒருவனிடம், “உனது கேடயத்தை சண்டையிடுபவரிடம் கொடுத்துவிட்டுச் செல்” என்றார்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அதை வாங்கி ஏந்திக்கொண்டு, இடுப்பில் துணியைச் சுற்றி இறுக்கக் கட்டிக்கொண்டு, முழு அளவிலான சண்டையில் மூர்க்கமாய் வாள்வீசி இறங்கிவிட்டார் நுஸைபா. மிகுந்திருந்த எதிரிகளின் எண்ணிக்கையைப் பற்றிய அச்சமோ, முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பின்னடைவினால் தயக்கமோ, தடுமாற்றமோ அவருக்கு ஏற்படவில்லை. ஆணுக்கு நிகராகச் சண்டை இட்டிருக்கிறார் அவர். சாட்சி உரைக்கின்றன அன்றைய அவரின் வீரச் செயல்கள்.
குரைஷிகளின் குதிரைப்படை நிறைய சேதம் விளைவித்துக் கொண்டிருந்தது. அதையெல்லாம் வெகு சில தோழர்கள் கொண்ட அந்தக் குழு எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தது. “அவர்கள் மட்டும் எங்களைப் போன்ற காலாட்படையாக இருந்திருந்தால் அவர்களுக்குப் படுதோல்வியை அளித்திருப்போம்” என்று பின்னர் ஒருமுறை கூறியுள்ளார் நுஸைபா. வாள் வீச்சு, அம்பு எய்தல் என்று மாறி மாறி துள்ளி இயங்கிக்கொண்டிருந்த நுஸைபாவை நோக்கிக் குதிரையொன்று வேகமாய் வந்தது.
அதன்மீது இப்னு குமைய்யா எனும் குரைஷி. வந்த வேகத்தில் நுஸைபாவின் தோள்பட்டையில் வெகு பலமாய் வெட்டினான் அவன். அந்த வேகத்துக்குத் துவண்டிருக்க வேண்டும் அவர். ஆனால் அதைத் தாங்கிய நுஸைபா, தம் கேடயத்தால் தற்காத்துக்கொண்டு மேலும் கடுமையாய்ப் போர் புரிய ஆரம்பித்தார். மேற்கொண்டு அவனால் அவரைத் தாக்க முடியவில்லை. திரும்பிவிட யத்தனித்தான் இப்னு குமைய்யா. ஆனால் நுஸைபா ஒரு காரியம் செய்தார். அவன் அமர்ந்திருந்த குதிரையின் கால்களை தம் ஆயுதத்தால் பலமாகத் தாக்கி முடமாக்க, சடேரெனச் சரிந்தது குதிரை. ‘தொப்’பென்று மல்லாக்கத் தரையில் விழுந்தான் அவன்.
இதற்கிடையே இதைக் கவனித்துவிட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நுஸைபாவின் மகனை நோக்கி, “உம்மு உமைராவின் மகனே! உன் தாயார்! உன் தாயார்! அவரது காயத்திற்குக் கட்டு இடு,” என்று கத்தினார்கள். நுஸைபாவுக்கு ஏற்பட்ட காயம் மிக மிக ஆழமான வெட்டு. நிறைய இரத்தம் கொப்பளித்து வழிந்து கொண்டிருந்தது. “யா அல்லாஹ்! இவர்களைச் சொர்க்கத்தில் என் தோழர்களாக ஆக்கி வைப்பாயாக” என்று இறைஞ்சினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அந்த வார்த்தைகள் நுஸைபாவின் செவியில் தெளிவாய் விழுந்தன. தெள்ளத் தெளிவாய் அதன் அர்த்தத்தை உணர்ந்தார் அவர். நம் வாழ்வு உய்வுற இது போதாது? மகிழ்ச்சி பொங்கச் சொன்னார், “ஆஹா!. இதன்பிறகு இவ்வுலகில் எனக்கு என்ன நிகழ்ந்தாலும் கவலையே இல்லை.” எல்லாம் துச்சம்!
மகன் தம் உதவிக்கு வரும்வரை நுஸைபா காத்திருக்கவில்லை. கீழே விழுந்தவனைச் சரமாரியாகத் தாக்கி அவனைக் கொன்றுவிட்டுத்தான் நின்றார். நுஸைபாவுக்கு ஏற்பட்ட அந்தக் காயம் எத்தனை ஆழமாக இருந்ததென்றால் பின்னர் அதற்காக ஓர் ஆண்டுவரை அவர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அன்று போரில், களத்தில், என்ன துணி கிடைத்ததோ அதை எடுத்து காயத்தைச் சுற்றி கட்டிக்கொண்டு அவர் போரைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
அவரின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸைதுக்கும் பலமான காயம் ஏற்பட்டிருந்தது. தடுத்து நிறுத்த இயலாமல் எக்கச்சக்க இரத்தம் ஓடியது. “உனது காயத்துக்குக் கட்டுப்போடு” என்றார்கள் நபியவர்கள். இதைக் கவனித்துவிட்ட நுஸைபா தம் மகனிடம் விரைந்து வந்தார். பெற்ற மகனின் ரத்தம் பொங்கும் காயத்திற்குத் தம் இடுப்புத் துணியைக் கிழித்து பாசம் பொங்க கட்டு இட்டவர் அடுத்து பேசியது வீரம்.
“எழுந்திரு மகனே! எதிரிகளைத் தாக்கு.”
“இன்று நீர் பொறுத்துக் கொள்வதைப்போல் எவரால் பொறுத்துக்கொள்ள முடியும் உம்மு உமாரா?” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அப்துல்லாஹ்வைத் தாக்கிய எதிரி மீண்டும் அங்கு நெருங்கினான். அவனை நுஸைபாவுக்கு அடையாளம் காண்பித்தார்கள் நபியவர்கள்.
“அவன்தான் உம் மகனைத் தாக்கியவன்.”
அவனை நோக்கி புலியாய்ப் பாய்ந்தார் நுஸைபா. அவனது கெண்டைக்காலில் தம் வாளால் பலமான போடு. ‘மளுக்’கென்று முழங்கால் மடங்கி தரையில் விழுந்தான் அவன். முஸ்லிம்கள் அவனைச் சுற்றி வளைத்தனர். கொன்று முடித்தனர். கடைவாய்ப்பல் தெரியுமளவு சிரித்தார்கள் நபியவர்கள். “பழிவாங்கிவிட்டாய் உம்மு உமாரா. உன்னை மேலோங்க வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்றார்கள்.
பின்னர் இந்நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது “உஹதுப் போர் நாளன்று இடப்புறம், வலப்புறம் என்று எங்கு திரும்பினும், நுஸைபா என்னைத் தற்காத்து போர் புரிவதைக் கண்டேன்” என்று நபியவர்கள் தெரிவித்துள்ளார்கள். அப்படிச் சுழன்றுச் சுழன்று போரிட்ட நுஸைபாவுக்கு அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் பன்னிரெண்டு.
சிராய்ப்புக் காயம், நகம் பெயர்ந்தது, பிடரியில் வலி போன்ற விஷயமெல்லாம் இல்லை. உம்மு ஸயீத் பின்த் ஸஅத் இப்னு ரபீஉ என்பவர் ஒருமுறை நுஸைபாவின் உஹதுப் போர் நிகழ்வைக் குறிப்பிடும்போது, “நுஸைபாவின் கழுத்துக்கும் தோளுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெரும் பள்ளம் ஒன்றைக் கண்டேன். அந்தப் போரில் அவர் அடைந்த காயம் அது” என்று கூறியிருக்கிறார். தோள்பட்டையில் சதை காணாமல் போய் ஏற்பட்ட பள்ளம்!
[ இக்காலத்தில் அலங்காரம் என்ற பெயரில் கண்ட இடத்தில் உடலைப் பொத்தலாக்கி அலங்கோலமாக்கிக் கொள்வது நாகரீகம். அவர்களோ இறைவனுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் தம் உடல் அலங்கோலமானாலும் பரவாயில்லை என்று களம் புகுந்து வெளிவந்திருக்கிறார்கள். அகமெல்லாம் பேரழகாகிப் போனது. ]
அதன் பின்னர் ஹுதைபிய்யா உடன்படிக்கை, ஃகைபர் யுத்தம், மக்காவின் வெற்றி, ஹுனைன் யுத்தம் என்று எந்த எந்த முக்கிய நிகழ்வுகளையும் தவறவிடவில்லை நுஸைபா. இவ்விதம் வீரமே வாழ்க்கையாக வாழ்ந்தவரின் மகன் ஹபீப் இப்னு ஸைதைத்தான் முஸைலமாவிடம் தம் தூதராக அனுப்பிவைத்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ‘கண்டதுண்டமாய் வெட்டிக் கொல்லப்பட்டார்’ என்று அந்த மகனைப் பற்றிய செய்தி வந்ததும் அத்தனை வலியும் அவருள் அமுங்கிப் போய், வெளிவந்தன இறை நேசமும் மிதமிஞ்சிய பக்குவ வார்த்தைகளும்.
"இத்தகைய ஒரு நிகழ்வுக்காகத்தான் நான் அவனை வளர்த்தும் உருவாக்கியும் வந்தேன். என்னுடைய நற்கூலியையும் அவனுடைய பரிசையும் அல்லாஹ்விடமே தேடுகிறேன். சிறுவனாய் இருக்கும்போது, ஒருநாள் இரவு அகபாவில் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்து தந்தான் என் மகன். அதைப் பெரியவனானதும் நிறைவேற்றிவிட்டான். எனக்கு அல்லாஹ் வாய்ப்பளித்து முஸைலமாவை நான் நெருங்கினால், அவனது இழப்பிற்காக தங்களது முகத்தை அறைந்து கொண்டு துன்பத்தில் அரற்றுவதற்கு அவனுடைய மகள்களுக்கு நல்ல வாய்ப்பளிப்பேன்"
அது அடுத்த சில ஆண்டுகளில் நிகழ்ந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பின்னரும் முஸைலமாவின் பிரச்சினை ஓயாமல் தொடர்ந்தது. இன்னும் சொல்லப்போனால் உச்சக்கட்டத்தை அடைந்தது.
அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் இந்த விவகாரத்தில் முக்கியமாய்க் கவனம் செலுத்தினார். மதீனாவிலிருந்து கிளம்பியது முஸ்லிம்களின் படை. அதன் விபரங்களை இதர தோழர்களின் வரலாற்றில் நெடுக விரிவாய்ப் படித்தோம். அதனால் இங்கு நுஸைபாவின் பங்கை மட்டும் பார்ப்போம்.
கலீஃபா அபூபக்ரின் முஅத்தின் மதீனா நகர வீதிகளில் பொய்யன் முஸைலமாவை எதிர்த்துப் போரிட மக்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே சென்றார். தொழுகையின் அழைப்பிற்கு எப்படி முந்திக் கொண்டு ஓடி வருவார்களோ, அதேபோல்தான் போரின் அழைப்பிற்கும் கிளம்பினார்கள் அந்த மக்கள்.
நுஸைபா ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நாளாயிற்றே அது! போர் அழைப்புக் காதில் விழுந்ததும் "மகனே கிளம்பு" என்று தம்முடைய மகன் அப்துல்லாஹ்வுடன் வாளைத் தூக்கிக் கொண்டு, முஸ்லிம் படைகளுடன் யமாமாவை (சுட்டி) நோக்கி ஓடினார் உம்மு உமாரா. அங்கோ கடுமையான யுத்தம். முஸ்லிம்களுக்குப் பெரும் சவாலாய் அமைந்த யுத்தம் அது.
"அல்லாஹ்வின் விரோதி எங்கே? எனக்குக் காண்பியுங்கள். எங்கே அல்லாஹ்வின் அந்த விரோதி!" என்று, இரை தேடும் பெண் புலியைப் போன்று படை வரிசையினூடே சீற்றமுடன் பாய்ந்து முன்னேறிக் கொண்டிருந்தார் நுஸைபா. கடைசியில் அவனை அந்த அம்மையார் அடைந்தபோது, துண்டாடப்பட்டுக் கிடந்தான் முஸைலமா. வஹ்ஷி பின் ஹர்பு தமது ஈட்டியால் அவனுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அதைக் கண்டவுடன்தான் அமைதியும் உளநிறைவும் ஏற்பட்டது அந்த அம்மையாருக்கு.
உஹதுப் போரில் நுஸைபாவுக்குப் பன்னிரெண்டு விழுப்புண்கள் என்று பார்த்தோமா? இந்தப் போரில் பதினொன்று. தவிர, உஹதுப் போரின்போது தோள்பட்டையில் காயம் பட்ட அந்தக் கையை இந்தப் போரில் இழந்திருந்தார் அவர்.
போரில் கலந்துகொண்டார்கள்; காயமுற்றார்கள்; அங்கங்களை இழந்தார்கள் என்று எளிதாய் எழுதிவிடுகிறோம்; படித்துவிட்டு அடுத்த வரிக்கு நம் பார்வை தாவிவிடுகிறது. நவீன மருத்துவ வசதிகள் எதுவுமற்ற அக்கால கட்டத்தில் காயமுற்ற வீரர்களுக்கு அளிக்கும் சிகிச்சை முரட்டுத்தனமான ஒன்று. யமாமா போரில் காலித் பின் வலீத் தமக்கு நல்ல சிகிச்சை அளித்து கவனித்துக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார் நுஸைபா. அது எப்படியான சிகிச்சை?
எண்ணெய்யைக் கொதிக்க வைத்துக் காயங்களின் மேல் ஊற்றுவார்கள். அது கிருமி நாசினியாகவும் காயத்தைத் தீய்த்தும் உதவுகின்ற மருத்துவம். எவ்விதமான மயக்க மருந்தோ, வலி மரத்துப்போகும் மருந்துகளோ இல்லாத அக்காலத்தில் இந்தச் சிகிச்சைக்கு உட்படும் வேதனை எப்படி இருக்கும்? ‘அதைவிட அங்கத்தை இழந்துவிடுவது எவ்வளவோ மேல்’ என்று கூறியிருக்கிறார் நுஸைபா.
நாமெல்லாம் மனம் மரத்துப்போய், சொகுசில் வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்கிறோம்.
இத்தகு வேதனைகளையும் வலியையும் தாமே முன்வந்து இழுத்து போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு என்ன இருந்தது?
அங்கங்களை இழந்தாலும் பரவாயில்லை, உயிரையேகூட இழந்தாலும் பரவாயில்லை என்று ஏன் களம் புகுந்தார்கள்?
பொருளாசையா? பதவி ஆசையா?
அந்த மண்ணாசையெல்லாம் இல்லை; சுத்தமாக இல்லை. இறைவனும் இறைத் தூதரும் இறை மார்க்கமும் மட்டுமே பிரதானம்; மறுமை ஈடேற்றம் மட்டுமே குறிக்கோள்.
பெரும் திருப்தியுடன் மதீனா திரும்பியவர், கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கிலாஃபத்தில் ஹிஜ்ரீ 13 வரை உயிர் வாழ்ந்து, இறவாப் புகழடைந்தார் நுஸைபா ரலியல்லாஹு அன்ஹா!
- நன்றி-  
Nijamudheen NJ

செவ்வாய், 1 நவம்பர், 2016

திருக்குர்ஆன் மலர்ச்சோலை - கட்டுரைத் தொகுப்பு

Image result for flowers garden

திருக்குர்ஆன் மலர்கள் தளத்தின் கட்டுரைகள் அனைத்தும் கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் தொகுக்கப் பட்டுள்ளன.
1. இறைவேதம்
2. இறைத்தூதர்
3. இறைகொள்கை
4. இஸ்லாம் / ஆன்மிகம் / மதம்:
5. சமூகம் / ஒழுக்கம்
6. இயற்கை/ அருள்வளம்:
7. குற்றச்சாட்டு:
8. வாழ்கை / அமைதி:
9. நியாயம் / அநியாயம் / பாவம் / புண்ணியம்
10. செல்வம் / கல்வி / உயிர் :
11. மறுமை / மரணம்:
12. காதல் / பாலியல்
13. ஆபாசம்:
14. வன்முறை  / சமூக பிரச்சனைகள்:
15. சாதி
16. நாடு
17. பெண்கள்:
18. தீவிரவாதம்
19. நாத்திகம் / பகுத்தறிவு:
20. இயேசு / கிறிஸ்துவம் 

தொகுத்தவர் : பெங்களுர் காஜா மொய்தீன் 
------------------------------ 
அடிக்கடி படிக்கப்படுபவை:
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html
கடவுளைப் புரிந்து கொள்ளாமையால் மனித இனம் சந்திக்கும் இழப்புகள்
நியாயம் எதுஅநியாயம் எது?
http://quranmalar.blogspot.com/2013/02/blog-post_10.html
மனித உரிமை க்கான அடிப்படை
இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
https://www.quranmalar.com/2012/11/blog-post_6.html

இறைவேதம்;
எல்லோருக்கும் பொருந்தும் வேதம்.
இறைவனின் உள்ளமையை வெளிப்படுத்தும் இறைவசனங்கள் –வீடியோ
அன்று பெய்தது தேன்மழை!
திருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வேறுபாடுகள்
திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
திருக்குர்ஆன் இறங்கிய வரலாறு
திருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் முறையும்
அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம் திருக்குர்ஆன்
திருக்குர்ஆன் எப்படி வந்தது?
திருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன?
முந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்
http://quranmalar.blogspot.com/2012/09/blog-post_6053.html
திருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்!
திருக்குர்ஆன் சொல்வது என்ன?
திருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்
சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்
100% பாதுகாக்கப்படும் இறைவேதம்
திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.
இருட்டடிப்பால் திரிக்கப்படும் நூல்கள்!
இறைவனின் ஏற்பாட்டில் குறைகாண முடியுமா?
திருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்
தேன் உற்பத்தி என்ற இறை அற்புதம்.
செங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்!
சிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்

இறைத்தூதர்:
புகழ் விரும்பாத இறைத்தூதர்கள்
இதயங்களை வென்ற இறைத்தூதர்
இறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு?
நபிகளார் மக்களை எதன்பால் அழைத்தார்கள்?
சுயமரியாதையை நிலைநாட்டிச் சென்ற மகான்!
ஏன் விமர்சிக்கிறார்கள் இந்த மாமனிதரை?
நபி (ஸல்) அவர்கள் எழுதிய மடல்.......
நம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. குஷ்வந்த் சிங்
ஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்
இறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6106.html
நூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்?
நபிகளாரைப் பற்றி இயேசு நாதர்
நபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு
மாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்!
இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)
இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)
இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)
இறுதி இறைத்தூதரே நபிகளார்
பாமரனுக்கும் பணிந்து வாழ்ந்த மாமன்னர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html
இறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்!


இறைகொள்கை
கற்பனைக் கடவுளர்களை வணங்குவோரின் நிலை!
யாதும் ஊரேயாவரும் கேளிர்! – இது சாத்தியமா?
பொங்க வைத்த இறைவனை நாம் மறவோம்!
இறைவனை வணங்க இடைத்தரகர் எதற்கு?
உருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள்
இறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை!
இறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் !
ஒன்றே குலம் ஒருவனே இறைவன்பிறகு ஏன் பிரிந்தோம்?
கடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....
இணைவைப்பவை சிறந்தவையாஇல்லை இறைவனா?
இறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்கள்
http://quranmalar.blogspot.com/2012/09/blog-post_6800.html
இறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது?
வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே!
உண்மை இறைவன்பால் திரும்புவோம்
அற்பமான மனிதனும் ஒப்புவமை இல்லா இறைவனும்
இறைவனை ஏமாற்ற முடியுமா?
ஈயிடம் இழந்ததை மீட்க வழியுண்டா?
இத்தனைக் கடவுள்கள் ஏன்? - தினமலர் கட்டுரை
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
இறைவனின் எச்சரிக்கைகள் வெறும் பூச்சாண்டிகளல்ல!
தயவு தாட்சண்யமற்ற கொள்கைப் பிரகடனம்!
தேவை ஒரு தெளிவான கடவுள் கொள்கை!
சிலைவணக்கமும் சிந்திக்கவேண்டிய உண்மைகளும்

இஸ்லாம் / ஆன்மிகம் / மதம்:
அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் மின் நூல்
இஸ்லாம் என்ற மனமாற்றம்!
அரபு நாட்டுக் கடவுளா அல்லாஹ்?
http://quranmalar.blogspot.com/2013/08/blog-post.html
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
"அல்லாஹ்ஆணா?
இன்ஷா அல்லாஹ்’ என்றால் என்ன?.
போலி ஆன்மீகமும் சீர்திருத்த ஆன்மீகமும்
மெய் வருத்தத்தில் ஆன்மீக நேட்டம் இல்லை!
மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்!
மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்!
ஆன்மீகத்தின் அடிப்படை மந்திரம்!
தாய்மதம் அறிவோமா?
பற்பல மதங்கள் எவ்வாறு உருவாயின?
கடவுளைப் புரிந்து கொள்ளாமையால் மனித இனம் சந்திக்கும் இழப்புகள்
தலைவனுக்கும் தலைவணங்காத கலாச்சாரம்!
இஸ்லாம் எவ்வாறு அடிமைகளை விடுவித்தது?
ஒரு வரலாற்று நாயகன் இஸ்லாத்தை ஏற்றபோது......
கவர்ணர் மாளிகையில் கலீபா!
எண்ணித் துணிவது எவ்வாறு?- இஸ்திகாரா
நோன்பும் நோக்கமும் மாண்பும்
மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்! - மின் நூல்
இஸ்லாமிய பண்டிகைகளின் தனிச்சிறப்புகள்
ரமலான் இறைவனுக்கு நன்றிகூறும் மாதம்!
ரமலானுக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?
தியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்
பக்ரீத் ஏன் கொண்டாடப்படுகிறது?
தொழுகை நடத்திவரும் புரட்சிகள்
அழியாத தியாக வரலாற்றுச் சுவடுகள்
கருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை
இஸ்லாம் வழங்கும் சுதந்திரம்
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்
மனமாற்றமும் குணமாற்றமுமே இஸ்லாம்
இஸ்லாம் வழங்கும் சுதந்திரம்
மன அமைதிக்கு ஓர் மகத்தான மந்திரம்!
உலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட அந்த இரவு!
மாட்டுப்பொங்கல் சிந்தனைகள்....

சமூகம் / ஒழுக்கம்
இன உணர்வுப் போராளிகளின் சிந்தனைக்கு...
சிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்
மது தீமைகளின் தாய் !
உழைப்போர் உரிமை அல்லமனித உரிமை!
தனி மனித சீர்திருத்தம் எவ்வாறு?
டைம்ஸ் நவ் ஜாதிக் கலவரம் பற்றிய வீடியோ
சமூகப் புரட்சிகளுக்கு உயிர்நாடி மந்திரம்
தற்கொலை தவிர்ப்பீர்தன்னம்பிக்கை வளர்ப்பீர்!
உழைப்போர் உரிமைகள் மதிக்கப்பட .... மனித உரிமைகள் மலர...
தீமைகளைத் தடுக்காமல் அமைதி மீளாது!
விரைவில்.... குற்றவாளிகளுக்கும் லைசென்ஸ் !!!
மத நல்லிணக்கம் எவ்வாறு?
பிறர்நலம் விழையும் ஜீவராசிகள்
மாமனிதர் மது ஒழித்த வரலாறு
மதுவை ஒழிக்க நடைமுறை சாத்தியமான தீர்வு
விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்!
இறைவன் மதுவிலக்கை ஏன் அமுல்படுத்தவில்லை?
பாலியலை சமநிலைப்படுத்தும் வாழ்வியல்
வலிய வந்து தண்டனை பெற்ற குற்றவாளி!
பயனற்ற கல்வியை நிறுத்துவோம்!
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!

இயற்கை/ அருள்வளம்:
இயற்கை தாங்கி நிற்கும் பாடங்கள்
பூமியென்ற வாழ்விடம்!
சுற்றுலாக்களும் படிப்பினைகளும்
புத்தாடை சிந்தனைகள்
ஓடு... ஓடு.... செல்லுமிடம் அறிந்து ஓடு!
உணவு என்ற இறை அற்புதம்!
http://quranmalar.blogspot.com/2013/07/blog-post.html
வானம் என்ற பாதுகாப்புக் கூரை! அதை நினைவூட்ட வந்த எரிகல் மழை!
2012 –இல் உலகம் ஏன் அழியவில்லை? – பாகம் ஆறு
பணியாளர்களிடம் பணிவு!
http://quranmalar.blogspot.com/2013/01/blog-post.html
2012 –இல் உலகம் ஏன் அழியவில்லை? – பாகம் ஐந்து
2012 –இல் உலகம் ஏன் அழியாது? – பாகம் நான்கு
2012 –இல் உலகம் ஏன் அழியாது? – பாகம் மூன்று
நீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை!
2012 –இல் உலகம் ஏன் அழியாது? – பாகம் இரண்டு
2012 –இல் உலகம் ஏன் அழியாது? -பாகம் ஒன்று.
உங்கள் வரலாற்று சுருக்கம்!
இளம் மனங்களில் இறையச்சம் விதை!
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_1.html
உணவும் வீண்விரையமும்!

குற்றச்சாட்டு:

நபிகளாரின் மணவாழ்க்கை -விமர்சனங்கள்

இஸ்லாத்தில் பலதார மணம்
சிலைவழிபாட்டை ஏன் எதிர்க்கிறீர்கள்?
எம்மதமும் சம்மதமா?
சைவமே சரி! – என்பது சரியா?
உணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா?
ஊடகங்களின் இரட்டை நிலை ஏன்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்பாகம் I
இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? – பாகம் II
ஏனிந்த வெறுப்புப் பிரச்சாரம் ?
இஸ்லாத்தை கட்டாயமாக திணிக்கமுடியுமா?
தர்காவுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை!
பெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்!
இஸ்லாத்துக்கு எதிரானவை தர்காக்கள்!
முஹர்ரமும் மூடநம்பிக்கைகளும்
முஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது?

வாழ்கை / அமைதி:
மன அமைதிக்கு ஓர் மகத்தான அறிவுரை!
உலக அழிவுக்கு முன் அறியவேண்டியவை
வாழ்கையின் நோக்கமும் மறுமை வாழ்வும்
நாம் ஏன் பிறந்தோம்? - மின் நூல்
ஞானி லுக்மான் தன் மகனுக்கு செய்த உபதேசம்
ஒரு ஆங்கிலத் தாய் மனம் திறந்து பேசுகிறார்..
காலிப் பானையும் கலீஃபாவும்-
ஏன் இவர்கள் இப்படி? - மின் நூல்
உறங்கும்போது எங்கே சென்றுவிடுகிறீர்கள்?
அமைதிமிக்க உலகு சாத்தியமா?
அமைதியை நோக்கி ஒரு பயணம்!
நாம் ஏன் பிறந்தோம்?
கேரளாவும் தமிழ்நாடும் இணைய முடியுமா?
வாழ்வே மாயமா?
வாழ்க்கைத் துணை தேர்வு
சுயமரியாதையை மீட்டெடுக்க ஒரே வழி!
கதவைத் தட்டும் முன் திறந்து வை!
மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா?
இதயங்கள் இணையட்டும்! - பாகம் 1
அண்டை வீட்டாருக்கு அன்பு செய்!
பேசு... நல்லதையே பேசு!
செய்நன்றி கொன்றோர்க்கு நரகமே!
கணவன் மனைவிக்கு செய்யவேண்டியவை
தேவைஉலகப்பற்றில்லாத ஆட்சியாளர்கள்!
பொதுப்பணத்தை சுருட்டாத ஆட்சியாளர்!
மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே!
தாயை மதிக்கிறோம்அவளைத் தந்தவனை....?
மனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை!
அன்பைக்காட்ட ஆயிரம் வழிகள்
நோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு?
பாங்கோசையும் நாய்கள் ஊளையிடுதலும்!
அன்பை வளர்க்க ஆழமானதோர் அடித்தரை!
கண்டிப்பதும் ஒரு கலையே!
கர்வம் தவிர்க்க கருவறையை நினை!
ஒரே ரயிலைத் தவறவிடுவீர்களா?

நியாயம் / அநியாயம் / பாவம் / புண்ணியம்
நியாயம் எதுஅநியாயம் எது?
http://quranmalar.blogspot.com/2013/02/blog-post_10.html
மனித உரிமை க்கான அடிப்படை
பாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை!
இறைசட்டங்கள் எப்படி இன்றைக்குத் தீர்வாகும்?
நீதி ஏன் கேலிக்குரியதாகிறது?
எதிர்த்தோரின் குழந்தைகளின் நலன் நாடிய உத்தமர்
ஆணாதிக்கத்தின் உச்சகட்ட கொடுமை!
அநீதிகள் அடங்குவது எப்போது?
பாவங்கள் பாவங்களே!

செல்வம் / கல்வி / உயிர் :
வறட்சியும் செழிப்பும் சோதனைகளே!
பொருள் போதையால் அழிந்த நண்பன்!
உணவுச்சங்கிலியும் உயிர்வதையும்
அழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை!
பொருளாசை என்ற போதை
பள்ளிகளில் இருந்தே பண்பியல் தொடங்குவோம்!
பெற்றோரைப் பேணாதோருக்கு நாசமே!
கருணைக்கொலை எனும் “விருது!
காலம் கடந்த ஞானோதயம்!
நோயும் மருந்தும் ஈயில் உண்டு!
தோல் எனும் உயிர்த்தோழன்!

மறுமை / மரணம்:
இந்தக் கூடுகளுக்குள் வாழ்ந்த ஆத்மாக்கள் எங்கே?
திருக்குர்ஆன் அத்தியாயம் 75 - மறுமை நாள்
பாவத்தின் சம்பளமா மரணம்?
மரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா?
மரணம் நெருங்கும்போது நிதானம்
முதுமைக்குப் பின் மீண்டும் இளமை சாத்தியமா?
கல்லறைக்குப் பின்னும் தொடரும் பயணம்!
மறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர்கள்
மண்ணறை மர்மங்கள்
குருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்?
மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html
சொர்க்கம் செல்ல எளிய வழிகள்
நேற்று கருவறை! நாளை கல்லறை! நடுவிலே ஏனிந்த சிறை?
மரணவேளையில் மனிதன்
உங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்!
மறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை!
கொலையுண்டவர்கள் எழுந்து வரும் நாள்!
அந்த ஒரு காட்சி! அந்த ஒரு வேளை......
சமாதிக்குள் என்ன நடக்கிறது?

காதல் / பாலியல்
காதலை வெல்வோம்!
காதலுக்கும் காமத்துக்கும் வரம்புண்டா?
காதல் புனிதமானதா?
இல்வாழ்க்கை இனிதாக...
காதலிப்பது தவறா?
ஆதலினால் காதல் செய்யாதீர்!
இல்வாழ்க்கை இனிதாக அடிப்படை தேவை

ஆபாசம்:
பாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி!
ஆபாசத் திரைப்படங்களும் கார்ட்டூன்களும்!
நடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....
திரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்!
திரை உலகுக்கு ஓர் எச்சரிக்கை!
மனித குலத்தைப் பிரித்தாளும் கற்பனைப் பாத்திரங்கள்

பாலியல் கொடுமைகளில் இருந்து காக்கும் கட்டுப்பாடுகள்


வன்முறை / சமூக பிரச்சனைகள்:
வன்முறையை ஒழித்திடுமே வான்மறை!
பெரும்பான்மையைத் துடைத்தெறிந்த சிறுபான்மை!
பாபரி மஸ்ஜிதை என் முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்பதில்லை?
கர்நாடகமும் தமிழகமும் இணைய முடியுமா?
விவசாயிகள் தற்கொலைகள் ஏன்?
தன்னம்பிக்கை ஊட்டப்படாத பிள்ளைகள்!
இறைவழி நின்று இலஞ்ச ஊழலை ஒழிப்போம்.
திருட்டை ஒழிக்க சிறந்த வழி!
சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை!

சாதி
இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா?
ஜாதிகள் எவ்வாறு உருவாகின?
சாதிகள் ஒழித்திடடி பாப்பா!
ஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்!
கலப்புத்திருமணம் கூடுமா?
குற்றவாளிகள் யார்? – கழுகுப்படை ஆய்வு!

நாடு
நாம் திருந்த நாடும் திருந்தும்!
வெள்ளையர் வெளியேறவில்லை!
நாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்!
எத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே?
இதற்குப் பெயர்தான் நாட்டுப்பற்று!
நாட்டைக் காப்போம்நாட்டு மக்களை நேசிப்போம்!
இறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி அமைய..
சுய இன அழிவுக்கு இரையாகும் நாடு!
ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இறையச்சம்!
பாரதம் காப்போம் மின் நூல்
அரசியல்வாதிகளுக்கு இறையச்சம் வேண்டும்!
அரசியல் சூதாட்டத்தில் இருந்து பாரதத்தைக் காப்போம்!
நாட்டுப்பற்று என்றால் என்ன?
நல்லொழுக்கமே நாட்டைக் காக்கும் அடித்தளம்
சுதந்திர இந்தியாவின் விபரீதப் போக்கு!
நாட்டுப்பற்றும் இஸ்லாமும்!
நாட்டைக் காக்க ஓர் நல்ல வழி!
படைத்தவன்பால் திரும்புவோம் பாரதத்தைக் காப்போம்

பெண்கள்:
பர்தா பற்றி அமெரிக்கப் பெண்கள்
ஆணாதிக்கத்திற்கு தடைபோடும் பர்தா!
அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் அனுமதித்தது ஏன்?
பெண்ணின் ஆடைகளில் தள்ளுபடி!
பெண்குழந்தைகளைக் காப்போம்
இறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்
பெண் இனத்தின் பாதுகாப்பிற்கே இஸ்லாம்
இயற்கையில் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் இல்லை! -ஏன்?
பெண்குழந்தை என்ற அருட்கொடை
நான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை! - யுவோன் ரிட்லீ...
பெண்களுக்கு எதிரான முதல் குற்றம்!
பெண்ணுரிமை வாதிகளின் இரட்டை முகம்!
பெண்களின் பாதுகாப்புக்கே பர்தா
பர்தாவை எதிர்ப்பவர்களின் போலித்தனம்
இறைவன் பரிந்துரைக்கும் உடை ஒழுக்கம்
இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை!
பெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்?
பெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்!
பெருகிவரும் பெண்சிசுக் கொலைகள்!
லெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்

தீவிரவாதம் / பயங்கரவாதம்  

இஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்?

பயங்கரவாதிகள் எதைக்கண்டு அஞ்சுகிறார்கள்?
எது பயங்கரவாதம்?

காலனி ஆதிக்கம் என்ற ரவுடி சாம்ராஜ்ஜியம்

உலக பயங்கவாதம் 1 - பணம் வந்த கதை

உலக பயங்கரவாதம் 2 - வங்கி என்ற பேரழிவு ஆயுதம்!

 உலக பயங்கரவாதம் 3 -உலகளாவிய வங்கி ஆதிக்கக் கொடுமை!

உலக பயங்கரவாதம்  4 - உச்சகட்ட பயங்கரவாதம் !

.எஸ்..எஸ் இயக்கம் யாருடையது..?
பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பின்னணி!
தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சொற்கள்
http://quranmalar.blogspot.com/2014/11/blog-post_27.html
இஸ்லாம் ஏன் பயங்கரவாதத்தோடு முடிச்சு போடப்படுகிறது?
பயங்கரவாதிகள் யார்?
உலக பயங்கரவாதத்தின் மூலகாரணம்
அப்பாவிகளைக் கொல்வோர் தண்டனையில் இருந்து தப்பமுடியாது!
7.தர்மமும் பயங்கரவாதமும் (part-7)
6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)
5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)
4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)
3. தர்மமும் பயங்கரவாதமும் (part-3)
2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)
தர்மமும் பயங்கரவாதமும் (part-1)

நாத்திகம் / பகுத்தறிவு:
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு!
அறிவியலைக் கூறி படைத்தவனை மறுக்கமுடியுமா?
படைத்தவனைப் படைத்தது யார்?
படைத்தவன் இல்லாமல் படைப்பினங்களா?
அடிப்படையில்லா நாத்திகம் 

அழகிய மனிதனை மிருகமாக்கிய நாத்திக சிந்தனை!!

நாத்திகப் பேராசிரியருக்கு நேர்ந்தது என்ன?

இனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும்

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவும் பாடங்களும்

ஜீரணமா இல்லை மரணமா?

மனிதனை நினைக்க கடவுளை மறப்பதா?

இறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்?
இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?
இயற்கை என்ற நாத்திகர்களின் ‘கடவுள்’!
https://www.quranmalar.com/2019/10/blog-post_18.html

மீண்டும் மீண்டும் படைக்கும் அற்புதம்!

பகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்!
விண்வெளியில் ஒரு பரீட்சைக்கூடம்!
ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் படைத்துள்ளான்?
நாத்திகர்களுக்கு படைத்தவனின் கேள்விகள்!
தன்மான உணர்வு கொள் தமிழா நீ!
உண்மையான பகுத்தறிவுவாதி
பெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்
ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் படைத்துள்ளான்?
ஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-
பெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி
பகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை!
தடுமாறும் நாத்திகம்.....!
தீண்டாமை ஒழிக்க ஒரே வழி ஓரிறைக்கொள்கை!
இறைவனை படைத்தது யார்?

இயேசு / கிறிஸ்துவம்
இயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை?
கிருஸ்தவர்களுக்கு நபிகளாரின் அன்பு மடல்
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் ....-இயேசு
நஜ்ஜாஷி மன்னரைக் கவர்ந்த குர்ஆன் வசனங்கள்
நபித்தோழர்களை அரவணைத்த கிருஸ்துவ மன்னர்!
இயேசுநாதர் பற்றி இஸ்லாமிய அறிமுகம்பாகம் -1
இயேசு நாதரின் அற்புதப் பிறப்பு
தேற்றரவாளரை ஏன் பின்பற்றவேண்டும்?
இறைவனையே வணங்கச் சொன்ன இயேசுநாதரும் நபிகளாரும்
இயேசுநாதரை களங்கங்களில் இருந்து காத்த தேற்றரவாளர்
இயேசுநாதர் பற்றி 100 % உண்மைகள் --- இறுதி ஏற்பாட்டில்!
வாழ்நாள் நெடுகிலும் அற்புதங்கள்அவரே இயேசு!
இறைத்தூதர்கள் வரிசையில் முஹம்மது நபியும் இயேசு நாதரும்
இயேசுவிடமிருந்து முஸ்லிம்கள் கற்கும் பாடங்கள் -1
அன்னை மரியாளை மகிமைப் படுத்தும் திருக்குர்ஆன்!
இயேசுவின் அற்புதப் பிறப்பு ! அதை உறுதிப்படுத்தும் இறுதி ஏற்பாடு!
அன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்றியது எது?
பைபிள் விடுத்த புதிருக்கு விடை காணும் குர்ஆன்!
எல்லா வெள்ளிக்கிழமையும் நல்ல வெள்ளியே!