சக மனிதன் தனக்கு சமமே, தன் சகோதரனே என்ற உண்மையை தந்திரமாக மறைத்தார்கள் காலனி ஆதிக்கவாதிகள்.
- மனித சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகளில் மிகப்பெரிய ஒன்று அவர்கள் நடத்திய அடிமை வாணிபம்!
- சுமார் 300 வருடங்களாக தொடர்ந்து முற்றிலும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்தது இக்கொடுமை!.
- இது போன்ற ஒரு பயங்கரவாத செயலை மனித சரித்திரம் என்றுமே கண்டதில்லை.
- இதை நிகழ்த்தியவர்கள்தான் இன்றும் உலகை தங்களின் ஆயுத பலத்தால் அடக்கியாள்கிறார்கள் .
- அவர்களின் பிடியில் இருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கப் போராடுவோரை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறார்கள்.
- தங்களை சமாதானத்தின் தூதுவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.
"மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். ... அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
என்கிறது இறைவேதம். முன்னர் வந்த இறைவேதங்களும் ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தையே போதித்தன. ஆனால்
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
என்கிறது இறைவேதம். முன்னர் வந்த இறைவேதங்களும் ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தையே போதித்தன. ஆனால்
ஆனால் தங்கள் இனமே அனைத்து இனங்களையும் விட மேலானது என்ற மனப்பான்மையும் பணத்தை எப்படியாவது சம்பாதித்துக் குவிக்க வேண்டும் என்ற தீராத வெறியும் கொண்டு அலைந்தவர்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா? தாங்கள் எது செய்தாலும் தட்டிக்கேட்க இவ்வுலகில் யாருமேயில்லை என்ற நிலையை அடைந்த அந்த கொடியவர்கள் அந்நாட்டு அப்பாவி மக்கள் மீது அராஜகங்களை தொடுத்தார்கள். மானிட சரித்திரத்திலேயே அதுபோன்ற ஒரு ஈவிரக்கமற்ற செயலை யாருமே செய்திருக்க முடியாது. ஆம் சற்று படித்துப்பாருங்கள்.
பயங்கரவாதம் என்றால் என்ன?
கத்தி முனையில் அல்லது துப்பாக்கி முனையில் அப்பாவியை அல்லது அப்பாவிகளை மிரட்டி தனது காரியங்களை அநியாயமாக சாதித்துக் கொள்வது போன்ற நடவடிக்கையே பயங்கரவாதம் என்று அழைக்கப்படுகிறது. படித்தபின் நீங்களே முடிவு செய்யுங்கள். எது பயங்கரவாதம் என்று.
ஆப்பிரிக்க நாடுகளில் அவர்களுக்கே உரிய கலாச்சாரத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த இலட்சக்கணக்கான கறுப்பின அப்பாவி மக்களை துப்பாக்கி முனையில் பிடித்தார்கள் காலனி ஆதிக்க கொடூரர்கள். அவ்வாறு பிடித்த அடிமைகளை கப்பல்களில் ஏற்றி ஐரோப்பாவுக்கும் அமெரிக்கா கண்டத்தின் பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்க முனைந்தார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என யாரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. தங்களைப் போலவே அவர்களும் மனித உணர்வுகளும் சிந்தனையும் கலாச்சாரமும் குடும்ப அமைப்புகளும் வாழ்க்கை முறைகளும் கொண்டவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு சற்றும் எழவில்லை. எதையுமே அவர்கள் மதிக்கவில்லை.
ஆடுமாடுகளை விடக் கேவலமான முறையில் அள்ளிக்கொண்டு சென்றார்கள். பிடித்த இடங்களில் இருந்து கடற்கரைக்கு நூற்றுக்கணக்கான மைல்கல் நடக்க வைத்தே கொண்டு சென்றார்கள்.
ஓடிப்போகாமல் இருக்க ஒருவரையொருவர் சங்கிலி போல பிணைத்தார்கள். கர்ப்பிணிகளையும் நோயாளிகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
படு மோசமான நிலைகளில் கப்பல்களில் ஏற்றி அட்லாண்டிக் கடல் மார்க்கமாக கடத்தினார்கள். கப்பலின் கொள்ளளவு நிறையும் அளவுக்கு அதிகமானோரை நிரப்பினார்கள். அவர்களை தேக்கரண்டிகளை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக அடுக்குவது போல அடுக்கினார்கள்.
கொடுமைகளை சகிக்க முடியாத பலர் கடலில் குதித்து தற்கொலையில் தஞ்சம் புகுந்தார்கள்.
அதைத் தடுப்பதற்கு இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவைகளின் கை கால்களில் விலங்கிட்டு ஒருவரோடு ஒருவர் சங்கிலிகளால் பிணைத்தார்கள்.
அவ்வப்போது அற்ப உணவை அவர்களுக்கு ஊட்டினார்கள். இரக்க உணர்வினால் அல்ல. தங்களின் “வியாபார சரக்கு’ கெட்டுப்போகாமல் இருப்பதற்காக.
ஆம், அதே நிலையில் அவர்கள் உண்டார்கள், மலஜலம் கழித்தார்கள், சுமார் நான்கு மாதங்கள் நீண்ட கடற்பயணத்தை அந்த அப்பாவி அடிமை மக்கள் எவ்வாறு கழித்திருப்பார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்துபாருங்கள்.
கடற்பயணத்தில் அவர்கள் எடுத்த வாந்தியிலும் மலஜலங்களிலும் மாதவிடாய் இரத்தத்திலும் கிடந்து புரண்டார்கள்.
கர்ப்பிணிகள் தங்கள் குழந்தைகளை அந்தக் கழிவுகளுக்கிடையேயே பெற்றெடுத்தார்கள்.
குழந்தைகளின் எதிர்காலத்தை பயந்து தங்கள் குழந்தைகளை வாய்ப்பு கிடைத்தபோது கடலில் வீசி எறிந்தார்கள் அந்தத் தாய்மார்கள்!
பிணங்களோடு பிணைக்கப்பட்ட நிலையில்!
கப்பலின் அடித்தளத்தில்தான் இவர்கள் அடுக்கப்பட்டு இருந்தனர். அங்கு காற்றோட்டம் கிடையாது. வெப்பமும் கழிவுகளின் நாற்றமும் அவர்களை வாட்டி எடுக்கும். மட்டுமல்ல பிணங்களின் நாற்றமும் கூட்டு சேர்ந்து கொள்ளும் அங்கு! ஆம் தங்களோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள் இறந்து போனால் அவர்களை உடனுக்குடன் அகற்றிவிடுவார்களா என்ன?
கடற்பயணத்தின் போது நோய் பரவினால் நோயாளிகளை மற்றவர்களிடம் இருந்து பிரித்து அவர்களை கடலில் வீசி எறிந்தார்கள். மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருப்பதற்காக!
"சரக்கு"களின் பாதுகாப்பு
தங்களின் “சரக்குகள்” கெட்டுப்போகாமல் இருக்க கீழ்த்தள மக்கள் மேல்தளத்திற்கும் மேல் தளத்தோரை கீழ்த்தளத்திற்கும் அவ்வப்போது மாற்றுவார்கள். கட்டாய உடற்பயிற்சியும் செய்விக்கப்பட்டார்கள்.
பயண இலக்கு வந்தடையும் முன்பு சில நாட்கள் அவர்களுக்கு அதிக உணவளித்து கொழுக்க வைப்பார்கள். காரணத்தை நீங்களே ஊகிக்க முடியும். ஆம், கடற்கரையில் கூடும் அடிமை சந்தையில் தங்களின் சரக்கு அதிக விலைக்கு விற்க வேண்டுமல்லவா?
யூத அடிமை வியாபாரிகள் பயணத்தில் இழந்த சரக்குகளுக்கு காப்பீடும் (insurance) வசூலித்தார்கள்.
தப்ப முயற்சிக்கும் அடிமைகளின் கால்களை வெட்டினார்கள், மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு.
மரணம் ஒன்றே விடுதலை!
இவ்வாறு கரையில் விற்கப்பட்ட அடிமைகள் நாளொன்றுக்கு 19 மணி நேரம் மனிதாபிமானமற்ற நிலைகளில் கடுமையான உழைப்பு செய்ய பணிக்கப்பட்டார்கள். மிகக் குறைவாகவே அவர்கள் உணவளிக்கப்பட்டார்கள்.
90
இலட்சத்தில் இருந்து ஒரு கோடியே பத்து இலட்சம் வரை மக்கள் ஆபிரிக்காவில் இருந்து அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறுகரைகளுக்கு உயிருடன் கடத்தப்பட்டனர் என்று சரித்திர ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள். ஆப்பிரிக்காவில் அடிமைகளாக பிடிக்கப்படும்போது தப்பித்தல், காடுகளைக் கடந்து கரைகளை நோக்கிய நடைபயணத்தில் இறப்பு, கப்பலுக்காக காத்திருக்கும்போது கடற்கரையில் அடிமைக் கொத்தளங்களில் இறப்பு, கடற்ப்பயணத்தின்போது இறப்பு ஆகியவற்றில் குறைந்த பட்சம் இரண்டு கோடி மக்கள் இறந்திருக்கிறார்கள் என்றும் கணிக்கப்படுகிறது.
இறைவனிடம் விசாரணை உண்டு
இந்த தற்காலிக வாழ்வை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ள இறைவன் அனைத்து மனித உரிமை மீறல்களும் இறைவன் முன்னிலையில் விசாரிக்கப்பட உள்ளன என்கிறான்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக