இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

விவசாயிகள் தற்கொலைகள் ஏன்?


இங்கு நல்லசாமி அவர்கள் கூறும் உண்மைகளை நாடு முழுக்கப் பரப்ப வேண்டும். சமூகத்தின் மீது அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்டவர்களின் தலையாய கடமை இது. நம்நாட்டை சிக்க வைத்திருக்கும் சதி வலையையும் சதிகாரர்களையும் அடையாளம் காண வேண்டும். கார்ப்பரேட் முதலைகளின் கைக்கூலிகளாக செயல்படும் மத்திய மாநில அரசாங்கங்களின் நாடகங்களை மக்கள் அப்பாவித்தனமாக நம்பி மோசம் போவதைத் தடுக்க வேண்டுமானால் கீழ்காணும் பணம் வந்த கதையை பள்ளிக் கூடத்தில் பாடமாக சொல்லிக் கொடுக்கவேண்டும்: காகிதப்பணம் வந்த கதை: (மிகச் சுருக்கமாக) பண்டைக்காலத்தில் பண்டமாற்று முறையில் சந்தைகளில் வியாபாரம் நடந்து வந்தது. போகப்போக தங்கக் காசுகள் புழக்கத்திற்கு வந்தன. தங்கக் காசுகளின் பாதுகாப்பு, அவற்றின் போக்குவரத்து இவை மக்களுக்கு சிரமம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. அதைத் தொடர்ந்து தங்க நாணயங்களின் பாதுகாப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சில செல்வந்தர்கள் முன்வந்து பெரும் பாதுகாப்புப் பெட்டகங்களை நிறுவி மக்களிடம் இருந்த தங்கத்தை பெற்று அவற்றுக்கான பத்திரங்களை வழங்கினார்கள். அவற்றைத் திருப்பிக் கொடுக்கும்போது அதற்கான சேவைக் கட்டணங்களையும் வசூலித்தார்கள். பிற்காலங்களில் மக்கள் அந்த பத்திரங்களையே தங்க நாணயங்கள் போல் வியாபாரங்களில் பரிமாறும் பழக்கத்திற்கு மாறினார்கள். இந்தப் பழக்கம் பிரபலமாக ஆக மக்கள் பெட்டகக்காரர்களிடம் நம்பிக்கையோடு கொடுத்திருந்த தங்க நாணயங்களில் பெரும்பாலானவை திரும்பப் பெறாமல் பெட்டகங்களிலேயே உறங்கின. இதை கவனித்த பெட்டகக்காரர்கள் ஒரு பெரும் சதித்திட்டம் தீட்டினார்கள். ‘நம் பெட்டகங்களில் உறங்கும் இந்த நாணயங்களை நாம் ஏன் இரகசியமாகக் மக்களுக்கு கடன் கொடுக்கக்கூடாது? அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்து தங்கள் நாணயங்களைத் திருப்பக் கேட்பது என்பது நடவாத ஒன்று. அதனால் நாம் தாராளமாகக் கடன் கொடுத்து வட்டியை ஈட்டலாமே.” என்று தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்ய முடிவெடுத்து அதை செயல்படுத்தினார்கள். என்ன நடந்தது?.... அவ்வாறு கடன் பெற்றவர்களும் தங்க நாணயங்களை வாங்கிச் செல்வதை விட பெட்டகக் காரர்களின் பத்திரங்களையே விரும்பி வாங்கிச் சென்றார்கள். அவ்வாறு கொடுத்த பத்திரங்களைத் திரும்பப் பெறும்போது வட்டியும் வசூலித்தார்கள். வருமானத்தை ஈட்டும் வெற்றுக் காகிதம்: இப்போது பெட்டகக் காரர்களுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி! தாங்கள் வழங்கும் பத்திரங்கள் மக்களால் கேள்வி கேட்கப்படாமல் கைமாறப்படும் நிலையைக் கண்ட பெட்டகக்காரர்கள் தங்கள் இச்சை போல பத்திரங்களை அச்சடித்து அதை விநியோகித்தார்கள். வட்டியும் வட்டிக்குமேல் வட்டியும் எல்லாம் வசூலித்தார்கள். மட்டுமல்ல, அதைக் கொண்டு தாங்கள் விரும்புவதை வாங்கிக் குவித்தார்கள், நினைத்ததை நடத்தினார்கள்... சமூகத்தின் மீது அசைக்கமுடியாத அதிகாரத்தைப் பெற்றார்கள்! ஆம், அந்த பத்திரங்களின் பரிணாமமே இன்று உங்கள் கைகளில் புழங்கும் பணத்தாள்கள்(currency)! அந்தப் பெட்டகங்களின் பரிணாமமே வங்கிகள். இப்போது யாரால் நாம் யாரால் அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்பதை உங்களால் ஊகிக்க முடியும்! மனித வரலாற்றில் நாணயங்களும் வங்கி முறைகளும் முன்பே இருந்திருக்கின்றன. ஆனால் இன்று நாம் வாழும் உலகை கையகப்படுத்தி நம்மையெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் வங்கி அமைப்பைப் பற்றி மட்டும் தற்போது கவனிப்போம். ஒரு நாட்டில் – அதுவும் ஒரு மிகப்பெரிய வல்லரசு நாட்டில்- உள்ள வங்கி உரிமையாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கரன்சியை அச்ச்சடித்து அரசின் அங்கீகாரத்தோடு அதைப் புழக்கத்தில் விட்டு அதைக்கொண்டே அந்நாட்டில் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது என்றால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். அவர்களால் நாட்டில் உள்ள எதைத்தான் வாங்கமுடியாது. அரசாங்கமும் ரவுடிகளும் இந்தத் தனியார் முதலாளிகளுக்கு துணையாக இருந்தால் அவர்களால் செய்யமுடியாதது ஏதும் இருக்குமா? இதே சதித் திட்டத்தை உலக அளவில் செய்தால்... ? அவ்வாறு ஆம், டாலர் என்ற வெற்றுக்காகிதத்திற்கு பெட்டிப்பாம்பாக உலகம் கட்டுண்டு கிடப்பது அதனால்தான்! பெடரல் ரிசர்வ் வங்கியின் உருவாக்கம்: இன்று அகில உலகத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் தனது கட்டுக்குள் அடக்கிவைத்து நிர்வகித்து வரும் வங்கி அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி. 1910ம் ஆண்டு அமெரிக்காவின் ஜெக்கிள் தீவில் (Jekyll Island) ரோத்ச்சைல்டு, ராகஃபெல்லர், ஜே.பி.மோர்கன் ஆகிய மூன்று யூத வங்கி முதலாளிகள் அன்றிருந்த மற்ற வங்கி முதலாளிகள் சிலரோடு ரகசியமாக சந்தித்தார்கள். சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியின் ரகசிய துணையோடு உருவாக்கப் பட்ட ஒரு பெரும் வங்கிதான் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி! அடக்குமுறையால் உலகின் மீது திணிக்கப்படும் டாலர்: = தாங்கள் அச்சடிக்கும் டாலர் என்ற வெற்றுக் காகிதத்தை தந்திரபூர்வமாக உலகெங்கும் திணித்து தங்களின் அடக்குமுறை மூலம் உலக நாடுகளையும் அவற்றின் வளங்களையும் தங்களது ஆதிக்கத்தின் கொண்டுவந்துள்ள ஏகாதிபத்திய வாதிகள் உலகத்திலுள்ள கொழுத்த வருமானங்கள் ஈட்டும் அனைத்து வியாபார, உற்பத்தி, போக்குவரத்து, பொழுதுபோக்கு (entertainment), கட்டுமான (infrastructure), நிறுவனங்களையும் அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலமும் தங்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்துள்ளார்கள். மட்டுமல்ல, வருமானங்கள் கொழிக்கும் துறைகளான மருத்துவம், கல்வி, மதம் இவற்றையும் இவர்கள் தங்களின் திட்டங்களின் மூலமும் கையாட்கள் மூலமாகவும் திறம்பட நிர்வகித்து வருகிறார்கள். டாலரை ஏற்காத நாடுகளின் தலைவர்கள் பலவந்தமாக தீர்த்துக் கட்டப்படுகிறார்கள். உதாரணங்கள்: அன்று, ஆப்ரஹாம் லிங்கன்... இன்று, சத்தாம் ஹுசைன், கடாஃபி துணைபோகும் கார்பரேட் நிறுவனங்களும் கையாட்களும்: நம் நாட்டு உதாரணத்தில்... இங்கு எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை ஒருபுறம் ஆசை காட்டியும் மறுபுறம் மாபியாக்கள் மூலம் மிரட்டியும் மேற்படி நோக்கங்கள் நிறைவேற்றப் படுகின்றன. ஒத்துழைக்கும் கட்சிகளை ஜெயிக்க வைக்க தாராளமாக பணமும் பொருட்களும் வாரி வழங்கப் படுகின்றன. உரிய முறையில் தந்திர உத்திகள் கையாளப்படுகின்றன. இந்த வஞ்சகச் செயல்பாடுகள் காரணமாகவே பிறக்கும் ஒவ்வொரு குடிமகனும் கடனாளியாகவே பிறக்கிறான். வரிச்சுமையும் விலைவாசி உயர்வும் வறுமையும் தற்கொலைகளும் அப்பாவி நாட்டுமக்கள் மீது அநியாயமாகத் திணிக்கப் படுகின்றன.

http://quranmalar.blogspot.com/2016/03/blog-post_22.html
இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக