இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 ஜூலை, 2015

புத்தாடை சிந்தனைகள்

அன்பான சகோதர சகோதரிகளே,
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் இங்கு ஒவ்வொரு மனிதனும் செய்த வினைகள் அனைத்துக்கும் மறுமையில் தீர்ப்பு வழங்குவான். இறைவன் தடுத்த காரியங்களை செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள்.
அவன் விதித்த வரம்புகளை மீறி உடலின் பாகங்களை பெண்கள் அந்நிய ஆண்களுக்கு காட்சிப்பொருளாக வைக்கும் போது பொது இடங்களில் பாலுணர்வைத் தூண்டுகிறார்கள். இதன்மூலம் அந்நிய ஆண்களின் கவனம் ஈர்க்கப் படுவதால் சமூகத்தில் பல சீர்கேடுகள் நிகழ ஏதுவாகின்றன. காதல், கள்ளக்காதல், விபச்சாரம், கற்பழிப்பு, அநியாயமாக அந்நியனின் கற்பம் சுமத்தல், கருக்கொலை, கொலை, குடும்ப அங்கத்தினர் மத்தியில் கலகம் போன்ற பலதும் இதைத் தொடருகின்றன.
 , உடை விஷயத்தில் இறைவன் விதித்த வரம்புகளை மீறியவர்களும், இறைவன் தடுத்த ஆண்-பெண் உறவு வரம்புகளை மீறியவர்களும், அவ்வாறு பிறந்த குழந்தைகளைக் கொன்றவர்களும் என அனைவருக்கும் மறுமையில் நரக நெருப்பின் தண்டனை உண்டு என்று இஸ்லாம் கூறுகிறது.
 இவ்வுலகின் சொந்தக்காரனான இறைவன் சமூக நலன் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு கருதி இங்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று தனது வரையறைகளை திருக்குர்ஆன் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மொழிகள் மூலமும் நமக்கு அறிவித்துள்ளான். அவற்றின்படி மனிதர்கள் (முஸ்லிம்கள் உட்பட) பேண வண்டிய ஆடை மற்றும் அந்நிய ஆண்- பெண் உறவின் வரையறைகள் இவையே:
=  ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரையிலான உடலின் பாகங்கள் மறைக்கப்படவேண்டியவையாகும்.
= பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் முன்கை தவிர மற்ற எல்லா 
பகுதிகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும்.
= உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மெல்லிய ஆடைகளும் இறுக்கமான ஆடைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டு உள்ளன.
= பெண்ணைப் பொறுத்தவரை அவளது நெருங்கிய உறவினர்  அல்லாத மற்ற ஆண்களுக்கு முன்னர் வரும்போது மேற்படி உடலை முழுமையாக மறைத்துக் கொண்டே வரவேண்டும். அது திருமண விருந்துகள் ஆனாலும் பள்ளிவாசல்கள் ஆனாலும் சரியே!
= தாம்பத்தியம் அல்லது உடலுறவு  என்பதை  திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது.
.= ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட.ஒன்றாகும். அது கல்விச்சாலைகளிலோ அலுவலகங்களிலோ கடைகளிலோ அண்டை வீட்டாரிடமோ எங்காயினும் சரியே!
=  ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் உடலுறவு கொள்வது இவ்வுலகிலேயே தண்டனைக்குரிய பாவமாகும். இஸ்லாமிய அரசு இருக்கும் பட்சம் திருமணம் ஆகாத குற்றவாளிகளுக்கு  பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடிகள் கொடுப்பதும் திருமணம் ஆனவர்களுக்கு கல்லெறிந்து கொல்லுதலும் மார்க்கம் பரிந்துரைக்கும் தண்டனைகள் ஆகும்.
ஆக, அந்த வகையில் மேற்படி வரம்புகளை மீறும் எந்த உடையும் இறைவனால் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். உடலை ஒட்டிய ஆடைகள் ஆனாலும் சரி, மறைக்க வேண்டிய உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் ஆனாலும் சரி உங்கள் ஒவ்வொரு அங்குலம் வரம்பு மீறுதலும் வானவர்களால் பதிவு செய்யப்படுகிறது என்பதை உணருங்கள்.
இவ்வுலகில் இதை அணிவதால் சமூகத்தில் உண்டாகும் குழப்பங்களில் இருந்தும் பாதிப்புகளில் இருந்தும் நீங்கள் ஒருவேளை தப்பித்துவிட முடியும். இந்த வரம்புகளை மீறி விட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்து எறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நீங்கள் நடந்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் மூளையிலும் அதன் பதிவைக் காணலாம்! இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று உங்களுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும்.
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
99:7,8.. எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும்அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.
அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.
78:21-30. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
18:29  .....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘
எந்த உடலைக் கவர்ச்சியாகக் காட்டிகொண்டு நடந்தீர்களோ அதன் கதி நாளை இதுதான்! இது நூறு சதவீத உண்மை! இது வேண்டுமா? சிந்தியுங்கள்! இன்றே திருந்தி உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள்! உங்கள் ஆடையையும் வாழ்க்கையையும் திருத்திக்கொள்ளுங்கள்! வீட்டு வழக்கம், நாட்டு வழக்கம் அல்லது ஃபேஷன் என்று சொல்லிக்கொண்டு உங்கள் சொந்த உடலை நெருப்பின் சுவாலைகளுக்கு இரையாகக் கொடுத்துவிடாதீர்கள். தன்னந்தனியாகத்தான் மரணிப்பீர்கள், அவ்வாறே மறுமையில் விசாரிக்கவும் படுவீர்கள். யாரும் துணை வரமாட்டார்கள். எந்தத் தோல்களை நீங்கள் காட்சிப் பொருளாகப் படைத்தீர்களோ அதன் மறுமை நிலை இதுதான்:
4:56. யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

ஆனால் அதேவேளையில் இறைவனுக்குப் பொருத்தமான கட்டுப்பாடான வாழ்வை வாழ்ந்து செல்வோருக்கு மறுமையில் சொர்க்கச் சோலைகளும் காத்திருக்கின்றன.

3:198. ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்; மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக