இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 ஜூன், 2023

உணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா?

 #உணவுக்காக_உயிர்களைக்_கொல்வது_பாவமா?

கீழ்கண்ட உண்மைகளை கருத்தில் கொண்டால் இதுபற்றிய நமது ஐயம் விலகக் கூடும்:

1. #உயிரினம்_இன்றி_உணவில்லை: உலகில் வாழும் எந்த ஒரு உயிரினத்துக்கும், உணவு என்பது பொதுவாகவே மற்றொரு உயிரினம்தான். நாம் அன்றாடம் உட்கொள்ளும் தாவர உணவு அல்லது குடிநீரில் உள்ளடங்கியுள்ள பாக்டீரியாக்கள் உட்பட அனைத்தும் உயிரினங்களே என்பதும் அனைத்துக்கும் உணர்வுகள் உள்ளன என்பதும் அறிவியல் உறுதிப்படுத்தும் உண்மைகள்!

2. #உணவுச்சங்கிலி_இன்றி_உயிர்கள்_இல்லை: பொதுவாகவே பலமான உயிரினங்கள் பலவீனமான உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. புழுபூச்சிகள் அவற்றைவிட சிறிய உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. புழு பூச்சிகளைத் தவளைகள் உண்கின்றன. தவளை பாம்புகளுக்கு உணவாகிறது. பாம்புகளை கழுகுகள் பதம் பார்க்கின்றன. கழுகுகள் இறந்தால் அவற்றின் உடல்கள் நுண்கிருமிகளுக்கு உணவாகின்றன. இப்பூமியை உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீர்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவு சங்கிலிதான். இந்த உணவு சுழற்சியில் ஏதாவது ஒன்று நின்று போனாலே உலகம் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் கோடிக்கணக்கில் ஒரு நாளில் மனிதனால் உணவுக்காக வெட்டப்படுகின்றன. மனிதன் இவற்றை சாப்பிடாமல் இருந்தால் இந்த இனங்கள் அதிகம் பெருகி சுற்று சூழலுக்கு மிகக் கேடாக முடியும்.

உதாரணமாக, காடுகளில் முயல், மான், வரிக் குதிரை போன்ற மிருகங்களை சிங்கம் புலி போன்றவை அடித்து சாப்பிடுவதால்தான் காட்டின் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. இல்லை என்றால் இலை தழைகளை சாப்பிடும் இந்த மிருகங்கள் பெருகி முழு காட்டையும் சாப்பிட்டே அழித்து விடும். இலைதழைகளும் மரங்களும் அழிந்தால் மழை பெய்வது நிற்கும். தொடர்ந்து வறட்சியும் பஞ்சமும் என பூமி வாழ்க்கை ஸ்தம்பித்து விடும்.

3.#படைத்தவன் தீர்மானிப்பதே பாவமும் புண்ணியமும்:
#பாவம்_எது_புண்ணியம்_எது என்பதைப் பிரித்தறிய அனைத்து மனிதர்களுக்கும் படைப்பினங்களுக்கும் பொதுவான ஒரு அளவுகோல் நமக்குத் தேவை. மனிதனின் குறுகிய அறிவு கொண்டோ பெரும்பான்மை மக்களின் வாக்கெடுப்பு மூலமாகவோ முன்னோர்களின் பழக்கவழக்கங்களின் அடிப்படையிலோ அந்த அளவுகோலை நிர்ணயிக்க முடியாது. ஆனால் இவ்வுலகின் உரிமையாளனும் அனைத்து படைப்பினங்களையும் அதிபக்குவமாக அறிந்தவனும் முக்காலத்தையும் உணரக்கூடியவனும் ஆகிய அந்த இறைவனுக்கு மட்டுமே அந்த அளவுகோலைத் தர முடியும். மேலும் நாளை இறுதித் தீர்ப்புநாளின்போது நம் பாவ - புண்ணியங்களை விசாரித்து அதன் அடிப்படையில் நமக்கு சொர்க்கத்தையோ நரகத்தையோ வழங்க இருப்பவனும் அவனே. எனவே அவன் எதைச் செய் என்று ஏவுகிறானோ அதுவே புண்ணியம் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பதை நாம் அறியவேண்டும்.

4. #புலால்_இறைவனிடம்_பாவமல்ல!
உணவுக்காக உயிர்களைக் கொல்வது இறைவன் பார்வையில் பாவமல்ல:
மனிதர்களைப் பொறுத்தவரை அவர்கள் எதை உண்ணவேண்டும் உண்ணக்கூடாது என்பதை அவர்களைப் படைத்த இறைவன் தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் அறிவித்து வந்துள்ளான்.
= 'கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கதகதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.' (திருக்குர்ஆன் 16:5)
= 'நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.' * (திருக்குர்ஆன் 23:21)

உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை இறைவன் அனுமதித்து உள்ளான் என்பதை திருக்குர்ஆன் மூலம் மட்டுமல்ல முந்தைய வேதங்கள் மூலமும் அறிகிறோம்.
# நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
(ஆதியாகமம் 9 அதிகாரம்)

# மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும் கீழக்கண்டவாறு கூறுகிறது:
‘பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.’


இந்த அனுமதியின் பின்னால் உள்ள உண்மைகளையும் நுணுக்கங்களையும் திட்டங்களையும் அவன் மட்டுமே முழுமையாக அறிவான். அவனது திட்டங்களுக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை பரிந்துரைக்கும் நிலையில் நாம் இல்லை என்பது உறுதி.

5. #இரக்க_உணர்வுக்கும்_நற்கூலி_உண்டு:
இறைவனின் பார்வையில் இது பாவமல்ல என்பதை அறிகிறோம். இருந்தாலும் உயிரினங்கள் அறுபடும்போதும் துடிக்கும்போதும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லையே! ஆம், இறைவன் இதை வாழ்க்கை என்ற பரீட்சையில் ஒரு சோதனையாக அமைத்துள்ளான். அப்போது ஏற்படும் நம் உள்ளத்தில் ஏற்படும் இரக்க உணர்வுக்கும் நமக்கு கூலி வழங்கப் படுகிறது என்கிறார்கள் நபிகளார். அந்த இரக்க உணர்வை நம் உள்ளத்தில் விதைத்த அந்தக் கருனையாளனே உணவுக்காக கால்நடைகளைக் கொல்ல அனுமதிக்கவும் செய்துள்ளான், அதை பலி என்ற முறையில் நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகவும் ஆக்கியுள்ளான்.

6. #விவசாயிகளுக்கு_மறுவாழ்வு_தரும்_பக்ரீத்:
பால்தரும் பசுவும் நிலத்தை உழும் மாடும் வயதாகி விட்டால் அவற்றை விற்று இளம் பசுவையோ மாட்டையோ வாங்கினால்தான் விவசாயிகள் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை பெறமுடியும். வயதான மாட்டை அல்லது பசுவை இறைச்சிக் கடைக் காரர்கள்தான் உரிய விலை கொடுத்து வாங்குவார்கள். குறிப்பாக பக்ரீத் பண்டிகை காலத்தில் இவை அதிகமாக விற்றுப் போகும். உண்மையில் இது அதற்கான சீசன். அந்த வகையில் விவசாயிகளைப் பொறுத்த வரையில் இளம் பசு அல்லது மாட்டைக் கொண்டு தங்கள் தொழிலைப் புதுப்பித்துக் கொள்ள பக்ரீத் உதவுகிறது.

7. #கொல்லாமை_விளைவிக்கும்_குழப்பம் !
மேற்படி உதாரணத்தில் உயிர்வதை பாவம் என்று சொல்லி பசுவை அல்லது மாட்டை விற்பதை தடை செய்தால் விவசாயியின் தொழில் தடைபடும். வயதான உதவாத மாட்டை அவிழ்த்துவிட்டால் ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவார். தீனி கொடுக்காமல் கட்டிவைத்து பட்டினி போட்டால் பசிக்கொடுமையால் அது அணுவணுவாக சாகும்.
அதனால் உண்டாகும் விளைவுகளுக்கு கண்டிப்பாக இறுதித்தீர்ப்பு நாளன்று குற்றம் பிடிக்கப்படுவோம்.
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

= நீங்கள் ஒரு விஷயத்தை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு விஷயத்தை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) இறைவன் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:216)
----------------

#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
#இஸ்லாம்_என்றால்_என்ன?
==================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

சனி, 24 ஜூன், 2023

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 23 இதழ் PDF



திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 23 இதழ் PDF 

(நபிமொழிச் சிறப்பிதழ்) 

இதழ் இல்லம் தேடி வர :9886001357 

பொருளடக்கம்: 

இஸ்லாமிய அறிவுக்கு ஆதாரங்கள் - 2

ஒப்பீடு செய்வீர் - மகிமை அறிவீர்! -4

 நபிமொழிச் சிறப்பிதழ்-5

இறைநம்பிக்கையும் நற்செயல்களும் - 9

ஐவேளைத் தொழுகைகள் பற்றி...10

திருமணம் செய்வது பற்றி.. -12

உண்ணும் ஒழுக்கங்கள்-14

கழிப்பறை ஒழுக்கங்கள் -15

நபித்தோழர்களின் தடுமாற்றம் -16

நோயாளியை நலம் விசாரித்தல்- 17

நபிகளாரின் நகைச்சுவை - 18

பொது இட ஒழுக்கங்கள் -19

கண்ணுறங்கும் வேளையிலே..- 20

வணிக ஒழுக்கங்கள் -21

எவ்வளவு எளிமையான தலைவர் அவர்!-22

சனி, 17 ஜூன், 2023

ஆடை அணிவதா அவிழ்ப்பதா ? எது பகுத்தறிவு ?


1. அவமானப் படுத்துவதே ஆடைக்குறைப்பு
யாரையேனும் அசிங்கப்படுத்த விரும்பினால் அவரது ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்துவது காலங்காலமாக நடந்துவருவது.
இவ்வளவு ஏன்? நமது சட்டசபைகளில் எதிர்க்கட்சியினரை அசிங்கப்படுத்த வேஷ்டியை உருவிவிடுவதையும், சட்டைகளை கிழித்து விடுவதையும் நாம் பார்ப்பதில்லையா?
காவல்நிலையங்களில் கூட குற்றவாளி என்று கருதப்படுபவரை வெறும் ஜட்டியுடன் அமரவைத்து அசிங்கப்படுத்துவதைக் காலங்காலமாக கண்டுகொண்டுதானே இருக்கிறோம்.
ஆக, ஆடையைக்குறைப்பது பெண்களை அடிமைப்படுத்தும் செயல் மட்டுமல்ல அவர்களை அசிங்கப்படுத்தி இழிவுப்படுத்தும் செயலுமாகும்.
ஆனால் அதேசமயம்... யாரையேனும் மரியாதை செலுத்த அல்லது கண்ணியப்படுத்த விரும்பினால் அவர்களுக்குப் பொன்னாடையைப் போர்த்துகிறோம். இது எதைக் காட்டுகிறது?

ஆம்...பெண்களுக்கு இஸ்லாம் போர்த்தும் பொன்னாடைதான் பர்தா !! அவர்கள் கண்ணியமானவர்கள், மரியதைக்குரியவர்கள் என அறியப்படுவதற்காக அணிவிக்கப்படும் ஆடைதான் பர்தா! 

2) தவறான நாத்திகக் கண்ணோட்டம்!

ஆனால் பெண்களின் உடலை மறைக்கும் பர்தாவை மூடப்பழக்கத்தில் சேர்க்கிறார்கள் நாத்திகர்கள். உடம்பையும், அங்கங்களையும் ஆடைகளால் மறைப்பது மூடத்தனமா? அப்படியென்றால் ஆடைகளை அவிழ்ப்பதுதான் பகுத்தறிவா? அப்படியென்றால் நிர்வாண சாமியார்கள்தான் உச்சக்கட்ட பகுத்தறிவுவாதிகள் என்றாகிவிடுமே? பர்தாவை மூடத்தனமென்பது விபரிதமான சிந்தனையல்லவா? அறிவு வளர வளர மனிதன் ஆடை அணியும் பழக்கத்தை அதிகரித்துக்கொண்டான் என்றுதான் பகுத்தறிவு சொல்கிறதே தவிர குறைத்துக்கொண்டான் என்று ஒரு போதும் சொல்லவில்லையே!

3 ) பர்தா பெண்களை அடிமைப்படுத்துகிறதா?
'ஆம்' என்று சொல்பவர்களை, அடிமைத்தனத்திற்கும் சுதந்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
சுதந்திரம் என்றால் என்ன?
பேச்சு சுதந்திரம்!, கருத்துச்சுதந்திரம்!, எழுத்துச்சுதந்திரம்! என்றால் என்ன என்பதை நாம் அறிவோம். ஒரு பெண்ணுக்கு என்னென்ன சுதந்திரங்கள் தேவைப்படுகிறது என்பதை சற்று யோசித்துப்பார்த்து இஸ்லாம் எவற்றையெல்லாம் அவளுக்கு வழங்குகிறது என்பதையும் பாருங்கள்:
- அவள் உயிர் வாழ்வதற்கான சுதந்திரம். (அதாவது இன்றுவரை ஏனைய சமூகங்களில் சர்வசாதாரணமாக நடக்கும் பெண் சிசுக்கொலையில் இருந்து தப்பித்தல்)
- பாதுகாப்புடன் நடமாடும் சுதந்திரம்!
- பெற்றோர் சொத்திலும், கணவர் சொத்திலும், ஏன் தன் பிள்ளைகள் சொத்திலும் கூட உரிமைக்கொண்டாடும் சுதந்திரம்!
- தன் கணவனைத் தெர்ந்தெடுக்கும் சுதந்திரம்!,
- மட்டுமல்ல, தன் கணவனிடத்திலிருந்து தனது வருங்கால பாதுகாப்பிற்காகத் தனக்குத் தேவையான ரொக்கத்தொகையையோ அல்லது சொத்தையொ திருமணத்திற்கு முன்பே அதிகாரத்துடன் நிபந்தனையிட்டுப் பெற்றுக்கோள்ளும் சுதந்திரம்! (அதாவது வரதட்சணைக்கு எதிரான மஹர் எனும் வதுதட்சணை பெறுதல்)
- தனது உணவு, உடை, இருப்பிட வசதிகளை கணவனிடத்திலே அதிகாரத்துடன் பெற்றுக்கோள்ளும் சுதந்திரம்!,
- தனது சொத்துக்களைத் தானே பராமரித்துப் பாதுகாத்து அனுபவித்துக்கொள்ளும் சுதந்திரம்!,
- சுயமாக தொழில் செய்து பிழைத்துக்கொள்ளும் சுதந்திரம்!
- கல்வி கற்கும் சுதந்திரம்!,
- கல்வி கற்றுக்கொடுக்கும் சுதந்திரம்!,
- ஆட்சியாளர்களாகவே இருந்தாலும் குறைகளைத் தட்டிக்கேட்கும் சுதந்திரம்!
பெண்ணுரிமை இயக்கங்கள் போரடுவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த அனைத்து சுதந்திரங்களையும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது. ஒரு பெண் பர்தா அணிவதால் அவளது இந்த சுதந்திரங்களில் ஒரு இம்மியளவுகூட குறைவதில்லை. ஆனால்
ஆடைக்குறைப்புதான் சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட ஆபாச சுதந்திரத்தை இஸ்லாமும் சரி, பகுத்தறிவும் சரி ஒரு போதும் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளாது.

4) ஆணாதிக்கத்தின் வக்கிர மனோபாவம்:
பெண்களின் ஆடைகளைக் குறைத்து நடமாடவிட்டு அதுதான் சுதந்திரமென்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது, ஆண்களின் வக்கிரப்பார்வையுடன் கூடிய ஆணாதிக்கச்சிந்தனைதான். இதைத்தான் மேலைநாட்டுக்கலாச்சாரத்தில் காண்கிறோம். அங்கே ஆண்கள் கோட்டும் சூட்டும் அணிந்திருப்பார்கள், ஆனால் பெண்களோ அந்தக் கடும் குளிரிலும் முழங்கால், தொடை தெரிய ஆடை அணிந்திருப்பார்கள். மேலை நாட்டுக்கலாச்சாரத்திற்கு சிந்தனை அடிமைகளாகிவிட்ட நம்மவர்கள் இதைத்தான் சுதந்திரமென்று கருதிக்கொண்டு இருக்கிறார்கள்!
இவ்வளவு ஏன்? நம் நாட்டில் கூட முற்காலத்தில் தாழ்த்தப்பட்ட பெண்களை ரவிக்கை இன்றி நடமாட விட்டது, மேல் ஜாதி ஆணாதிக்கத்தின் வக்கிரப் பார்வைதான் என்பதை மறந்துவிட முடியுமா?
ஆக ஆடைக்குறைப்பு பெண்சுதந்திரமல்ல பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடே!

பர்தா- பாதுகாப்புக் கவசம்!
ஜன நடமாட்டம் மிகுந்த தெருக்களில் பர்தா அணிந்த பெண்கள் செல்வதை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் !
ஆண்களின் கழுகுப்பார்வைகள் அவளை ஊடுருவுவதில்லை, அவளது அங்கங்களை அளவெடுப்பதில்லை, ஏன்? ஷாப்பிங் மால்கள், பொது இடங்களில் கூட மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மைக்ரோ கேமராக்களைப் பற்றிய பயமின்றி மற்ற பெண்களைவிட வெகு சுதந்திரத்துடன் ஒரு பர்தா அணிந்த பெண் நடமாடுவதைக் காணலாம். நடிகைகள் போன்ற பிரபல்யமான பெண்கள் கூட பொது இடங்களுக்குச் செல்ல ரசிகர்களுக்கும் ஆண்களுக்கும் பயப்படாமல் சுதந்திரமாக நடமாட பர்தாவின் துணையைதான் நாடவேண்டியிருக்கின்றது.
இவ்வளவு பாதுகாப்பான, கண்ணியமான ஆடையை அடிமைத்தனமாக கருதுவது பகுத்தறிவாகுமா?

5) பர்தா முன்னேற்றத்துக்குத் தடை அல்ல!
பர்தா பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது என்பது நாத்திகர்களின் அடுத்தக்குற்றச்சாட்டு. இதுவும் அவர்களது தவறான கணிப்பின் விளைவே! ஆடைக்குறைப்பை அங்கீகரித்தக் கிறித்துவ மதத்தில் பிறந்திருந்தாலும் அன்னைத் தெரஸா, முஸ்லீம் பெண்கள் அணிவதுப்போல் ஆடையை அணிந்துக்கொண்டு உலகமக்களுக்கு சேவை செய்து புகழ் பெற வில்லையா? அவரது செயல்களுக்கு அவரது ஆடை தடையாக இருக்கவில்லை மாறாக அவரது கண்ணியத்தைக் கூட்டுவதாகத்தான் அமைந்துள்ளது. இன்றைக்கு பர்தா அணிந்துள்ள முஸ்லிம் பெண்கள் டாக்டர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ...இப்படிப் பலதுறைகளிலே சிறப்பாக உருவாகியிருக்கிறார்கள், இன்னும் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிய வருகிறோம்.

6. கல்விக்கு பர்தா தடை அல்ல:
கல்வியை இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டாயக்கடமையாக ஆக்கியுள்ளது. இருப்பினும் முஸ்லீம் பெண்கள் கொஞ்சம் பின் தங்கியுள்ளார்கள் என்பதும் உண்மையே. இதற்குக்காரணம் பர்தா அல்ல மாறாக பர்தா அணியக்கூடாது என்று நிர்ப்பந்தித்த கல்வி நிறுவனங்களே. ஆம்! நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது கல்வியைமட்டும் கொடுக்கவில்லை அதனுடன் அவர்களது கலாச்சாரத்தையும் சேர்த்தே திணித்தார்கள். அதை இன்றைக்கும் நமது கல்வி நிறுவனங்களில் பல பின்பற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. பல கல்வி நிறுவனங்கள் பர்தாவை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் மேம்பட்ட கலாச்சாரமாக கருதும் முழங்கால் தெரியும் கவுன்களை யூனிஃபார்ம் என்கின்ற பேரிலே அணியச்சொல்லி முஸ்லீம் பெண்பிள்ளைகள் மீது தனதுக் கலாச்சாரத்தைத் திணிக்கிறார்கள். இந்தக்கலாச்சாரத் திணிப்பு எந்த விதத்தில் நியாயமாகும்? ஏன்? பர்தா அணிந்தால் மண்டையில் கல்வி ஏறாதா? பாதுகாப்பையும் கண்ணியத்தையும் தரும் பர்தா எந்த விதத்தில் கல்விக்கு தடையாகமுடியும்? ஆனால் காலம் மாறிவருகிறது. தற்போது சில கல்வி நிறுவனங்கள் பர்தாவை ஏற்றுக் கொள்கிறார்கள், அதுமட்டுமல்ல முஸ்லீம்களே நிறைய கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தியும் வருகிறார்கள். அவற்றில் அதிகமதிகம் முஸ்லீம் பெண்கள் படித்து பல சாதனைகளைப் புறிந்துவருகிறார்கள். நியாய உணர்வும், பகுத்தறிவுமிக்க சிந்தனையாளர்களும் இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்பலாம்!
-----------------------
ஆக்கம்: பேராசிரியர் ஃபரீத் அஸ்லம், புதுக்கல்லூரி, சென்னை
================
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

வெள்ளி, 2 ஜூன், 2023

நாத்திகம் தீண்டாமைக்குத் தீர்வல்ல!

 


விண்ணிற்கு செயற்கைக் கோள்கள் அனுப்பும் இந்த காலத்தில்தான் தாழ்ந்த சாதி சிறுவன் பூஜை பொருளை தொட்டுவிட்டான் என அவனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பதையும், கல்வி நிலையங்களில் பள்ளி சிறுவர்களை தரையில் அமர வைப்பதையும், அச்சிறுவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுப்பதையும் எல்லாம் காண முடிகிறது. 

விக்கிபீடியா பதிவு

இந்தியாவில் கண்டறியப்பட்ட முக்கியமான தீண்டாமை வடிவங்கள் என விக்கிபீடியா பதிவு ஒன்று சுமார் 77 விடயங்களை பட்டியலிட்டுள்ளது. 

ஒரு சில மட்டும் உதாரணத்திற்காக... 

- உயர்ந்த சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்ந்த சாதியினர் நடக்கவே கூடாது, 

- கல்வி கற்க கூடாது,

- தோளின் மேல் துண்டு அணிய கூடாது,

- ேதநீர் கடைகளில் பெஞ்சுகளில் உட்கார முடியாமை, தரையில் குதிக்காலில் உட்கார்ந்து மட்டுமே தேநீர் அருந்துவது,

- வயதான பெரியவர்களைக் கூட உயர்ந்த சாதி சிறுவர்கள் பெயர் சொல்லி மரியாதை இல்லாமல் அழைப்பது, 

- உயர் சாதியினர் இல்லங்களில் வேலை செய்யும் தாழ்ந்த சாதியினருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க தனி பாத்திரங்கள்,

- வழிபாட்டுத்தலங்களில் அனுமதி மறுப்பு, 

- மயானங்களில் கூட தாழ்ந்த சாதியினர் இறந்த உடல்களை புதைக்க மறுப்பு, 

- தாழ்ந்த சாதியினருக்கு தனி மயானம், தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு, 

- பொது குளத்தில் தண்ணீர் எடுக்க மறுப்பு, 

- மலம் அள்ளுதல் மற்றும் சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை தாழ்ந்த சாதியினரை செய்ய வைப்பது... உள்ளிட்ட பல தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலிட்டுள்ளது விக்கிபீடியா கட்டுரை. 

தீண்டாமை ஒழிய தீர்வு தான் என்ன? 

தீண்டாமையை கற்பிக்கும் மதங்களே இத்தீமைக்குக் காரணம் என்று கூறி கடவுளை மறுப்பதுதான் அதற்கு ஒரே தீர்வு என கருதி நாத்தீக கொள்கையை தேர்ந்தெடுக்கின்றனர். நாத்திகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை என பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளேயும் பல பிரிவுகள் இருப்பதையும், ஒவ்வொருவரும் அடுத்தவரை ஏளனமாக கருதுவதையும் காண முடிகிறது. 

தீண்டாமைக்கு அடித்தளம் வார்க்கும் நாத்திகம் 

நாத்திகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான டார்வினிசம் அடிப்படையில்  வெள்ளையர்கள் பரிணாமத்தில் முன்னேறியவர்கள் எனவும், இந்தியர்கள் போன்ற இடைநிலை நிறம் உடையவர்கள் பரிணாமத்தில் இடைநிலை எனவும், கருப்பர்கள் அதற்கும் பின் தங்கியவர்கள் என கருதுகின்றனர். 

இதன் காரணமாகவே சென்ற நூற்றாண்டில் ஆப்ரிக்காவை சேர்ந்த கறுப்பரான ஓட்டா பெங்கா என்பவரை அழைத்து வந்து அமெரிக்காவில் ஒரு விலங்குகள் அருங்காட்சியகத்தில் குரங்கிலிருந்து  மனிதனாக முழுமையாக பரிணாமம் அடையாத  மனிதர் என பல நாட்களாக கூண்டுக்குள் அடைத்து வைத்து காட்சிப் படுத்தினர். பல நாட்களாக அவர் ஒரு குரங்குடனே கூண்டுக்குள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் மன உளைச்சல் தாங்காமல் 1916-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.  

டார்வினின் ஊகமான பரிணாமக் கொள்கை அடிப்படையில் வெள்ளையர்களை விட கருப்பர்கள் பரிணாமத்தில் பின்தங்கியவர்கள் எனும் மூட நம்பிக்கையால்தான் இன்னும் பல கருப்பர்கள் அடக்கு முறைக்கு உள்ளாகின்றனர். 

நன்றி: மணச்சநல்லூர் அப்பாஸ் 

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

செவ்வாய், 30 மே, 2023

மறுமை பற்றிய பகுத்தறிவு பூர்வமான ஆய்வு!


 மரணத்துக்குப் பின் நம் நிலை என்ன? மக்களிடையே மூன்று கருத்துக்களை நாம் பரவலாகப் பார்க்கமுடிகிறது.

1. நாம் இருக்கமாட்டோம். மண்ணோடு மண்ணாகப் போய்விடுவோம்.
2. ஆத்மாவிற்கு அழிவில்லை. எனவே மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுப்போம்.
3. இறைவேதங்கள் கூறுவது போல் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுதல்: நம் செயல்களுக்குக் கூலி கொடுக்கப் படுவோம். நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு நமக்கு நிரந்தர நரகமோ அல்லது சொர்க்கமோ கிடைக்கும்.
மேற்படி கருத்துக்களில் நமது கருத்து எந்த ஒன்றாகவும் இருக்கலாம் .ஆனால்...
• மேற்கண்ட மூன்று கருத்துக்களில் ஏதோ ஒன்றுதான் சாத்தியம் மூன்றுமே ஒரே நேரத்தில் சாத்தியப்படுவது முடியாத ஒன்று.
• நமது கருத்துக்காக அல்லது ஊகங்களுக்காக உண்மை அல்லது வாஸ்தவம் வளைந்து கொடுக்கப் போவது இல்லை.
• முதல் இரண்டில் எது நடந்தாலும் நாம் தப்பிக்க வாய்ப்புண்டு.
• மூன்றாவது விஷயம் நடக்குமானால் நாம் தப்பிக்க வழியில்லை.
எனவே பகுத்தறிவு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்னவென்றால் அந்த மூன்றாவது நிலையை எதிர்கொள்ள நம்மை நாமே தயார் செய்து கொள்வதுதான் பாதுகாப்பான வழிமுறை என்பதுதான். மனித இயற்கையும் அதுவே.
உதாரணமாக ஜெர்மனி அல்லது சுவீடன் நாட்டிலிருந்து உங்களுக்கு ஒரு இன்டர்வ்யூ அல்லது ஒரு வேலைவாய்ப்பு உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? உடனே அந்நாட்டைப் பற்றி ஆராய ஆரம்பிப்பீர்கள் அல்லவா? ஆராய்ந்து அந்நாட்டின் பொருளாதார சீதோஷ்ண மற்றும் அரசியல் சூழ்நிலைகளை தீரவிசாரித்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள்தானே! நாளை நாம் நிரந்தரமாகத் தங்கவுள்ள இடத்தைக் குறித்து நாம் அலட்சியம் காண்பிக்க முடியுமா? அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதில் நாம் தாமதம் செய்யலாகுமா?
பகுத்தறிவு கொண்டு இறைவேதங்கள் கூறும் உண்மைகளை ஆராய்ந்தாலும் நமக்கு அதுதான் நாளை நடக்கும் என்பதையும் அறியலாம்.
நபி (ஸல்) காலத்து மக்கள் மறுமை நாளைப்பற்றி ஐயம் கொண்டிருந்தனர். அதுபற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பி வந்தனர்.
மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகி விடுகிறான். அவனது எலும்புகள் உட்பட அனைத்தும் அழிந்து பின்னர் அவன் எப்படித் திரும்பவும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான்? இதை எங்களால் நம்ப முடியவில்லையே? மறுமை நாள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றது.
"நாங்கள் எலும்புகளாகவும், மக்கிய பொருட்களாகவும் ஆன பின்பு புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? என்று அவர்கள் கேட்கின்றனர்." (அல்குர்ஆன் 17:49, 17:98, 23:82, 37:15, 37:53, 56:47)
''நிச்சயமாக நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆனபின்னர் நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப் படுவீர்கள்' என்று அவர் உங்களை எச்சரிக்கிறாரா? நீங்கள் எச்சரிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்!! நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாம் வாழ்ந்து மடிகிறோம். மீண்டும் நாம் எழுப்பப் படப்போகிறவர் அல்லர்' (எனக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 23:35,36,37)
இறந்தவன் உயிர்பிக்கப்படுவதும் அவன் விசாரிக்கப்படுவதும் சாத்தியமே இல்லை என்று அவர்கள் கருதியதால் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். இந்த கேள்விக்கு மனிதன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணரும்வண்ணம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது.

நபிகளாரிடம் கேட்கப்பட்ட கேள்வி:
ஒருமுறை நபிகளாரிடம் மக்கிப்போன மனித எலும்புகளைக் கொண்டு பொடித்துக் காட்டி அதை ஊதிச் சிதறடித்து இவையெல்லாம் மீண்டும் உயிர்பெற்று வரும் என்றா போதிக்கிறீர் என்று ஏளனமாகக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் இறைவன் கீழ்கண்ட குர்ஆன் வசனங்களை அருளினான்:
36:77-83. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு பபடைப்பையும் அறிந்தவன்'' என்று நபியே கூறுவீராக!
அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள். வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அனைத்தும் அறிந்தவன்.
ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும். எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!"
மக்கிப்போய் ஒன்றுமில்லாமல் ஆன பின் எப்படி உயிர்ப்பிக்கப்பட முடியும்? என்பது உங்கள் கேள்வி என்றால் ஒரு காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுமில்லாமல் இருக்க வில்லையா? இன்ன பொருளாக இருந்தோம். இந்த இடத்தில் இருந்தோம். என்றெல்லாம் கூறமுடியாத நிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் இருந்ததில்லையா?
ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தான் நீங்கள் ஆரம்பமாகப் படைக்கப்பட்டீர்கள்! ஒன்றுமில்லாமல் இருந்தால் கூட படைக்கப்பட முடியும் என்பதை இது உணர்த்த வில்லையா? ஒன்றுமில்லாத நிலையிலிருந்து முதன் முதலில் படைப்பது ஆச்சரியமானதா? ஒரு முறை படைத்து பின்னர் அழித்து அதையே மறுபடியும் படைப்பது ஆச்சரியமானதா? என்றெல்லாம் சற்று சிதித்தால் இதற்கான விடை காணலாம் என்கிறது திருக்குர்ஆன்.
"22: 5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

மீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்:
75:3. 4 "(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்."
================
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திங்கள், 1 மே, 2023

இந்நாள் இறைத்தூதரின் தனிச்சிறப்புகள்

 


முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதித்தூதராக வந்துள்ளதாலும் இன்று நாம் வாழும் காலகட்டத்திற்காக அனுப்பப்பட்டவர் என்பதாலும்  அவர் மூலம் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டதாலும் அவரது தனிச்சிறப்புகளை அறிவது அவசியம். 

முந்தைய இறைத்தூதர்களோடு ஒப்பிடும்போது முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஒருசில வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும். அவை: 

1. அகில உலகுக்கும் பொதுவான இறைத்தூதர்:

முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகவும் உலகம் முழுமைக்கும் பொதுவானவராகவும் அனுப்பப்பட்டார்கள்.  

நாம் இன்று இவ்வுலகின் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். ஓரிடத்தில் நடக்கும் நிகழ்ச்சியை உடனுக்குடன் உலகெங்கும் காணக்கூடிய  அளவுக்கு நாம்  முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலுக்கு ஏற்றவாறு இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள் என்றே நாம் விளங்கமுடிகிறது. இனி இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர். 

2. வேதம் சிதையாமல் பாதுகாக்கப் படுதல்:

 முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர்மூலமாக அருளப்பட்ட வேதம் (திருக்குர்ஆன்) அழியாமல் பாதுகாக்கப் படுகிறது,  

மூலவசனங்கள் அருளப்பட்ட நாள் முதல் இன்றுவரை வருடங்கள் 1440 ஆகியும் அட்சரம் பிசகாமல் அப்படியே மூலமொழியிலேயே பாதுகாக்கப் படுவது, கோடிக்கணக்கான மக்களால் மனப்பாடம் செய்யப்பட்டு இருப்பது, உலகில் எந்த புத்தகத்தையும் விட அதிகமதிகமாக ஒதப்படுவது போன்ற  விவரங்களை கீழ்கண்ட லிங்கில் வாசிக்கலாம்:

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

 இப்பாதுகாப்பு பற்றி இறைவனே கூறுகிறான்:

=“நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம்” (திருக்குர்ஆன் 15:9) 

3. கடவுள் ஆக்கப்படாத இறைத்தூதர்:

இறுதித் தூதருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும்  சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர். இதற்கு இறுதித் தூதருக்கு முன் வந்த ஏசு நாதரும் விலக்கல்ல. அவருக்கும் இன்று மக்கள்  படம் வைத்து சிலை வைத்து வழிபடுவதை நாம் காண்கிறோம். ஆனால் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ  பார்த்திருக்கிறீர்களா? இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது  உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்.? அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது? படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது  கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது!. 

அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி “மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்” என்று எச்சரித்தார். 

இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று “நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்” என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது. 

அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல தனக்காக பிறர்  எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். “யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும்” என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்துச் சென்றார். 

4.  பக்குவமாக பாதுகாக்கப்படும் வாழ்க்கை வரலாறு:

இறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள். அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் (அதாவது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக அறிவிக்கப் பட்டது முதல் அவரது மரணம் வரை உள்ள காலகட்டம்)  ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.  இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இந்த ஹதீஸ் தொகுப்புகளில் நீங்கள் நபிகளாரின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிவிப்பாளர் வரிசை, அவர்களின் நம்பகத்தன்மை பற்றிய குறிப்புகள் உட்பட ஆவணப்படுத்தப்பட்டு இருபதைக் காணலாம். இவற்றிலும் சந்தேகத்திற்கு இடம்தரக் கூடியவைகளை அறிஞர்கள் வடிகட்டி அவற்றை 'ஸஹிஹ் ஹதீஸ்கள்' என்ற பெயரில் தொகுத்துள்ளார்கள். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை. 

5. பின்பற்றத்தக்க முன்மாதிரி: 

ஒருவரை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக நாம் ஏற்கவேண்டும் என்றால் அவரிடம் மனித வாழ்கையின் அனைத்து துறைகளுக்குமான முன்மாதிரியை நாம் பெறவேண்டும். திருக்குர்ஆன் மற்றும் மேலே கூறப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் நபிகளாரிடம் இருந்து அத்தகைய ஒரு முன்மாதிரியை பெற முடிகிறது. மனித வாழ்வோடு சம்பந்தப்பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய வழிகாட்டுதலையும் முன்மாதிரியையும் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக, சாதாரண குடிமகனாக, போர் வீரராக, படைத்தளபதியாக, ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக, அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகி உள்ளன. அவர் கூறிய வார்த்தைகள் அவர் செய்த செயல்கள்  பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள்  என அனைத்தும் ஹதீஸ் தொகுப்புகளில் தெளிவுறப் பதிவாகி உள்ளதால் அவை இஸ்லாமியர்களுக்கு நடைமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டு நூலாக விளங்குகின்றன. மட்டுமல்ல, இன்று அவை இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகவும் ஆகின்றன. 

6. அணுஅணுவாக பின்பற்றப்படும் முன்மாதிரி:

நபிகளாரின் வரலாற்றின் இன்னொரு அற்புதம் என்னவென்றால், அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல எண்ணங்களில் மட்டுமல்ல அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது! அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி கோடி! உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார் எவ்வாறு உணவு உண்டார், உண்ணும்போது எவ்வாறு அமர்ந்தார் என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:

= அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (திருக்குர்ஆன் 33:21)

மேற்கூறப்பட்ட தனிச்சிறப்புகளில் இருந்து இன்றைய காலகட்டத்தில் வாழும் நமக்காக இறைவனால் அனுப்பப்பட்ட முன்மாதிரித் தலைவர்தான் முஹம்மது நபியவர்கள் என்பத நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

புதன், 19 ஏப்ரல், 2023

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?

 


பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.

கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்று கிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.
சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!
எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.
குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.
அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும்.
உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு, மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம். ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனித னுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.
மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர்.
குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.
பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது. அநேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாகவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மனிதன் குரங்கிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.
இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தை’ என்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை.
டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?
இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.
வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.
ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர். ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும்.
டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும்.
இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.
குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.
இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.
குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.
முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.
மனிதன் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம், இனம், நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும். ஆனால் டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.
‘என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு’ எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.
எனவே உலகுக்குக் கேடு விளைவிக்கும் உளறலே டார்வின் தத்துவம்.
இதையெல்லாம் விட உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையை மனிதன் பெறவில்லை. பகுத்தறிவால் தான் அந்தப் பெருமையைப் பெறுகிறான்.
உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் – நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.
ஆடு, மாடுகளுக்கு இருப்பது போன்ற கழுத்தைத் தான் ஒட்டகச்சிவிங்கி பெற்று இருந்ததாம்! அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி வந்ததாம்! இதனால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டதாம்! டார்வினிஸ்டுகள் உளறுகின்றனர்.
உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்.
இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது.
ஆனால், பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை. எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறிவு என்பது வரவே முடியாது. இந்தச் சாதாரண அறிவு கூட டார்வினுக்கு இருக்கவில்லை.
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது.
யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?
கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?
யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?
கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா? பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?
தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை?
இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.
மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.
மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.
நன்றி:

M A Ahamed Yaser