கைப்பேசி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே ஓர் அடியும் எடுத்துவைப்பதை பெரும் கெட்டக் கனவாக நினைக்கும் இன்றைய மனிதன் உபயோகிக்கும் கைப்பேசியில் இருக்கும் மகா மெகா Mega pixel கேமராக்களின் உயிர் நாடி தொழில் நுட்பம் light தான். வெளிச்சம் இல்லையென்றால் Optics தொழில் நுட்பம் கிடையாது. இந்த தொழில் நுட்பம்தான் நம் கண்கள் செயல்படும் விதத்தை விளக்குகிறது.
வெளிச்சம் நம் கண்களுக்குள் ஊடுருவதால்தான் நம்மால் பார்க்கமுடிகிறது, நிறங்களைப் பிரித்து அறியமுடிகிறது என்பதை முதலில் இந்த உலகிற்கு அறிவித்தது இஸ்லாமிய விஞ்ஞானி Ibn al-Haitham. கண்களின் உட்பகுதிகளான cornea, retina, lens ஆகியவற்றை பிரித்தரிந்த அடையாளம் காட்டி பெயர் சூட்டியவர். இவர் வாழ்ந்தது 10-ஆம் நூற்றாண்டில். இயற்பியல், கணிதம், வானியல் என்று நவீன அறிவியலின் முக்கிய தளங்களில் இயங்கியவர்.
ஆதிகாலம் தொட்டு கிரேக்க அறிஞர்கள் இயற்பியலைத் தத்துவத் துறையோடு இணைத்து பேசிக்கொண்டிருக்க இந்த மனிதர்தான் பேசு பொருளாக மட்டுமே இருந்த இயற்பியலை தத்துவத்திலிருந்து பிரித்து நடைமுறை சாத்திப்படும் சோதனைக் கூடத்திற்கு மாற்றியவர். இன்றைய Digital Camera-க்களுக்கெல்லாம் மூதாதயரான Pin-Hole Camera-வை முதன் முதலில் வடிவமைத்து சோதித்துப் பார்த்திருக்கிறார்.
கேமிராவில் துளை எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவுக்குத் தெளிவாக படம் இருக்கும் என்பதை தன்னுடைய Camera Obscura கருவி மூலம் கண்டறிந்தார். அரபி மொழியில் Qamara என்றால் இருண்ட அறை என்று அர்த்தம். Qamara வார்த்தையில் இருந்துதான் Camera என்கிற ஆங்கில வார்த்தை வந்திருக்கும் என்பது எளிதில் விளங்கக்கூடிய விசயம்.
கட்டுரை:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக