இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

இயந்திரங்களின் அச்சாணி தந்த அல் ஜசாரி!


எல்லா வகை இயந்திரங்களுக்கும் Engine அல்லது Motor என்பது இதயம் போன்ற பாகம். இந்த இதயம் இல்லையென்றால் இயந்திரங்கள் வெறும் இரும்பு கூடுகள்தான்.

இந்த இதயப் பகுதிக்கு உயிரூட்டக் கூடிய பாகம் Crankshaft என்கிற கண்டுபிடிப்பு. Crankshaft இல்லையென்றால் சில வகை Engine கிடையாது. இந்த Engine-கள் இல்லையென்றால் இன்றைய அதி நவீன கார்கள் கிடையாது. Crankshaft-யின் தொழில் நுட்ப விளக்கங்களுக்குள் எல்லாம் நாம் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை. இந்த கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. இது சக்தியை ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவுக்கு மாற்றக் கூடிய இயந்திர பாகம்.
Crankshaft-யை முதலில் வெற்றிகரமாக வடிவமைத்து நடைமுறை மனித செயல்பாட்டிற்கு கொண்டு வந்தவர் இஸ்லாமிய இயந்திரவியல் விஞ்ஞானி Al-Jazari. உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா இவரை The Real Father of Engineering என்று சொல்வார்கள். இவர் பிறந்தது கி.பி. 1136-ல். மனிதர் பலத் திறமைகளை பெற்றிருந்தார். அறிஞர், கண்டுபிடிப்பாளர், கலைஞர், பொறியியளாளர் இப்படி பல்வேறு துறைகளில் இயங்கியவர்.


Leonardo Da Vinci-யை பன்முகத் தன்மை கொண்ட அதிசயப் பிறவி என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மேற்குலம், Da Vinci-க்கு நிகரான சொல்லப்போனால் Da Vinci-யை விடவும் பல விசயங்களில் மேம்பட்டவரான Al-Jazari-யை பற்றி எந்தயிடத்திலும் மறந்தும் மூச்சுக் கூட விட்டுவிடாது. ஏனென்றால் இஸ்லாமியர்கள் காட்டு மிராண்டிகள். அவர்களைத் தலையில் தூக்கி கொண்டாடுவது தீட்டான விசயம் மேற்குலகங்களுக்கு. முடிந்தவரை உலகின் பொதுப் புத்தியிலிருந்து இஸ்லாமிய விஞ்ஞானிகள் குறித்த விசயங்களையும் அவர்கள் மனித சமூக வளர்ச்சிக்கான பங்களிப்பாக செய்த சாதனைகளையும் துடைத்து அழிப்பதில் குறியாக இருக்கின்றன.
இந்த துடைதழிப்பின் ஒரு பகுதிதான் காட்டுமிராண்டிகள் வாதம். ஆதியும் தெரியாமல் அந்தமும் புரியாத நம்மவர்களும் கண்களை மூடிக்கொண்ட பூனைகள் போல திரும்ப திரும்ப மேற்குலகின் காட்டுமிராண்டி வாதத்தை இஸ்லாமியர்களுக்கு எதிரான விமர்சனங்களாக முன்வைத்து வருகிறார்கள்.
Al-Jazari “The Book of Knowledge of Ingenious Mechanical Devices” என்கிற நூலை 1206-ல் எழுதி வெளியிட்டார். இந்த புத்தகத்தில் நூற்றுக்கனக்கான இயந்திரங்களின் வடிவமைப்பு முறைகளையும் அவைகள் இயங்கும் விதங்களையும் மிக விளக்கமாக எழுதியிருக்கிறார்.
ஏரிகளில் இருந்து தண்ணீர் உறிந்து வீடுகளுக்கு வினியோகிக்கும் இயந்திரம், கிணறுகளில் இருந்து தண்ணீர் இரைக்கும் இயந்திரம், வீடுகளில் கை மற்றும் பாத்திரங்கள் கழுவ பயன்படும் இயந்திரம், இசை எழுப்பும் இயந்திரங்கள் என்று இன்றைய நவீன உலகில் மனித பயன்பாட்டில் இருக்கும் இயந்திரங்களின் மூலாதாரமான இயந்திரங்களை 800 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து மனித பயன்பாட்டுக்கொண்டு வந்துவிட்டார்.
இன்றைக்கு ஜப்பான் பல்வேறு இயந்திரன்களை (Robo) வடிவமைத்து தங்கள் பங்குக்கு மேற்குலகை நவீன கண்டுபிடிப்புகளில் பின்னுக்குத்தல்ல முயற்ச்சி செய்துகொண்டிருக்கிறது. ஆனால் 800 வருடங்களுக்கு முன்பே இன்றைய இயந்திரன்களின் மூதாதையான இயந்திரனை Al-Jazari வடிவமைத்து வெற்றிகரமாக மனிதர்களைப் போல அந்த இயந்திரனை செயல்பட வைத்திருக்கிறார். தேநீர் பரிமாற அவர் கண்டுபிடித்த இயந்திரன் பயன்பட்டிருக்கிறது. இவரை Father of Robotics என்றும் பெறியியல் உலகம் சிறப்பிக்கிறது.
இன்றைய அதி நவீன் இயந்திரங்களின் இயங்கு பாகங்களாக இருக்கும் Valves, Piston, Pulley, Lever என்று பல பாகங்களின் செயல் திறனை மேம்படுத்தி வடிவமைத்தவர் Al-Jazari.
Al-Jazari –க்கு நன்றி சொல்லும் Crankshaft-யை தன்னுடைய Engine-ல் கொண்ட நவீன கார் வந்துவிட்டது நவீன மனிதனை அழைத்துச்செல்ல. காரில் ஏறி உட்கார்ந்ததும் ஓட்டுனர் ஒரு காகிதத்தை எடுத்து நீட்டி நவீன மனிதனின் பெயருக்கு கீழ் கையெழுத்திடச் சொல்கிறார். பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்பவர்களுக்கு இந்த நடைமுறைக் குறித்த பரிச்சயம் இருக்கலாம்.
நவீன மனிதன் தன்னுடைய எழுதுகோலை எடுக்க தன் சட்டைப் பையை தடவும் ஒரு சில வினாடிகளுக்குள் நாம் இன்றைய எழுதுகோல்களுக்கு (Pen) முன்மாதிரியான கண்டுபிடிப்பை பார்த்துவிடுவோம். கி.பி. 953-களில் எகிப்தை ஆட்சி செய்த சுல்தானுக்கு அன்றைய எழுதுகோள்கள் பெறும் பிரச்சனையை கொடுத்தன. கைகளும் உடைகளும் மைக் கரைப்பட்டு சுல்தானை கடுப்பேற்றியது. சுல்தானின் கடுப்பைப் போக்க இஸ்லாமிய அறிஞர்கள் புவியீர்ப்பு விசை மற்றும் கேப்பிலரிய விசையை ஒன்றிணைத்த Fountain Pen-யை கண்டுபிடித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக