இக்கட்டுரையின் முந்தைய பாகத்தை கீழ்கண்ட இணைப்பில் படித்துவிட்டு தொடருங்கள் :
பயங்கரவாதத்தின் ஆணிவேர்!
மனிதர்களே! உங்கள்
இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே
ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர்
மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும்
பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து
கொள்ளுங்கள்; ..... நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே
இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத்
தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்று பொருள்)
‘ஒன்றே குலம் ஒருவனே இறைவன்’ என்ற மனித சகோதரத்துவ
தத்துவத்தைத்தான் இஸ்லாம் இன்று போதித்து வருகிறது. இதையேதான் இந்த பூமிக்கு வந்த நபிகள்
நாயகத்திற்கு முன் வந்த இயேசு கிறிஸ்து, மோசே ஆகியோர் உட்பட அனைத்து இறைவனின்
தூதர்களும் தத்தமது மக்களுக்கு எடுத்துரைத்து அதன் அடிப்படையில் தர்மத்தை
நிலைநாட்டிவிட்டுச் சென்றார்கள். ஆனால் அவர்களுக்குப் பிற்காலங்களில் வந்த ஆதிக்க
வெறி கொண்ட கூட்டங்களும் கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கப் புறப்பட்ட
இடைத்தரகர்களும் ஆன்மீகத்தை போதிக்கும்போது தங்கள் ஆதிக்கத்திற்குத் தடையாக நின்ற
இறை போதனைகளை திரித்துக் கூறினார்கள்.
அவ்வாறுதான் ஒன்றே மனித குலம் என்ற உண்மையைத் தந்திரமாக
மறைத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி பிற மக்களை அடிமைகளாக நடத்தினார்கள்.
சகமனிதனும் சகோதரனே என்ற உண்மையை மறைத்து அவர்களின் உரிமைகளை மறுத்தார்கள்.
உடமைகளைப் பறித்தார்கள். எதிர்த்தோரைக் கொன்றார்கள், நாடுகடத்தினார்கள், அடிமைகளாக
ஆக்கி வேறு நாடுகளில் விற்றார்கள்!
அவ்வாறு இந்த பூமியில் நடந்த அக்கிரமங்களுக்கும்
கொடுமைகளுக்கும் அளவே இல்லை. அதற்கு ஒரு உதாரணமே இன்று உலகையெல்லாம் தன்
ஆளுகைக்குள் கொண்டுவந்து அடக்குமுறை செய்துகொண்டிருக்கும் அமேரிக்கா என்ற
வல்லரசின் வரலாறு!
கொலம்பஸ்
போட்ட ஆக்கிரமிப்பு விதை!
"கொலம்பஸ் 1492 ம் ஆண்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்." உலக நாடுகள் எங்கும்
பள்ளிச் சிறுவர்களின் மனதில் புகுத்தப்படும் சரித்திர பாடம் இது! அமெரிக்கா
ஒன்றும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் அடியில் மறைந்திருக்கவில்லை, கொலம்பஸ் வந்து கண்டுபிடிப்பதற்கு! கொலம்பஸ்
வருவதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரிக வளர்ச்சி அடைந்திருந்த மக்கள் வாழ்ந்துக்கொண்டிருந்த
கண்டமே அமெரிக்கா!
கண்டுபிடித்தார்
என்பதை விட ‘பிடித்தார்’ என்ற சொல்லே பொருத்தமானது. அமெரிக்கா மட்டுமல்ல, இன்றுள்ள
முன்னேறிய ஏகாதிபத்திய நாடுகளின் வரலாறுகள் ஆக்கிரமிப்புகளால் ஆனவையே! ஐரோப்பாக்
கண்டத்தின் அருகில் ஒரு தீவில் (இங்கிலாந்தில்) பேசப்பட்ட ஆங்கில மொழி இன்று
எங்கெல்லாம் முக்கிய மொழியாக ஆகி இருக்கிறதோ அந்தக் கண்டங்களும் நாடுகளும் தீவுகளும்
அவர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானவையே!
கொலம்பசும்
அவரது குழுவும், 1492ல்
அமெரிக்கக் கண்டத்தில் கால் பதித்தது தற்செயலான ஒரு நிகழ்வாக வரலாறுகளில்
சித்தரிக்கப் பட்டாலும் ஐரோப்பிய முதலாளிகளின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின்
ஒரு பகுதியாக, செல்வம்
தேடி, தங்கம் தேடி, வளங்கள் தேடி அலைந்த பயணங்களே அவை
என்பதே உண்மை! கொலம்பஸ் குழுவினரும் அவரைப் பின்தொடர்ந்தவர்களும் அங்கிருந்த
பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அடக்குமுறைகளைக் கையாண்டு அடிமைப்படுத்தினார்கள்.
அவர்களை அடிமைகளாக ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்தனர். அவர்களது தங்க வயல்களைக்
கபளீகரம் செய்தனர்.
கொலம்பசும் அவருக்குப் பின் அது போன்று
வந்தவர்களும் 2 ஆண்டுகளில், தூக்கிலிட்ட, கொலை செய்த, எரித்த, சிதைத்த, தற்கொலைக்குத் தள்ளிய
செவ்விந்தியர்களின் எண்ணிக்கை 2,50,000 என்று
கணக்கிடப்படுகிறது. இத்தகைய ஆக்கிரமிப்புகள், அமெரிக்கக்
கண்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. அமெரிக்க கண்டத்தின் பல பகுதிகளில் பல
நூறாண்டுகளாக வாழ்ந்த மக்களை இனப் படுகொலை செய்து ஐரோப்பாவின்
பல பகுதிகளிலிருந்து மற்ற இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர்.
வெள்ளை
தேசத்தின் விரிவாக்கம்
அட்லாண்டிக் சமுத்திரத்தின்
கடலோரம் துவங்கி, பசிபிக்
சமுத்திரக் கரை வரை, அத்தனை
பூர்வ குடியினரையும் அழித்தொழித்து, அமெரிக்க
சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு சுமார் 300
ஆண்டுகள் பிடித்தன. இந்த 300
ஆண்டுகளும் உலகமே அதிர்ந்து போகிற அளவுக்கான கொடுமைகள் மனித
குலத்தின் மீது தொடுக்கப்பட்டன. 1830ல், அமெரிக்க அதிபராக இருந்த ஜாக்சன், “பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலப்
பரப்பில் இருந்த காட்டுமிராண்டிகளை வெளியேற்றிவிட்டு, நாகரீகமான வெள்ளை இன மக்களை
அடர்த்தியாகக் குடியேற்றுவதுதான் அமெரிக்காவின் நோக்கம்” என்று பகிரங்கமாக
அறிவித்தார். அமெரிக்காவின் எல்லைகள் இப்படித்தான் விரிவடைந்தன. தங்களின்
கட்டுமானப்பணிகளுக்காக ஏற்கனவே அடிமைப்படுத்தி வைத்திருந்த தென்னாப்பிரிக்காவின்
கருப்பு இனத்தவரை இறக்குமதி செய்து ஆடு மாடுகளை
விற்பதை போல விற்றார்கள். இந்த ‘வெள்ளை தேசத்தின்’ விரிவாக்கத்திற்காக உள்ளூர்
மக்கள் மீது படுகொலைகள், உயிருடன்
எரிப்பு, ஏமாற்று
வேலை, மோசடி, பெண்கள் மீது சொல்ல முடியாத
பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
மனிதாபிமானம்
எங்கே போயிற்று?
சகமனிதன்
தன் சகோதரனே என்று உணர்வோ அல்லது சக மனிதனுக்கும் இந்த பூமியில் தன்னைப் போலவே
உரிமைகள் உள்ளன என்ற உணர்வோ அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு இறைநம்பிக்கை இருந்தது, IN GOD WE TRUST (கடவுளின்
மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்) என்பது இவர்களின் முக்கிய மந்திரம். இதை
தங்கள் டாலர் நோட்டுகளிலும் ஆவணங்களிலும் எழுதி வைத்திருப்பதைக் காணலாம். ஆனால்
தாங்கள் செய்யும் மனித உரிமை மீறல்களுக்கும் கொடுமைகளுக்கும் இறைவனிடம் பதில்
சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோ பாவங்களுக்கு இறைவனிடம் கடுமையான தண்டனைகள்
உள்ளன என்ற அச்சமோ அவர்களுக்கு துளியும்
இருக்கவில்லை. ஒருவேளை அவர்கள் தங்களின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவை
என்று கருதினார்களோ? இல்லை, தங்கள் இனத்தைத் தவிர மற்றவை அனைத்தும் தாழ்ந்தவையே,
அவை தங்களுக்கு அடிமைப்பட்டுத்தான் அல்லது தங்கள் தயவில்தான் வாழவேண்டும் என்று
நினைத்தார்களோ? இன்று சில இஸ்லாமியர்கள்
செய்பவற்றை இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சித்தரிப்பதைப் போல இவர்கள் செய்த
கொடூரங்களை இன்றுவரை இவர்களின் மதத்தோடு தொடர்பு படுத்திப் பேசவிடாமல் இவர்களது
ஊடகங்கள் வெகு கவனமாகப் பார்த்துக் கொண்டன.
ஈவிரக்கமற்ற கொடூரங்களை பெருமளவில் நிறைவேற்றி
அதன்பின் அமைந்த வல்லரசுதான் அமேரிக்கா! இவர்கள்தான் இன்று மனித உரிமைக்
காவலர்கள்! சமாதானப் பிரியர்கள்! உலகத்திற்கே போலீஸ்காரர்கள், நீதிபதிகள்! வல்லரசாக நின்றுகொண்டு உலக நாடுகளையும்
அவற்றின் வளங்களையும் கையகப்படுத்துவதற்காக இவர்கள் தொடரும் கொடூரங்களை உலகத்தின்
அனைத்து நாடுகளும் அனுபவித்துள்ளன. இன்னும் தொடர்ந்து அனுபவித்து வருகின்றன. அன்று
ஹிரோஷிமாவிலும் இன்று ஈராக்கிலும் இவர்கள் நடத்திய படுகொலைகள் பிரசித்தமானவையே!
ஆயினும் இவற்றை யாரும் இன்றுவரை இவர்கள் சார்ந்துள்ள மதங்களோடு இணைத்துப்
பேசுவதில்லை... காரணம் அனைத்து ஊடகங்களும் இவர்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளன!
----------------
வல்லரசாக நின்றுகொண்டு உலக நாடுகளையும் அவற்றின்
வளங்களையும் கையகப்படுத்துவதற்காக இவர்கள் தொடரும் கொடூரங்களை உலகத்தின் அனைத்து
நாடுகளும் அனுபவித்துள்ளன. இன்னும் தொடர்ந்து அனுபவித்து வருகின்றன. அன்று
ஹிரோஷிமாவிலும் இன்று ஈராக்கிலும் இவர்கள் நடத்திய படுகொலைகள் பிரசித்தமானவையே!
அன்று
ஹிரோஷிமாவில்...
1945 ஆண்டு
ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி மீது இவர்கள் வீசிய அணுகுண்டுகளின்
விளைவுகளை உலகம் நன்றாகவே அறியும். இதுவே வரலாற்றில் முதல்முறையாக
அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த இரு
குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2 - 4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000 - 166,000 மக்களும், நாகசாக்கியில் 60,000 - 80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக
உயிர் இழந்தார்கள்.
குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில்
இறந்தோரில் பெரும்பாலோர் தீக்காயங்களாலும், மற்றவர்கள்
இடிமானங்கள் தங்கள்மேல் விழுந்ததாலும், இன்ன பிற காரணங்களாலும் கொல்லப்பட்டனர்.
குண்டுவீச்சைத் தொடர்ந்த மாதங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும்
இறந்தனர். அந்தக் கதிர்வீச்சின் தாக்கம் இன்றும் தொடர்கிறது. இன்று பிறக்கும்
குழந்தைகளையும் அது ஊனமுற்றவர்களாகவும் புற்றுநோய்க்கு ஆளானவர்களாகவும்
ஆக்குகிறது.
இன்று
ஈராக்கில்...
பேரழிவு
இரசாயன ஆயுதங்கள் ஈராக் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் பொய்யுரைத்து ஆக்கிரமிப்பு
நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்காதான் வெள்ளைப் பாஸ்பரஸ் என்ற இரசாயனப் பொருளை
மிகப் பெரும் அளவில் ஃபலூஜா நகரின் மீதான தாக்குதலில் பயன்படுத்தியது.
போர்க்களத்தை ஒளியூட்டவே வழக்கமாய் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனம் மரணத்தை
விளைவிக்கும் பயங்கரமான இரணங்களை ஏற்படுத்தக் கூடியது. கதவுகள், சன்னல்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும்
மக்களின் உடைகள் என தன் வழிப்பட்ட தடைகள் அனைத்தையும் எரித்துக்கொண்டு முன்னேறி இறுதியில்
மனிதத் தோலையும், உள்ளிருக்கும் எலும்பையும் தின்று
செறிக்கும் அகோரப்பசி கொண்டது அந்த இரசாயனம்.
மக்கள்
பதுங்கி இருக்கும் பாதுகாப்பான குடியிருப்புக் கட்டிடங்களின் உள்ளிருக்கும் பிராண
வாயுவையும் உரிஞ்சி எடுத்துவிடும் தன்மை கொண்ட வெள்ளைப் பாஸ்பரஸ் இத் தாக்குதலில்
ஏராளமாகப் பயன்படுத்தப்பட்டது. இத்தோடு
நில்லாமல் சொல்லொணாத் துயரைத் தலைமுறை தலைமுறைக்கும் விளைவிக்கும் கதிர்வீச்சுத்
தன்மைகொண்ட ஏராளமான குண்டுகள் இந்த நகரத்தின் மீதான குவிந்த தாக்குதலில்
பயன்படுத்தப்பட்டன என்றும் அஞ்சப்பட்டது.
ஃபலூஜா
நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த
பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க
அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக
இருக்கிறது என்ற
உண்மையை இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.
சக்தி
வாய்ந்த பொருளாதாரம், ஆயுதங்கள், வலிமையான ஊடகங்கள் இவற்றைக் கொண்டு இவர்கள்
நிகழ்த்திய கொடூரங்களை உலக மக்களின் முன்னால் நியாயப் படுத்துவதும் உலக மக்களை
மூளைச்சலவை செய்வதும் இவர்களின் வாடிக்கை. அன்று இவர்கள் கொன்று குவித்த
அப்பாவிகளை காட்டுமிராண்டிகள் என்று ஊடகங்களின் மூலம் சித்தரித்தார்கள். இன்று
தங்களின் கைப்பாவை அரசர்களைக் கொண்டு உலக வளங்களை கையகப்படுத்தியுள்ள நிலையில்
அந்த அரசர்களுக்கு எதிராக உரிமை கோரிப் போராடுபவர்களை தீவிரவாதிகள் அல்லது
பயங்கரவாதிகள் என்று தங்களின் சக்திவாய்ந்த ஊடகங்கள் மூலம் இடைவிடாது பரப்புரை
செய்கிறார்கள்! இவர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் செய்யும் போராட்டங்களை
இஸ்லாமிய தீவிரவாதம் என்றும் பயங்கரவாதம் கூறி உலக மக்களிடையே மூளைச்சலவைச்
செய்கிறார்கள்.
மட்டுமல்ல,
இந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசை திருப்பும்
நோக்கிலும் இஸ்லாத்தின் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும் இவர்களே தங்கள்
கைக்கூலிகளை அமர்த்தி அவர்கள் மூலம் தங்கள் வஞ்சகத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
உதாரணமாக, இன்று ஈராக்கில் ஆதிக்கம் பெற்று படுபயங்கரமான கொலைகளையும்
கழுத்தறுப்புக்களையும் நிறைவேற்றி வரும் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு இவர்களின்
கைக்கூலிப் படைகளே!
இஸ்ரேலின்
மொசாத் என்ற பயங்கரவாத அமைப்பும் அமெரிக்காவின் CIA என்ற உளவுத்துறையும் சேர்ந்து
உருவாக்கியதே ஐஎஸ்ஐஎஸ் என்பது சமீபகாலங்களில் கசிந்துள்ள உண்மையாகும். இவர்கள்
மூலம் கோர சம்பவங்களை நிறைவேற்றி அவற்றை உலகோர் மத்தியில் தங்கள் ஊடகங்கள் மூலம்
பரப்பி இஸ்லாத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி அதன் வளர்ச்சியை தடுக்கப்
பார்க்கிறார்கள். ஆனால் இறைவனின் மார்க்கம்
இஸ்லாமோ இந்த சூழ்ச்சிகளை எல்லாம் முறியடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இன்று பொதுவாக மக்களிடையே இறையச்சம் என்பது
குறைந்து வருவதால் கலாச்சார சீர்கேடுகள் மிகைத்து அதன் காரணமாக அவர்கள்
திருமணங்களிலும் குழந்தைப்பேறுகளிலும் மக்கள் ஆர்வமிழந்து காணப்படுவதை அறிவோம். ஆனால்
இஸ்லாம் அதனை ஏற்றுக்கொண்ட மக்களிடையே திருமண அமைப்பையும் குழந்தைகளையும் முதியோர்களையும்
பேணிக்காக்குமாறு பணிக்கிறது. இதனால் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இயற்கையாகவே
வளர்ந்து வருகிறது. அதுபோக சமீப காலங்களில் உலகெங்கும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக
ஏற்கும் மக்களின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. சமீபத்திய
புள்ளிவிவரங்கள் படி வருடத்திற்கு அமேரிக்காவில் 20000 பேரும் பிரிட்டனில்
5200
பேரும் பிரான்சில் 4000 -7000 பேரும்
ஜெர்மனியில் 4000 பேரும்
இஸ்லாத்தை ஏற்றுவருவதாக அறிகிறோம். இஸ்லாத்தின் இந்த அபார வளர்ச்சியும் ஏற்கெனவே
இவர்களால் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் இஸ்லாமிய நாடுகளில் மக்கள்
பெற்றுவரும் இஸ்லாமிய விழிப்புணர்வும் இவர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றன. ஏனெனில்
இஸ்லாம் என்ற மக்கள் இயக்கம் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரானது.
இவர்களின் சதித்திட்டங்களை முறியடித்து செயலிழக்கச் செய்துவிடும் என்பதை இவர்கள்
நன்றாகவே அறிந்துள்ளார்கள்.
இன்று இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை அகில உலக மக்களாலும் அதிவேகமாக
ஏற்கப்பட்டு பரவிவருவது அனைவரும் அறிந்த உண்மை! இந்த இஸ்லாத்தின் அபார
வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கத்தோடு இஸ்லாத்தின் எதிரிகளால் திட்டமிடப்பட்டு
நடத்தப்பட்ட ஒன்றுதான் பிரான்சில் சார்லி ஹெப்டோ தாக்குதல் என்பது
ஏகாதிபத்திய சக்திகள் தங்களது கைக்கூலிகளைக் கொண்டு இப்படி ஒன்றை நிகழ்த்தி இஸ்லாத்திற்கு
அவப்பெயரை உண்டாக்கி இம்மார்க்கத்தை ஏற்கும் மக்களைத் தடுத்து நிறுத்த
முயற்சித்தார்கள்.. ஆனால் இறைவன் அவ்வாறு நாடவில்லை. சார்லி ஹெப்டோ
தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக ஆகியிருப்பதை
செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
இதை இறைவன் தன திருமறைக் குர்ஆனில் ஏற்கனவே கூறியும் உள்ளான்:
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)
அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும்
இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)
ஊடகங்களின் இரட்டை நிலை:
தாங்கள் அச்சடிக்கும் டாலர் என்ற
வெற்றுக் காகிதத்தை தந்திரபூர்வமாக உலகெங்கும் திணித்து தங்களின் அடக்குமுறை மூலம்
உலக நாடுகளையும் அவற்றின் வளங்களையும் தங்களது ஆதிக்கத்தின் கொண்டுவந்துள்ள இரகசிய
சமுதாயம்தான் இன்று அமேரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் இயக்கி வருகின்றது.
இவர்கள் உலகத்திலுள்ள கொழுத்த வருமானங்கள் ஈட்டும் அனைத்து வியாபார, உற்பத்தி,
போக்குவரத்து, பொழுதுபோக்கு (entertainment), கட்டுமான (infrastructure), நிறுவனங்களையும்
அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலமும் தங்களின் ஆளுகைக்குக் கீழ்
கொண்டுவந்துள்ளார்கள். மருத்துவம், கல்வி, மதம் இவையும் வருமானங்கள் கொழிக்கும்
துறைகளல்லவா? ஆம், இவற்றையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை! இவற்றையும் இவர்கள்
தங்களின் திட்டங்களின் மூலமும் கையாட்கள் மூலமாகவும் திறம்பட நிர்வகித்து
வருகிறார்கள்.
இவர்கள் முக்கியமாக மிகவும் கவனத்தோடு
நிர்வகித்து வருவது ஊடகத்துறை. உலகில் உள்ள தலையாய பத்திரிகைகள், தொலைகாட்சி
சேனல்கள், ஊடக ஏஜென்சிகள் போன்றவை இவர்கள் கைவசமே உள்ளன. இவர்கள் சொல்வதை உலகின்
பெரும்பான்மை மக்கள் நம்பும் விதத்தில் இவர்கள் இவற்றைக் கையாள்கிறார்கள். நடக்காத
ஒன்றை நடந்ததாகவும் நடந்ததை நடக்காததாகவும் இவர்களால் காட்ட முடியும்.
அமெரிக்காவின் இரட்டை கோபுர இடிப்பு சம்பவத்தை ஒசாமா பின் லாடனும் கூட்டாளிகளும்
நிகழ்த்தினார்கள் என்று உலகை நம்ப வைத்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கோபுரங்களை
விமானம் மூலம் இடித்து வீழ்த்துவது அசாத்தியம் என்பதும் கட்டிடங்கள் டைனமைட்
வைத்துத்தான் (implosion) தகர்க்கப்பட்டு உள்ளன என்பதும் இது அமெரிக்காவின்
உள்வேலை(inside job) என்பதும் இன்று ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள். இச்சம்பவத்தின்
மூலம் இராக்கையும் ஆப்கானிஸ்தானையும் தங்கள் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்துள்ளதில்
இருந்தே இவர்களின் நோக்கம் என்ன என்பதை யாரும் அறியமுடியும்.
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
அல்லாஹு அக்பர்
பதிலளிநீக்கு👍
பதிலளிநீக்கு