இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 மே, 2016

மது தீமைகளின் தாய் !


'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்)...
 கெட்டுப்போகும் இளைஞர் சமுதாயம், சீர்குலையும் குடும்ப உறவுகள், சிதையும் பொருளாதாரம், மங்கும் உழைப்புத் திறன், பெருகும் சாலை விபத்துகள, குடிநோய்கள், அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், தற்கொலைகள், குற்றச்செயல்கள்... என மதுவின் கொடுமைகள் நீள்கின்றன.
ஆனால் இன்று பள்ளி மாணவர்களும் கூட குடித்துவிட்டு வகுப்புக்கு வரும் அளவுக்கு மதுப்பழக்கம் பரவலாகி உள்ளது. பாரத நாடு முழுவதும் 20 கோடி மக்கள் மதுவுக்கு அடிமை. தமிழகத்தில் 2 கோடி பேர் மதுவுக்கு அடிமை என புள்ளிவிவரங்கள்  கூறுகின்றன.
கொடிய இந்த மது அரக்கனின் ஆதிக்கத்தில் இருந்து மனித குலத்தைக் காக்கவேண்டும் என்பது சமூகப் பொறுப்புணர்வுள்ள நல்ல மனிதர்களின் ஆவல். ஆனால் இத்தீமையை உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலமாகவோ சட்டங்கள் மூலமாகவோ காவல்துறை கட்டுப்பாடுகள் மூலமாகவோ தடுக்க முடிவதில்லை என்பதை அனுபவபூர்வமாகவே நாம் அறிகிறோம். என்னதான் கடுமையாக மதுவிலக்கையே அரசு அமுல்படுத்தினாலும் அங்கு கள்ளச்சாராயம் ஊடுருவுவதைக் காண்கிறோம்.

பிறகு என்னதான் வழி?
மேற்படி தீமையில் இருந்து மக்களைக் காப்பாற்ற உரிய தடுப்பு நடவடிக்கைகளை கைகொள்வதோடு  மனித இதயங்களை திருத்துவதற்கான வழிகளையும் ஒருசேர செயல்படுத்தினால் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும்.
முதலில் மனித மனங்களைத் திருத்தி அவன் பாவங்களிருந்து தவிர்ந்து வாழ வேண்டுமானால் என்ன தேவை எனபதை ஆராய்வோம். அதற்கு முக்கியமாக மனித மனங்களுக்குள் இரண்டு அடிப்படை விஷயங்கள் விதைக்கப் படவேண்டும். முதலாவதாக என்னைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவன் ஒருவன் எனக்கு மேலே இருக்கிறான். அவன் என்னைக் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு  மிகமிக முக்கியமானது. அடுத்த படியாக அந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன், நான் தவறு செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற அச்ச உணர்வும் நான் நல்லது செய்தால் பரிசளிப்பான் என்ற எதிர்பார்ப்பும் மிக முக்கியமானது. இந்தப் பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும்.
 மனிதனிடம் இந்த இறையச்சம் இல்லை என்றால் மனிதன் எந்தப் பாவத்தையும் துச்சமாகவே கருதுவான். தன் மனோ இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ள மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும்  விபச்சாரம் உட்பட எப்பாவத்தையும் கூச்சமின்றி செய்வான். அவற்றை நிறைவேற்றக் கொள்ள கொள்ளையும் கொலையும் துணிந்து செய்வான்.
இந்த இறையச்சம் என்பது இன்று இல்லாமல் போனது என்?
இதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளன..
ஸ்ரீ அறவே நிரூபிக்கப்படாத மனித ஊகங்களைக் கோர்வையாக்கி பரிணாமக் கொள்கை என்ற பெயரில் தவறான அறிவியலை மக்களுக்குக்  கற்பித்து இறைவனை மறுக்கும் நாத்திகம் பள்ளிகளில் போதிக்கப்படுகிறது.
ஸ்ரீ ஆன்மீகத்தின் பெயரில் சில இடைத்தரகர்கள் பாவபரிகாரம் என்று கூறி சில சடங்குகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இன்னும் சிலர் ஒரு குறிப்பிட்ட மனிதரில் நம்பிக்கை கொண்டால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்றும் போதிக்கின்றனர்.
ஸ்ரீ 'படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன்' என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, குழந்தைப் பருவம் முதல் இறைவன் அல்லாதவற்றை எல்லாம் காட்டி 'இதுதான் உன் கடவுள்' என்று போதிக்கின்றனர்.
இப்படிப்பட்ட பொறுப்பற்ற போதனைகளால் கடவுளைப் பற்றிய மதிப்புணர்வு (seriousness) மழுங்கடிக்கப்பட்டு சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் தலைமுறைகள் வளர்கின்றன. அவர்கள் பாவங்களில் துணிந்து ஈடுபடுகிறார்கள். இதை முதலில் திருத்தினால்தான் தனி மனித நல்லொழுக்கம் உருவாகும்.

இஸ்லாம்  உண்டாக்கும்  தனிநபர் நல்லொழுக்கம்:
இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் எவல்விலக்கல்களை அல்லது  கட்டுப்பாடுகளைப் (discipline) பேணி வாழ்வதால் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்!  இவ்வாறு கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ்ந்ததற்குப் இறைவன் புறத்திலிருந்து மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் பரிசாக வழங்கப்படும் என்கிறது இஸ்லாம்.
கீழ்கண்ட முக்கியமான உண்மைகளை தெளிவான முறையில் கற்பித்து அவற்றை அனுதினமும் பேணி வாழும் வகையில் வழிபாட்டு முறைகளை அமைத்து இஸ்லாம் அதனை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டோரை ஒழுக்கம் பேணுபவர்களாக்குகிறது:
தெளிவான கடவுள் கொள்கை:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்து கொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கை களுக்கோ வீண் சடங்கு சம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல்  அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம். படைத்தவனைத் தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி - அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம்.

இறைவனின் நீதிவிசாரணையும் மறுமை வாழ்வும்:
அடுத்ததாக இவ்வுலக வாழ்க்கையில் மனிதனால் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் இறைவனால் பதிவு செய்யப்பட்டு அதுபற்றி மறுமையில் விசாரிக்கப்பட்டு அந்த அடிப்படையில் சொர்க்கமோ அல்லது நரகமோ அவனுக்கு வாய்க்க இருக்கிறது என்கிறது இஸ்லாம்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்;. அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

பாவமன்னிப்பு பற்றிய தெளிவு:
இறைவனை மாபெரும் கருணையாளன் என்று அறிமுகப்படுத்தும் அதேவேளையில் இடைத்தரகர்கள் கற்பிக்கக்கூடிய வீண் சடங்குகள் அல்லது மூடமான நம்பிக்கைகள் மூலம் பாவங்கள் மன்னிக்கப் படுவதில்லை என்கிறது இஸ்லாம். ஒருவர் செய்த பாவத்திற்கு அவரே பொறுப்பாவார் என்றும் மனம்வருந்தி இறைவனிடம் முறையிட்டு மன்றாடுதல் மூலமே பாவங்கள் மன்னிக்கப்பட வாய்ப்புண்டு என்று தெளிவுபட கூறுகிறது. தனிநபர்களை பாதிக்கக்கூடிய குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட நபர் மன்னித்தாலே யன்றி இறைவன் மன்னிப்பதில்லை என்றும் சமூகங்களை பாதிக்கக்கூடிய பெருங்குற்றங்களுக்கு இவ்வுலகிலேயே அதற்குரிய தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் இறைவனிடம் மன்னிப்பு உண்டு என்றும் தெளிவுபடுத்துகிறது இஸ்லாம்.

பாவம் எது புண்ணியம் எது என்பதற்கான அளவுகோல:;
மனிதர்கள் மனோஇச்சைக்கு ஏற்ப பாவ புண்ணியங்களைத் தீர்மானிப்பது பாவங்கள் பெருகுவதற்கு மற்றொரு காரணம் ஆகும். உண்மையில் இவ்வுலகின் சொந்தக்காரனான இறைவன் எதைச் செய் என்று எவுகிறானோ அதுவே புண்ணியம். அவன் தடுக்கும் செயலே பாவம். அந்த வகையில் இன்று இறைவனின் இறுதிவேதமான திருக்குர்ஆனும் முஹம்மது நபி அவர்களின் நடைமுறைகளும் பாவபுண்ணியங்களை தீர்மானிக்கும் தெளிவான அளவுகோலைத் தருகின்றன.
அவனது கட்டளைப்படி மது என்பது முழுக்க தடை செய்யப்பட்டதாகும்.
ஸ்ரீ  இறைநம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், iஷத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (திருக்குர்ஆன் 5:90 )
ஸ்ரீ  இறைகட்டளையை மீறி அதை அருந்துவதும் உற்பத்தி செய்வதும் விற்பதும் வாங்குவதும் உதவுவதும் என அனைத்தும் தடை செய்யப் பட்டதாகும். இறைவனின் சாபத்திற்கு உரிய பாவமாகும் என்றும் அவர்களுக்கு மறுமையில் நரக வேதனை காத்திருக்கிறது என்றும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்ச்சரித்துள்ளதை நபிமொழி நூல்களில் காண்கிறோம்.
ஸ்ரீ சட்டம் ஒழுங்கைப் பேணுவதும் தங்களின் ஆட்சிக்குட்பட்ட மக்களின் நலனும் பாதுகாப்பும் அரசாள்வோரின் பொறுப்பாகும். இப்பொறுப்பை நிறைவேற்றாத ஆட்சியாளர்கள் இறைவனின் தண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் நபிகள் நாயகம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்:
'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.....' (நூல்: புகாரீ 5200)
 மது அருந்துவோருக்கு தண்டனை:
மதுவைத் தீமைகளின் தாய் என்று கண்டித்து அதைத் தடை செய்ததோடு மட்டுமல்லாமல் அதன் தீமைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வையும் நபிகள் நாயகம் காட்டிவிட்டுச் சென்றார்கள். அதை மதீனாவில் அரசாட்சி கைவந்தபோது நடைமுறைப்படுத்தவும் செய்தார்கள். நம்மாலும் இன்று அதை நடைமுறைப்படுத்த முடியும். அது என்ன?
ஸ்ரீ நுஐமான் என்பவர் மது குடித்த நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரை அடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும், செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.
அறிவிப்பவர்: உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி)  (ஆதார நூல்: அஹ்மத் 18610)
ஆக, மதுவிலக்கை அமுல்ப்படுத்துவதோடு பொதுமக்களுக்கு முன் குடித்த நிலையில் வருபவர்களுக்கு உடனடி தண்டனை வழங்க ஏற்பாடு செய்தால் யாராவது அதற்குத் துணிவார்களா? பாதிக்கப்படும் மக்களுக்கு 'குடிமகன்களை' தண்டிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து அதை சட்டபூர்வமாக்கலாம். இதை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினால் நாடே இதுகுறித்து விழிப்புணர்வு பெறும் என்பதில் ஐயம் இல்லை.

ஆக, இறை உணர்வையும் மறுமை உணர்வையும் உரிய முறையில் விதைப்பதன் மூலம் மனித மனங்களைப் பண்படுத்தி மதுவிலிருந்து விலகி வாழும் நல்லோர்கள் நிறைந்த சமூகத்தை உருவாக்க உழைப்போம் வாரீர்.

மாமனிதர் மது ஒழித்த வரலாறு 
 http://quranmalar.blogspot.com/2014/10/blog-post_24.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக