இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 ஏப்ரல், 2013

திருக்குர்ஆன் பூமி தட்டையானது என்று கூறுகிறதா?

‘பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்’ என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா?

பதில்:

1. பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.

மேற்படி கேள்வி அருள்மறை குர்ஆனின் 71வது அத்தியாயம் ஸுரத்துன் நூஹ்வின் 19வது வசனத்தை அடிப்பைடயாக கொண்டது. மேற்படி அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
‘அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.’
மேற்படி வசனம் அத்தோடு முடிந்து விடவவில்லை. அதனை அடுத்த வசனத்தில் முந்தைய வசனத்திற்கான காரணத்தையும் சொல்கிறது.
‘அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்’. (அல்குர்ஆன் 71:20)

மேற்படி வசனத்தில் உள்ள செய்தியை மற்றொரு வசனத்தின் மூலமாகவும் அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. குர்ஆனின் 20வது அத்தியாயம் ஸுரத்துத் தாஹாவின் 53வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது.
‘(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்…..’ (அல்குர்ஆன் 20:23)

பூமியின் மேல் பகுதி முப்பது மைல்களுக்கும் குறைவான தடிமனைக் கொண்டது. மூவாயிரத்து எழுநூற்றம்பைது மைல்கள் ‘ஆரம’; (பூமியின் மையப் பகுதிக்கும் மேல் பறப்புக்கும் உள்ள தூரம் – சுயனரைள) கொண்ட பூமியின் அடிப்பகுதியோட ஒப்பிடும்போது – முப்பது மைல் தடிமன் என்பது மிகவும் மெல்லியதுதான். பூமியின் அடிப்பகுதியானது வெப்பமான -திரவநிலையில் உள்ளது. பூமியில் மேல் பகுதியில் வாழக்கூடிய எந்தவிதமான உயிரினமும் – பூமியின் அடிப்பகுதியில் வாழ முடியாத அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும். ஆனால் பூமியின் மேல் பகுதி உயிரினங்கள் வாழக்கூடிய நல்ல கெட்டியான நிலையில் இருக்கிறது. பூமியை விரிப்பாக்கி அதில் நாம் பயணம் செய்யக் கூடிய அளவுக்கு பாதைகளை அமைத்து தந்திருக்கிறோம் என்று அருள்மறை குர்ஆன் சரியாகத்தான் சொல்கிறது.


2. விரிப்புகளை சமமான தரை மாத்திரம் இல்லாமல் – மற்ற இடங்களிலும் பரப்பலாம்.

பூமி தட்டையானது என்று சொல்லும் அருள்மறை குர்ஆனின் வசனம் ஒன்று கூட கிடையாது. அருள்மறை குர்ஆனின் வசனம் – பூமியின் மேற்பகுதியை ஒரு விரிப்புடன் ஒப்பிடுகிறது. சில பேர் விரிப்புக்கள் சமமான தரையில் மாத்திரம்தான் விரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விரிப்புக்களை பெரிய பூமி போன்ற கோளத்தின் மீதும் விரிக்கலாம் அல்லது பரப்பலாம். ஒரு பெரிய பூமி உருண்டையின் மாதிரி ஒன்றை எடுத்து – ஒரு விரிப்பை அதன் மீது பரப்பிப் பார்த்தால் – மேற்படி கருத்து உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக விரிப்புகள் – நடந்து செல்வதற்கு வசதியாகத்தான் விரிக்கப்படுகின்றன. அருள்மறை குர்ஆன் ஒரு விரிப்பை பூமியின் மேல் பகுதிக்கு உதாரணமாக காட்டுகிறது. பூமியின் மேல் பகுதியில் உள்ள விரிப்புப் போன்ற பகுதி இல்லை எனில் பூமியின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத்தின் காரணமாக பூமியின் மேல் பகுதியில் உள்ள எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாமல் போயிருக்கும். இவ்வாறு அருள்மறை குர்ஆனின் மேற்படி கூற்று அறிவு ரீதியானதோடு, அருள்மறை குர்ஆன் இவ்வுலகிற்கு வந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு புவியியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையைப் பற்றியும் குறிப்பிடுகிறது குர்ஆனின் மேற்படி வசனம்.


3. பூமி விரிக்கப்பட்டிருக்கிறது:

அதேபோன்று அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் பூமி விரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிடுகின்றன.
இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்: எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாம் மேம்பாடுடையோம்.’ என்று அருள்மறை குர்ஆனின் 51வது அத்தியாயம் ஸுரத்துத் தாரியாத்தின் 48வது வசனம் குறிப்பிடுகின்றது.

அதுபோன்று அருள்மறை குர்ஆனின் 78வது அத்தியாயம் ஸுரத்துந் நபாவின் 6 மற்றும் 7வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
‘நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?. இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?’.

பூமி தட்டையானது என்று நாம் சிறிதேனும் பொருள்கொள்ளும் வகையில் அருள்மறை குர்ஆனின் எந்த வசனமும் குறிப்பிடவில்லை. அருள்மறை குறிப்பிடுவதெல்லாம் பூமி விசாலமானது என்றுதான். அருள்மறை குர்ஆன் பூமி விசாலமானது என்று குறிப்பிடக் காரணம் என்ன? என்று அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 29 ஸுரத்துல் அன்கபூத்தின் 56வது வசனம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

‘ஈமான் கொண்ட என் அடியார்களே!. நிச்சயமாக என் பூமி விசாலமானது: ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.’

சுற்றுப்புற – சூழலின் காரணமாகத்தான் என்னால் நல்லது செய்ய முடியவில்லை, நான் குற்றங்களையேச் செய்து வந்தேன் என்று மேற்படி வசனத்தை தெரிந்த எவரும் மன்னித்துக் கொள்ளச் சொல்லி, சொல்ல முடியாது.


4. பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:

அருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.
‘இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான்’.

மேற்படி வசனத்தில் ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தை ‘துஹ்யா’ என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி ‘துஹ்யா’ என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEO-SPHERICAL) வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEO-SPHERICAL) வடிவில்தான் உள்ளது.

இவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEO-SPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான்.


மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக