இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

ஓரினச்சேர்க்கை எனும் பேராபத்து!


மனித இயற்கைக்கு மாறான ஓரினச்சேர்க்கை எனும் ஈனச்செயல்  ஒரு பேராபத்துதான் என்பதை இன்று வந்துகொண்டிருக்கும் செய்திகள் உறுதிப் படுத்துகின்றன..

குரங்குக் காய்ச்சலும் ஓரினச்சேர்க்கையும்: 

# குரங்கம்மை தொற்று உள்ளவர்களில் குறைந்தது 98% பேர் ஓரின சேர்க்கையாளர்கள் அல்லது இருபாலின ஆண்கள் என்று நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் (New England Journal of Medicine ) சமீபத்திய இதழில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. (news18.com)

(https://www.news18.com/news/india/98-patients-with-monkeypox-infection-were-gay-or-bisexual-men-new-england-journal-of-medicine-study-5606767.html)

# உலக சுகாதார அமைப்பின் (WHO ) கூற்றுப்படி, ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் தற்போது குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

# WHO அதிகாரி ரோசாமுண்ட் லூயிஸின் (Rosamund Lewis) கூற்றுப்படி, சுமார் 99% வழக்குகள் ஆண்கள் மத்தியில் உள்ளன, மேலும் அந்த நோயாளிகளில் குறைந்தது 95% மற்ற ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள். (செய்தி ஆதாரம்:cnbc.com)

https://www.cnbc.com/2022/07/27/monkeypox-who-recommends-gay-bisexual-men-limit-sexual-partners-to-reduce-spread.html

அரசும் நீதித்துறையும் ஒத்துழைக்கும் விபரீதம்; 

நம் தாயகத்தைப் பீடித்துள்ள ஒரு பேராபத்து இது! அண்மையில் விபச்சாரத்திற்கும் கள்ளக்காதலுக்கும் ஓரினச்சேர்க்கைக்கும் சட்ட ரீதியாக அங்கீகாரங்களை நீதிமன்றங்கள் வழங்கி வருகின்றன. இப்போக்கு நீடிக்குமானால் திருட்டும் கொலையும் எல்லாம் சட்ட அங்கீகாரம் பெறும் வாய்ப்புகள் நன்றாகவே உள்ளன. சரி எது தவறு எது அல்லது பாவம் எது புண்ணியம் எது என்பதை அற்ப அறிவு கொண்ட மனிதர்கள் தாங்களாகவே தீர்மானித்து தீர்ப்புகள் வழங்கும்போது ஏற்படும் விபரீதங்களைத்தான் நாமின்று கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

சமீபத்தில் ஓரினச்சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஈனச்செயலை மறைமுகமாக செய்துகொண்டு இருந்தவர்கள் தங்கள் வெட்கத்தை விட்டு அவர்களின் ஊரறிய பேரணி நடத்தியதை சென்னையில் கண்டோம். அதைத் தொடர்ந்து ஊடகங்கள் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த ஈனச்செயல் புரிபவர்களை பேட்டி கண்டு செய்திகளாக வெளியிட்டு திட்டமிட்டு பரப்பி வருவதையும் காண்கிறோம். என்னவொரு சோகம்!

இந்த போக்கு நீடித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்கள் சிந்திப்பது இல்லையா? சமூகத்தின் தார்மீக அடித்தளத்தையே தகர்த்தெறியும் இந்த பேராபத்தை தடுக்க மக்கள் திரண்டெழ வேண்டாமா?

தொடர் விபரீதங்கள்:

நாளை பள்ளிக் கூடங்களில் நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மிகப்பெரும் கேள்விக் குறியாக ஆகிவிடும். பெண் குழந்தைகள் விஷயத்தில் எதற்காக பயப்படுகிறோமோ அது ஆண்குழந்தை விஷயத்திலும் ஆகிவிடும். இந்த ஈனச்செயலை செய்வதில் தவறில்லை என்று பரப்புரை நடந்தால் ஒரே பாலினக் குழந்தைகளையும் சரி இளைஞர்களையும் சரி அருகருகே அமர வைப்பதும்கூட பாதுகாப்பற்றதாக மாறிவிடும். இனி அந்த வகுப்பறைகளில் பாடம் நடக்குமா? தொழிற் சாலைகளில் தொழில் நடக்குமா? இன்னும் சங்கிலி போல பல விபரீதங்கள் அங்கு தொடரும். 

இறைவனின் எச்சரிக்கை:

மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்களோ இல்லையோ, சமூக நலன் கருதி இந்த செயலை செய்பவர்களையும் இதை ஊக்குவிப்பவர்களையும் எச்சரிப்பது நம் மனிதநேயக் கடமையாகும்.

எனவே சம்பந்தப்பட்டவர்களே தெரிந்து கொள்ளுங்கள்..

இந்த உலகுக்கு சொந்தக்காரனான இறைவனின் பார்வையில் ஓரினச்சேர்க்கை என்பது கடுமையான குற்றமாகும். இதைச் செய்வோர் பலரும் இவற்றை இங்கு செய்துவிட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்தெறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நடந்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் கண்களே cctv போல செயல்படுகிறது என்பதை மறவாதீர்கள். .

அவை மறுமையில் மனிதனுக்கெதிராக சாட்சி கூறும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது:

= தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7-9 )

=மேலும், இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் ( தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)


மனித மூளையிலும் அதன் பதிவைக் காணலாம்! இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும். விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.

அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனங்களைப் பாருங்கள்:

= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30)

= ...அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். (திருக்குர்ஆன் 18:29)


எந்த உடலை இறைவன் விதித்த வரம்புகளை மீறி அனுபவித்தார்களோ அதன் கதி நாளை இதுதான்! இது நாளை நடக்கவிருக்கும் உண்மை! இது வேண்டுமா? இல்லை சொர்க்க வாழ்வு வேண்டுமா என்பதை சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
====================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக