இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 டிசம்பர், 2012

நடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....



திரையில் தோன்றி சாகசங்களும் லீலைகளும் புரியும் ‘கற்புக்கரசர்களும்’ ‘கற்புக்கரசிகளும்தான்’ இந்த நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் என்றும் அவர்கள் மட்டும்தான் ஆட்சிக்கட்டிலுக்குத் தகுதியானவர்கள் என்று கருதுவோர் பெருகிவரும் காலம் இது. அதை நாம் நிதர்சனமாகக் கண்டும் வருகிறோம்.
இன்று பாமர மக்களின் வருமானங்களை இவர்கள் எவ்வாறு கொள்ளையடிக்கிறார்கள் என்பதை அறிய ஒருசில முன்னணி நடிக நடிகையர்கள் வாங்கும் சம்பளங்களைப் பாருங்கள்: (தகவல் உதவி: http://www.facebook.com/groups/arasiyalkalam/permalink/398703743538276/)
நடிகர் நடிகைகளின் ஊதிய பட்டியல் :-

ரஜினிகாந்த் ------ 30 கோடி
கமல் ஹாசன் -----------25 கோடி
அஜித் --------15 கோடி
தனுஷ் --------- 7 கோடி
விசால் --------3 கோடி
ஆர்யா ------- 2 கோடி
ஜீவா ------1 .5 கோடி

நடிகைகள் ஊதியம்

நயன்தாரா ----------- 2 கோடி
அசின் ----------- 2 கோடி
இலியானா -------------1 .5 கோடி
திரிஷா ------------ 1 கோடி
அனுஷ்கா -------------- 1 கோடி
அமலாபால் ------------ 60 லட்சம்
தமன்னா ----------- 50 லட்சம்
ஹன்சிகா 50 லட்சம்
டாப்சி ------- 30 லட்சம்
அஞ்சலி -------------- 30 லட்சம்
இன்று பத்திரிகைகள், தொலக்காட்சி, விளம்பரங்கள், சுவரொட்டிகள், அரசியல் என அனைத்தையும் இவர்களே ஆக்கிரமித்துக்கொண்டு நிற்பதைக் காண்கிறோம். இவர்களில் இறந்தவர்களுக்கு மட்டுமல்ல உயிரோடு உள்ளவர்களுக்கும் படங்களும் சிலைகளும் வைத்து வணங்குகிறார்கள் அவர்களின் ரசிகர்கள். ஒருபடி மேலே சென்று கோவில்கள் கட்டி பூஜைகளும் வழிபாடுகளும் நடத்துகிறார்கள். பொதுமக்களிடம் வசூல்வேட்டை நடத்திதான் இதைச் செய்கிறார்கள் என்பது வேறு விஷயம். போகின்ற போக்கில் நம் தமிழகம் நாளை திரையுலகக் கடவுளர்களின் கோவில்கள் நிறைந்த மாநிலமாக மாறலாம். இன்று வழிபடப்படும் கடவுளர்களை மக்கள் மறந்து நாளை இவர்கள் வழிபடப்படலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் மிகத் தெளிவாகவே தென்படுகின்றன.
இந்த விபரீதமான போக்கின் விளைவாக ஏற்படப்போகும் ஆபத்துகளை இவர்கள் உணராதிருப்பதே இத்தீமை பெருகிவரக் காரணம். இறைவன் அல்லாதவற்றை இறைவன் என்று கருதுவதும் அவற்றை வழிபடுவதும்  இணைவைத்தல் என்று சொல்லப்படும். இவ்வுலகைப் படைத்த இறைவன் இப்பாவத்தைச் செய்வோரை எச்சரிக்கிறான்
'நிச்சயமாக இறைவன் ; தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்¢ இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் இறைவனுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.'  (திருக்குர்ஆன் 4:48)
  இறைவனுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை இறைவன் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
 இவர்களை சிந்திக்க வைத்து நேர்வழிப் படுத்துவது உண்மை இறைவிசுவாசிகளின் கடமை.
நடிகர் நடிகைகளுக்கு கோயில் கட்டுபவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் ஆற்றல் இந்த நடிகர் நடிகைகளுக்கு உண்டு என்று நம்புகிறார்களா? ஆம் என்றால் சம்மந்தப்பட்ட நடிகைகள் உயிரோடுதானே இருக்கிறார்கள்? நேரடியாகப் போய் வரம் கேட்கவேண்டியதுதானே? கோயில் எதற்கு? பூஜை எதற்கு? படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளை இவர்கள் உணரமாட்டார்களா?
30:40. இறைவன்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? இறைவன் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக