இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 ஜூலை, 2019

வங்கி என்ற பேரழிவு ஆயுதம்!


Image result for evolution of banking
#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_2
பணம் வந்த கதை( http://www.quranmalar.com/2019/06/blog-post.html )யில் இருந்து மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இது:  
 = யார் வங்கி அமைத்து ஒரு நாட்டின் பணப்புழக்கத்தை தன் கட்டுப்பாட்டுக் கொண்டு வருகிறாரோ அவர் கையிலேயே அந்நாட்டின் அனைத்து ஆதிக்கமும் கீழடங்கிவிடும். இந்த உண்மையை  உறுதிப்படுத்தும் கூற்றுக்கள் இதோ:  
= காலனி ஆதிக்கத்தின் தந்தையும் கிழக்கிந்திய கம்பெனியின் நிறுவனருமான மேயர் ஆம்செல் ரோத்சைல்ட் (Mayer Amschel Rothschild) கூறுகிறார்: (Whoever Controls Money Controls Everything Else Give me the power to create a nations money, and I care not who makes its laws.) ஒரு நாட்டில் யாருடைய கையில் பணத்தின் மீதான ஆதிக்கம் இருக்கிறதோ அவர் கையிலேயே அனைத்து ஆதிக்கமும் இருக்கிறது. ஒரு நாட்டின் பணத்தை உருவாக்கும் ஆதிக்கத்தை என் கையில் தந்து விடுங்கள். அந்நாட்டின் சட்டங்களை யார் உருவாக்கினாலும் எனக்குக் கவலை இல்லை 
= 1881 ஆண்டு அமெரிக்காவின் 20 ஆவது அதிபராகப் பதவி ஏற்று சில மாதங்களிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட அதிபரான ஜேம்ஸ் கார்பீல்ட் (President James A. Garfield ) கூறுகிறார்: .(Whoever controls the money in any country is master of all its legislation and commerce.)  நாட்டின் பணப்புழக்கம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அந்நாட்டின்  நீதித்துறையும் வணிகமும் அவர்களின் ஆதிக்கத்தின்  கீழேதான் இருக்கும்.
= அமெரிக்காவின் 3 வது அதிபர் தாம்சன் ஜெபர்சன் (President Thomas Jefferson)  கூறுகிறார்: இராணுவங்களை விட பயங்கரமானவை வங்கி நிறுவனங்களே என்று நான் நம்புகிறேன் (I sincerely believe that banking establishments are more dangerous than standing armies)

வங்கி அமைப்பும் ஆதிக்கமும்
இந்த அசைக்கமுடியாத ஆதிக்கத்தை வங்கியாளர்கள் எவ்வாறு அடைகிறார்கள்?
= தங்க நாணயங்களின் பாதுகாப்புக்காக பெட்டகம் அமைத்தல்
= நாணயங்களைப் பெற்றுக்கொண்டு அதன் மதிப்புக்கான கைமாற்றக்கூடிய (transferable) ரசீதுகள்  வழங்குதல்
= மக்கள் நாணயங்களை மறந்துவிடுதல் ரசீதுகளின் புழக்கம் மிகைத்து அது “பணம்” ஆகுதல். அந்தப் பணமின்றி எதுவும் நடவாது – அரசும் இயங்காது - என்ற நிலை வருதல்.  
= வங்கியாளர்கள் “பணத்தை” கடனாகக் கொடுத்து வட்டி ஈட்டல். அதை வைத்துக்கொண்டு நாட்டின் செல்வங்களையும்  சொத்துக்களையும் தனதாக்குதல்,  ரவுடிகள் மற்றும்  ஆட்சியாளர்களைக் கொண்டு போட்டியாளர்களையும் தங்கள் திட்டங்களுக்குக் குறுக்கே நிற்பவர்களையும் சமாளித்தல்,  நினைத்ததை நடத்துதல். அனைத்தையும் சட்ட பூர்வமாக்கல், ஏகபோக பணபுழக்கத்தின் அதிபதியாதல்.
-    இதுதான் வங்கி என்ற பேராயுதம். இது யார் கையில் இருக்கிறதோ அவர்களை மிஞ்சும் எதையாவது நீங்கள் கற்பனை செய்ய முடிகிறதா பாருங்கள்.  குறிப்பாக ஒரு நாட்டின் ஆயுத உற்பத்தியும் இராணுவமும் காவல்துறையும் இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள்!

வங்கியாளர்களின் வஞ்சகம்
பெட்டகக் காரார்கள் (வங்கியாளர்கள்) அவர்களின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்ட நாணயங்களுக்கு சரிசமமான மதிப்பில் ரசீதுச்சீட்டுகள்  நாட்டில் புழக்கத்தில் இருந்தால் அந்த சீட்டுகள் – அதாவது பணம் -  தங்கள் மதிப்பை இழப்பதில்லை. பெட்டகக் காரர்களும் தங்கள் நியாயமான சேவைக் கட்டணத்தோடு நிறுத்திக்கொண்டிருந்தால் எல்லாமே நன்றாக இருக்கும். நாட்டில் பொருளாதாரம் தழைக்கும்.
ஆனால் எப்போது அவர்கள் தங்கள் பொருளாசை காரணமாக நேர்மை தவறி தங்களிடம் நம்பி நாணயங்களை ஒப்படைத்த வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யத் துவங்கினார்களோ அதிலிருந்து பணம் தன் மதிப்பை இழந்தது. உபரியாக இவர்கள் விநியோகித்த அனைத்துச் சீட்டுகளுக்கும் சமூகம் விலை கொடுத்தது! எவ்வளவு பெரிய வஞ்சகம்!
வங்கியில் இருப்பில் உள்ள நாணயங்களுக்கு அப்பாற்பட்டு அவர்கள் விநியோகித்த அனைத்து ரசீதுச் சீட்டுகளையும் கள்ளச் சீட்டுகள் என்றே அழைக்க வேண்டும். அவ்வாறு வங்கியாளர்கள் கள்ளச் சீட்டுகளைத் தயாரித்து அவற்றை வைத்துக்கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் குவித்ததும் அதே கள்ளச்சீட்டுகளைக் கடனாகக் கொடுத்து வட்டி ஈட்டியதும் முழு சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அநியாயமாகும். இந்த அநியாயத்தை மூடிமறைக்க அவர்கள் அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் (இலஞ்சம் கொடுத்தோ மிரட்டியோ) சரிக்கட்டியதும் அதைவிட அநியாயமாகும். இதை விட அநியாயம் எது தெரியுமா? அது இன்னும் பூதாகரமானது!
ஆம் அத்தனை அநியாயங்களையும் மக்கள் இன்னும் அறியவிடாமல் அவர்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்திருப்பதும் நூற்றாண்டுகளாக இக்கொடுமையை உலக அளவில் தொடர்ந்து நிகழ்த்தி வருவதும்தான்! மக்களின் ஏமாளித்தனமும் இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையும் இதற்கு முக்கிய காரணமாகும். 
இவர்கள் ஏன் தண்டிக்கப் படவில்லை?
மக்களின் அறியாமையும் விழிப்புணர்வின்மையும் இவர்களை இக்குற்றத்தில் நீடிக்க விடுகின்றன. மக்கள் போதிய விழிப்புணர்வு பெற்று இயக்கமாக உருவெடுக்கும்போது இக்குற்றம் தடுத்து நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆனாலும் இறைவனின் நீதி கண்டிப்பாக நிறைவேறியே தீரும். இதில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளையும் இவர்களைச் சார்ந்தவர்களையும் இவ்வுலகில் தற்போது தண்டிக்க முடியாமல் போகலாம். அவர்கள் செய்த அல்லது அவர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்கு உரிய தண்டனையை அவர்கள் அனுபவிக்காமலேயே இவ்வுலகை விட்டு விடைபெறலாம். ஆனாலும் இறைவனின் நீதி விசாரணையில் இருந்தும் தண்டனையில் இருந்தும்  இவர்கள் தப்ப முடியாது. இந்த குறுகிய வாழ்வை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ள இறைவன் இவ்வுலகில் நடக்கின்ற அனைத்து செயல்களுக்கும் நீதி வழங்கவுள்ளான்.
 மனிதர்களுடைய அநீதியின் காரண மாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக  இருந்தால்  பூமியில் எந்த  உயிரினத்தையும்  அவன் விட்டுவைக்க  மாட்டான்.  மாறாக குறிப்பிட்ட  காலக்கெடு  வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான்.  அவர்களின் கெடு வந்ததும்  சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள்.  முந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 16:61)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
----------------- 
பணம் வந்த கதை 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக