இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

பிரபஞ்சத்தின் ஆரம்பக் கரு என்ற பேரற்புதம்!


= நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். அப்போது நீங்கள் பலவாறு புலம்பிக்கொண்டிருப்பீர்கள் (திருக்குர்ஆன் 56:63)

உதாரணத்திற்கு ஏதேனும் ஒரு விதையை – ஒரு கடுகோ, பூசணி விதையோ, மாங்கொட்டையோ - எடுத்து நோட்டமிடுங்கள். அந்த விதையைப் பொறுத்தே அதிலிருந்து முளைக்கும் தாவரம் அமையும். அதற்குள் அடங்கியுள்ள மென்பொருளை – அதாவது அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களின் இயல்புகளை செயல்பாடுகளை நடத்தையை அல்லது அதிலிருந்து முளைக்கப் போகும் தாவரத்தின் இலைதண்டுகாம்பு போன்றவற்றின் இயல்புகள்நிறங்கள்வடிவங்கள்போன்ற விவரங்கள் அல்லது எவை எவை என்னென்ன  விதத்தில் அளவையில் விகிதத்தில் இருக்கவேண்டும் என்னும் விவரங்களை இன்னும் நாம் நம்மால் அறிய இயலாத ஏராளமான விவரங்களை கட்டளைகளை  - அவற்றின் DNA வில் பதிவு செய்யப்பட்டுள்ளதை நவீன அறிவியல் நமக்கு அறிவிக்கிறது. இந்த அதிநுட்பம் வாய்ந்த தகவல்களை அவற்றில் பதிவதற்கு  சர்வஞானமும் நுண்ணறிவும் அளவிலா ஆற்றலும் கொண்ட ஒரு படைப்பாளன் தேவை என்பதை பகுத்தறிவு நமக்குக் கற்றுத்தருகிறது. அந்த படைப்பாளனையே அரபுமொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கிறோம்.

 (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! அவன்  எத்தகையவன் எனில்,  அவன்தான் படைத்தான்பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்;   மேலும்அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான்.  (திருக்குர்ஆன் 87:1-3)

பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை:

இனி இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் மிகமிகச்சிறியதொரு புள்ளியாக ஒரு நுண்ணிய கருவில் ஒடுங்கியிருந்தது. அந்தக் கரு ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது.  கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து வெடித்தது போல இருந்த அந்தப் பெருவெடிப்பைத்தான்  'பிக்பாங்க்' (Bigbang) என்று குறிப்பிடுகிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே அது பேரண்டமாக விரிவடைந்தது. மிகச் சிறியதொரு புள்ளி ஒருநொடிக்கும் குறைந்த நேரத்துக்குள் பேரண்டமாக விரிவடைந்தது. அந்த விரிவாக்கம் தொடர்ந்து முடுக்கப்பட்ட வேகத்தோடு நடைபெற்று வருகிறது என்பதையும் அறிவியல் நிரூபித்து நிற்கிறது.

பெருவெடிப்பு பற்றிய குறிப்பை இறைவேதம் திருக்குர்ஆனில் காணலாம்:

= சத்தியமறுப்பாளர்கள் பார்க்கவில்லையா நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதை? (திருக்குர்ஆன் 21:30)

பிரபஞ்ச விரிவு பற்றி படைத்தவனின் கூற்றையும் நாம் இங்கு நினைவு கூருவோம்:

= மேலும், நாம் வானத்தை (நம்) சக்தி கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாக்கும் ஆற்றலுடையவராவோம். (திருக்குர்ஆன் 51:47)

இல்லாமையில் இருந்து உள்ளமைக்கு வந்த ஆரம்பக் கரு!

ஒரு மரத்தின் விதையில் அது தொடர்பான அனைத்து பாகங்களின் இயல்பும் மென்பொருளும்  ஆற்றல்களும் உள்ளடக்கப் பட்டதன் காரணமாக மரமும் தொடர்ந்து பழங்களும் விதைகளும் உருவாகி அவற்றின் மூலம் இனப்பெருக்கமும் நடந்து கொண்டு வருகிறன என்பதை நாம் அறிகிறோம். இதே போல இந்தப் பிரபஞ்சத்தின் ஆரம்பக் கருவைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். அதற்குள்ளும் இந்தப் பிரபஞ்சத்தில் இன்று காணும் அனைத்து கூறுகளின் பெரியதும் நுண்ணியதுமான அனைத்தின் - இயல்புகளும் இயங்கு விதிகளும் மென்பொருளும் எல்லாம் அந்த ஆரம்பக் கருவில் எழுதப்பட்டு இருக்கவேண்டும். இந்தக் கட்டுரையை நாம் எழுதுவதும் நீங்கள் வாசிப்பதும் எல்லாம் அதில் அடக்கம்! அக்கருவை இல்லாமையில் இருந்து தோன்றவைத்து அதிலிருந்து இன்று காணும் இப்பேரண்டத்தை உருவாக்கி பரிபாலித்து வரும் அந்த மாபெரும் சக்தியையே தமிழில் இறைவன் என்றும் அரபுமொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கிறோம்.

= படைப்புகளின் விதியை அல்லாஹ் வானங்களையும்பூமியையும் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

 அறிவிப்பு : அம்ரு இப்னு ஆஸ்(ரலி)முஸ்லிம்திர்மதி.

அற்பமானவனல்ல இறைவன்

இன்னொரு உண்மையும் நாம் இங்கு நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். அந்த தன்னிகரற்ற சக்தி என்பது நம்மைப்போல் பலவீனமான ஒருமனிதனைப் போலவோ அல்லது நம்மைவிடத் தாழ்ந்த ஒரு ஜீவியாகவோ அல்லது ஒரு வெறும் உணர்வற்ற ஒரு ஜடப்பொருளாகவோ இருக்க முடியாது என்பதும் அதே பகுத்தறிவு நமக்குச் சொல்லும் பாடமாகும்.

= சொல்வீராகஇறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லைஅவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை.அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)

ஆம், அந்த இறைவன்தான் உங்கள் மீது அளவிலா அன்பும் நிகரிலா கருணையும் கொண்டு அரவணைப்பவன் எனும்போது உங்களால் கவனமற்று அலட்சியமாக உணர்வற்று இருக்க முடிகிறதா? நீங்களும் அக்கருணையாளனை நேசிக்க வேண்டாமா?

= அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 1:2,3)

===================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக