இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 டிசம்பர், 2020

குற்றவாளிகள் தண்டனையை கேட்டுப் பெறும் அற்புதம்

நபிகளார் இஸ்லாம் கற்பிக்கும் தெளிவான ஏக இறைக் கொள்கையையும் மறுமை கோட்பாட்டையும் மக்களிடையே போதிக்க போதிக்க மக்கள் இவ்வுலக வாழ்வை மறுமை வாழ்வோடு இணைத்துப் பார்க்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவாக மக்கள் தாங்கள் வழக்கமாக மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செய்து கொண்டிருந்த தீய செயல்களில் இருந்தும் பாவங்களில் இருந்தும் விலகி வாழ்ந்தார்கள். இறைவன் தன்னைக் கண்காணிக்கிறான், தங்களின் செயல்கள் பற்றி இறுதித்தீர்ப்பு நாளில் விசாரணையும் புண்ணியங்களுக்கு பரிசும் பாவங்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட உள்ளன என்ற உணர்வு அவர்களை முழுமையாக ஆட்கொண்டது.

அப்படியே பாவங்கள் செய்தாலும் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி அவற்றிலிருந்து மீண்டார்கள். ஆனால் பெரும்பாவங்களுக்கு பாவமன்னிப்பு கோருவதோடு அதற்காக இறைவன் விதித்துள்ள தண்டனைகளை இவ்வுலகிலேயே பெற்றால்தான் மறுமை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும் என்றல்லவா இஸ்லாம் கூறுகிறது! உதாரணமாக திருட்டுக்கு கைவெட்டுதல், விபச்சாரத்திற்கு சாட்டையடி அல்லது கல்லெறி தண்டனை, கொலைக்குக் கொலை, உறுப்புக்கள் சிதைப்பவனுக்கு உறுப்பு சிதைதல் போன்ற தண்டனைகளை இஸ்லாம் அரசுக்கு பரிந்துரைக்கிறது. மறுமை தண்டனைகள் இவற்றைவிட மிகக் கடுமையானவை என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கின்றன. உதாரணமாக..

= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30.

= .....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்: (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்: அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்.  மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘ (திருக்குர்ஆன் 18:29)  

இந்நிலையில் பெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்தார்கள்? கீழ்கண்ட நிகழ்வு அதற்கான ஓர் உதாரணம்:

மனிதநேய நீதிபதியாக நபிகளார்

நபிகள் நாயகம் மதீனாவில் இறைத்தூதராக இருந்து அரசாட்சி செய்த காலகட்டம் அது.  

நபி (ஸல்) அவர்களின் திருச்சபையில் மாயிஸ் என்ற தோழர் வந்து, தான் ஒரு பெண்ணுடன் தவறான முறையில் நடந்து கொண்டதாகச் சொன்னார். அவரின் சொல்லை நபிகளார் புறக்கணித்தவர்களாக இருந்தார்கள். எனவே அவர் மீண்டும் மீண்டும் சொன்னார். நான்கு தடவை சொல்லி முடித்தார். அப்பொழுதும் நபிகளார் எதுவும் பேசவில்லை.

ஐந்தாவது முறை அவர் சொல்லும்போது அவரிடம் நீர் அவளுடன் உடலுறவு கொண்டீரா? என்று கேட்டார்கள்.

ஆம்! என்றார் அவர். 

உன்னில் நின்றும் அது அவளின் நின்றும் அதிலே மறையுமளவுக்கு நடந்தீரா? என்று மீண்டும் வினவினார்கள்.

மறுபடியும் ஆம்! என்றார் அவர்.

அப்பொழுதும் அவரை குற்றவாளி என்று ஒப்ப நபி(ஸல்) அவர்களுக்கு மனம் வரவில்லை. மேலும் தொடர்ந்து பல கேள்விகள் கேட்டார்கள்.

சுர்மா புட்டியிலே சுர்மா குச்சி மறைவது போலவும், கிணற்றுக்குள்ளே கயிறு மறைவது போலவும் மறைந்ததா? என்று கேட்டார்கள்.

ஆம்! என்றே மறுபடியும் அவர் கூறினார்.

விபச்சாரம் என்றால் என்னவென்று தெரியுமா? என்று கேட்டவுடன், அவர் விஷயத்தை படு பயங்கரமாக வெளிப்படுத்த விரும்பியவராக, ஆம்! ஓர் ஆண்மகன் தன் மனைவியுடன் ஹலாலாக(சட்டாபூர்வமாக அனுமதிக்கப்பட்ட முறையில்) நடந்து கள்வானே அதே காரியத்தை அப்பெண்ணுடன் நான் ஹராமாக(சட்டவிரோதமாக) நடத்தி விட்டேன் என்றார்.

இவ்வாறு சல்வதன் மூலம் உமது நக்கம் யாது? என்று இறுதியாகக் கேட்டார்கள்.

(இக்குற்றத்திற்கான தண்டனையை நிறைவேற்றுவதன் வாயிலாக) என்னை தூய்மைப்படுத்திக் கள்ள விரும்புகின்றேன் என்று அவர் பதிலளித்தார்.

தாம் செய்த குற்றத்தை தாமே மனமுவந்து விண்ணப்பித்து, தண்டனையை ஏற்றுக்கொள்ள முன்வந்து விட்ட பிறகு வேறு வழியின்றி அவருக்கு விபச்சாரத்திற்குரிய கல்லெறி தண்டனையை நிறைவேற்ற அண்ணலார் (ஸல்)அவர்கள் ஆணையிட்டார்கள். அதன்படி நிறைவேற்றப்பட்டது.

அறிவிப்பு: அபூஹுரைரா (அபூதாவூது)

கவனிக்க வேண்டிய குறிப்புகள்:

1.      இறைவனின் இறுதித் தூதர் என்ற முறையில் அவரது வாழ்க்கை நிகழ்வுகள் மனித குலத்திற்கு வாழ்க்கை முன்மாதிரியாக கற்பிக்கப் படவேண்டியவையாக உள்ளன. குறிப்பாக இந்த நிகழ்வில் ஒரு நீதிபதி எவ்வாறு வழக்கை விசாரிப்பது என்பதற்கும் மனம்திருந்தி வந்த குற்றவாளிகளோடு எவ்வாறு நடந்துகொள்வது என்பதற்கும் முன்மாதிரிகள் உள்ளன. எனவே அவை தெளிவான முறையில் பதிவு செய்யப்பட்டு நபிமொழித் தொகுப்புகளில் பாதுகாக்கப்பட்டு வருவதை நீங்கள் காணலாம். இது இறைவனின் ஏற்பாடு.

2.      மேற்படி சம்பவம் ஒரு மனிதரின் வாழ்வா சாவா என்பது தொடர்பானது. ஒரு நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது என்பதாலும் மனம் திருந்தி வந்த தோழரை எப்படியாவது மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தன் ஆர்வத்தாலும் கருணை நபிகளார் முழு விவரத்தையும் துருவித்துருவி விசாரித்ததை நாம் கவனிக்கலாம்.

3.      இனி சிலருக்கு இப்படியும் ஒரு சந்தேகம் எழலாம். ‘மனம்திருந்தி வந்த குற்றவாளியை மன்னித்து தண்டனையிலிருந்து நபிகளார் விலக்கு அளித்து இருக்கலாமே? ஏன் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்?’. இதற்கான விளக்கம் இதுதான்: பூமியில் மக்களிடையே ஒழுக்க வாழ்வை நிலைநாட்டுவதற்காக இறைவன் விதித்தவையே அவன் தரும் சட்டங்கள். அதை முன்னுதாரணமாக நின்று நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இறைத்தூதர் என்ற முறையில் நபிகளாருக்கு வழங்கப்பட்டு இருந்தது. ஒருவேளை நபிகளார் சுயவிருப்பத்தின் அடிப்படையில் விலக்கு அளித்திருந்தால் அதையே மேற்கோள்காட்டி பிற்கால தலைமுறையினர் விபச்சார குற்றவாளிகளை தண்டனையிலிருந்து விடுவித்து இருப்பார்கள். இறைசட்டங்கள் வீரியம் இழந்தவையாகி விபச்சாரக் குற்றங்கள் பெருக வாய்ப்பாகி விடும்.

------------------------------------------- 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக