குழந்தைச்செல்வம் பயனுள்ளதாக அமைய,,
அருளாக விளங்கும் ஒவ்வொன்றும்
அமானிதம் ஆகும். ‘மனிதனால்
பெறப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளுக்கே அமானிதம் என வழங்கப்படும். சொத்து, செல்வங்கள், ஆரோக்கியம்,
இளமைப் பருவம் என அனைத்தும் இஸ்லாத்தின்
பார்வையில் அமானிதமாக நோக்கப்படும். உலக வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கின்ற
செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் குழந்தைச் செல்வம்.
= “செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக
வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்.” (திருக்குர்ஆன் 18: 46)
=“ஏராளமான பொருள்களையும்
புதல்வர்களையும் (தந்து) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான
கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.” (திருக்குர்ஆன் 17: 06)
“மேலும் அவர்கள் எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும்
எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” (திருக்குர்ஆன் 25: 74)
இவ்வாறு குழந்தைகளை அருளாக, அலங்காரமாக, செல்வமாக, பாக்கியமாக, கண்குளிர்ச்சியாக, பரிசாக வர்ணிக்கின்ற
திருக்குர்ஆன் அக்குழந்தைகள் சோதனையுமாகும் என்ற உண்மையையும் சொல்கிறது.
= நிச்சயமாக உங்கள் செல்வமும்
உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக
இறைவனிடத்தில்தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து
கொள்ளுங்கள்.”
(திருக்குர்ஆன் 08: 28)
அருளாகக் கிடைக்கப்பெற்ற நமது
குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டிய உரிமைகள், கடமைகளை சரியாக
நிறைவேற்றத்தவறினால் இவர்கள் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் கண்குளிர்ச்சியாக
இருப்பதற்கு பதிலாக சோதனையாக மாறுவும் வாய்ப்புண்டு..
பெற்றோரின் பொறுப்பு
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள்
இப்படிச் சொன்னார்கள்,
“நீங்கள்
ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்கள் பொறுப்பு பற்றி (மறுமையில்)
விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர் அவரது பொறுப்பு பற்றி
விசாரிக்கப்படுவார். ஆண்மகன் குடும்பத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி
விசாரிக்கப்படுவார். பெண் தனது கணவன் வீட்டில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி
விசாரிக்கப்படுவார். வேலைக்காரர் தனது எஜமானனின் சொத்தில் பொறுப்புதாரி அவரது
பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்.” (புஹாரி)
இறைவிசுவாசிகளே! உங்களையும்
உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன்
எரிபொருள் மனிதர்களும் கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள்
(காவல்) இருக்கின்றனர். இறைவன் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே
அவர்கள் செய்து வருவார்கள். (திருக்குர்ஆன் 66: 06)
நல்ல குழந்தைகள்
கிடைக்க பிரார்த்தனை
இறைத்தூதர்கள் தங்களுக்கு
குழந்தை பாக்கியத்தை வேண்டும்போது நல்ல குழந்தைகளைத் தருமாறு இறைவனிடம்
பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
எனக்குப் பின் உறவினர்கள்
குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார்.
எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின்
குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக்
கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!” என்று (சக்கரிய்யா) கூறினார். (திருக்குர்ஆன் 19:6)
சக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து
எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம்
வேண்டினார். (திருக்குர்ஆன் 3:38)
குழந்தைகளுக்காக
பிரார்த்தனை செய்ய வேண்டும்:
குழந்தைகளுக்காக பிரார்த்தனை
செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும்.
இறைவா! எங்களை உனக்குக்
கட்டுப்பட்டோராகவும், எங்கள்
வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக!
எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக!
நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும்
பிரார்த்தனை செய்தார்கள்) (திருக்குர்ஆன் 2:128)
என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும்
தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை
ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.) (திருக்குர்ஆன் 14 :40)
எங்கள் இறைவா! எங்கள்
வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத்
தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று அவர்கள்
கூறுகின்றனர். (திருக்குர்ஆன் 25 :74)
===============

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக