இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

இயேசுநாதரை களங்கங்களில் இருந்து காத்த தேற்றரவாளர்

உலக மக்கள் தொகையில் கால்வாசிக்கும் அதிகமானோர் இன்று முஹம்மது நபி அவர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றி வருவதை அறிவீர்கள். இயேசுநாதர் அவர்கள் பற்றி யூதர்கள் சுமத்திய களங்கங்களில் இருந்து இத்தனை போரையும் காப்பாற்றிய பெருமை தேற்றறவாளர் என்று இயேசுவால் முன்னறிவிப்பு கூறப்பட்ட முஹம்மது நபி அவர்களையே சாரும்.
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: 'இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்,  எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது" என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் 'இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.  (திருக்குர்ஆன் 61:6)

= நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றறவாளன் உங்களிடத்திலே வாரார். (யோவான் : 16:7)
= சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகளை யாவையும் சொல்லி வரப் போகிறவைகளையும் அறிவிப்பார். அவர் என்னுடையதை எடுத்து உங்களுக்கு அறிவிப்பதால் என்னை மகிமைப்படுத்துவார், (யோவான்:16:13-14)

யூதர்கள் இயேசுவின் அற்புதைப் பிறப்பை சந்தேகித்தார்கள். அவரது தாயார் தூய மரியாளை விபச்சாரி என்றும் - இயேசு நாதரை விபச்சாரியின் மகன் என்றும் கள்ளத் தீர்க்கதரிசி என்றும் அவதூறு கூறிப் பரப்பினர். திருக்குர்ஆனும் முஹம்மது நபியவர்களின் கூற்றுக்களும் இந்த தவறான பரப்புரையை உலகெங்கும் முறியடித்தன.
4:156.இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (யூதர்கள் சபிக்கப்பட்டனர்).

4:157.
இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்"" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

4:158.
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

 இயேசுவின் அற்புதப் பிறப்பையும் நபித்துவத்தையும் அன்னை மரியாளின் புனிதத் தன்மையையும் நம்பாமல் எவரும் முஸ்லிம் ஆக முடியாது என்ற அளவுக்கு இது இஸ்லாத்தில் கட்டாயமான ஒன்று. 


ஆண்துணையின்றி குழந்தை பிறப்பது அசாத்தியமானது என்று சொல்லி ஏசுவின் பிறப்பைப் பற்றி நம்பாதவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு உறைக்கும் வண்ணம் திருக்குர்ஆன் ஒரு அழகிய வாதத்தை முன்வைக்கிறது:
3: 59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து 'ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
60. இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகாதீர்!
அதாவது  முதல் மனிதர் ஆதம் தாயும் தந்தையும் இன்றி மண்ணிலிருந்து படைக்கப் பட்ட ஓர் அற்புதம். அதை நீங்கள் நம்புகிறீர்கள். அதை நிகழ்த்திய அதே இறைவனுக்கு தந்தையில்லாமல் ஒரு மனிதரை உருவாக்க முடியாதா? ஆதாமின் தோற்றத்தை நம்பும் உங்களுக்கு இயேசுவின் தோற்றத்தை நம்ப முடிவதில்லையா? என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்துணர வைக்கிறான் இறைவன்!

ஆம் அன்பர்களே பைபிளை மெய்ப்பிக்க வந்ததே திருக்குர்ஆன் பழைய ஏற்பாட்டையும் பின்னர் புதிய ஏற்பாட்டையும் தொடர்ந்து இறைவன் அருளிய இறுதி ஏற்பாடுதான் திருக்குர்ஆன்! வாருங்கள் நாம் இணைந்து சத்தியத்தை அறிவோம்! ஒன்றுபடுவோம்! நம் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்!
தொடர்புடைய ஆக்கங்கள்:
தேற்றவாளரை ஏன் பின்பற்ற வேண்டும்?
http://quranmalar.blogspot.com/2014/12/blog-post_11.html
வாழ்நாள் நெடுகிலும் அற்புதங்கள் - அவரே இயேசு(அலை)
கற்புக்கரசியை கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்றிய அற்புதம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக