இறைவனின் படைப்பாற்றல் அற்புதங்கள்
ரமலான் விரதமும் தன்விழுங்கலும்
2016-ல் ஜப்பானிய உயிரியலாளர் யோஷினோரி ஓஸுமி அவர்கள் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வாங்கினார். அவர் என்ன கண்டுபிடித்தார்?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உண்ணாவிரதம் (நோன்பு) செய்பவர்கள் அனுபவத்தால் தெரிந்த ஒரு ரகசியத்தை அவர் அறிவியலால் நிரூபித்தார்!
இந்த ஆட்டோஃபேஜிக்கு ஒரு எளிய ஆன்-ஆஃப் ஸ்விட்ச்
உள்ளது. அதுதான் இன்சுலின் இல்லாத நிலை!
நம் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் காலையில்
எழுந்ததில் இருந்து இரவு வரை 16-18 மணி நேரம் இந்த கிரோத் மோட்-லேயே இருக்கிறோம்.
சுத்தம் செய்யும் நேரமே இல்லை!
செல்கள் உள்ளே இருக்கும் சேதமான
மைட்டோகாண்ட்ரியாவை சுத்தம் செய்யும் (மைட்டோஃபேஜி). மூளையில் அடைக்கும் கெட்ட
புரதங்களை அகற்றும். வயதான ஜோம்பி செல்களை அழித்து அழற்சியை குறைக்கும். மூளையில் BDNF என்ற நல்ல ஹார்மோன்
அதிகரிக்கும் — நினைவாற்றல், மன அழுத்தம் குறையும்!
இது உங்கள் உடலின் பழைய இயற்கை ரிதம்!
இறைநம்பிக்கையாளர்களுக்கு நன்மை
இருந்தாலும் கவலை வேண்டாம்.. அதைத்தான் வருடத்தில்
ஒருமுறை ரமலான் மாத நோன்பு இறைவிசுவாசிகளுக்கு நிறைவு செய்கிறது.
இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்
மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது;
(அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)
திருக்குர்ஆன் என்ற ஒரு அருள்மறை நமக்கு
அருளப்பட்ட காரணத்தால் அதற்கான நன்றிக்கடன் செலுத்தும் முகமாக நாம் ரமளானில் நாம்
நோன்பு நோற்கிறோம். ஆனால் அதுவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு நன்மை பயப்பதாக
ஆக்கியுள்ளான் கருணையுள்ள இறைவன்!
ஆட்டோஃபேஜி ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட
பலன்:
- இன்சுலின் சக்தி அதிகரித்தல் (சர்க்கரை
நோய் கட்டுப்பாடு)
- உடல் அழற்சி குறைதல்
- மூளை ஆரோக்கியம் அதிகரித்தல்
- விலங்குகளில் ஆயுள் கணிசமாக அதிகரித்தல்!
ஆகவே,
நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப்
பொய்யாக்குவீர்கள்? (திருக்குர்ஆன் 55:13)
=================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக