இந்த உலக வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு
நாத்திகர்களிடம் இருந்து பதில் கிடைக்காது. ஆனால் இறைவனின் இறுதிவேதம் தெளிவான
பதிலைத் தருகிறது. தற்காலிகமான இவ்வுலக வாழ்வின் நோக்கமே மனிதனைப்
பரீட்சிப்பதற்காக வேண்டிதான் என்பதை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உணரும் வண்ணம்
திருக்குர்ஆன் தனது வாதங்களை முன்வைக்கிறது.
அதாவது
இந்த உலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்படும். அதைத் தொடர்ந்து மீணடும் இறைவன்
புறத்திலிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் விசாரணைக்காக
உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அன்று இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தோருக்கு
சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் விதிக்கப்படும். அதுதான் நமது நிரந்தர
இருப்பிடமாக இருக்கும்
இவற்றை நம் புலன்களால் அறிய
முடியாத நிலையில் நாம் உள்ளோம். ஆனால் நம் புலன்களுக்கு எட்டவில்லை என்ற
காரணத்துக்காக அவற்றை மறுத்து விட முடியுமா? அவ்வாறு
மறுப்பது என்பது பகுத்தறிவுக்கு இழுக்கு அல்லவா? புலன்களுக்கு
எட்டும் தகவல்களை (sensible data) சேகரித்துக் கொண்டு எட்டாதவற்றை (insensible) ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். நம்மை
மீறிய மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் நாம் இக்கட்டங்களைக் கடந்து வருகிறோம்
என்று உணர்ந்த பிறகும் எப்படி இவற்றை அப்பட்டமாக மறுக்க முடியும்? மேலும் இவற்றை மறுப்பதும்
அலட்சியம் செய்வதும் நாளை நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறப்படும்போது
இதுபற்றி ஆராயாமல் இருக்க முடியுமா?
அவ்வாறு பகுத்தறிவால் ஆராயும்போது மழையின் அன்றாட செயல்பாடுகளை
ஆராய்வோர் மறுமை வாழ்வு என்பது சாத்தியமே என்பதை அறிவார்கள்:
= 22:63. நிச்சயமாக
அல்லாஹ் வானத்திலிருந்து (மழை)
நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி
விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்
கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.
= 41:39. பூமியானது
காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில்
நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற்
பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக
இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
30:24. அச்சமும்,
ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்;
பிறகு வானத்திலிருந்து மழை பொழியச்
செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர்
உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக
அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
41:39. பூமியானது
காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில்
நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை
பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக
வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே,
நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
43:11. அவன்தான்
வானத்திலிருந்து மழையை
அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு
இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும்
(மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.
22:5. மனிதர்களே!
(இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில்
இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம்
நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும்,
பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு
உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக்
கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே
(இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு
குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு
உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை
அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில்
சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு
பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை
விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை)
நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து,
அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக