இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 அக்டோபர், 2012

படைத்தவன்பால் திரும்புவோம் பாரதத்தைக் காப்போம்

Related image
இன்று நாம் அனைவருமே பல்வேறுவிதமான பாவங்களின் பெருக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி தவித்துக் கொண்டிருக்கிறோம். அமைதி என்பது கண்ணுக்கெட்டாத தூரத்துக் கனவாகவே தொடர்கிறது.
  • கொலை கொள்ளை, மோசடி, விபச்சாரம், பாலியல் பலாத்காரங்கள், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகள், கட்டப்பஞ்சாயத்து, வன்முறைகள்  என்று ஒருபுறம்.
  • தனிநபர் வாழ்வில் பொய், புரட்டு, புறம் பேசுதல், நம்பிக்கை மோசடி, தாய்தந்தையரைப் புறக்கணித்தல், பெண்ணுரிமை பறித்தல், வரதட்சணைக் கொடுமைகள், சிசுக்கொலைகள், உறவுகளை முறித்தல்...... என்பன போன்றவை இன்னொரு புறம்.
  • மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், காற்று இவற்றில் கண்மூடித்தனமான கலப்படங்கள் செய்தும் பயிர்களின் அமோக விளைச்சல்களுக்காக உயிர்கொல்லி இரசாயனங்களை பயன்படுத்தியும்  மீளமுடியாத நோய்களுக்கு மனிதகுலத்தை கொண்டு செல்லும் சுயநலக் கூட்டங்கள் ஒருபுறம். 
  • ஒரே மனித இனத்திற்குள் மதம், இனம், நாடு , மொழி, நிறம் இவற்றின் பெயர்களால் வெறியூட்டி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாய்வது ஒருபுறம்......
  • நலிந்த நாடுகளில் மனித உயிர்களையும், அவர்களின் உழைப்புகளையும் மாய்ப்பதையே தங்கள் நாடுகளின் முக்கிய முதலீடாகக் கொண்டு தங்களின் ஆயுத விற்பனை செய்து உலகெங்கும் பயங்கரவாதத்தை வளர்த்துவரும் வல்லரசு நாடுகளும் அவற்றின் கூட்டாளிகளும் ஒருபுறம்.....
பட்டியலிட இன்னும் பல இருந்தாலும் விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்வோம். இவ்வாறு பலவிதமான கொடுமைகளும் குற்றங்களும் பாவங்களும் மனித சமுதாயத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.
 இவற்றிலிருந்து எப்போது விடிவு ஏற்படும் என்று ஏங்காத இதயங்கள் கிடையாது. ஆனால் எவ்வாறு இவற்றைக் களைவது? மனித இதயங்கள் திருந்தினால் மட்டுமே இது சாத்தியம். ஒரு ஆக்கப்பூர்வமான ஒரு செயல்திட்டம் இதற்குத் தேவை.
 வெறும் நீதி போதனைகளோ அறிவுரைகளோ மனிதனை ஒருபோதும் திருத்தாது. கடுமையான சட்டங்களோ காவல்துறை கட்டுப்பாடுகளோ மனிதனைத் திருத்த முடிவதில்லை என்பதேயும் நாம் கண்டுவருகிறோம். அன்பினால் எதையும் வெல்லலாம் என்றும் ஒரு கன்னத்திலடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றெல்லாம் தேனொழுகும்  வசனங்களைப் போதிப்பதனாலும் பாவங்களின் பெருக்கத்தை கட்டுப் படுத்த முடிவதில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.
பிறகு என்னதான் வழி?
 முதலில் மனிதன் பாவங்களிருந்து தவிர்ந்து வாழ வேண்டுமானால் என்ன தேவை எனபதை ஆராய்வோம். அதற்கு முக்கியமாக மனித மனங்களுக்குள் இரண்டு அடிப்படை விஷயங்கள் விதைக்கப் படவேண்டும். முதலாவதாக என்னைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவன் ஒருவன் எனக்கு மேலே இருக்கிறான். அவன் என்னைக் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு  மிகமிக முக்கியமானது. அடுத்த படியாக அந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன், நான் தவறு செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற பய உணர்வும் நல்லது செய்தால் பரிசளிப்பான் என்ற எதிர்பார்ர்ப்பும் மிக முக்கியமானது. 
 இந்த இரண்டு உணர்வுகளும் இல்லை என்றால் மனிதன் எந்தப் பாவத்தையும் துச்சமாகவே கருதுவான். தன் மனோ இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள எப்பாவத்தைச் செய்யவும் துணிவான்.
 ஆனால் இன்று என்ன நடக்கிறது?
= படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன் என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, குழந்தைப் பருவம் முதல் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் உருவங்களையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி இதுதான் உன் கடவுள் என்று போதிக்கப் படுகிறது. அதனால் சிறுவயதிலேயே கடவுளைப் பற்றிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் தலைமுறைகள் வளர்கின்றன. பாவங்களும் பாவிகளும் கட்டுக்கடங்காமல் பெருகி அப்படிப்பட்டவர்களால் நாடு ஆளப்படுகிறது. நாட்டின் பொருளாதாரமும் வளங்களும் அரசாட்சியும் அவர்களின் கைகளில் சிக்கி அதன் விளைவாக அராஜகமும் கொடுங்கோன்மையும் கோலோச்சுகின்றன.
 = சில சிந்திக்கக்கூடிய குழந்தைகள் வழிபடும் உருவங்களைக் காட்டி, இது எப்படியப்பா கடவுளாகும்? என்று எதிர்கேள்வி எழுப்பினாலும் பெற்றோர்கள் கண்டித்து டேய், கடவுளைப்பற்றி அதையெல்லாம் கேட்கக்கூடாது, சொல்லப் பட்டதை அப்படியே நம்பு! என்று குழந்தைகளின் பகுத்தறிவை முடமாக்குவதையும் நாம் கண்டு வருகிறோம்.
  =  இவ்வாறு வளரும் தலைமுறைகளிடையே போலிக் கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் இடைத்தரகர்களும் பலவிதமான மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அவர்களைத் தங்களுக்கு அடிமையாக்குகின்றனர். வழிபாடு என்ற பெயரிலும், சடங்கு, சம்பிரதாயம், தோஷம், பரிகாரம் போன்ற பெயர்களில் மோசடிகள் செய்து  அவர்களின் சம்பாதியங்களை  கொள்ளை அடிக்கின்றனர். இயற்கை வளத்தாலும் மனித வளத்தாலும் அறிவு வளத்தாலும் உலகில் முன்னிலையில் உள்ள நம்நாட்டின் செல்வங்கள் கடவுளின் பெயரால் சூறையாடப் படுவதால் இன்று நாட்டின் பாதிக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் நிலை ஏற்படுகிறது.
  = அது போக, ஒரு சில மனிதர்களை மக்கள்  கடவுளின் அவதாரங்கள் என்றும் கடவுளின் நெருக்கத்தைப் பெற்றவர்கள் என்றும் கண்மூடித்தனமாக நம்புவதால் அவர்கள் ஆங்காங்கே ஆசிரமங்களை அமைத்து தங்களது செல்வாக்கினால் நாட்டைக் கொள்ளையடிக்கும் கறுப்புப் பண முதலைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அடைக்கலம் கொடுகிறார்கள். அதனால் அவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தொடர்ந்து நாட்டைச் சூறையாடுகிறார்கள்.  
 = இவ்வாறு மக்கள் கடவுள் அல்லதவற்றை எல்லாம் கடவுள் என்று நம்பத் தலைப்படும் போது அவற்றை வழிபடுவோர் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து மதங்களும் ஜாதிகளும் உருவாகின்றன. ஒரே இயற்க்கை அமைப்பைக் கொண்ட மனித இனத்தில் என்றும் இணையவே முடியாத பிரிவுகள் உண்டாகி ஒருவரையொருவர் அடித்து மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. நமது உழைப்புக்களும் சம்பாத்தியங்களும் விளைச்சல்களும் கலவரங்களில் தீக்கிரையாகின்றன.
   இவ்வளவும் எதனால்? ........ படைத்த இறைவனை விட்டு விட்டு அவனது படைப்பினங்களை மக்கள் வணங்கத் துணிந்ததால்தானே!
 ஆனால் படைத்தவனை வழிபடுவதற்கு எந்த இடைத் தரகர்களும் சடங்குகளும் தேவை இல்லை. அவனுக்கு எந்த காணிக்கைகளும் செலுத்தவேண்டியதில்லை. சர்வ வல்லமையும் சர்வஞானியும் ஆன அவனை நேரடியாக அணுகி வணங்கவும் அவனிடம் பிரார்த்திக்கவும் வேண்டும். அப்படிப்பட்ட தூய்மையான வழிபாட்டு முறையைத்தான் எல்லா காலத்திலும் வந்த இறைவனின் தூதர்கள்  நமக்குக் கற்றுத் தந்தார்கள். அதையே இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அவர் மூலமாக அருளப்பட்ட இறுதி இறைவேதமான  திருக்குர்ஆனும் கற்றுத்தருவதை நீங்கள் காணலாம்.
   நபியே நீர் கூறுவீராக! இறைவன்- அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
.(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;. என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக. (திருக்குர்ஆன் 2:186)

மேற்கண்ட இலக்கணங்களோடு உள்ளவனே இறைவன் என்று உறுதியாக நம்பி அவனை நேரடியாக மக்கள் என்று வணங்க முற்படுகிறார்களோ அன்றுமுதல்தான் மாற்றங்கள் நிகழும். நாடும் அழிவிலிருந்து காப்பாற்றப்படும். 
   படைத்த இறைவனை புறக்கணித்து அவனைச் சிறுமைப் படுத்தும் விதமாக அவனுக்கு உருவங்கள் சமைத்து அவன் நமக்குத்தந்து கொண்டிருக்கும் அருட்கொடைகளுக்கு செய்நன்றி கொன்று வாழ்ந்தால் அவனது கோபத்திற்கு நாம் ஆளாவோம். அதனால் இம்மையில் அமைதியின்மையும் மறுமையில் நரகவாழ்வும் அனுபவிக்க வேண்டி வரும். 

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html


வெள்ளி, 26 அக்டோபர், 2012

தியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்

Image result for eid ul adha 2016
இவ்வுலக வாழ்க்கை என்பது இறைவனால் நடத்தப்படும் பரீட்சை என்பதை அனைவரும் அறிவோம். இப்பரீட்சையில் பலரும் பல்வேறு விதமாக சோதிக்கப்படுகிறார்கள். சுமார் 5000 வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த இப்ராஹீம் என்ற ஒரு இறைத்தூதருக்கு வாய்த்த பரீட்சை மிகவும் அலாதியானது. அவர் முழுக்க முழுக்க இறைவனுக்குக் கட்டுப் பட்டவராகவும் இறைக்கட்டளைகள் எதுவானாலும்  சிறிதும் தயக்கம் காட்டாமல் நிறைவேற்றுபவராகவும் இருந்தார். இறைவன் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய நம்பிக்கையும் ஈடிணையில்லாதது. சிலைவணங்கிகளாயிருந்த தன் நாட்டு மக்களுக்கிடையே தனிநபராக நின்று சத்தியப்பிரச்சாரம் செய்து அதன் விளைவாக அந்நாட்டு அரசனால் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டார். இறைவன் கட்டளையிட்டான் என்பதற்காக தனது ஆருயிர் மனைவியையும் பச்சிளம் பாலகனையும் ஒரு பாலைவனத்தின் நடுவெளியில் விட்டுவிட்டு வந்தார். இவ்வாறு தொடர்ந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துப் பரீட்சைகளையும் ஒரு சிறிதும் தயக்கம் காட்டாமல் நிறைவேற்றி வந்தார். இறைவன் அனைத்து சோதனைகளிலும் அவரையும் அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றவும் செய்தான். அவருக்கு உச்சகட்டமாக வைக்கப் பட்ட ஒரு பரீட்சையை மனிதகுலம் நினைவுகூரவும் அதன் படிப்பினையை வாழ்வில் கடைப் பிடிக்கவுமே முஸ்லிம்களால் பக்ரீத் அல்லது தியாகத் திருநாள் என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அது என்ன சோதனை?
இந்தப் பரீட்சை வாழ்வில் நமக்கு ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள உடல், பொருள் ஆவி என எதுவுமே நமதல்ல. இதன் உண்மை உரிமையாளன் இறைவன்தான் என்பதை நாம் அறிவோம். ஆனாலும் நமக்கு இரவலாக இறைவன் தந்துள்ள இவற்றில் எதையாவது திருப்பிக் கேட்டால் அதை திருப்பிக் கொடுக்க நம்மில் யாருக்குத்தான் எளிதாக மனது வரும்? உதாரணமாக நம்மிடம் யாசிக்க யாராவது ஏழைகள் வந்துவிட்டால் அல்லது நம்மிடம் உபரியாக உள்ள செல்வத்தின்பால் தேவையுடையவர்கள் நம்மிடம் வந்து இறைஞ்சிக் கேட்க வந்துவிட்டால் நம் மனநிலை எப்படி மாறுதல் அடைகிறது? நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆனால் இப்ராஹீம்(அலை- அவர்மீது இறைவனின் சாந்தி உண்டாகுக) அவர்களிடம் இறைவன் கேட்டது ஆச்சரியமான ஒன்று! ஆம், அவர் தள்ளாத வயதில் அற்புதமாகப் பெற்றெடுத்த மகனையல்லவா இறைவன் தனக்காக தியாகம் செய்யுமாறு கேட்டான்! அதுவும் அந்த ஆருயிர் மகனை அறுத்துப் பலியிடுமாறு இறைவன் பணித்தான்! அதையும் எவ்விதத் தயக்கமும் இன்றி நிறைவேற்றத் துணிந்தார் இப்ராஹீம்(அலை) அவர்கள். உடனேயே இறைவன் அவரது பரீட்சையில் அவர் வெற்றிபெற்று விட்டதை அறிவித்து அதற்குப் பகரமாக இரு ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு பணித்தான்.
இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் இவ்வாறு கூறப்படுகிறது.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார்.
என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார்.
 இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். (அல்குர்ஆன் 37 : 100-111)

 

 அந்த தியாகச் செம்மலின் இச்செயலை உலகுள்ளவரை மனிதகுலம் என்றும் நினைவு கூர வேண்டும் அதிலிருந்து இறைவனுக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கும் பாடத்தை அவர்கள் பெறவேண்டும் என்பதற்காகவே வருடத்தில் ஒருமுறை அந்நாளைத் தியாகத் திருநாளாகக் கொண்டாடும்படி பணித்தான்.

இத்தியாகத்தின் ஆண்டுவிழாவைக் கொண்டாடும் முகமாக வசதியுள்ள அனைத்து இறைவிசுவாசிகளும் தங்களால் இயன்ற ஒரு ஆட்டையோ மாட்டையோ ஒட்டகத்தையோ பலிகொடுத்து அதன் இறைச்சியை உறவினர்களோடும் எழைகளோடும் பங்கிட்டு உண்ணுமாறு பணித்துlள்ளாள்ளான் இறைவன். மாட்டையும் ஆட்டையும் ஏழு பேர் சேர்ந்து கூட்டாகவும் பலி கொடுக்கலாம். இன்று செல்வ வளமுள்ள நாடுகளில் இவ்வாறு பலி கொடுக்கப்பட்ட கால்நடைகளின் இறைச்சி பதப்படுத்தப் பட்டு   ஏழை நாடுகளில் உள்ள மக்களிடையே விநியோகம் செய்ய அனுப்பி வைக்கப்படுகிறது. ஏழைகளின் உணவுத் தேவை நிறைவேறுதல், சகோதர உணர்வு பகிர்தல் உறவினர்களோடு உறவைப் புதுப்பித்தல் என்பன போன்ற பல நன்மைகளை இந்நாள் தாங்கி வந்தாலும் இறைவன் முக்கியமாக பார்ப்பது நம் இறையச்ச உணர்வைத்தான். இதோ தனது திருமறையில் கூறுகிறான்:
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 22 : 37)

இத்தியாகத்திருநாளில் முக்கியமாக நாம் பெறவேண்டிய பாடங்கள் இவையே:
= இந்த தற்காலிக உலகம் என்ற பரீட்சைக் கூடத்தில் நம்மைப் பரீட்சிப்பதற்காக நம்மிடம் அமானிதமாகத் தரப்பட்டுள்ளவையே நமது உயிரும், உடலும், உறவுகளும், உடமைகளும். இவற்றை நமது என்று சொல்லிக் கொண்டாலும் இவற்றின் உண்மை உரிமையாளன் இறைவன் மட்டுமே.
= இரவல் தந்தவன் இவற்றைத் திருப்பிக் கேட்கும்போதும் எடுக்கும்போதும்  நாம் உணர்ச்சிவசப்பட்டு ஏசுவதோ அவனது சாபத்தைப் பெற்றுத் தரும் வார்த்தைகளோ உச்சரிப்பதோ கூடாது. அவ்வாறு நாம் அவற்றை இழக்க நேரிடும்போது பொறுமையை மேற்கொள்வதோடு இறைவன் இச்சோதனைக்கு நிச்சயமாக மறுமையில் பரிசு தருவான் என்ற உறுதியான நெஞ்சோடு இவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
2:155.-157.: ஓரளவு அச்சத்தாலும்பசியாலும் செல்வங்கள்உயிர்கள்மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ''நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும்அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி  பெற்றோர்.  
எந்த அளவுக்கு இறைவனுக்கு நாம் இறைவனுக்கு நெருக்கமானவர்களாக ஆகிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக நாம் சோதிக்கப்படுவோம். எந்த அளவுக்கு நாம் சோதிக்கப்படுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனிடம் நமக்கு வெகுமதிகளும் உயர் பதவிகளும் காத்திருக்கின்றன.
= இப்ராஹீம்(அலை) அவர்கள் தனது ஆருயிர் மகனை இறைக் கட்டளைக்காக பலி கொடுக்கத் துணிந்தார்கள். நாம் குறைந்த பட்சம் நம் தேவை போக மேல்மிச்சமாக நம்மிடம் முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை இறைவழியில் அர்பணிக்க முன்வரவேண்டும். 
================= 
உணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா? 
https://www.quranmalar.com/2012/10/blog-post_5399.html
சைவமே சரி என்பது சரியா?
https://www.quranmalar.com/2012/10/blog-post_7421.html  

சைவமே சரி! – என்பது சரியா?


தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் இவற்றைப் படைத்தவன் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள இறைவன் அனுமதி அளித்திருக்கிறான்.

அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

'மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.' (குர்ஆன் 2:168)
உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம் – இறைவன் இந்த பூமியைப் படைத்து - அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் - தாவரங்களையும் படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இறைவன் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது.
இறைகட்டளைக்கு மாற்றமாக அசைவம் உண்பதைத் தடுத்தால் என்ன நிகழும்?
கால்நடைகள் பெருகும்
உலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. அவ்வாறு பெருகினால் மரங்களும் செடிகளும் புல்பூண்டுகளும் வேகமாக அழியும்..... தொடர்ந்து மழை பொழிவது நின்றுவிடும்.... கட்டுக்கடங்காத வறட்சி பெருகும்.....  தொடர்ந்து பூமி வாழ்வு தடைபடும்.

மாமிசம் மனிதனுக்குத் தேவை 

மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும்.
உடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமான அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. உடல் உழைப்பு இல்லாதோருக்கு சைவமே போதுமானதாக இருக்கலாம். ஆனால் கடின உடல் உழைப்பு செய்யும் தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் அசைவம்  கட்டாயம் தேவைப் படுகிறது. மேலும் துருவப் பிரதேசங்களிளும் கடலோரங்களிலும் வாழ்வோரிடம் சைவத்தைத் திணிக்க முடியாது.
மனித உடலமைப்பு

 மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.
நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் - மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம். மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் - தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.

 மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.
தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு - தாவர வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஆனால் மனித செரிமான அமைப்பு மாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களின் செரிமான அமைப்பை - இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க வேண்டும்?.

சைவமும் உயிர்களைக் கொல்கிறதே!
முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம். எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

 தாவரங்களாலும் வலியை உணர முடியும்:
தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் - தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 Hertz க்கு குறைவான சப்தத்தையும் 20000 Hertz க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது. அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.


36:71-73  “நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா?  அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும்  உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர். அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் அவற்றில் உள்ளன. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?”

தொழுகை நடத்திவரும் புரட்சிகள்


உலகமெங்கும் ஐவேளை இறைவிசுவாசிகளால் நிறைவேற்றப்படும் தொழுகையை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.

= உலகின் அத்தனை இறைவிசுவாசிகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறைப்  பள்ளியான கஅபா வை நோக்கியே தொழுகை நிகழ்த்துகிறார்கள். இதன் சூட்சுமம் அளவிலடங்காதது

= படைத்தவனை மட்டுமே வணங்குவோம் படைப்பினங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல என்ற கொள்கை முழக்கம் பூமி உருண்டையின் மீது அயராது ஒலிப்பது உங்களுக்குக் கேட்கிறதா?

= என் உடல்,பொருள் ஆவி அனைத்தும் உனக்கே சொந்தம்! இறைவா நீயே  மிகப்பெரியவன்! என்று அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி விட்டு  இறைவிசுவாசிகள் உலகெங்கும் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களுக்கு விரையும் காலடி ஓசை உங்களுக்குக் கேட்கிறதா?

= ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறம் என்று நம்மைப் பிரித்து வைத்திருந்த தடைகளை உடைத்தெறிந்து ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கையின் கீழ் உலகோர் அனைவரும் ஒருங்கிணையும் காட்சி உங்களுக்குப் புலப்படவில்லையா?

= ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள். இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

 = சிதறிக்கிடக்கும் பாமரனையும் படித்தவனையும் ஏழையையும் செல்வந்தனையும் பெரியவர்களையும் சிறுவர்களையும் பாகுபாடின்றி ஒருசில நொடிகளில் உலகெங்கும் ஆங்காங்கே சீராக அணிவகுக்கச் செய்யும் விந்தையை எந்த இராணுவமும் செய்யக் கண்டிருக்கிறீர்களா?  

 = ஒவ்வொரு தொழுகைக்கும்  ஒழு (அதாவது அங்கத்தூய்மை) செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

 

= தொழுகையாளிகளின் வாழ்விலிருந்து சோம்பலை விரட்டி அவர்களது வாழ்வை திட்டமிட்டு அமைத்துக்கொள்ள தொழுகை வழிவகுப்பதைக் கண்டீர்களா?

 = ஐவேளை இறைவனோடு தொடர்பு கொள்வதன் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இருக்கும் வண்ணம் நடுநிலையான வாழ்க்கைத் திட்டத்தை தொழுகை அமுல் படுத்துவதைக் கண்டீர்களா?

 = தொழுகையாளிகளின் வாழ்வில் சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை அன்றாடம் அடைந்து கொண்டிருப்பதை கவனித்தீர்களா?.

= தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் ஆன்மீக ரீதியாக அடையும் பெரும்பலன்களுடன் நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா (சாஷ்டாங்கம்) செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

= உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார். இவ்வாறு தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் தொழுகையாளிகளுக்குள்ளன.

இவ்வளவு புரட்சிகளை நிகழ்த்தி மானிடர்க்கு அளவில்லா நன்மைகளைத் தந்து கொண்டிருக்கும் இவ்வுலகளாவிய இயக்கத்தில் இணையாமல் நீங்கள் ஒதுங்கி நிற்கலாமா? சிந்தியுங்கள் 

வியாழன், 25 அக்டோபர், 2012

உணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா?


இக்கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்னால் நாம் பாவம் எது, புண்ணியம் எது என்பதை தீர்மானிக்க ஒரு அளவுகோலைக் கண்டறியக் கடமைப் பட்டுள்ளோம். மனிதனின் குறுகிய அறிவு கொண்டோ பெரும்பான்மை மக்களின் வாக்கெடுப்பு மூலமாகவோ முன்னோர்களின் பழக்கவழக்கங்களின் அடிப்படையிலோ அந்த அளவுகோலை நிர்ணயிக்க முடியாது. ஆனால் இவ்வுலகின் உரிமையாளனும் அனைத்து படைப்பினங்களையும் அதிபக்குவமாக அறிந்தவனும் முக்காலத்தையும் உணரக்கூடியவனும் ஆகிய அந்த இறைவனுக்கு மட்டுமே அந்த அளவுகோலைத் தர முடியும். மேலும் நாளை இறுதித் தீர்ப்புநாளின் போது நம் பாவபுண்ணியங்களை விசாரித்து  அதன் அடிப்படையில் நமக்கு சொர்கத்தையோ நரகத்தையோ வழங்க இருப்பவனும் அவனே. எனவே அவன் எதைச் செய் என்று ஏவுகிறானோ அதுவே புண்ணியம் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பதை நாம் அறியவேண்டும்.
இறைவனின் பார்வையில் இது பாவமல்ல!
அந்த அடிப்படையில் உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமல்ல என்று இறைவேதங்கள் மூலம் உணரலாம். குறிப்பாக இறுதி இறைவேதம் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
'இறைவிசுவாசிகளே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப் பட்டுள்ளன” ( திருக்குர்ஆன் 5:1)
'கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.' (திருக்குர்ஆன் 16:5)
'நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.' * (திருக்குர்ஆன் 23:21) 
ஒரு காலத்திலும் புலால் உண்பதை இறைவன்  தடுத்ததாக எங்கும் நீங்கள் காண முடியாது. உண்மையில் இந்து மதத்தின் சட்ட நூலாகக் கருதப்படும் மனுசாஸ்திரம் இவ்வாறு கூறுகிறது

'உணவு உட்கொள்பவர் - மாமிச உணவு உட்கொள்வாராயின் - அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும் அளிப்பதில்லை. எந்நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும் சரியே. ஏனெனில் சில படைப்புகளை உண்பதற்காகவும் - சில படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும்; படைத்தவன் கடவுளே'. (ஐந்தாவது அத்தியாயம் முப்பதாவது வசனம்)


'மாமிச உணவு உண்பதும் - சரியான தியாகமே. இது மரபு ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகும்'. (5:39)

'பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.'(5:40)

கொல்வதும் ஓர் கடமை 
ஆக, இறைவனின் பார்வையில் இது பாவமல்ல என்பதை அறிகிறோம். இருந்தாலும் உயிரினங்கள் அறுபடும்போதும் துடிக்கும்போதும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லையே! ஆம், இறைவன் இதை வாழ்க்கை என்ற பரீட்சையில் ஒரு சோதனையாக அமைத்துள்ளான். அப்போது ஏற்படும் நம் உள்ளத்தில் ஏற்படும் இரக்க உணர்வுக்கும் நமக்கு கூலி வழங்கப் படுகிறது என்கிறார்கள் நபிகளார். அந்த இரக்க உணர்வை நம் உள்ளத்தில் விதைத்த அந்தக் கருனையாளனே உணவுக்காக கால்நடைகளைக் கொல்ல அனுமதிக்கவும் செய்துள்ளான், அதை பலி என்ற முறையில் நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகவும் ஆக்கியுள்ளான்.

நமது அற்ப அறிவுக்கு ஒருவேளை இது பாவமாகத் தோன்றி கால்நடைகளைக் கொல்லாமல் விட்டுவிட்டால் அந்த விலங்கினத்துக்கு எதிராகச் செய்யும் அநீதியாகவும் அமைந்துவிடும். உதாரணமாக, ஒரு ஏழை விவசாயி தன் வயதான மாட்டை விற்றால்தான் வேறு காளையை வாங்கமுடியும். தன் தொழிலைத் தொடரவும் முடியும். அதை விற்கச் சந்தைக்குக் கொண்டு வருகிறார். ஒரு இறைச்சிக்கடைக் காரர் வாங்கவும் தயாராக உள்ளார். அப்போது .’பசுவதைத் தடைச் சட்டம் என்ற பெயரில் இதை நாம் தடுத்தால் என்ன நடக்கும்? அந்த ஏழை விவசாயியின் பிழைப்பில் அநியாயமாக மண்ணைப் போடுகிறோம். அவருக்கே உணவுக்கு திண்டாட்டமாக இருக்கும்போது அந்த மாட்டுக்கு அவரால் உணவளிக்க முடியுமா? அவர் அதைப் பராமரிக்க முடியாத நிலையில் கட்டவிழ்த்து விட்டால் அடுத்தவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இரையாகிறார். வேறுவழியின்றி கட்டிப்போட்டால் அது பசியால் துடிதுடித்து படிப்படியாக இறக்கிறது. இதுதான் மனிதாபிமானமா?....... இவ்வாறு ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர் விபரீதங்களுக்கு நாம் காரணமாகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அனைத்து அநீதிகளுக்கும் பாவங்களுக்கும் மறுமையில் இறைவனின தண்டனையும் கிடைக்கும். அது நரக நெருப்பல்லாமல் வேறு என்ன?

சட்டம் இயற்றும் அதிகாரம் நம்மிடம் இல்லை!     
இயற்கையில் செடிகொடிகள் புல்பூண்டு முதல் வளர்வன அனைத்தும் உயிரினங்களே. பலவீனமான உயிரினங்களை பலமான உயிரினங்களுக்கு உணவாக இறைவன் படைத்திருக்கிறான் என்பதை சற்று சிந்தித்தாலே அறியலாம். இந்த ஏற்பாட்டின் சூட்சுமம் அவன் மட்டுமே அறிவான். புலியிடம் ‘இன்று முதல் நீ புல்லை மட்டும்தான் உண்ணவேண்டும்!’ மானிடம் ‘நீ நீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்!’ என்றோ கட்டளையிட நமக்கு அதிகாரமில்லை என்பதை அறிவோம். நம் அற்ப அறிவின் அடிப்படையில் இதில் தலையிட்டு மாற்றங்கள் செய்ய நினைத்தால் பல விபரீதங்கள் ஏற்படும்.
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்:
2; 216. ….ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
========= 
தொடர்புடைய ஆக்கங்கள்: 
சரி எது? தவறு எது? பாவம் எது ? புண்ணியம் எது? 

http://quranmalar.blogspot.com/2013/02/blog-post_10.html 


இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?


ஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவேண்டுமாயின் அங்கு ஒரு உறுதியான தலைமையும்  வரையறுக்கப்பட்ட விதிமுறைகளும் ஒழுங்கும் இருந்து அவை எல்லோராலும் பின்பற்றப்படுதல் வேண்டும். அதைப்போலவே நாம் வாழும் இந்த உலகத்திலும் இவ்வுலகிற்கு சொந்தக்காரனான இறைவனின் தலைமையை ஏற்று அவன் கற்பிக்கும் விதிமுறைகளையும் ஒழுக்கத்தையும் பின்பற்றினால் வாழ்க்கை பயனுள்ளதாக அமையும். மனிதனைத் தவிர மற்ற படைப்பினங்கள் அனைத்தும் இந்த முறையில் பயனுள்ளவையாக அமைந்துள்ளதை இயற்கையில் காணலாம்.

. இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் கூறும் ஏவல் விலக்கல்களுக்குக் கீழ்படிந்து வாழும்போது தனிநபர் வாழ்விலும் அதன்மூலம் சமூக வாழ்விலும் கட்டுப்பாடும்(discipline) நல்லொழுக்கமும் உண்டாகிறது. அதன்மூலம் ஏற்படும் அமைதிக்குப் பெயரே இஸ்லாம் எனலாம். அவ்வாறு பேணுதலோடு வாழ்வோருக்கு மறுமையிலும் அமைதி தொடர்கிறது... அதாவது நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் அவர்களுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்  
   முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.

   முஸ்லிம் என்ற வார்த்தையை இவ்வாறும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இயற்கையைப் பாருங்கள். மரம், செடி, கொடி , சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்........ என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே! மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்..... என அனைத்தும் முஸ்லிம்களே! காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது!  .
ஆக, இந்த அடிப்படையில்  இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி.......  மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே! இதுதான் எமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும்.

இஸ்லாம் புதிதல்ல!

ஆம், அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இஸ்லாம் என்பது ஒரு புதிய மார்க்கமும் அல்ல என்ற உண்மையை இப்போது உணர்ந்திருப்பீர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்களில் பெரும்பாலோர் இன்றும் இது ஒரு புதிய மார்க்கம் என்றும் முஹம்மது நபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்றும் நம்பி வருகின்றனர். இன்றும் கூட இந்தத் தவறு பள்ளிக்கூடப்  பாட புத்தகங்களில்  திருத்தப்படாமலே  தொடர்கிறது.    

ஆம், அன்புக்குரியவர்களே, நாம் அனைவரும் ஓரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்னும்போது நம் இறைவன் நமக்காக ஒரே மார்க்கத்தைத்தான் அருளியிருக்க முடியும் என்பதும் தெளிவாகிறது. அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் நம் குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது.  அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அந்த மார்க்கத்திற்க்குப் பெயர்தா.ன் இஸ்லாம் என்று இன்று அரபி மொழியில் அறியப்படுகிறது. மாறாக முஹம்மது நபி அவர்கள் புதிதாக எதையும் கொண்டுவரவும் இல்லை தோற்றுவிக்கவும் இல்லை.

இஸ்லாம் கீழ்கண்ட மூன்று நம்பிக்கைகளை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதன் மூலம் மனிதனை பாவங்களில் ஈடுபடுவதில் இருந்து தடுத்து கட்டுப்பாடு மிக்கவனாக ஆக்குகிறது. மேலும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுகிறது.
  1. ஒன்றே குலம்:
 மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

அதாவது நிறம், இனம், நாடு, மொழி, செல்வம், கல்வி, அந்தஸ்து, பதவி போன்றவை மூலம் உண்டாகும் வேற்றுமைகளைத் தாண்டி சக மனிதன் தன் சகோதரனே என்பதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பூமியில் உரிமைகள் உள்ளன என்றும் அவற்றை அனைவரும் மதித்து வாழவேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.

2.. ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல்  அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
படைத்தவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி – அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம். இச்செயல் இறைவனைச்  சிறுமைப்படுத்துவதுடன் மனித மனங்களில் இறைவனைப்பற்றி அலட்சியப் போக்கை உண்டாக்கி விடுகிறது. அதனால் மேற்கூறியவாறு நல்லொழுக்கத்தைப் பேணுவதற்கு மிகப்பெரும் தடையாகிறது. சமூகத்தில் பாவங்கள் பெருக காரணமாகிறது. மேலும் இவ்வாறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக கடவுளைக் கற்பனை செய்து வணங்க முற்படும்போது ஒரே மனித குலம் பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாய்வது, இடைத்தரகர்கள் இறைவனின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பது என்பனவும் நிகழ்கின்றன. பல குழப்பங்களுக்கும் தீமைகளுக்கும் காரணமாகும் இப்பாவத்தை மட்டும் இறைவன் மன்னிப்பதே இல்லை என்கிறது திருக்குர்ஆன்.

3.  இறைவனின் நீதிவிசாரணையும் மறுமை வாழ்வும்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும்.
 ஆக இந்த தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைக்கப்பட்டுள்ளது என்பதே இஸ்லாம் நினைவூட்டும் உண்மையாகும். இதை மறந்து வாழ்வதே மனித குலத்தின் அமைதியின்மைக்குக் காரணமாகும்.
நடைமுறை வழிகாட்டுதல்

மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலமும் வழங்குகியுள்ளான் இறைவன். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுபவையாக அவை அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம்.

----------------------------------------------------------------------------

புதன், 24 அக்டோபர், 2012

நூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்?


மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு கூறுகிறார் இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் கொள்கை ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது. 
இந்நிலையில்மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவதுஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது,எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. 
[ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை  அறநெறிஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும்அதன் இறைமையியலை(THEOLOGY)உருவாக்கியதில் முதன்மையானவரும்அதன்பால்மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும்புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.( St. PAUL) ஆனால்,இஸ்லாத்தின் இறைமையியல் (THEOLOGY), அதன் அறநெறிஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள்.
மேலும்இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும் கடமையுணர்வுடனும் பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே,முஹம்மது நபியின் கருத்துகளும் போதனைகளும்கொள்கைகளும்,  குர்ஆனுடன் நெருக்கமானவை.
ஆனால்ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்றுமுஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம்மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும்தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விடமுஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்
இரண்டாவது: மேலும்ஏசுநாதரைப் போலில்லாமல்முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி,உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு,பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.]  
Source - The Hundred – தமிழாக்கம் :அந்த நூறு பேர்.
 
http://quranmalar.blogspot.com/2014/12/1_26.html 
ஏசுநாதரைப் பற்றிய இஸ்லாமிய அறிமுகம்
http://quranmalar.blogspot.com/2015/11/blog-post_7.html 
கிருஸ்துவர்களுக்கு நபிகளாரின் அன்பு மடல்