இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

இயேசுநாதர் பற்றி 100 % உண்மைகள் --- இறுதி ஏற்பாட்டில்!

இயேசுநாதர் பற்றி 100 % உண்மைகள் - இறுதி ஏற்பாட்டில் !

 இங்கு கூறப்படும் உண்மைகளின் தரம் எப்படிப்பட்டது எனபதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் இதுவரை இயேசுநாதரைப் பற்றி பலவற்றையும் கேள்விப் பட்டிருக்கலாம். காலாகாலமாக மக்கள் சொல்லிக்கொண்டு வருபவை, வேதபுத்தகங்களில் சொல்லப்பட்டவை, மதபோதகர்கள் சொல்பவை என பலவும் அதில் அடங்கும். ஆனால் நமக்குத்தேவை தெளிவான உண்மை.  இதுவரை நீங்கள் கேள்விப்பட்ட செய்திகளோடு ஒப்பிடும்போது நாம் திருக்குர்ஆனின்  ஆதாரத்தோடு தரும்   செய்திகள் கீழ்கண்ட சிறப்புக்களோடு தனித்து விளங்குகின்றன:

= நாம் இங்கே தரும் இயேசு (அலை) பற்றிய தகவல்கள் நூறு சதவீதம் உண்மையானனவை. இவற்றில் ஊகங்களோ கட்டுக் கதைகளோ இடம் பெறாது. அன்பின் மேலீட்டால் மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு புனைந்து கூறும் வர்ணனைகளோ ஆதாரமற்ற செய்திகளோ இருக்காது. மாறாக முழுக்க முழுக்க சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதும்   இறுதி வேதமுமான திருக்குர்ஆன் தரும் செய்திகளாகும்.

12:111. (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.

= எந்த இறைவன் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் அருளினானோ அதே இறைவனால் இறுதி ஏற்பாடாக அருளப்பட்ட வேதமே திருக்குர்ஆன் எனபதை நீங்கள் அறிய முடியும். முந்தைய ஏற்பாடுகள் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட மக்களுக்காக அருளப்பட்டவை. ஆனால் திருக்குர்ஆன் உலகம் முழுமைக்கும் பொதுவானதாக இறுதிகாலம் வரை  மாற்றமில்லாமல் நிலைநிற்கக் கூடியதாக அருளப்பட்டிருக்கிறது. இது உண்மையா இல்லையா என்பதைப் பரிசோதிக்க நீங்கள் திருக்குர்ஆனின் ஒரு பிரதியை எடுத்து திறந்து பாருங்கள். அதில் குர்ஆன் வசனங்கள் மூல மொழியான அரபியிலும் அவற்றின் அருகே அதன்  மொழிபெயர்ப்பும் காணப்படும். அதே மூலமொழியிலேயே உலகெங்கும் குர் ஆன் ஓதப்பட்டு வருவதையும் காணலாம்.  ஆனால் முந்தைய ஏற்பாடுகளில் நீங்கள் மொழிபெயர்ப்புகளை மட்டும்தான் காண முடிகிறது  எனபதை அறிவீர்கள். மூலத்தை நீங்கள் பார்க்க முடிவதில்லை.

 = திருக்குர்ஆன் அருளப்பட்ட மொழியான அரபுமொழி இன்று பலநாடுகளில் புழக்கத்தில் உள்ள வாழும் மொழியாக இருக்கிறது. ஆனால் முந்தைய ஏற்பாடுகள் அருளப்பட்ட மொழிகள் ஏற்கெனவே இறந்துவிட்டன என்பதையும் அறிவீர்கள்.  ஒருவேளை அவ்வேதங்களின்  மூலங்களைத் தேடிக்கண்டுபிடித்தாலும் இன்று அவற்றை  சரிபார்ப்பது மிக மிகக் கடினம்.

=  திருக்குர்ஆன் என்பது முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகளை மட்டுமே கொண்டது. இதில் நபிகள் நாயகம் அவர்களுடைய வார்த்தைகளோ அல்லது மற்றெந்த மனிதர்களுடைய வாசகங்களோ கலக்கவில்லை. ஆனால் திருக்குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட ஏற்பாடுகள் அருளப்பட்ட காலத்தில் அவை இறைவார்த்தைகளை மட்டுமே உட்கொண்டிருந்தன. ஆனால் இன்று அவற்றில் இறை வார்த்தைகள், இறைத்தூதர்களின் வார்த்தைகள் மற்றும் பரிசுத்த ஆவியால் உந்தப் பட்டு அப்போஸ்தலர்கள் எழுதிய தகவல்கள்  ஆகியன கலந்திருப்பதை நீங்களே நன்றாக அறிவீர்கள்.

=  நபிகள் நாயகம் அவர்களின் கூற்றுக்களும்  அவர் பற்றிய செய்திகளும் தகவல்களும்  தனியாகத் தொகுக்கப்பட்டு ஹதீஸ் என்ற பெயரில் பாதுகாக்கப் பட்டுவருகின்றன. குர்ஆன் என்பது பரிசுத்த ஆவி என்று கிறிஸ்த்துவ சகோதரர்கள் கூறும் ஜிப்ரீல் (gaberiel)  என்ற வானவரால் இறைவன் புறத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பரிசுத்த வசனங்களின் தொகுப்பாகும்
கீழ்கண்ட கட்டுரைகளை ஒவ்வொன்றாகப் படிக்கும்போது உங்களுக்கு உண்மை விளங்கும்
திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்

திருக்குர்ஆன் 100% பாதுகாக்கப்படும் வேதம் 

= திருக்குர்ஆன் சந்தேகங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட இறைவேதம்

திருக்குர்ஆன் அற்புதகரமாக தாங்கி நிற்கும் அறிவியல் உண்மைகள்

இவற்றைப் படித்துவிட்டு 

திருக்குர்ஆன் தமிழாக்கத்தை இங்கு படியுங்கள்:

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக. நாளை மறுமையில் அவனது நற்தூதர்களோடு சொர்க்கத்தில் வாழும் நற்பாக்கியத்தை தந்தருள்வானாக!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக