இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஜூன், 2023

நாத்திகம் தீண்டாமைக்குத் தீர்வல்ல!

 


விண்ணிற்கு செயற்கைக் கோள்கள் அனுப்பும் இந்த காலத்தில்தான் தாழ்ந்த சாதி சிறுவன் பூஜை பொருளை தொட்டுவிட்டான் என அவனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பதையும், கல்வி நிலையங்களில் பள்ளி சிறுவர்களை தரையில் அமர வைப்பதையும், அச்சிறுவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுப்பதையும் எல்லாம் காண முடிகிறது. 

விக்கிபீடியா பதிவு

இந்தியாவில் கண்டறியப்பட்ட முக்கியமான தீண்டாமை வடிவங்கள் என விக்கிபீடியா பதிவு ஒன்று சுமார் 77 விடயங்களை பட்டியலிட்டுள்ளது. 

ஒரு சில மட்டும் உதாரணத்திற்காக... 

- உயர்ந்த சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்ந்த சாதியினர் நடக்கவே கூடாது, 

- கல்வி கற்க கூடாது,

- தோளின் மேல் துண்டு அணிய கூடாது,

- ேதநீர் கடைகளில் பெஞ்சுகளில் உட்கார முடியாமை, தரையில் குதிக்காலில் உட்கார்ந்து மட்டுமே தேநீர் அருந்துவது,

- வயதான பெரியவர்களைக் கூட உயர்ந்த சாதி சிறுவர்கள் பெயர் சொல்லி மரியாதை இல்லாமல் அழைப்பது, 

- உயர் சாதியினர் இல்லங்களில் வேலை செய்யும் தாழ்ந்த சாதியினருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க தனி பாத்திரங்கள்,

- வழிபாட்டுத்தலங்களில் அனுமதி மறுப்பு, 

- மயானங்களில் கூட தாழ்ந்த சாதியினர் இறந்த உடல்களை புதைக்க மறுப்பு, 

- தாழ்ந்த சாதியினருக்கு தனி மயானம், தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு, 

- பொது குளத்தில் தண்ணீர் எடுக்க மறுப்பு, 

- மலம் அள்ளுதல் மற்றும் சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை தாழ்ந்த சாதியினரை செய்ய வைப்பது... உள்ளிட்ட பல தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலிட்டுள்ளது விக்கிபீடியா கட்டுரை. 

தீண்டாமை ஒழிய தீர்வு தான் என்ன? 

தீண்டாமையை கற்பிக்கும் மதங்களே இத்தீமைக்குக் காரணம் என்று கூறி கடவுளை மறுப்பதுதான் அதற்கு ஒரே தீர்வு என கருதி நாத்தீக கொள்கையை தேர்ந்தெடுக்கின்றனர். நாத்திகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை என பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளேயும் பல பிரிவுகள் இருப்பதையும், ஒவ்வொருவரும் அடுத்தவரை ஏளனமாக கருதுவதையும் காண முடிகிறது. 

தீண்டாமைக்கு அடித்தளம் வார்க்கும் நாத்திகம் 

நாத்திகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான டார்வினிசம் அடிப்படையில்  வெள்ளையர்கள் பரிணாமத்தில் முன்னேறியவர்கள் எனவும், இந்தியர்கள் போன்ற இடைநிலை நிறம் உடையவர்கள் பரிணாமத்தில் இடைநிலை எனவும், கருப்பர்கள் அதற்கும் பின் தங்கியவர்கள் என கருதுகின்றனர். 

இதன் காரணமாகவே சென்ற நூற்றாண்டில் ஆப்ரிக்காவை சேர்ந்த கறுப்பரான ஓட்டா பெங்கா என்பவரை அழைத்து வந்து அமெரிக்காவில் ஒரு விலங்குகள் அருங்காட்சியகத்தில் குரங்கிலிருந்து  மனிதனாக முழுமையாக பரிணாமம் அடையாத  மனிதர் என பல நாட்களாக கூண்டுக்குள் அடைத்து வைத்து காட்சிப் படுத்தினர். பல நாட்களாக அவர் ஒரு குரங்குடனே கூண்டுக்குள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் மன உளைச்சல் தாங்காமல் 1916-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.  

டார்வினின் ஊகமான பரிணாமக் கொள்கை அடிப்படையில் வெள்ளையர்களை விட கருப்பர்கள் பரிணாமத்தில் பின்தங்கியவர்கள் எனும் மூட நம்பிக்கையால்தான் இன்னும் பல கருப்பர்கள் அடக்கு முறைக்கு உள்ளாகின்றனர். 

நன்றி: மணச்சநல்லூர் அப்பாஸ் 

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக