இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

ஏன் இவர்கள் இப்படி?

 


ஏக இறைவனின் பெயரால்.. 

• இந்தியாவில் இன்று பாபரி மசூதி விவகாரம் அமைதி இன்மைக்கு மிகப்பெரிய ஒரு காரணமாக உள்ளது. முஸ்லிம்கள் ஏன் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருக்கிறார்கள். இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அந்த அமைதியை நிலை நாட்ட, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த இடத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா?

• நாங்கள் எங்கள் தெய்வங்களுக்கு அர்பணித்த பிரசாதங்களை எங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தோடு உங்களோடு உண்ண விரும்புகிறோம். அதை ஏன் நீங்கள் உண்ண மறுக்கிறீர்கள்? எங்கள் மனம் புண்படாதா?

• வந்தே மாதரம் என்பது தேசபக்தியை வெளிப்படுத்தும் பாடலாகும். இதை முஸ்லிம்கள் ஏன் பாட மறுக்கிறார்கள்? இது அவர்களின் தேச விரோதத்தை எடுத்துக் காட்டவில்லையா?

• ஆப்கானிஸ்தானில் பாமியானில் மாபெரும் புத்தர் சிலை உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாக இருந்தது. பல நாட்டு மக்களால் மாபெரும் கலைச்சின்னமாகவும் பௌத்தர்களால் வழிபடப்பட்டும் வந்தது. அச்சிலை சில வருடங்களுக்கு முன்னால் தாலிபான்களால் ஈவிரக்கமின்றி உடைத்தெறியப் பட்டது. இதை உலக முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் கண்டிக்கவேயில்லை. அது ஏன்?

• நீங்கள் ஏன் சிலைவழிபாட்டை எதிர்க்கிறீர்கள்? நாங்கள் அந்த இறைவனை நினைவில் கொண்டு தானே சிலைகளை வழிபடுகிறோம், இதில் என்ன தவறு?

• இஸ்லாமியர் என்றாலே பயங்கரவாதிகள், தீவிர வாதிகள் என்ற என்றுதானே அறியப்படுகிறார்கள்?

மேலே குறிப்பிட்டுள்ளவை முஸ்லிம்களைப் பற்றி முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளின் மனங்களில் எழும் ஒரு சில சந்தேகங்கள். இவை சந்தேகங்களாகத் தொடர்வது மேலும் பகைமைக்கும் அமைதியின்மைக்கும்தான் வழிவகுக்கும். இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்காக செய்யப் படும் ஒரு சிறு முயற்சியே இந்நூல!

நம் பிரிக்க முடியாத உறவு

  நாம் இன்று ஒரே நாட்டில் பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்டவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேசுவோராகவும் பல்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்டோராகவும் உள்ளோம். இப்படிப்பட்ட சூழலில் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் நாம் கொண்டிருக்கும் மத நம்பிக்கைகளைப் பற்றி பரஸ்பரம் அறிந்து கொள்வதும் மிக மிக அவசியம். அதுவே நம்மிடையே இன்று நிலவி வரும் இனம்புரியாத வெறுப்புணர்வையும் பகைமையையும்  நீக்க உதவும். அப்போதுதான் இப்பகைமை எனும் தீயை மேலும் வளர்த்து நமக்குள் கலவரங்கள் மூட்டி அதனால் வயிறு வளர்க்கும் சுயநல சக்திகளையும் அரசியல்வாதிகளையும் வேரறுக்கவும் முடியும். முறிந்து கிடக்கும் நம் உறவுகளை வலுப்படுத்தவும் முடியும். அந்த வகையில் மனம்திறந்து உங்களோடு நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

 உங்கள் கேள்விகளுக்கான பதில்களை நாம் பார்ப்பதற்கு முன்னால் உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான உறவு பற்றிய உண்மையை இங்கு நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். அதாவது, நாம் அனைவரும் ஒரே இறைவனால் ஒரே தாய் தந்தையில் இருந்து உருவாக்கப்பட்டு அவர்களிருந்து வாழையடி வாழையாக உருவாகி பூமியெங்கும் பரவி வாழ்ந்து கொண்டிருப்பவர்களே. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்பதை ஒருபோதும் மறந்து விடகூடாது.  நமக்குள் கருத்து வேறுபாடுகளும் நமது நம்பிக்கைகளும் கலாசார வேறுபாடுகளும் ஆயிரம் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே என்ற உண்மையை ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

  அடுத்ததாக உங்கள் கேள்விகளுக்கான பதில்களை ஆராயும் முன் நாங்கள் பின்பற்றி வரக்கூடிய இஸ்லாம் என்ற மார்க்கத்தைப் பற்றி சில அடிப்படை உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வது இங்கு மிக மிக அவசியம் என்பதை உணர்கிறோம். அப்போதுதான் நம் பதிலில் இருக்கக் கூடிய நியாயத்தை நீங்கள் உணரமுடியும்.

 இஸ்லாம் என்றால் என்ன?

  . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும் 

   முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.

   முஸ்லிம் என்ற வார்த்தையை இவ்வாறும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இயற்கையைப் பாருங்கள். மரம், செடி, கொடி , சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்........ என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்குஅதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே! மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்..... என அனைத்தும் முஸ்லிம்களே! காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது!  .

ஆக, இந்த அடிப்படையில்  இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி.......  மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே! இதுதான் எமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும்.

 இஸ்லாம் புதிதல்ல!

 ஆம், அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இஸ்லாம் என்பது ஒரு புதிய மார்க்கமும் அல்ல என்ற உண்மையை இப்போது உணர்ந்திருப்பீர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்களில் பெரும்பாலோர் இன்றும் இது ஒரு புதிய மார்க்கம் என்றும் முஹம்மது நபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்றும் நம்பி வருகின்றனர். இன்றும் கூட இந்தத் தவறு பள்ளிக்கூடப்  பாட புத்தகங்களில்  திருத்தப்படாமலே  தொடர்கிறது.   

 ஆம், அன்புக்குரியவர்களே, நாம் அனைவரும் ஓரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்னும்போது நம் இறைவன் நமக்காக ஒரே மார்க்கத்தைத்தான் அருளியிருக்க முடியும் என்பதும் தெளிவாகிறது. அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் நம் குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது.  அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அந்த மார்க்கத்திற்க்குப் பெயர்தா.ன்இஸ்லாம் என்று இன்று அரபி மொழியில் அறியப்படுகிறது. மாறாக முஹம்மது நபி அவர்கள் புதிதாக எதையும் கொண்டுவரவும் இல்லை தோற்றுவிக்கவும் இல்லை.

  இந்த இறைவனின் மார்க்கம் முக்கியமாக மூன்று நம்பிக்கைகளை முன்வைக்கிறது. இவை எல்லாக் காலங்களிலும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வந்த இறைவனின் தூதர்களால் அந்தந்த மக்களுக்கு போதிக்கப்பட்டது. அவை இவையே:

1). இறை ஏகத்துவம்: அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே! அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் மட்டுமே பிரார்த்தனைகளை ஏற்கக்கூடியவன். அவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும்.  அவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்பினங்களே. அவை அனைத்தும் அழியக்கூடியவையே. தன்னிகரில்லாத மற்றும் தனக்கு உவமையே இல்லாத இறைவனுக்கு கற்பனை உருவங்கள் சமைப்பதோ அல்லது உயிரும் உணர்வும் அற்ற பொருட்களைக்  காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ பெரும் பாவமும் வீணும் வழிகேடும்  ஆகும்.

  2). மறுமை : இவ்வுலக வாழ்வு என்பது குறுகியதும் 

தற்காலிகமானதும் மனிதனுக்கு ஒரு பரீட்ச்சை போன்றதும் ஆகும்.. இங்கு அவன் செய்யும்  செயல்கள் யாவும் பதிவு செய்யப் படுகின்றன. இவ்வுலகம் ஒருநாள் முற்றாக அழிக்கப் படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் நீதி விசாரணைக்காக எழுப்பப்பட்டு  அவர்கள் செய்த பாவங்களும் புண்ணியங்களும் காண்பிக்கப் படுவார்கள். அன்று புண்ணியங்களை  அதிகமாகச் செய்தோருக்கு சொர்க்கமும் பாவங்களை அதிகமாகச் செய்தோருக்கு நரகமும் விதிக்கப் படும். அதுவே மனிதனின் நிரந்தரமான  உண்மையான வாழ்விடம் ஆகும்.

3) மனிதகுல ஒற்றுமை: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்களே. அவர்கள் எங்கிருந்த போதும் எவ்வாறு பரவியபோதும் ஒரே மனிதகுடும்பத்தின் அங்கங்களே! அவர்களுக்கு இறைச் செய்திகளை அறிவிக்கவும் வழிகாட்டவும் இறைவன் அவ்வப்போது அவர்களிலிருந்தே சிறந்த மனிதர்களைத்  தேர்ந்தேடுத்து  அவர்களைத் தன் தூதர்களாக நியமிக்கிறான். அனைத்து காலங்களிலும்  அனைத்து நாடுகளுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளார்கள். அவர்களின் வரிசையில் இவ்வுலகுக்கு இறுதியாக வந்தவர்தான் முஹம்மது நபி(ஸல்அவர்கள். இவருக்கு முன் வந்து சென்றவர் இயேசு நாதர். இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே கிடையாது என்கிறது இஸ்லாம்.

 இப்போது உங்கள் கேள்விகளுக்கான பதில்களை ஆராய்வோம்.  நாம் அனைவரும் ஒரே மனிதகுடும்பத்தின் அங்கத்தினர்கள் என்ற அடிப்படையில் இணைந்து ஆராய்வோம்.

 மேற்கூறப்பட்ட கேள்விகள் அனைத்தும் இஸ்லாத்தின் முதல் நம்பிக்கை தொடர்பானவை என்பதை நீங்கள் காணலாம். பாபரி மசூதியை விட்டுக்கொடாமை, பிரசாதம் உண்ணாமை, வந்தே மாதரம் பாட மறுப்பு, சிலைவழிபாடு எதிர்ப்பு போன்ற நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே. இதில் எதையுமே நாங்கள் மறுப்பதற்கில்லை. இதற்கெல்லாம் முழுமுதற்க் காரணம் நாம் படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும் வழிபடக்கூடாது என்ற கொள்கையில் உறுதியோடு இருப்பதால்தான்! அதுமட்டுமல்ல, இக்கொள்கையை நாங்கள் மட்டுமல்ல இப்பூமியில் பிறந்த அனைத்து மனிதர்களும் உறுதியாகப்  பேண வேண்டிய ஒன்று என்றும் நாங்கள் நம்புகிறோம்!

 இறை ஏகத்துவம் அவ்வளவு முக்கியமானதா?

 இந்த இறை ஏகத்துவம் என்பது அவ்வளவு முக்கியமானதா? ஏன் இந்தப் பிடிவாதம்? இதை விட்டுக்கொடுக்க முடியாதா? இதை சற்று தளர்த்தக் கூடாதா?

ஆம் அன்பர்களே, மனித வாழ்விலேயே மிக மிக முக்கியமாக பற்றிப் பிடித்து பின்பற்ற வேண்டிய ஒன்று இருக்குமானால் அது இதுதான். இதைப் பெற்றுக்கொண்டவர் வாழ்வில் வெற்றி அடைகிறார். இதை இழந்தவர் தோல்வி அடைகிறார். அந்த அளவுக்கு ஒரு அணுவளவும் இழப்பீடு செய்யாமுடியாத (uncompromisable) அஸ்திவாரம் இது என்றும் படைத்த இறைவனுக்கு இணையாக  மற்றவற்றை வணங்குவது பாவங்களிலேயே மிகப்பெரும் பாவம் என்றும் இஸ்லாம் நமக்கு கற்பிக்கிறது,

  உங்கள் கேள்வி இறைவனுக்கு இணைவைக்கும் பாவம் தொடர்பானது என்பதால் நாம் இதை சற்று விரிவாகவே ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

 ஏகத்துவத்தின் முக்கியத்துவமும் இணைவைத்தலின் விபரீதமும் 

 இறைவனின் ஏகத்துவத்தை போதிப்பதே இறைத்தூதர்களின் அடிப்படைப் பணியாக இருந்தது. ஏனெனில் இதுதான் பூமியில் தர்மத்தை நிலைப் நாட்டுவதற்கான அடித்தளம். மனிதன் பாவங்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால் கடவுளைப் பற்றிய முறையான எண்ணமும் நம்பிக்கையும் அவனுள் விதைக்கப்பட வேண்டும். அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னைக் கண்காணிக்கிறான், நான் குற்றம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு அவனுள் சதா இருக்க வேண்டும். 

அந்த அடிப்படையில் இந்த பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் தத்தமது மக்களுக்கு கீழ்கண்டவாறு கடவுள் கொள்கையை போதித்தார்கள்:

        இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே.  அவன் மட்டுமே உங்கள் வணக்கத்துக்கும் பிரார்த்தனைக்கும் உரியவன்.

        அவனை நேரடியாக வணங்க வேண்டும்.  அவனுக்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை. சடங்கு சம்பிரதாயங்களும் தேவை இல்லை.

        அவனுக்கு ஓவியங்களோ உருவங்களோ சமைக்ககூடாது ஏனெனில் அவனைப்போல் எதுவுமே இல்லை

        நாங்கள் அவனுடைய தூதர்கள் மட்டுமே. அவனுக்கு பதிலாக எங்களையோ எங்கள் சமாதிகளையோ உருவங்களையோ வணங்கக் கூடாது.

         படைத்தவனுக்கு பதிலாக படைப்பினங்களையோ உருவங்களையோ நீங்கள் வணங்குவீர்களாயின் உங்களுக்குள் பிரிவினைகளும் குழப்பங்களும் ஏற்படும்.

என்றெல்லாம் போதித்தார்கள். அத்துடன் அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து இறைவனின் போதனைகளின் படி பாவ புண்ணியங்கள் எவை என்பவற்றை கற்பித்தது மட்டுமல்லாமல் முன்மாதிரி புருஷர்களாகவும் வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் மெல்லமெல்ல  இக்கட்டளைகளை மீறினார்கள். ஷைத்தானின் தூண்டுதலால் இறைத்தூதர்களின் நினைவுக்காக அவர்களுக்கு  படங்களை வைக்க ஆரம்பித்தார்கள். நாளடைவில் அவற்றைச் சிலைகளாக வடித்து பின்னர் அவற்றை வழிபட ஆரம்பித்தார்கள். உண்மை இறைவனை மறந்தார்கள்! அதன் விளைவு?.....இறையச்சம் மக்களில் இருந்து அகல அகல, இடைத்தரகர்களும் மூடநம்பிக்கைகளும் பெருகப் பெருக......  கடவுளின் பெயராலேயே சுரண்டல்களும் அக்கிரமங்களும் நடந்தேறின. இவ்வாறு பூமியில் அதர்மம் பரவிப் படர்ந்தது..

 இவ்வாறு பூமியில் அதர்மம் பரவும் போதெல்லாம் மீணடும் தர்மத்தை நிலைநாட்ட மீண்டும்மீண்டும் தூதர்களை இறைவன் அனுப்பினான். அவர்கள் மீணடும் இறை ஏகத்துவத்தைப் போதித்து தர்மத்தை நிலைநாட்டிச் சென்றார்கள்  ஆனால் பிற்கால மக்கள் அந்தத் தூதர்களையும் கடவுளாக்கினார்கள். இவ்வாறுகடவுளர்களின் எண்ணிக்கைப் பெருகப்பெருக மனிதகுலம் கூறுபோடப் பட்டு இன்று நாம் பல்வேறுபட்ட மதங்களில் நின்று கொண்டு நமக்குள் பகைமை பாராட்டிக்கொண்டு வாழ்கிறோம்!  ஆம் அன்பர்களே, இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  நம்மைப் பிரித்து வைத்திருப்பதும் நம்மை ஒருவருக்கொருவர் அண்ட விடாமல் தடுப்பதும் நாம் கொண்டிருக்கும் முரண்பட்ட கடவுட்கொள்கைகளே! ஆக, நமக்குள் பகைமை மறந்து

நாம் மீணடும் சகோதர பாசத்தோடு இணைய வேண்டுமானால் ஒரே இறைவனைப் பற்றி நாம் கொண்டிருக்கும் முரண்பாடுகளைக் களைந்தே ஆக வேண்டும்.

இறைவனைப் புரிந்து கொள்ளுதல்

     இறைவனை அவன் எவ்வாறு அறிமுகப் படுத்துகிறானோ அவ்வாறே விளங்கிக் கொள்ள வேண்டும். அது அல்லாமல் நம் கற்பனையில் உதித்தவற்றை எல்லாம் கடவுள் என்று கற்பித்தால் ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் உருவாகி ஒவ்வொன்றையும் வணங்குவோர் தனித்தனி குழுக்களாகவும் ஜாதிகளாகவும் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகிறது. ஆனால் இறைவனை அவன் எவ்வாறு கற்றுத்தருகிறானோ அவ்வாறு புரிந்துகொண்டு வணங்கும் போது மொழி, இனம், நிறம், மாநிலங்கள், நாடுகள் போன்ற தடைகளைக் கடந்து மனித சமத்துவமும் உலகளாவிய சகோதரத்துவமும் உருவாகிறது.

இறைவேதங்களில் தன்னை இறைவன் எவ்வாறு அறிமுகப்படுத்துகிறான்? இதோ, அவனது இறுதி வேதமாக அறியப்படக்கூடிய திருக்குர்ஆன் கூறுவதைப் பார்த்து விட்டு முந்தைய வேதங்களையும் பாப்போம்.

அல்லாஹ் என்றால் யார்?

 படைத்த இறைவனைத்  திருக்குர்ஆன் அரபிச் சொல்லான அல்லாஹ்என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏகனாகிய இறைவனைக் குறிக்கும் சொல்லே அல்லாஹ் என்பது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்! எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தைக்கு ஓரிரு தனிச் சிறப்புக்கள் உள்ளன:

  இவ்வார்தையின் உண்மைப்பொருள் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்என்பது.

 இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.

 உதாரணமாக ஆங்கில வார்த்தை God – Gods , Godess  அல்லது கடவுள்கடவுளர்கள் என்றும் பகவான்பகவதி என்றும் பன்மைக்கும் பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் சிதைவதில்லை.

இப்படிப்பட்ட சிறப்புக்களின் காரணத்தால் உலகெங்கும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கின்றனர். மாறாக அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ நினைத்து விடாதீர்கள்.

அந்த இறைவனைப் பற்றி மனித மனங்களில் எழக்கூடிய சந்தேகங்களுக்கெல்லாம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது:

 இறைவன் ஒருவனைத்தவிர வேறில்லை

 முதலில் இறைவன் ஒருவன் மட்டுமே என்பது பற்றி நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது?

ஒரு பள்ளிக்கூடத்திற்கு இரண்டு முதல்வர்கள் அல்லது ஒரு பேருந்துக்கு  இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் இருந்தால் அது எவ்வாறு பெரும் குழப்பம் , கலகம் அல்லது விபத்தில் கொண்டு சேர்க்குமோ அதுபோல இவ்வுலகம் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் என்றோ அழிந்துபோய் இருக்கும் எனபதை நமது சாமானிய அறிவு கூட நமக்குச் சொல்கிறது.

திருக்குர்ஆனும் இவ்வாறு கூறுகிறது:

'(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)

இறைவன் ஒருவனே என்பது பற்றியும் அவனது தன்மைகள் பற்றியும் இதோ திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)

59:22                   அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

59:23                   அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

59:24                   அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.

வணக்கத்துக்கு உரியவன் யார்?

  மனிதர்களே! நீங்கள் உங்களையும்  உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம்.  (அல்குர்ஆன் 2:21)

 அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன்  3:6).

 இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. 

இறைவனை எவ்வாறு அறிவது?

 கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத  தெளிவான கொள்கை இருந்தால் மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான். திருக்குர்ஆன் அதற்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுகிறது. அதனால் மனிதனுக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகிறது.

 நம்மைச்சுற்றி உள்ள படைப்பினங்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து இறைவனை அறியுமாறு இறைவன் நம்மை அறிவுறுத்துகிறான்.

2:164       நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும் காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும் கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. 

அப்படிப்பட்ட இறைவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விளித்துப் பிரார்த்திக்குமாறு இறைவன் தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் கற்பிக்கிறான். இன்று இறுதிவேதம் திருக்குர்ஆன் வலியுறுத்துவது போலவே இறைவனின் முந்தைய வேதங்கள் என்றும் புனித நூல்கள் என்றும் மக்களால் பரவலாக நம்பப்படும் நூல்களிலும் இவ்வுண்மை வலியுறுத்தப் படுவதைக் காணலாம்.

முந்தைய வேதங்களில் ஏகத்துவம்

        ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!  ( திருமந்திரம்)

        தனக்குவமை இல்லாதான் தாள் பணிந்தோர்க்கல்லால்     மனக்கவலை மாற்றல் அரிது (திருக்குறள்)

        ஏகம் ஏவாதித்யம் ( (அவன் ஒருவனே,  அவனுக்குப் பிறகு எவருமில்லை) - சாந்தோக்ய உபநிஷத்- Chandogya Upanishad, Chapter 6, Section 2, Verse 1

        நா சாஸ்ய கஸ்சி ஜனித கதிபா (அவனுக்கு மேல் பெற்றோர்களோ கடவுளோ இல்லை) - ஸ்வேதஸ்வதாரா  உபநிஷத்-Svetasvatara Upanishad, Chapter 6, Verse 9

        நா சாஸ்ய கஸ்சி ஜனித கதிபா (அவனுக்கு மேல் பெற்றோர்களோ கடவுளோ இல்லை) – நாதஸ்ய ப்ரதிம அஸ்தி ( அவனைப்போல் எதுவுமில்லை) -  ஸ்வேதஸ்வதாரா  உபநிஷத் மற்றும் யஜூர் வேதம்-  Svetasvatara Upanishad, Chapter 4, Verse 19 & Yajurveda, Chapter 32, Verse 3

        யா ஏக இத்தமுஸ்துஹி (நிகரில்லாதவனும் தனித்தவனும் ஆகிய அவனைத் துதிப்பீராக) – ரிக் வேதம்- Rigveda, Book No VI, Hymn 45, Verse 16

        மேலும், 'ஏகம் ஸத்வம் பஹூதா கல்பயந்தி' (இறைவன் ஒருவன்தான், அவனை ஞானிகள் பல பெயரிட்டு அழைக்கிறார்கள். - ரிக் வேதம் (1:164:46) -Rigveda, Book No.1, Hymn No. 164, Verse 46

'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்பது இஸ்லாத்தின் மூலமந்திரம்-

வணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் தவிர வேறு  யாருமில்லை' என்பது இதன் பொருள்.

இதை எந்த ஒரு கருத்துச் சிதைவும் இல்லாமல் 'பிரம்ம சூத்திரம்' சொல்லித்தருவதைப் பாரீர்:

ஏகம் பிரஹம் தவித்யே நாஸ்தே நஹ்னே நாஸ்தே கின்ஐன்.

 பொருள்: இறைவன் ஒருவனே வேறு இல்லை. இல்லவே இல்லை


பைபிளில் இறை ஏகத்துவம்

ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் பழைய ஏற்பாடு: -

கர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள்.       (பழைய ஏற்பாடுஎரேமியா 10:10)

       இஸ்ரவேலே, கேள்நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (உபாகமம் 6:4)

       நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லைநான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை (ஏசாயா 43:10-11)

       நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானேஎன்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார் (ஏசாயா 44:6)

ஆண்டவர் ஒருவரே என்று கூறும் பைபிளின் புதிய ஏற்பாடு: -

       அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே (மத்தேயு 19:16-17)

       ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் (யோவான் 17:3)

       அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானேஉன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார் (மத்தேயு 4:10)

       இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள்நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (மாற்கு 12:29)

       தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே (I தீமோத்தேயு 2:5)

இறைவனுக்கு இணைவைத்தல் பற்றி எச்சரிக்கும் வேதங்கள்:

இணைவைத்தல் என்றால் என்ன?

படைத்த இறைவனை வழிபடுவதற்கு பதிலாக

 - மனிதர்கள், சூரியன், சந்திரன், மரம், விலங்கினங்கள், போன்ற இன்ன பிற படைப்பினங்களை வணங்குவது மற்றும் பிரார்த்திப்பது 

  - இவ்வுலகிலிருந்து மறைந்துவிட்ட மனிதர்களின் உருவச்சிலைகள்,, சமாதிகள் (தர்காக்கள்), அல்லது வேறு கற்பனை உருவங்களை வணங்குவது அல்லது அவர்களிடம் பிரார்த்திப்பது

 - இறைவன் அல்லாத எதனையும் இறைவன் என்றோ கடவுள் என்றோ அழைப்பது மற்றும் பிரார்த்திப்பது

  - ஏகனான இறைவனுக்கு இல்லாத மக்களையும் மனைவிமார்களை எல்லாம்  கற்பித்து அவர்களை வணங்குவது.

 இன்னும் இவைபோன்ற செயல்களுக்கு இறைவனுக்கு இணைவைத்தல் என்று கூறப்படும்.

  இப்பாவம் எவ்வளவு கொடிய விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அறிவதற்கு முன்பு இதுபற்றி இறைவன் என்ன சொல்கிறான் என்பதைப் பார்ப்போம்.

திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு இப்பாவத்தைக் கண்டிக்கிறது:

பாவங்களிலேயே மிகப்பெரும் பாவம்

' .....நிச்சயமாக இறைவனுக்கு இணைவைத்தல் மாபெரும் பாவமாகும்......        (திருக்குர்ஆன் 31:13)

 'நிச்சயமாக இறைவன் ; தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்¢ இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் இறைவனுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.'  (திருக்குர்ஆன் 4:48)

 இது மிகப்பெரிய நன்றி கேடாகும்.

 மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்? .(திருக்குர்ஆன் 35:3)

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40)

இணை வைப்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை!

"நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதையாவது அவை படைத்துள்ளனவா அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக(திருக்குர்ஆன் : 46:4)

அல்லாஹ்வுக்கு இணையாக்கப்படுபவற்றின் பலஹீனம்!

 மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈடைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (திருக்குர்ஆன் 22:73)

இடைத் தரகர்களுக்கு இடமில்லை

  தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (இணைவைப்பாளர்கள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள் 'இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை' என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; 'வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்' என்று கூறும். (திருக்குர்ஆன் 10:18)

இணைவைப்போருக்கு தண்டனை நிரந்தர நரகம்

   அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ்விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதிஇழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை (திருக்குர்ஆன் 5:72)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம்புகுவார்.
அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

முந்தைய வேதங்கள் கூறும் ஆதாரங்கள்

இறுதி வேதத்தில் சொல்லப்பட்டவாறே முந்தைய வேதங்களிலும் இறைவனுக்கு இணைவைத்தல் வன்மையாகக் கண்டிக்கப்படுவவதை நாம் காணலாம்.

இதற்கான ஆதாரங்களை காணலாம்.

        யாருடைய அறிவு உலகாசையால் களவாடப்படுகிறதோ அவர்களே போலிதேய்வங்களை வணங்குகிறார்கள். (பகவத் கீதை )

        அந்தம் தமஹ பிரவிசந்தி யா அசம்பூதி முபாசதே - (பொருள்: யார் இயற்கை வஸ்த்துக்களைகாற்று நீர், நெருப்பு போன்றவை) வணங்குகிறார்களோ அவர்கள் அறியப்படாத இருளில் மூழ்குகின்றனர்.) - யஜுர்வேதம்  Yajurveda, Chapter 40, Verse 9

         யார் மனிதர்களால் படைக்கப்பட்ட பொருட்களை (மேஜை,நாற்காலி, சிலைகள் போன்றவை) வணங்குகிரார்களோ அவர்கள் இன்னும் ஆழமான இருளில் மூழ்குகின்றனர் என்று தொடர்ந்து கூறுகிறது யஜூர் வேதம் 

பைபிளின் கூற்று:

இன்னும் பழைய ஏற்பாட்டிலே , யாஸ்ராகாமத்திலே 1 முதல் 5 வரை உள்ள வசனங்கள் கூறுகின்றன:

எகிப்து தேசம்! அடிமைத்தள வீடாகிய எகிப்து தேசத்தில் இருந்து உங்களை பிறப்படப் பண்ணிய கர்த்தராகிய நானே தேவன். என்னையல்லாது வேறு ரட்சகனில்லை. மேலே வானத்திலேயும், கீழே பூமியிலேயும், பூமியின் கீழ் தண்ணீரிலேயும் கர்த்தருக்கு இணையாக யாதொரு சொரூபத்தையும், யாதொரு விக்ரகத்தையும் நீர் எடுத்துக் கொள்ள வேண்டாம். கர்த்தர் அதை வெறுக்கிறார் என்று கூறுகிறது.

 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும்  நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென் (தீமோத்தேயு 6:16) 

     பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கின்றவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானே அல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் பிரவேசிப்பதில்லை.   (புதிய  ஏற்பாடுமத்தேயு 7:21)

          ஏசு சொல்கின்றபடி ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அதை விடுத்து ஏசுவையே வணங்கச் சொல்வது, ஏசு சொன்னதற்கு மாற்றமாகும். ஏசுவின் பெயரைச் சொல்லி இல்லாத காரியம் பண்ணுகிறவர்களை ஏசு மிகவும் எச்சரிக்கிறார். இதோ,

          அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே  தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலேயே  அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லை அக்கிரமச் செய்கையாரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்.

(மத்தேயு 7:21)

இவை எல்லாம் எதை நமக்கு எடுத்துரைக்கின்றன?....

 தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும், அவனை விடுத்து மற்றவற்றை வணங்குவது மாபெரும் பாவம் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார்கள் என்பதைத்தானே?

 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ  (இறை வெளிப்பாடு) அறிவிக்காமலில்லை.  (திருக்குர்ஆன் 21:25)

எனவே இறைவனுக்கு இணைவைத்தல் என்பது இறைவன் வன்மையாகத் தடுக்கும் காரியமும்,  மன்னிக்கப்படாத பாவமும் ஆகும்மேலும் இப்பாவத்துக்கான தண்டனை மறுமையில் நிரந்தர நரகமாகும் என்பதைத் தெளிவாக அறிகிறோம்.

  'நிச்சயமாக வேதக்காரர்களிலும் இணைவைப்பாளர்களிலும்; எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள்  இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள';. (திருக்குர்ஆன் 98:6)

ஆக, இந்த இணைவைக்கும் பாவத்தை யார் எந்த வடிவில் செய்தாலும் அது பாவமே!

நீங்கள் உங்கள் கேள்வியில் சிலை வழிபாட்டை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளீர்கள், உண்மை என்னவெனில் நாங்கள் சிலைவழிபாட்டை மட்டுமல்ல சிலுவை வழிபாட்டையும் தர்கா வழிபாட்டையும் நாம் எதிர்க்கிறோம் என்பதே உண்மை! இவை அனைத்தையும் நாங்கள் மட்டுமல்ல நாம் அனைவரும் எதிர்த்தாக வேண்டும் என்பதை அறிய மேலே படியுங்கள்.:

இணைவைப்பினால் நாம் அனுபவிக்கும் கொடுமைகள்

கொலை, கொள்ளை, விபச்சாரம் என்றெல்லாம் பல  பாவங்கள் இருக்கும்போது இந்த இணைவைக்கும் பாவத்தை ஏன் பாவங்களில் எல்லாம்  தலையாயது  என்கிறான் இறைவன்அப்படியென்ன விபரீதம் இதில் இருக்கிறது? பெரும்பான்மையான மக்களால் இப்பாவம் பரவலாக செய்யப்பட்டு வருவதால் இதன் விபரீதம் மக்களால் உணரப்படாமலேயே தொடர்கிறது. ஆனால் சற்று கவனமாக சிந்தித்தால் இது நம்மையும் நம் நாட்டையும் அழித்துக் கொண்டிருக்கும் எவ்வளவு கொடிய புற்றுநோய் என்பதை அறிந்து கொள்வீர்கள்:

 1. இது மிகப்பெரிய நன்றி கேடு : நம்மைப் படைத்தது மட்டுமல்ல , ஒன்று விடாமல் நம் தேவைகளை ஒவ்வொரு நொடிகளும் அயராது நிறைவேற்றி வருபவன் அந்த மாபெரும் கருணையாளன். நாம் தாயின் கருவறையில் உருவானது முதல் நமக்கு உணவு, நீர் , காற்று, தாய் தந்தை அரவணைப்பு, என்று தொடங்கி நாம் மரணத்தைத் தழுவும்  வரை நம் மீது அவன் காட்டிவரும் கருணை அளப்பரியது. நமது தேவைகளை நிவர்த்தி செய்யும் விதம் நமது உடலையும் ,   உறுப்புக்களையும், இவ்வுலகையும் அதில் உள்ளவற்றையும் வடிவமைத்து இயக்கி வருபவன் அவன். அவற்றுக்கு நாம் நன்றி காட்ட வேண்டாமா?  இந்த அருட்கொடைகளில் ஏதாவது ஒன்று தடைபடும் பொது நாம் படும் பாட்டை சிந்தித்துப் பாருங்கள். ஆனால் இணைவைத்தல் என்ற செயல் மூலம் என்ன செய்கிறோம்? அவனுக்கு காட்ட வேண்டிய நன்றியறிதலை ஒரு உயிரற்ற உணர்வற்ற ஒரு பொருளுக்கு நாம் காணிக்கையாக்குகிறோம்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை 

செய்நன்றி கொன்ற மகற்கு.

என்ற குறள் இறைவனின் விஷயத்தில் நூறு சதவீதம் உண்மை. ஆம் அவர்களுக்கு உய்வில்லைதான். நரக நெருப்புதான் அவர்களுக்கு மறுமையில் காத்திருக்கிறது

 2. பாவங்கள் பெருக மூல காரணம் இது : மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக கடவுளைப் பற்றிய பயம் வேண்டும். அதாவது என்னைப்  படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான்.  உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வந்ததன் விளைவு மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. ஆக, இந்த  இறைவனுக்கு இணை வைக்கும் செயல்தான் இன்று நாட்டில் காணப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் குழப்பங்களுக்கும் மூல காரணம் அல்லது ஊற்றுக் கண் என்றுணரலாம். அப்படிப்பட்ட கடவுள் பயமற்ற தலைமுறைகள் உருவாகும் போது  பாவங்கள்  கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன.

ஒரு உதாரணமாக, எவரது வீட்டிலாவது சில நண்பர்கள் மது அருந்தக் கூடுவார்களாயின், அப்போது அங்கு ஏதாவது சாமிப்படங்களோ சிலைகளோ இருந்தால் முதலில் அதை மூடிவிட்டு தங்கள் பாவத்தைத் தொடர்வதை நீங்கள் காணலாம். அதுதான் கடவுள் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஊறியிருப்பதே அதற்குக் காரணம்!

3. இது இறைவனை இழிவு படுத்தும் செயல் . நமது அன்புக்கும் மரியாதைக்கும் முழு முதற்தகுதி வாய்ந்தவன் நமது இரட்சகன். அவனது வல்லமையும் ஆற்றலும் அறிவும் அளவிட முடியாதவை. அவனுக்கு மரியாதை செய்கிறோம் என்று சொல்லி கற்களையும் மரங்களையும் மனிதர்களையும் சமாதிகளையும் சூரியனையும் சந்திரனையும் நட்சந்திரங்களையும் காட்டி இவை எல்லாம் கடவுள்கள் என்று கற்பிப்பது பொய் மட்டுமல்ல, அது அவனை சிறுமைப் படுத்தும் செயல். உதாரணமாக நமது தாய்க்கு பதிலாக ஒரு நாயின் அல்லது பன்றியின் உருவத்தைக் காட்டி 'இதுதான் உன்னைப் பெற்றெடுத்த தாய்' என்று யாராவது கூறினால் எவ்வாறு வெகுண்டேழுவோம்அகில உலகத்தையும் அண்ட சராசரங்களையும்  படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு உயிரற்ற உணர்வற்ற பொருட்களை ஒப்பாக்குவது எவ்வளவு பெரிய இழிசெயல்!

4. இது மிகப்பெரிய பொய் ! எப்படிஉதாரணமாக ஒருவர்  ஒரு பேனாவைக் காட்டி ‘இதோ இது ஓர் யானை நம்புங்கள் !’  என்று கூறினால் அதை பொய் என்பீர்களாஇல்லை உண்மை என்பீர்களாஆம் சிந்தியுங்கள் அன்பர்களே! எப்படிப்பட்ட படுபயங்கரமான பொய்! அதை மக்கள் பரவலாக நம்புகிறார்கள் என்றால் அந்த மக்களை எவ்வாறு அழைப்பீர்கள்? இன்று உங்கள் கண் முன்னால் என்ன நடந்து கொண்டிருக்கிறது பாருங்கள்உணர்வற்ற  உயிரற்ற உருவங்களையும்  சமாதிகளையும் காட்டி இவர்தான் கடவுள் அல்லது  இதுதான்  கடவுளின்   உருவம்  என்றோ  சொன்னால்  எவ்வளவு  பெரிய  பொய் அது! அதிகமான பேர் அந்தப் பொய்யை நம்பி விட்டால் அது உண்மையாகி விடுமா

ஆதியும் அந்தமும் அற்ற என்றென்றும் உயிர் வாழும் சர்வ வல்லமை கொண்ட இறைவன் எங்கே? மனித கரங்கள் உருவாக்கிய உயிரற்ற உருவங்கள் எங்கே? எதனோடு எதனை ஒப்பாக்குகிறார்கள்? இது படித்தவர்களையும் தனக்கு பலியாக்குக்கின்ற ஒரு பொய்!

 5. மோசடிகளில் எல்லாம் மிகப் பெரிய மோசடி இது: மேற்கண்ட மாபெரும் பொய்யை மையமாக வைத்து மிகப்பெரிய மோசடி அரங்கேறுகிறது. கண்டதெல்லாம் கடவுள் என்று மக்கள் நம்பத் தலைப்படும் போது அதைச்சுற்றி இடைத் தரகர்கள் உருவாகிறார்கள். பின்னர் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றாகிறது. அவர்கள் தம் மனம் போனபடி மக்களை ஏய்த்து தம் வயிற்றை நிரப்பிக் கொள்ள பாவ பரிகாரம், தோஷ பரிகாரம் என்றெல்லாம் பெயர் சொல்லி பாமரர்களின் சம்பாத்தியங்களையும் செல்வங்களையும்  கொள்ளை அடிக்கிறார்கள்படைத்த  இறைவனை வழிபடுவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை. அவனை நேரடியாக வணங்குவதற்க்குத்தான் இறைத்தூதர்கள் கற்றுத்தந்தார்கள். அவனை அழைப்பதற்கோ, நம் தேவைகளை கேட்பதற்கோ நமக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தரகர்களும் தேவை இல்லை.எந்த வித வீண் சடங்குகளுக்கும் அங்கு இடமில்லை. ஆனால் படைத்தவனை விட்டு விட்டு போலி தெய்வங்களை வணங்க முற்படும்போது இறைவழிபாடு என்பது கடினமாக்கபடுகிறது. வீண் சடங்குகளும் மூட நம்பிக்கைகளும்  இடைத்தரகர்களும் இடையே நுழைந்து இது  மாபெரும் வியாபாரமாக்கப் படுகிறது. மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்கான எளிமையான மார்க்கமாக இது மாறிவிடுகிறது. மிக மிக வேகமாகப் பரவும் நாசக்கார மோசடி இது. எந்த அளவுக்கு என்றால் நாட்டின் இயற்க்கை வளங்களும் பொருள் வளங்களும் மனித வளங்களும் சூறையாடப்பட்டு  நாடு பிற்போக்கான நிலைக்கு தள்ளப்படுகிறது. வளங்கள் பல இருந்தாலும் வறுமையும் பஞ்சமும் தலைவிரித்து ஆடும் நிலை ஏற்படுகிறது.

இதற்கு உலகிலேயே மிகப்  பெரிய உதாரணம் எது தெரியுமா?  வேறு ஏதுமல்ல, நமது தாய்த்திரு நாடுதான்

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.?’  பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறதா? மிக மிக உண்மை அது! இயற்கை வளங்களாலும், செயற்கை வளங்களாலும், மனித வளத்தாலும் அறிவு வளத்தாலும் ஒருசேர  தன்னிறைவு பெற்றுள்ள நாடு  நம்நாட்டைப் போல் உலகில் எங்குமே இல்லை. உலகிலேயே முன்னிலை வல்லரசாக திகழ வேண்டிய நம்மை பின்னுக்குத் தள்ளி வைத்திருப்பது எது? நாம் அனைவரும் அவசரமாக ஆராய வேண்டிய கேள்வி இது.

கீழ்கண்ட கேள்விகளுக்கு நாம் விடை தேடினாலே நமக்கு உண்மை தெரிந்து விடும்.

. இந்நாட்டில் எந்த வித உற்பத்தியோ சேவையோ மக்களுக்கு தராமல் மக்களின் பணத்தை மட்டும்  கறந்து கொண்டிருக்கும் வியாபாரம் எது?

. மக்களின் குருட்டு நம்பிக்கைகளைத் தவிர வேறு எந்த வித முதலீடும் மூலதனமும் இல்லாமல் மூலைக்கு மூலை, நாளுக்கு நாள் பெருகி வரும் வியாபாரம் எது?

.  நாட்டின் பொருளாதாரத்துக்கோ மக்களின் நலனுக்கோ எவ்வித பங்களிப்பும் செய்யாது பெரும் ஊதியங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் நபர்கள் யார்?

.  நாட்டின் கறுப்புப் பண முதலைகளுக்கும் சுரண்டல்காரர்களுக்கும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் அலைகழித்துக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டாளிகள் யார்?

இவற்றுக்கும் இன்னும் இவை போன்ற கேள்விகளுக்கும் நாம் பெறும் ஒரே  விடை - இறைவன் அல்லாதவற்றை கடவுளாக சித்தரித்து செய்யப்படும் மோசடி வியாபாரமும் அந்த வியாபாரிகளும் ஊழியர்களும்தான்.

உதாரணத்திற்காக ஒரு சிலவற்றை நாம் இங்கு காண்போம்:

முதலில் இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்று வரும் தர்கா என்ற மோசடி பற்றி அறிவோம் :

லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பது இஸ்லாத்தின் மூல மந்திரம். என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் பொருள்: வணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் (அரபு மொழியில்  அல்லாஹ்) தவிர யாரும் இல்லை. முஹம்மது நபி இறைவனின் தூதராவார் என்பதே. இதை ஏற்றுக் கொள்பவரே முஸ்லிம், இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத யாரும் முஸ்லிமாக முடியாது. இறைவனுக்கு பதிலாக இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதோ, சமாதிகளுக்கு வணக்கம் செய்வதோ மன்னிப்பே இல்லாத பாவமாகும். இதைச்செய்பவர்கள் மறுமையில் நிரந்தரமாக நரக நெருப்பில் இருப்பார்கள் என்று குர்ஆன் எச்சரிக்கிறது

தர்கா என்பது என்ன? இவை எப்படி வந்தன?

எங்கு நீங்கள் தர்காவைப் பார்கிறீர்களோ அங்கு எல்லாம் முஸ்லிம் பெரியவர்கள்  வாழ்ந்திருந்தார்கள். அவர்கள்  மக்களுக்கு தன வாழ்நாளில் சிறந்த சேவைகள் ஆற்றினார்கள்.  "லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற கொள்கையை மக்களிடையே போதித்து வந்தார்கள். மக்களிடையே தங்கள் சேவை காரணமாக பிரபலமானார்கள். அவர்கள் இறந்தபின் என்ன நடந்தது? அவர்களுக்கு சமாதிகள் எழுப்பப்பட்டன. அவர்கள்  போதித்த கொள்கையை சரிவர புரிந்து கொள்ளாத சில மக்கள் அவர்கள் மீது இருந்த  அன்பின் காரணமாக அவர்களது சமாதிகளை அடிக்கடி கண்டு வரவும் அலங்கரிக்கவும் தொடங்கினர். அந்த பெரியவர்களை அழைத்துப் பிரார்த்திக்கவும் தொடங்கினர்.அப்பெரியவர்களின் உறவினர்களில் சிலர் மக்களின் இந்த மூட பழக்கத்தை முதலீடாக வைத்து பணம் சம்பாதிக்க தலைப்பட்டனர். சமாதியின் தலைமாட்டில் ஒரு உண்டியலை நிறுவினர். செல்வம் சேரத் தொடங்கியது.

மேலும் பல மூடநம்பிக்கைகள் பரப்பப்பட்டன. உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையா?.... தீராத வயிற்று வலியா?.....  வியாபாரத்தில்  தோல்வியா?.... அனைத்துக்கும் இங்கு தீர்வுகள் உண்டு! இதோ இங்கு வந்து இந்த அவுலியாவிடம் கேளுங்கள்! இதோ இந்த தாயத்தை கட்டிக் கொள்ளுங்கள்!..... என்பன போன்ற விளம்பரங்கள் வயிறு வளர்போரால் பரப்பப்பட்டன. இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த தர்காக்கள் வளர்ந்து இன்று பாமரர்களின் அன்றாட உழைப்பின் கனிகளை கறந்து உண்ணக்கூடிய முதலைகளாக திகழ்கின்றன

எங்கெல்லாம் தர்க்காக்களைக் காண்கின்றீர்களோ அவையெல்லாம் ஏக இறை வழிபாட்டிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக ஷைத்தான் செய்து வரும் சூழ்ச்சி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

இங்கு பள்ளிவாசலுக்கும் தர்காவுக்கும் என்ன வேறுபாடு ? என்பதையும் உங்களுக்கு தெளிவு படுத்துவது அவசியமாகிறது. தர்கா என்பது ஒரு இறந்து போன பெரியாரின் சமாதியைச் சுற்றி எழுப்பப்பட்ட ஆலயம். அங்கு சமாதியை பட்டுத் துணிகளால் அலங்கரித்து மலர் தூவி வைத்து இருப்பார்கள். வருவோர் அந்த சமாதியில் என்றோ அடக்கமாகியுள்ள பெரியாரின் பெயரைச் சொல்லி பிரார்த்திப்பார்கள்.

ஆனால் படைத்த இறைவனை பலரும் கூட்டாக சேர்ந்து நின்று தொழுவதற்காக காட்டப்படும் ஆலயமே  பள்ளிவாசல் என்பது. அங்கு வருவோர்  கை, கால், முகம் இவற்றை கழுவுவதற்கு வசதியாக தண்ணீர் தொட்டியோ குழாய்களோ முன்னால் காணப் படும். உள்ளே நீங்கள் சென்று பார்த்தீர்களானால், உருவப் படங்களோ, சிலைகளோ எதுவுமே இராது. தரையில் பாய் விரிக்கப் பட்டு இருக்கும், சுவர்களில் எந்த வகையான சித்திரங்களும் இல்லாமல் காலியாக இருக்கும். 5 வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு  ஒலிபெருக்கி மூலம் விடப்படுகிறது.   இதைச் செவியுறும் தொழுகையாளிகள் உடனடியாக தொழுகைக்கு விரைவார்கள். அனைவரும் வந்ந்து சேர்ந்ததும் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் அணிவகுத்து நிற்ப்பார்கள். தொழுகையாளிகளில் குரான் அதிகம் அறிந்தவர் அணிவகுப்பில் தளபதியைப்  போல் முன் நின்று தொழுகையை நடத்துவார். அவருக்கு அரபு மொழியில் இமாம் என்று கூறுவர். மற்றவர்கள் அவர் செய்வதைப் போலவே செய்து தொழுகையை நிறைவு செய்வார்கள். தொழுகை முடிந்ததும் தத்தமது இருப்பிடங்களுக்கும் அலுவல்களுக்கும் திரும்புவார்கள். இங்கு காசு, பணம், காணிக்கை,பழம், பூ போன்ற எந்த செலவுகளுக்கும் இடமில்லை

பொருட்செலவு இல்லாத சடங்குகள் இல்லாத - இறைவனை நேரடியாக வணங்குவதற்கு உரிய இடம் பள்ளிவாசல். ஆனால் இதற்கு நேர் விபரீதமானது தர்கா என்பது. இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் சிலர் முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர  இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இறைவன் அல்லாதவற்றை வணங்கும் போது,  நாட்டின் செல்வம் கொள்ளை போகிறது என்று சொன்னோம் அல்லவா?  இதில் தர்காக்களின் பங்கு என்ன என்பதை அறிய கீழ்க்கண்ட தகவல்களை உதாரணமாகத் தருகிறோம்.: 

1) டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India) 26 செப்டம்பர் 2009 :

    அஜ்மீர்  தர்கா என்பது இந்தியாவில் பிரபலமாக அறியக்கூடிய ஒன்று. இங்கு அன்றாடம் வந்து செல்லும் பக்தர்கள் ஏராளம் . "இந்த தர்காவிற்க்கு ஆயிரக்கணக்கில் பக்தர்களும், அரசியல் வாதிகளும் , திரையுலக நட்சத்திரங்களும் வருகின்றனர். கோடிக்கணக்கில் இதற்க்கு வருமானம் வந்தாலும் அதற்கு கணக்குகள் வைக்கப் படுவதில்லை. இந்த தர்காவின் பெரும்பாலான காதிம்கள் என்று அறியப்படும் பொறுப்பு தாரிகள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களுக்கு உலகெங்கும் பரவிக்கிடக்கும் சொத்துக்கள் உள்ளன. உதாரணமாக பல காதிம்களுக்கு வெளிநாடுகளில் நிலங்களும் சொத்துக்களும் உள்ளன."

  இன்று சுமார் 5000 காதிம்கள் உள்ளனர். இவர்கள காஜாவின் பரம்பரையில் வந்தவர்கள் அல்லது காஜாவுக்கு சீடர்களாக இருந்தார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இவர்களை காதிம்களாக ஆக்கவில்லை

2) NCR Tribune சண்டிகரில் இருந்து வெளியாகும் பத்திரிகை (24.ஜூன் 2003) கீழ்கண்ட தகவலை தருகிறது.

டில்லி உயர்நீதி மன்றத்தில் தலைநகரில் அமைந்துள்ள ஹஜரத் நிஜாமுத்தீன் அவுலியாவின் தர்கா நிர்வாகத்துக்கு எதிராக அரசு சாரா நிறுவனம்  (NGO) ஒன்று பொதுநல வழக்கு(PIL)  ஒன்றைத் தொடுத்துள்ளது. தர்காவின் தினசரி வருமானம் ரூ. 20000 த்துக்கும் குறைவதில்லை. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு இலட்சத்தைத் தாண்டி விடுகிறது. இந்த வருமானத்தின் பெரும்பகுதி பிர்ஜாதக்களாலும் அவர்களின் ஏஜெண்டுகளாலும் கையாடல் செய்யப் படுகிறது. தினசரி நன்கொடைகளின் சரியான கணக்கு வைக்கப் படுவதில்லை.

இப்போது நீங்கள் இந்தியாவில் உள்ள மொத்த தர்காக்களின் எண்ணிக்கையையும் மனதில் கற்பனை செய்து கணக்கிட்டுப் பாருங்கள்நம் நாட்டின் பொருளாதார நாசத்திற்கு தர்காக்களின் பங்கு எவ்வளவு என்பதை உங்களால் உணர முடியும்.

  இஸ்லாத்தின் பெயரால் இம்மோசடி நடப்பது போலவே மற்றுள்ள  மதங்களிலும்  எவ்வாறு மக்கள் இறைவனின் பெயரால் கொள்ளை அடிக்கப் படுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நளினம் கருதி அவற்றை ஆராயும் பொறுப்பை உங்களுக்கே விட்டுவிடுகிறோம்.

நாட்டின் பெரும் பெரும் வழிபாட்டுத் தலங்களின் வருட வருமானம் சுமார் 50 இலட்சம் ரூபாயில் இருந்து 750 கோடி ரூபாய் வரை என்பது மட்டும் உறுதி.

 இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் இலட்சக்கணக்கான வழிபாட்டுத்தலங்கள் இருப்பதை அறிவீர்கள். நாளுக்குநாள் அவை அதிகரித்து வருவதையும் அறிவீர்கள். இவற்றின் சராசரி வருமானத்தை நீங்களே குத்து மதிப்பாகக் கணக்கிட்டுப் பார்த்தால் நம் நாட்டின் வளங்களும் மக்களின் உழைப்புகளும் எங்கே போய் கொட்டபடுகின்றன என்ற உண்மை உங்களுக்கு புலப்படும்.

 சில காலங்களுக்கு முன் ஒரு சில வழிபாட்டுத்தலங்களிலும் ஆசிரமங்களிலும் சுரங்க அறைகளில் பதுக்கப்பட்டு பின்னர் காவல்துறையினர்  கண்டெடுத்து அறிவித்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள  நகைகள் யாருடையவை என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்!

 உண்மையான இறைவனை வணங்குவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை, சடங்குகளும் சம்பிரதாயங்களும் தேவை இல்லை என்பதை அறிவோம். ஆனால் மக்கள் உயிரும் உணர்வும் அற்ற சமாதிகளையும் உருவங்களையும் நாடும் போது அவர்கள் எப்படிப்பட்ட மோசடிகளுக்கு இரையாகிறார்கள், நாட்டு மக்களின் உடமைகளும் உழைப்புகளும் எப்படி கொள்ளை போகின்றன என்பதை சுட்டிக்காட்டவே இந்த உதாரணங்களை உங்கள் முன் வைக்கிறோம். யாரையும் புண்படுத்துவது நமது நோக்கமல்ல

 இவைபோக சில அரசியல்வாதிகள் அரசியல் இலாபங்களுக்காக மக்களின் இஷ்ட தெய்வங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கிரீடங்களும் நகைகளும் அணிவிப்பதும் நம் நாட்டு வழக்கமாக உள்ளதை அறிவோம். இவ்வாறு கிரீடங்களுக்கு மேல் அணிவிக்கப்படும் கிரீடங்களும் நகைகளுக்கு மேல் அணிவிக்கப்படும் நகைகளும் அங்கு வழிபாட்டுத்தலங்களில் யாருக்கும் பயன்படாமல் தேங்கிக் கிடப்பதையும் இவை அவ்வப்போது சில தனிநபர்களின் சுரண்டலுக்கு உள்ளாவதையும் நாம் அனைவரும் அறிவோம். 

 உதாரணமாக பிரசித்திபெற்ற ஒரு வழிபாட்டுத் தலத்தில்  தேங்கிக் கிடக்கும் நகைகளின் மதிப்பு 50,000 கோடிகளுக்கும் மேலாகும். ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி வருடத்திற்கு  25,000  பவுண்டு வருமானத்தை  இந்த ஒரு ஆலயத்தில் இருந்துமட்டும் சம்பாதித்திருக்கிறது என்பது வேறு விஷயம்!

 நமது நாட்டு மக்களின் நிலை:

சுதந்திரம் அடைந்து 58 ஆண்டுகளான நிலையிலும் நமது நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்கள்  குடிமகன்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும்போது நாட்டின் செல்வங்கள் இவ்வாறு தன்மீது எது கொட்டப் படுகிறது, தனக்கு எதை அணிவிக்கிறார்கள் என்பதையே அறியும் உணர்வுகளில்லாத திடப் பொருட்கள் மீது கொட்டப்படுவது எவ்வளவு பெரிய வஞ்சனை!  கருணையற்ற செயல்! அவற்றை வைத்து இடைத்தரகர்கள் என்ற  போர்வையில் வயிறு வளர்க்கும் இம்மாபெரும் மோசடியாளர்களுக்கு ஈடான வேறு யாரையாவது  உங்களால் காட்ட முடியுமா?

 மனித உடல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமானால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்தம் எங்காவது உறைந்து இறுகி விட்டால் உடலின் இயக்கங்கள் ஸ்தம்பித்து நோய் வந்து அழிந்து விடும். அதேபோல் ஒரு நாட்டின்  பொருளாதாரம் சீராக இருக்க. வேண்டுமானால் நாட்டின் செல்வம் உடலுக்குள்  இரத்தம் இறுகி விடுவது போல் உறைந்து விடக்கூடாது. மீண்டும் நம் நாடு பொருளாதாரத்தில் மீட்சி பெற வேண்டுமானால் இறைவனின் பெயரால் சுரண்டப்படும் இந்தக் கொள்ளைகளை தடுத்து நிறுத்த அனைத்து மதத்தவர்களும் பாடுபட வேண்டும். படைத்தனை  விட்டு விட்டு நாம் யாரையும் வணங்க மாட்டோம் என்ற முடிவுக்கு நாம் அனைவரும வந்தால் மட்டுமே இது சாத்தியம்!.

 நமது நாட்டின் பெரும்பகுதி பொருளாதாரத்தை முடக்கிப் போடுவது மட்டுமல்ல, நாட்டின் பெரும் பெரும் ஊழல பேர்வழிகளுக்கும் கறுப்புப் பணமுதலைகளுக்கும் அவர்கள் போலீசில் சிக்காமல் அடைக்கலம் கொடுப்பதும் இந்த இடைத்தரகர்கள்தான். கடவுளை எங்கள் மூலமாகத்தான் அணுக வேண்டும என்று கூறிக்கொள்ளும் இவர்கள் நடத்தும் ஆசிரமங்களும் மடங்களும் அடிக்கடி பெரும்புள்ளிகளால் விஜயம் செய்யப்படுவதையும் பெரும்பெரும் தொகைகளை செலுத்தி இவர்களின் பாதங்கள் தரிசிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு வருகிறோம்.

 அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இயங்கி வரும், க்ளோபல் பைனான்ஷியல் இன்டெக்ரிட்டி என்ற ஆய்வு மற்றும் ஆலோசனை அமைப்பு, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் இந்தியப் பணம் மற்றும் இந்தியச் சமூக ஏற்றத்தாழ்வு குறித்து ஆய்வு செய்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் இணையதளத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவின் ஆறு லட்சம் கோடி ரூபாய் பணம், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. (2003 முதல்  2012 வரையான 10 வருடங்களில் இது 28 லட்சம் கோடி ரூபாய்) இந்த கடத்தலில் அந்நாட்டில் வளர்ந்து வரும் ஊழலும், கறுப்பு பொருளாதாரமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடந்த 2004ல் இருந்து 2009 வரை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதமாக இருந்துள்ளது. அதே நேரம், ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே உள்ளனர். ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளும், தனியார் துறை அதிகாரிகளும், மக்கள் நலன் என்ற பெயரில் ஊழல் செய்த பணத்தை அரசியலிலும், தனியார் துறையிலும் திருப்பி விடுகின்றனர்

 இக்கொடுமைகள் கண்டும் நாம் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?

 இங்கு ஒரு அரசனைப் பற்றிய கதையை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்

 ஆடை அரசனின் கதை      

   உங்களில்  பலரும் இதை முன்னரே கேட்டிருக்கக் கூடும். அந்த அரசனுக்கு உடைகள் என்றால் அலாதியான பிரியம். தினசரி வித விதமான  உடைகளை தரிக்க அவனுக்கு ஆசை. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் உடை நெய்பவர்கள் அந்நாட்டுக்கு வந்து அவனுக்கு உடை தயாரித்துத் தருவார்கள். அவர்களுக்கு தாராளமாக பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பி வைப்பது அரசனின் வழக்கம்.

         ஒருமுறை இதை அறிந்த இரு ஏமாற்றுப் பேர்வழிகள் அந்த நாட்டுக்கு வருகைதந்தனர். அவர்கள் அரசனிடம் சென்று, “அரசே! நாங்கள் இன்ன நாட்டிலிருந்து வருகிறோம். உலகத்திலேயே மிக உயர்ந்த உடை தயாரிப்பாளர்கள் நாங்கள். உங்களைப் பற்றி அறிந்தோம். உங்களுக்கும் அவ்வுயர்ந்த ஆடைதனை தயாரித்து வழங்கலாமே என்று விழைந்தோம்.” என்றனர். கேட்டதுதான் தாமதம், அரசனும் உடனடியாக அவர்களுக்கு வேண்டிய தரி மற்றும் மூலப்பொருட்களையும், உணவு உறைவிடம் ஆகிய எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க தன் பரிவாரங்களுக்கு ஆணையிட்டான்

.அவர்களுக்கு அரசன் தாராளமாகப் பொருளுதவிகளை அனுப்பிக் கொண்டிருந்தான்.

 நாட்கள் பல சென்றன. இன்னும் உடை தயாராகக் காணோமே என்று அரண்மனையில் பேசிக்கொண்டனர். ஒரு சேவகனை  விவரம் அறிய அனுப்பி வைத்தனர்.

சேவகன் சென்று பார்த்த போது அங்கு வெறும் தரிகள் மட்டும் இருப்பதைக் கண்டான். நூலோ துணியோ எதையும் அங்கு காணவில்லை. "அய்யா! அரசனின் உடை எவ்வளவு தயாராகியுள்ளது என்று அறிய நான் வந்துள்ளேன். ஆனால் இங்கு எதையுமே காணவில்லையே!" என்றான் சேவகன்.

" என்ன? எதையுமே காணவில்லையா? எவ்வளவு அழகான உடையை நாங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறோம், உலகிலேயே மிக மெல்லிய இழை கொண்டு இதை நெய்து  வருகிறோம். எவ்வளவு நாளாக நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். திடீரென ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறாயே!" என்றான் ஒருவன்.

 " அதெப்படி இவனுக்கெல்லாம் இது தென்படும். முட்டாள்கள் கண்ணுக்கெல்லாம் இது தென்படாதே. புத்திசாலிகள் கண்ணுக்கு மட்டும்தானே இது தெரியும்." என்று பலமாக சிரித்தான் மற்றவன்.

  வந்தவன் குழம்பி விட்டான். அவன் யோசித்தான்,"மெல்லிய இழை  என்கிறார்கள், முட்டாள்களுக்கு தென்படாது, புத்திசாலிகள் கண்களுக்குத்தான் தெரியும் என்கிறார்கள். ஒருவேளை  இவர்கள் சொல்வது போல் கோளாறு என்னிடம் இருக்கலாம். நான் இன்று அரண்மனையில் போய் எதுவுமே எனக்குத் தென்படவில்லை என்று சொல்லபோய் நாளை எவனையாவது அனுப்புவார்கள். அவன் இங்கு வந்து அவன் கண்களுக்கு இது தென்பட்டுவிட்டால்...... என்னை முட்டாள் என்று சொல்லி வேலையை விட்டு  விலக்கி விடுவார்கள்........எதற்கு வம்பு? பேசாமல்அழகான உடை ஒன்று அரசருக்காக தயாராகிக்கொண்டிருக்கிறது' என்று சொல்லி ஒதுங்கி விடுகிறேன்." 

சேவகன் அரண்மனைக்குச் சென்று அவ்வாறே சொன்னான். அடுத்த வாரம் வேறொருவனை பரிசோதித்து வர அனுப்பினார்கள். அவனிடமும் மோசடிக்காரர்கள் அவ்வாறே நடித்தார்கள். அவனும் குழம்பிப்போனான். அவனும் யோசித்தான். " சென்ற வாரம் வந்த சேவகன் இங்கு நெய்யப்படும் உடையை கண்டிருக்கிறான். எனக்கு இது தென்பட வில்லையானால் என்னிடம்தான் ஏதோ கோளாறு உள்ளது.  அதை மறைப்பதுதான் எனக்கு நல்லது. இல்லையென்றால் என்னை முட்டாள் என்று சொல்லி வேலையை விட்டு நீக்கி விடுவார்கள்."

அவனும் அரண்மனைக்குச் சென்று முன்னவன் சொன்னது போலவே சொன்னான்.தொடர்ந்து அனுப்பப்பட்டவர்கள் யாவரும் மோசடிக்காரர்களால் அதே போலவே முட்டாள் ஆக்கப்பட்டார்கள். ஆனால் அனைவரும் தங்களை அரண்மனையில் புத்திசாலிகளாகக் காட்டிக்கொண்டார்கள்.

இறுதியாக மந்திரியும் உடையை பரிசோதிக்க சென்றார். அவரும் முன்சென்றவர்கள் கேட்டது போலவே கேட்டார். அவரிடமும் அவர்கள் " மதிப்புக்குரிய மந்திரி அவர்களே , இந்த உடை மிக மிக மெல்லிய இழைகளால் ஆனது. சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும்அறிவீனர்கள் கண்களுக்கு இது புலப்படாது. புத்திசாலிகள் கண்களுக்கு மட்டுமே இது தென்படும்." என்றார்கள்.

மந்திரியும் யோசித்தார்." எவ்வளவு பேர் எனக்கு முன் வந்து பார்த்து சென்றுள்ளார்கள். அவர்களை விட நான் அறிவில் குறைந்தவனா? இது எனக்கு தென்படவில்லையானால் என்னிடம் தான் கோளாறு உள்ளது. நானும் இதை ஒத்துக்கொள்வதுதான் நல்லது."

மந்திரியும் ஒருமுறை கண்களைக் கசக்கிவிட்டு உடை இருந்த பக்கம் பார்த்தார். " , ,... இப்போது தெரிகிறது. எவ்வளவு அழகான உடை! நிச்சயமாக அரசர் இந்த உடையில் சொக்கிப் போய் விடுவார்!"

மோசடிக்காரர்களுக்கு உள்ளுர வெற்றிப் பெருமிதம், தங்களின் திட்டத்திற்கு அந்நாட்டு மந்திரியின் அங்கீகாரம் கிடைத்து விட்டதற்காக !

அடுத்த நாள் அரசனுக்கு உடை அணிவிக்கும் நாள். நேராக அரண்மனைக்கு அந்தஉலகிலேயே மிக உயர்ந்த ஆடையைஒரு அழகான பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றனர் மோசடிப் பேர்வழிகள்.!

அரசரின் அந்தரங்க அறையில் அரசருக்கு முன்னால் பெட்டியைத் திறந்தனர். அரசருக்கும் அதிர்ச்சி! இந்தக் காலிப்பெட்டிக்காகவா இவ்வளவு நாள் காத்திருந்தோம்?

அரசரின் அதிர்ச்சியைப் புரிந்து கொண்ட மந்திரி உடனே சொன்னார்," அரசே, இந்த உடை உலகிலேயே மிக மெல்லிய இழைகளைக் கொண்டு நெய்யப்பட்டது. இதை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். இதன் மற்றொரு சிறப்பு இது புத்திசாலிகளின் கண்களுக்கு மட்டும்தான் தென்படும் என்பதே!"

அரசரும் யோசித்தார், " மந்திரி சொல்வது சரிதான் போல் இருக்கிறது. இவ்வளவு பேர் பார்த்திருக்கும் போது எனக்கு மட்டும் தென்படாவிட்டால், என்னிடம் தான் கோளாறு இருக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு அரசன் எப்படி முட்டாளாக முடியும்?"

உடனே அரசனும், "சரியாகச் சொன்னீர் , மந்திரி அவர்களே! இதைப்போல ஒரு ஆடையை நான் இதுவரைப் பார்த்ததே இல்லை. மிக மிக அழகாக இருக்கிறது!" என்றான்.

" ஆம் அரசே, இன்று நாம் ஏற்கனவே அறிவித்தபடி இந்த ஆடையை நீங்கள் அணிந்து கொண்டு ஊர்வலம் போக இருக்கிறோம். இதை நெய்தவர்களே உங்களுக்கு இதை அணிவித்து விடுவார்கள்”.

  அரசர் அணிந்து இருந்த உடையை அவிழ்த்தனர் பேர்வழிகள். அரசர் நிர்வாணமானார்புது ஆடையை பெட்டியில் இருந்து எடுத்து அரசனுக்கு  அணிவிப்பது போல் பாசாங்கு செய்தனர்.

ஊர்வலமும் புறப்பட்டது. 'அரசர் உலகிலேயே மிக உயர்ந்த ஆடையை அணிந்து வருகிறார். அது புத்திசாலிகளின் கண்களுக்கு மட்டுமே புலப்படும், முட்டாள்களின் கண்களுக்குத்  தெரியாது' என்ற அரண்மனையில் பரவிய செய்தி ஊரிலும் மக்கள் மத்தியில் பரவியது. வீதி வீதியாக ஊர்வலம் சென்றது. அரசனை அப்பட்டமாக நிர்வாணமாகக் கண்டும் யாரும் தன்னை முட்டாளாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அனைவரும் புத்திசாலிகளாகவே நடித்தார்கள். இறுதியில் ஊர்வலம் ஒரு தெருவில் வந்து கொண்டிருக்கும்போது மூலையில் நின்ற சிறுமி ஒருத்தி இந்த கூத்தை கவனித்தாள். தன தோழிகளை அழைத்தாள். "டீ... பாருங்கடி... ராஜா அம்மணமா ஊர்வலம் போறார்! ".... அனைவருக்கும்சுருக்என்றது. இதைக் கேட்டதுதான் தாமதம், மக்களின் கண்கள் தங்களை மறந்து ராஜாவின் பிறப்புறுப்பின் பக்கம் திரும்பின! ராஜாவும் பல்லக்கை விட்டு குதித்து மறைவிடம் தேடி ஓடினார். தங்கள் முட்டாள் தனத்தை உணர ஆரம்பித்தார்கள் மக்கள்!```

இன்று நம் நாட்டு நடப்பை இந்த கதையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்! முழுக்க முழுக்கப் பொருந்திப் போக வில்லையா?

அணு முதல் அண்டசராசரங்கள் அனைத்தையும்  படைத்து பரிபாலித்து வருபவன், அளவிட முடியாத ஆற்றல் உள்ளவன், எல்லை அற்ற ஞானம் கொண்டவன், என்றென்றும் வாழ்பவன், தன அயராத கட்டளைகளைக் கொண்டு உயிர்கள் அனைத்தையும் இயக்கி வருபவன், தனக்கு எந்த வித உவமையும் இல்லாதவன் இறைவன்! ஆனால் இங்கு என்ன நடக்கிறது? அறவே  உயிரற்ற, உணர்வற்ற பொருட்களை நமக்குக் காட்டி இதுதான் கடவுள் அதுதான் கடவுள் என்று கற்பித்து  எவ்வளவு பெரிய மோசடிகள் நடைபெறுகின்றன என்று யோசித்துப் பாருங்கள்! எவ்வளவு தலைமுறைகளை தொடர்ந்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு சிறுமி மக்களின் முட்டாள்தனத்தை உடைத்து காட்டியதைப் போல் பெரியார் போன்ற சீர்திருத்த வாதிகள் ஆங்காங்கே இந்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் இந்த மோசடி தொடர்வதை நாம் காணவில்லையா

6. மூட நம்பிக்கைகள் உருவாக மூல காரணம் இது: உயிரற்ற உணர்வற்ற  ஒன்றை சக்தி உள்ளாதாக மனிதனை நம்பவைத்து மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்காக பல மூடநம்பிக்கைகள் இடைத்தரகர்களால் உருவாக்கப்படுகின்றன. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை தங்களுக்கு ஏதாவது துன்பங்கள் வந்து விடும் என்று பயந்து இவர்கள் பரப்பும் மூட நம்பிக்கைகளை அப்படியே நம்புகிறார்கள். அது மட்டுமல்ல நாடு முழுக்க அதை பரப்பவும் செய்கிறார்கள். இவற்றின் காரணமாக நாட்டு மக்களின் பொருளாதாரமும் உழைப்பும் நேரமும் வீண்விரையங்களுக்கு உள்ளாகின்றன.

 7. மனித குலத்தை பிளவு  படுத்தும் கொடிய பாவம் இது: ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எல்லா காலத்திலும் போதிக்கப்பட்ட கொள்கை. ஆனால் அந்த ஏக இறைவனை விட்டு படைப்பினங்களை வணங்கத் தலைப்படும் போது மனித குலமும் அவரவர்களின் கடவுள் கொள்கையைப் பொறுத்து கூறுபோடப் படுகிறது. இந்தக் கொடுமைக்கு பலியான நாடுகள் பல. அவற்றில் சிறந்த உதாரணம் நமது நாடுதான். நமது நாட்டின் ஜாதி அமைப்புக்களைப் பாருங்கள். எந்த ஜாதியைச் சேர்ந்தோரானாலும் நாம் அனைவரும் மனிதர்களே. ஒரே இரத்தம்,, ஒரே மாமிசம் ஒரே உடலமைப்பு  என எல்லாம் ஒன்றாக இருந்தும் ஒரு ஜாதி மக்கள் இன்னொரு ஜாதி மக்களோடு கலப்பதில்லை. இதில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள் என பல கூறுகள்! என்ன காரணம்? ஒவ்வொரு ஜாதியும் தங்களுக்கு வெவ்வேறு தெய்வங்கள் இருக்கின்றன என்று நம்புகிறார்கள். அவற்றை குலதெய்வம் என்று சிறப்பு செய்கிறார்கள். இவை மட்டுமல்ல, ஊர்களையும் எல்லைகளையும் பிரிக்கும் காவல் தெய்வங்களும் எல்லைச்சாமிகளும் மனிதர்களுக்கிடையே மேலும் பிளவை வலுப்படுத்துகின்றன. இஸ்லாம் என்ன சொல்கிறது என்றால், இந்த கற்பனை தெய்வங்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுங்கள். இவற்றால் எந்த பயனும் கிடையாது. அனைவரும் உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த ஒரே இறைவன் பக்கம் மீளுங்கள் என்கிறது.

     இதனால் என்ன பயன் என்கிறீர்களா? இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள், இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நபிகள் நாயகத்தின் வாரிசுகளோ அல்ல. இவர்கள் இதற்கு முன் இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ இருந்து மதம் மாறியவர்களின் தலைமுறையினர்தான். இவர்கள் இந்த ஏக இறைகொள்கையை ஏற்றுக் கொண்டபின் என்னென்ன புரட்சிகள் நடந்துள்ளது பாருங்கள். இன்று இவர்களுக்கு ஜாதிகள் இல்லை. இவர்களிடையே தீண்டாமை இல்லை. ஒரு காலத்தில் தீண்டாமையால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று சிதறுண்டு கிடந்த இம்மக்களை இன்று பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒரே அணியில் தோளோடு தோள் நிற்க வைப்பதும் ஒரே தட்டில் பாகுபாடின்றி உண்ண வைப்பதும் இந்த ஓரிறைக்கொள்கை நிகழ்த்தி வரும் அற்புதங்களே! அம்பேத்கர் , பெரியார் முதற்கொண்டு பல சீர்திருத்தவாதிகள் தங்களின் வாழ்நாளை இத்தீமைகளுக்கு எதிராக போராடிக் கழித்தனர். ஆனால் இவர்கள் யாராலும் செய்ய முடியாத தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு இவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறது இந்த ஏக இறைக்கொள்கை! நம் நாட்டில் மட்டுஅல்ல, உலகெங்கும் மக்களைப் பிரித்து பகைமையை விதைத்து வரும் இனவெறி, நிறவெறி, மொழிவெறிப் பேய்களை  அடக்கி அழிக்கிறது இந்த ஓரிறைக் கொள்கை! அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் நிறவெறி மற்றும் இனவெறி கொண்டு சிதறுண்டு ஒருவரையொருவர் வேட்டையாடிக்கொண்டு இருந்த மக்கள் இன்று ஒரே அணியில் தோளோடு தோள் நின்று தொழுவதும் அன்னியோன்னியமாகப் பழகுவதும் இன்று உலகம் கண்டுவரும் கண்கொள்ளாக் காட்சிகள்! ஆம், இன்று அங்கெல்லாம் வெகுவேகமாகப் பரவி வருகிறது இந்த ஓரிறைக்கொள்கை!

8. நாத்திகம், கம்யுனிசம் போன்ற உண்மை மறுப்புக் கொள்கைகள் உருவாகக் காரணம்: கடவுளின் பெயரால் நடைபெறும் மோசடிகளையும் அட்டுழியங்களையும் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் பெரியார், காரல் மார்க்ஸ் போன்றோர்கள் தத்தமது நாடுகளில் கண்டார்கள். இதன் விளைவாக கடவுளே இல்லை என்று அப்பட்டமாக மறுக்க ஆரம்பித்தார்கள். அந்த அக்கிரமங்களால் பாதிக்கப் பட்டவர்கள் அவர்களோடு சேர்ந்து ஆங்காங்கே  ஆதிக்கசக்திகளை எதிர்க்க  இவை நாளடைவில் இயக்கங்களாக உருவாயின. ஆனால் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை தெளிவானது. பகுத்தறிவை பயன்படுத்தி இறைவனை உணரச் சொல்கிறது குர்ஆன்!

9. மனிதனின் சுயமரியாதையை அடகு வைக்கச் செய்யும் இழிவு: பகுத்தறிவு படைத்த மனிதனை அவனைப் போன்ற மனிதனுக்கு முன்னாலும் அவனைவிட அறிவில் குறைந்த பிராணிகளின் முன்னாலும் மட்டுமல்ல, அறவே அறிவும் உணர்வும் அற்ற கற்களுக்கும் மரக்கட்டைகளுக்கும் முன்னால் தலைகுனியவும், சாஷ்டாங்கம் செய்யவும் வைக்கிறது இந்த இணைவைக்கும் பாவம். சர்வ வல்லமையும் ஆற்றலும் கொண்ட இறைவன் முன்னால் மட்டுமே மனிதன் தலைகுனிய வேண்டும். அவனுக்கு மட்டுமே அஞ்சி வாழ வேண்டும் என்கிறது இஸ்லாம். அவ்வாறு வாழ்ந்தால் எந்த படைப்பினகளையும் அஞ்ச வேண்டியதில்லை என்ற மனோ உறுதி வளர்க்கப் படுகிறது. இந்த இறைவன் கற்றுத் தரும் மார்க்கத்தைப் போல ஒரு சுயமரியாதை இயக்கத்தை உலகில் எங்கிலும் காணமுடியாது.

10. பகுத்தறிவையும் அறிவாற்றலையும் முடமாக்கும் இழிசெயல்: சிறுவயதில் இருந்து குழந்தைகளுக்கு கற்களையும் கட்டைகளையும் காண்பித்து இவை எல்லாம் கடவுள் கற்பிக்கப் படுகிறது. ஜீரணிக்க முடியாத பிஞ்சு உள்ளங்கள், "அப்பா! இது எப்படிப்பா கடவுள் ஆகும்?" என்று எதிர் கேள்வி கேட்கும்போது, தந்தையர் சொல்லும் பதில் அனைவருக்கும் தெரிந்ததே. "டேய், கடவுள் பற்றி அப்படியெல்லாம் கேட்கக் கூடாது. சொன்னா அப்படியே நம்பு!". இவ்வாறு வளரும் குழந்தைகளின் பருவத்திலிருந்தே அறிவு முடமாக்கப் படுகிறது. ஆனால் உண்மை இறைமார்க்கமோ படைப்பினங்களையும் வானம் பூமி இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கத் தூண்டுகிறது. அவ்வாறு படைத்தவனை உணர்ந்து அவனை வணங்கச் சொல்கிறது. மூதாதையர்களை கண்மூடிப் பின்பற்றாதே என்று எச்சரிக்கிறது.

        .நிச்சயமாக வானங்கள் பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (திருக்குர்ஆன் 3:190)

 (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும் இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும் இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) (திருக்குர்ஆன் 88:17-20.)

இவ்வாறு திருமறையின் பல வசனங்கள் இறைவனை அறிய படைப்பினங்களை ஆராய்ந்து பார் என்று மனிதனைத் தூண்டுவதைக் காணலாம்.

11. மனிதனின் தைரியத்தை இழக்கச் செய்து கோழையாக்கும் இழிவு:

கண்டதெல்லாம் கடவுள் என்று மனிதன் நம்பும்போது ஒரு தெய்வத்தை `வணங்கிவிட்டு மற்ற தெய்வத்தை விட்டு விட்டால் அது ஏதாவது நம்மைச் செய்து விடுமோ என்ற பயமும் குற்ற உணர்வும் மனிதனை அலைக்கழிக்கின்றன. நாம் வணங்கும் தெய்வம் நம்மைப் போன்ற ஒரு படைப்பினமே அல்லது நம்மைவிடச் சிறியதே என்ற உணர்வு மேலிடுவதால் மனிதன் எதைக்கண்டாலும் பயந்து கோழையாக காலத்தைக் கழிக்கிறான். ஆனால் படைத்தவனை வணங்கும்போது மனிதனுக்கு படைப்பினங்களைப் பற்றிய பயமே போய்விடுகிறது. சர்வவல்லமையுள்ள என் இறைவன் என்னோடு துணை உள்ளான், அவனை மீறி எந்த படைப்பினமும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற உணர்வோடு அவன் வாழ்வதால், அவனுக்கு ஒப்பிட முடியாத தன்னம்பிக்கையையும் தீமைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தைரியமும் உண்டாகிறது.

ஆக, இறைவனுக்கு இனைவைத்தலை எதிர்ப்பதற்கு மேற்கூறப்பட்டவை  மட்டுமல்ல, இவை போன்ற இன்னும் பல காரணங்கள் உள்ளன. விரிவஞ்சி இத்துடன் முடித்துக் கொள்வோம்.

ஆக, மீண்டும் தெளிவு படுத்துகிறோம் சிலைவழிபாட்டை மட்டுமல்ல, சிலுவை வழிபாட்டையும் தர்கா வழிபாட்டையும் நாம் எதிர்க்கிறோம் என்பதை! இறைவனுக்கு இணைவைக்கும் செயல் யார் செய்தாலும் அது பாவமே.! மறுமையில் அவர்களுக்கு நிரந்தர நரகம் தண்டனையாகக் காத்திருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க இவ்வுலக வாழ்விலேயே இப்பாவம் எப்படிப்பட்ட அழிவையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை நாம் அறிந்தோம். நாம் எம்மதத்தில் பிறந்திருந்தாலும் எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் சரி, அனைவருமே படைத்த இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டுள்ளோம். அதில் மட்டுமே நமது இம்மை மற்றும் மறுமையின் வெற்றி அமைந்திருக்கிறது.

வாருங்கள் சிறிது மனம் திறந்து பேசுவோம்........

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு வருவோம்.. சிலை வழிபாட்டையும் உருவ வழிபாட்டையும் ஏன் எதிர்க்கிறீர்கள்? சிலைகளையும் நினைவுச்சின்னங்களையும் ஏன் மதிப்பதில்ல? ஏன் பிரசாதங்களை உண்ண மறுக்கிறீர்கள்? வந்தே மாதரம் ஏன் பாட மறுக்கிறீர்கள்?..... என்பவையே எமது நடவடிக்கைகள் பற்றி உங்களுக்கு எழும் சந்தேகங்கள். இவை அனைத்திலும் இணைவைப்பின் அம்சம் கலந்திருப்பதே இவற்றை எதிர்ப்பதற்கும் இவற்றிற்கு நாங்கள் துணை போகாததற்கும் காரணம். இவற்றை நாங்கள் செய்தாலும் பாவமே, நீங்கள் செய்தாலும் பாவமே என்பதை இப்போது உணர்ந்து இருப்பீர்கள்! இறைவனுக்கு இணைவைத்தல் என்பது எந்த வடிவில் நம் வாழ்வில் ஊடுருவினாலும் அதை நாம் அனைவரும் இணைந்து முழு மூச்சாக எதிர்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

 தேசப்பற்று பற்றி சில வார்த்தைகள்.....

 வந்தே மாதரம் சம்பந்தமாக இதை நாம் உணர வேண்டும். தேசப்பற்று அல்லது நாட்டுப்பற்று என்பது ஒரு நாட்டின் மண்ணை நேசிப்பதிலோ அல்லது ஒருசில கற்பனை உருவங்களுக்கு முன் செய்யும் சடங்குகளிலோ இல்லை, மாறாக வேற்றுமைகளை மறந்து அந்நாட்டு மக்களை நேசிப்பதில்தான் என்பதை நாம் மறுக்க முடியுமா? 

நாட்டுப்பற்று என்ற ஒன்று அனைவரின் உள்ளத்திலும் இயல்பாகவே இருக்கக் கூடிய ஒன்று. அது படைத்த இறைவன் விதைத்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

பல வேளைகளில் அது இனம் மொழி மதம் அல்லது கொள்கை போன்றவற்றின் மீது உள்ள பற்றினாலும் தாக்கத்தினாலும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதும் உண்மை. மட்டுமல்ல பொருளாதாரம் வாழ்க்கை வசதிகள், வறுமை, செழிப்பு, உறவு, போன்ற காரணிகளும் நாட்டுப் பற்றின் மீது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

. நாட்டுப்பற்றின் கூடுதல் அல்லது குறைவு என்பது புறக் காரணிகளைப் பொறுத்து அமைகிறது. உதாரணமாக பாலைவனத்தில் பிறந்த ஒரு மனிதன் வறுமை பாதிக்கும்போது தான் பிறந்த பூமி என்றும் நாட்டுப்பற்று என்றும் கூறிக்கொண்டு வாழ்வாதாரம் தேடி அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடாமலோ அல்லது குடிபெயராமலோ இருப்பதில்லை. அது போலவே பயம், ஆபத்து அல்லது வறுமை போன்றவை பாதிக்கும்போதும் மனிதன் தன் நாட்டை துறக்கவே செய்கிறான்!

ஆனால் இன்று ஆதிக்க சக்திகள் தங்கள் அடக்குமுறையால் நலிந்தோர்களை அடக்கியாளும்போது அதனால்  பாதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து தப்பிக்க வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தால் உடனே அவர்களை மிக எளிதாக தேசத்துரோகிகள் என்று முத்திரைகுத்தி விடுகிறார்கள். ஊடகங்கள் மூலம் அவர்களை பெரும் குற்றவாளிகளாக சித்திரிக்கவும் செய்கிறார்கள். அதேவேளையில் அந்த ஆதிக்கசக்தியாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் தங்கள் சொந்த விஷயம் என்று வரும்போது வாழ்க்கை வசதிகள், கல்வி மற்றும்  வேலைவாய்ப்பு வசதிகள் தேடி தங்கள் குழந்தைகளை நாட்டுப்பற்றைக் காரணம் காட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் இருப்பதில்லை. தாய்நாட்டில் சம்பாதித்த செல்வங்களை வெளிநாடுகளில் முதலீடு செய்யவும் அங்கு வங்கிகளில் சேமிக்கவும் இவர்கள் தவறுவதும் இல்லை. இது இவர்களின் இரட்டை நிலை!

ஆக, இன்றுநாட்டுப்பற்றுஅல்லது  தேசத்துரோகம்போன்ற பதங்கள்  சந்தர்பங்களுக்கு ஏற்றவாறு அரசியல் நடத்த கையாளப் படுவதைக் காணலாம்.

ஆனால் உண்மையில் நாட்டுப் பற்று என்பது என்ன?

பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள் இயற்றிய பாடல்களை உருவிடுவதும், தேசத்தின் கொடியை பலர் காண வணங்குவதும் எல்லாம் நாட்டுப்பற்றாக சித்தரிக்கப் படுகிறது. இவற்றில் எந்த அளவுக்கு ஆத்மார்த்தம் உள்ளது என்பதையும் இவற்றில் பெரும்பாலானவை  புறக்கவர்ச்சிக்காக செய்யப்படுபவையே என்பதையும் நாம் அறிந்தே இருக்கிறோம்.

உண்மை நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பதைவிட அந்நாட்டைச் சேர்ந்த மக்களை நேசிப்பதுதான். நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான தேசப்பற்று. நாட்டில் ஆரோக்கியம் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் அவர்களை ஒரு பண்பாடு மிக்க குடிமக்களாக வார்த்தெடுக்க தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும்.

 நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் இடுக்கண்ணை விடுவிக்கப் பாடுபடுவது  என்பது உண்மை நாட்டுப்பற்றின் உச்சகட்டம் எனலாம்!

இப்படிப்பட்ட ஆத்மார்த்தமான நாட்டுப்பற்று மனித உள்ளத்தில் வரவேண்டுமானால் அங்கு இறைநம்பிக்கையும் இறையச்சமும் அடிப்படைத்  தேவைகளாகும்.

நம்மைப் படைத்த இறைவன் நமக்கு கற்றுத்தரும் வாழ்க்கைத் திட்டத்திற்கே அரபி மொழியில் இஸ்லாம் என்று வழங்கப் படுகிறது. அதை வாழ்க்கை நெறியாக ஏற்றவர்கள் அவர்கள் வாழும் நாட்டை அதாவது நாட்டு மக்களை நேசிக்காமல் இருக்கமுடியாது. 
இன, மொழி, நிற, மத வேற்றுமைகளை மறந்து மனிதகுலம் அனைத்தையும் தங்கள் சகோதரர்களாக பாவிக்கவேண்டும் என்பது இங்கு இறைவன் கற்பிக்கும் அடிப்படைப் பாடமாகும்.

மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்  கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (திருக்குர்ஆன் 49: 13)

மேலும் நாட்டு மக்களை நேசிப்பதை வழிபாடாகக் கற்பிக்கிறது இஸ்லாம்.
 மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்என்பதும்மனிதர்கள் மீது கருணை காட்டாதவர் இறைவனால் கருணை காட்டப்பட மாட்டார்என்பதும் நபிமொழிகள்.

இஸ்லாம் முன்வைக்கும் மறுமை நம்பிக்கைஅதாவது இறைவனின் கட்டளைகளை பூமியில் நடப்பாக்க செய்யப்படும் எந்த ஒரு செயலும் வீண்போவதில்லை. அவற்றிற்கு இறைவனிடம் மறுமையில் அதாவது சொர்க்க வாழ்வில் நற்கூலி உண்டு என்ற உறுதியான நம்பிக்கைஇஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு அலாதியான துணிச்சலையும் வீரத்தையும் தருகிறது. நாட்டு மக்களை அநியாயத்தில் இருந்தும் அக்கிரமங்களில் இருந்தும் அந்நியர்களின் தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்க சொந்த உயிரையும் உடமைகளையும் அர்பணிக்க மாபெரும் உந்துசக்தியாக இந்த நம்பிக்கை செயல்படுகிறது. இதை மிஞ்சும் நாட்டுப்பற்றை எங்கேனும் காணமுடியுமா?

 பயங்கரவாதம்

உங்கள் இறுதிக் கேள்வி மிக முக்கியமான ஒன்று.. ஆம் பயங்கரவாதம் என்றாலே இஸ்லாம், பயங்கரவாதி என்றாலே அது முஸ்லிம் என்று ஒரு எண்ணம் இன்று உலகெங்கும் நிலவுகிறது. இது ஏன்? உண்மைதான் என்ன?

 அன்புள்ளம் கொண்டவர்களே.. இதைப் புரிந்துகொள்ள முதலில் வாருங்கள் ஒரு பெரிய பாம்புப் பண்ணைக்குள் சென்றுவருவோம்...

 

அதோ அங்கே நிறைய ஆட்டுக்குட்டிகளும் முயல்களும் கோழிகளும் ஆனந்தமாகத் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அவைகளுக்கு இனி என்ன வேண்டும்?

தேவைக்கு மிஞ்சிய உணவு ....

ஓய்வெடுக்க மரநிழல்கள்....

எழுந்தால் விளையாட்டு...

இப்படியே சந்தோஷமாக  இருக்கும்போது திடீரென அருகே புதரில் இருந்து சலசலப்பு... விளையாட்டுகள் ஸ்தம்பித்தன.... சூழ்ந்தது பயம்... பீதி!

அதோ கிளம்பி வருகிறது அந்த மலைப்பாம்பு! ..... ஆம், அதற்குப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது... இன்று அதற்கு பலியாகப் போவது யார்?

ஆடா? முயலா? கோழியா? ..... எந்த ஆடு? எந்த முயல்? எந்தக் கோழி?

 

அனைவரும் திடீரென ஒரே பய பீதியில்...

இன்றைக்கு பாம்பிற்கு பலியாகப் போவது யார்? அது நானா?

அனைவரும் திகிலில்...!

அங்கிருந்து தப்பி ஓட வழியில்லை... குறுக்கே நிற்கிறது தடுப்பு சுவர்!

இறுதியாக மலைப்பாம்பு தான் விரும்பிய இரையை தேர்வு செய்து முழுங்கிக் கொண்டு தன் இருப்பிடத்திற்கு திரும்பியது.

இது அன்றாடக் காட்சி அங்கே!

 

ஆம் அன்பர்களே, இன்று நாம் வாழும் உலகிலும் இதே நிலைதான். உலகின் ஒரு சாரார் பெரும் சதிகள் செய்து வல்லமையைத் திரட்டி வைத்துக்கொண்டு உலகையே அச்சுறுத்தி ஆண்டுவரும் காட்சிதான் இங்கே! உலகின் 17% மக்கள் உலகின் 80% சதவீத வளங்களுக்கு சொந்தக்காரர்களாக திகழ்வதும் இதனால்தான்! மீதி உள்ள 20% சதவீத வளங்களை 500 கோடி மக்கள் பங்கிட்டு உண்ண வேண்டிய அவலமும் இதனால்தான்! கோடிக்கணக்கான மக்கள் உணவு, நீர், வீடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வாடுவதும் பலர் செத்து மடிவதும் இதனால்தான்! அங்கே மலைப்பாம்பு பசியடங்கியதும் ஒதுங்கிவிடும். ஆனால் இங்கு இவர்களின் பசியோ  அடங்குவதேயில்லை!

சற்று சிந்தித்துப்பாருங்கள்....

  உலகின் ஒரு பெரிய கண்டத்தின் (continent)  பழங்குடிகளை ஈவிரக்கமின்றி கொன்றுகுவித்து அங்கே பிழைத்தவர்களை அடிமைப்படுத்தி அக்கண்டத்தின்  வளங்களை கையகப்படுத்தி அங்கு ஓர் வல்லரசை நிறுவிய கொடியோர்கள் எப்படி சமாதானப் பிரியர்கள் ஆக முடியும்? ஆயுதபலம் அவர்களிடம் மிகைத்திருக்கிறது என்பதற்காக அவர்கள் சொல்வதே நீதி என்று ஏற்கமுடியுமா?

 ஆம், அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தின் ஆணிவேராக விளங்கும் அமெரிக்காவும் அவர்களின் கூட்டாளிகளும் யாரை தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறதோ அதை அப்படியே ஏற்கிறது உலகம்!  ஹிரோஷிமா நகரம் மீது அணுகுண்டை வீசி தலைமுறைகளை நாசம் செய்த கொடுமைக்கு நிகரான பயங்கரவாத செயலை இதுவரை உலகம் கண்டதில்லை. ஆனால் அதை நிகழ்த்தியவர்களை உலகம் பயங்கரவாதிகள் என்று அழைப்பதில்லை..... காரணம் அவர்களின் ஆதிக்க வலிமை! ஊடக வலிமை!

உலகை ஆண்டுவரும் மறைமுக காலனி ஆதிக்கம்!

= காலனி ஆதிக்கம் மூலம் நாடுகளை கொள்ளையடித்து  ஆதிக்கம் செய்தவர்கள் இன்றும் அந்த நாடுகளை தங்கள் கையாட்களையும் கைப்பாவை அரசர்களையும் வைத்துக்கொண்டு உலகை ஆண்டு வருகிறார்கள் என்பதே உண்மை! அந்நாட்டு வளங்களை தொடர்ந்து கொள்ளையடிக்கும் விதமாக வணிக ஒப்பந்தங்களை தந்திரமாக வகுத்து நிறைவேற்றி வருகின்றனர்.

 அமெரிக்க உளவு நிறுவனமான CBI -யில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற John Perkins தான் எழுதிய “Confessions of an economic hit man” என்ற புத்தகத்தில் அவர் தன்னுடைய பணிகாலத்தில் எப்படி தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் உலக அளவில் செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். நலிந்த நாடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவில் கடன் வழங்கி அவைகளை கொத்தடிமைகள் போல் ஆக்கி அவர்களின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்தல், அமெரிக்காவின் இராணுவதளம் அமைத்தல், ஐநாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஓட்டு போட வைத்தல், நிர்பந்தத்திற்கு வழங்காத ஆட்சியாளர்களை இராணுவப் புரட்சி மூலம் அகற்றுதல் அல்லது தீர்த்துக் கட்டுதல் போன்ற சதி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஜான் கூறுகிறார்.

அகிலத்தை அச்சுறுத்தும் ஆயுத ஆதிக்கம்

 உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள்,  ஏவுகணைகள், நீர்மூழ்கிக்  கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது.  ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவருக்கொருவரை அடித்துக் கொள்ள வைப்பது அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுதல் போன்றவை இவர்களுக்கு வாடிக்கை. ஆயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும் என்பதற்காக ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் ஆயுத விற்பனையும் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது என்பதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் அராஜகங்களை நியாயப்படுத்துகிறார்கள். தங்களை சமாதானப் பிரியர்களாகவும் இவர்களின் எதிரிகளை பயங்கர வாதிகளாகவும் சித்தரிக்கிறார்கள். மக்கள் அதை நம்பவும் செய்கிறார்கள்! காரணம்... ஊடக வலிமை!

தோற்றுப் போகும் எதிர் சக்திகள்!

தட்டிக்கேட்கவும் தடுக்கவும் முன்வந்த அனைத்து மக்கள் சக்திகளும் இந்த வஞ்சகர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன அல்லது கலைக்கப்பட்டன அல்லது பிரித்தாளப்பட்டன! (உதாரணம்: ரஷ;யாவின் தலைமையில் ஆன கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பு)

ஆனால் ஒரே ஒரு சக்தி மட்டும் இக்கொள்ளையர்களுக்கு கட்டுக்கடங்காத சவாலாக இருந்து வருகிறது. சக்திவாய்ந்த சதிவலைகளுக்கும் மிரட்டல்களுக்கும் பிரித்தாளும் சூழ்சிகளுக்கும் அடிபணியாமல் தன் வெற்றிப்பயணத்தை சளைக்காமல் தொடர்கிறது அது! உலகில் அநியாயங்களை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது! அது இனம் சார்ந்ததல்ல, மாறாக மனம் சார்ந்தது! மனித மனங்களை சீர்திருத்தி அவர்களைக் கொண்டே அநியாயங்களுக்கு முடிவுரை எழுத உள்ளது! ஆம், அதுதான் இஸ்லாம்!

இஸ்லாம் எப்படி அநியாயங்களை அழிக்கும்?

இறைவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழும்போது உண்டாகும் அமைதியின் பெயரே இஸ்லாம் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள்.

 உதாரணமாக கொலை, கொள்ளை, விபச்சாரம், மது, சூதாட்டம், மூடநம்பிக்கைகள், தீண்டாமை, மனித உரிமை மீறல்கள் போன்ற கொடுமைகளை விலக்கி அங்கு தனி மனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும் பேணக்கூடிய, தீமைகளில் இருந்து விலகி வாழக்கூடிய, இன, நிற, மொழி, நாடு போன்ற வேற்றுமைகளைக் கடந்து  மனித சமத்துவம், சகோதரத்துவம் பேணக்கூடிய, பரஸ்பர அன்பு, தியாகம் கூட்டுறவு போன்ற அழகிய பண்புகள் அமைந்த சமூகம் உருவானால் இவ்வுலகமே அமைதிப் பூங்காவாகாதா?  ஒன்றே மனித குலம், ஒருவனே இறைவன், அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம், நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை