‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள்
பாரதநாடு’ என்று பாடியவரும் பொய்யுரைக்கவில்லை.
சாரே ஜஹான்ஸே அச்சா என்று பாடியவரும்
பொய்யுரைக்கவில்லை. அந்த அளவுக்கு அது உண்மை! நாம் அனைவரும் அதை அனுபவபூர்வமாகவே
அறிவோம். ஆனால் இன்று இந்த வளங்கள் நிறைந்த நாட்டின் நிலை எவ்வாறு உள்ளது? இயற்கை
வளத்தாலும் மனிதவளத்தாலும் அறிவு வளத்தாலும் ஆன்மீக வளத்தாலும் உயர்வு பெற்ற நாடாக
உள்ள பாரதத்தின் நிலை எவ்வளவு அவலம் நிறைந்ததாக மாறியுள்ளதைப் பாருங்கள்:
= தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின்
சமீபத்திய அறிக்கைப்படி இந்தியாவில் ஒவ்வொரு 4
நிமிடத்திற்கும் 30 வயதுக்கு உட்பட்ட ஒருவர் தற்கொலை செய்கிறார்.
= உலகவங்கி
வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கைப்படி, பணக்காரர்கள் கோடிகளை
குவித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏழைகளின் நிலை மிகமிக மோசமாக உள்ளது. உலகிலுள்ள ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர்
இந்தியாவில் தான் உள்ளனர். இந்திய மக்களில் 77 விழுக்காட்டினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும்
குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர்.
வளங்கள்
நிறைந்த நம் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு வேறுபல உள்நாட்டுக் காரணங்கள்
இருந்தாலும் முக்கியமாக நம்மை நெருக்குவது இவைதான்:
தொடரும் மறைமுகக் காலனி ஆதிக்கம்:
வியாபாரிகளாக நம் நாட்டிற்குள்
நுழைந்த ஆங்கிலேயர்கள் காலனி ஆதிக்கம் மூலம் நம்மை அடிமைப்படுத்தி நம்
நாட்டுவளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து நாட்டை விட்டு
வெளியேறும்போது பெயரளவில் சுதந்திரத்தைக் கொடுத்தாலும் இன்னும் அவர்களின்
தந்திரமான வியாபார ஒப்பந்தங்களின் மூலம் நம்மை அடிமைப்படுத்தியே வைத்துள்ளார்கள்
என்பதே உண்மை. அவர்களின் பிரித்தாளும் (divide and rule) சூழ்ச்சிக்கு
இரையாகியுள்ள நாமும் சரி நம் அண்டை நாடுகளும் சரி ஏனைய உலக நாடுகளும் சரி
அவர்களின் வியாபாரத் தந்திரங்களால் அடிமைப்படுத்தப் பட்டுள்ள நிலையில் இருப்பதையே
காண முடிகிறது. அவர்கள் தயாரிக்கும் ஆயுதங்களை இந்நாடுகள் வாங்கவேண்டும்
என்பதற்காகவே
இந்நாடுகளிடையே தந்திரமாகப் பகைமை
மூட்டப்படுகிறது. இதனால் இந்நாடுகள் தங்களின் மூன்றில் ஒரு பங்கு வருமானத்தை
போர்களுக்காகவும் இராணுவத்துக்காகவும் இராணுவத் தளவாடங்களில் முதலீடு
செய்வதற்காகவும் செலவிடும் நிர்பந்தங்களுக்கு ஆளாகிறார்கள்.
உலக வருமானங்களை உறிஞ்சும் வல்லரசு
அமைப்புகள்
= தாங்கள் அச்சடிக்கும் டாலர் என்ற
வெற்றுக் காகிதத்தை தந்திரபூர்வமாக உலகெங்கும் திணித்து தங்களின் அடக்குமுறை மூலம்
உலக நாடுகளையும் அவற்றின் வளங்களையும் தங்களது ஆதிக்கத்தின் கொண்டுவந்துள்ள ஏகாதிபத்திய
வாதிகள் உலகத்திலுள்ள கொழுத்த வருமானங்கள் ஈட்டும் அனைத்து வியாபார,
உற்பத்தி, போக்குவரத்து, பொழுதுபோக்கு (entertainment), கட்டுமான
(infrastructure), நிறுவனங்களையும் அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன்
மூலமும் தங்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்துள்ளார்கள். மட்டுமல்ல, வருமானங்கள் கொழிக்கும் துறைகளான மருத்துவம், கல்வி, மதம் இவற்றையும்
இவர்கள் தங்களின் திட்டங்களின் மூலமும் கையாட்கள் மூலமாகவும் திறம்பட நிர்வகித்து
வருகிறார்கள்.
துணைபோகும் கார்பரேட் நிறுவனங்களும்
கையாட்களும்:
எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
அவர்களை ஒருபுறம் ஆசை காட்டியும் மறுபுறம் மாபியாக்கள் மூலம் மிரட்டியும் மேற்படி
நோக்கங்கள் நிறைவேற்றப் படுகின்றன. ஒத்துழைக்கும் கட்சிகளை ஜெயிக்க வைக்க தாராளமாக
பணமும் பொருட்களும் வாரி வழங்கப் படுகின்றன. உரிய முறையில் தந்திர உத்திகள்
கையாளப்படுகின்றன.
இந்த வஞ்சகச் செயல்பாடுகள் காரணமாகவே
பிறக்கும் ஒவ்வொரு குடிமகனும் கடனாளியாகவே பிறக்கிறான். வரிச்சுமையும் விலைவாசி
உயர்வும் வறுமையும் தற்கொலைகளும் அப்பாவி நாட்டுமக்கள் மீது அநியாயமாகத் திணிக்கப்
படுகின்றன.
எத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே? http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_22.html
இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? பாகம் 1
http://quranmalar.blogspot.com/2016/03/blog-post_22.html
நாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_27.html
எத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே? http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_22.html
இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? பாகம் 1
http://quranmalar.blogspot.com/2016/03/blog-post_22.html
நாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_27.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக