தமிழ்நாட்டில் ராவுத்தர் முஸ்லிம்கள் எந்தெந்த மாவட்டங்களில் உள்ளனர்?
இராவுத்தர்கள் என்பவர்கள் தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம்கள். இவர்கள் 70% சதவீத தமிழக இசுலாமியர்கள் ஆவர். இவர்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள். சோழர்கள் காலத்தில் திருச்சியை வந்தடைந்த துருக்கியை சேர்ந்த நத்தர்ஷா என்னும் சூபி மதப்போதகர் மூலம் இஸ்லாத்தை ஏற்றவர்கள்தான் இந்த ராவுத்தர்கள். இவர்கள் தந்தையை அத்தா என்றும் அழைப்பார்கள். அத்தா என்பது தந்தை குறிக்கும் பழமையான தமிழ் சொல்லாகும்.
அதனால்தான் மற்ற தென்னிந்திய இஸ்லாமியர்கள் போல் அல்லாமல் ஹனபி பள்ளியை பின்பற்றுக்கின்றனர். இவர்கள் இசுலாத்தை ஏற்கும் முன்னரும் இராவுத்தர்களாக அறியப்பட்ட சைவர்கள் ஆவர். இவர்கள் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுப்பவர்கள். சிலருக்கு ஜாதகம் பார்க்கும் பழக்கம் கூட இன்றும் உண்டு.
வரலாற்றில் குதிரை வீரர்களாகவும், குதிரை படைத் தளபதிகளாகவும், குதிரை வணிகர்கள் ஆகவும் இருந்தவர்கள், இவர்களை பற்றிய குறிப்பு மாணிக்கவாசகர் காலத்திலேயே சிவ புராணங்களில உள்ளது.
இவர்கள் அதிகம் உள்ள இடம் பழைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் அதாவது இன்றைய மதுரை, தேனி, திண்டுக்கல், பழனி போன்ற மாவட்டங்கள். ராவுத்தர்களை மற்ற தமிழர்கள் முறை வைத்து அழைப்பது அதாவது மாமன், மாப்பிள்ள, சியான், அத்தா போன்ற உறவுச் சொற்கள் அதிகம் புழங்கும் இடம் மதுரையாகவே உள்ளது. இவர்கள் ராவுத்தர்களின் தமிழக வரலாற்றையே மதுரையிலிருந்துதான் தொடங்குவார்கள். ஜிகர்தண்டா என்னும் குளிர்பானத்தை உருவாக்கியவர்களும் மதுரை ராவுத்தர்கள்தான். சில வரலாற்று ஆய்வாளர்கள் இவர்கள் தென் தமிழக தேவர் சமூகத்தில் இருந்து இசுலாத்தை ஏற்றவர்கள் என கூறுகிறார்கள். மதுரையில் துபாஸ் காதிர் ராவுத்தர் என்ற பந்தல்குடி ஜமீந்தார், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் என்ற மிகப் பெரும் செல்வந்தர் இருந்துள்ளனர். பழனியாண்டவர் மாலை பாடிய புலவர் காதர் மொய்தீன் மஸ்தான், திரையுலகில் பழம் பெரும் தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் எடிட்டர் மோகன், பிரமாண்ட தமிழ் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் லியாகத் அலிகான், பாடலாசிரியர் மு மேத்தா, இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் அமீர், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் ஷாம் போன்றோர்கள் ஒருங்கிணைந்த மதுரையை பூர்வீகமாக கொண்ட பிரபல ராவுத்தர்கள்.
அடுத்து ராவுத்தர்கள் பூர்வீகம் பழைய ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தது. அதாவது இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர். இங்கு ராவுத்தர்கள் பெரும்பாலும் தேவர் சமூகத்தை போன்றே சீர்வரிசை வம்சப் பெயர் வைக்கும் பழக்க வழக்கம் கொண்டவர்கள். இதை மையமாக வைத்து முத்தையாவின் வெற்றி படைப்பான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் வந்தது. சுகந்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடன் நெருங்கிய தோழராகவும் பர்மாவின் அரசியல்வாதியாகவும் பின் மலாயாவில் ஆசாத் ஹிந்த் அரசின் முதன்மை அமைச்சராக இருந்த கரீம் கனி, விவசாய விஞ்ஞானி பத்மஶ்ரீ E.A. சித்திக், சூபி பாடகர் குணங்குடி மஸ்தான் சாகிபு, நடிகர் MK முஸ்தபா, ஜமால் முகைதீன் ராவுத்தர், ஜமால் முகமது ராவுத்தர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி F.M இப்ராகிம் கலிஃபுல்லா போன்றோர் ஒருங்கிணைந்த இராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல ராவுத்தர்கள்.
சைவ பிள்ளைமார் சமூகத்தை சேர்த்தவர்கள்தான் திருநெல்வேலி ராவுத்தர்கள். அதனால் அவர்கள் மாட்டிறைச்சி உண்ண மாட்டார்கள் என கூறுவர்.
தக்கலை பீர் அப்பா என்னும் சூபி இஸ்லாமிய சித்தர் பிறந்தது தென்காசி ராவுத்தர் குடும்பத்தில் பிறந்தவர் சாமூர் என்னும் வகையறா சேர்ந்தவர், இந்திய சுகந்திர போராட்டவீரர் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கை உருவாக்கிய காயிதே மில்லத் அவர்கள் திருநெல்வேலி ராவுத்தர் ஆவார். தென் தமிழக ராவுத்தர்கள் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களாகவும் விவசாயிகளாகவும் பின்பு வெளிநாட்டு வேலைகளில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருந்தனர். இன்று சென்னையில் வாழும் முஸ்லிம்களில் ராவுத்தர்களில் 80% பேர் தென் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்தான்.
பாளையம் என்று கூறும் இடங்களே அக்காலத்தில் ராவுத்தர்கள் அதிகம் இருந்த இடங்கள்தான் (சமீபகாலப் பெயர் மாற்றம் கொண்ட இடங்கள் அல்ல) அதாவது அக்காலத்தில் பாளையம் இறங்கியுள்ளது என்றால் குதிரை படையினர் முகாமிட்டுள்ளனர் என அர்த்தம்.
பழைய ஒருங்கிணைந்த தஞ்சை அதாவது தஞ்சை, திருவாரூர், கும்பகோணம், நாகபட்டினம் என ராவுத்தர்கள் அதிகம் உள்ளனர். இங்கு ராவுத்தர் வீட்டு பெரியோர்கள், பெண்கள் வெள்ளை துப்பட்டி அணியும் வழக்கம் அதிகம் கொண்டவர்கள். நாகப்பட்டினத்தின் ஜமீந்தாராக முஹமது மீரா ராவுத்தர் என்பவர் இருந்துள்ளார்,
திருச்சி நத்தர்ஷா அவர்கள் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் ராவுத்தர்கள். அதனாலே திருச்சியில் நிறைய ராவுத்தர்கள் உண்டு. திருச்சியில் பழைமை வாய்ந்த ஜமால் முகமது கல்லூரியை நிறுவியவர்கள் ராவுத்தர்களாகிய ஜமால் முகமது ராவுத்தரும், காஜாமியான் ராவுத்தரும்தான் இந்த டெல்டா மாவட்ட ராவுத்தர்கள் பெரும்பாலும் மிராசுதார்களாக அக்காலத்தில் இருந்தவர்கள் குறிப்பாகக் கீழ் தஞ்சை பகுதிகளிலிருந்து இவர்கள் புதுக்கோட்டைவரை மிராசுகளாக பரவி இருந்துள்ளனர். திவான் கான் பகதூர் கலிஃபுல்லா ராவுத்தர் சாகிப் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவானாகவும், மதராஸ் மாகாண அரசியல்வாதியாகவும் இருந்தார். இசைமுரசு நாகூர் ஹனிபா,நான்காம் நக்கீரர் குலாம் காதிறு நாவலர், பழம்பெரும் திரைத்துறை பாடலாசிரியர் கா.மு ஷெரீப், தமிழ் அறிஞர் தாவுத் ஷா, அறிவியல் தமிழ் தந்தை மணவை முஸ்தபா, மலேசிய காங்கிரசின் நிறுவனர்களில் ஒருவர் டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எஸ்.ஓ.கே. உபைதுல்லா காதிர் பாஷா, கவிஞர் ராஜாத்தி சல்மா, கவிஞர் மனுஷப்புத்திரன் போன்றோர் டெல்டா பகுதியை பூர்வீகமாக கொண்ட பிரபல ராவுத்தர்கள்.
பாலக்காடு இன்று கேரளாவில் இருந்தாலும் அங்கு அதிகம் பேசப்படும் மொழி தமிழ்தான். அங்கும் தமிழர்கள் உண்டு.கோவை, பாலக்காடு மாவட்டகளிலும் ராவுத்தர்கள் உண்டு. கேரளத்திலும் ராவுத்தர்கள் குறிப்பாக தென் கேரளத்தில் உள்ளனர்.
இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் தமிழக முதல் பெண் ஆளுநர் பத்மபூசன் பாத்திமா பீவி அவர்கள் ராவுத்தர் குடும்பத்தை சேர்ந்தவர்,
பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர், தமிழில் வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர்கள் பாசில், சித்திக், மாமன்னனில் தமிழக மக்களை கவர்ந்த நடிகர் பகத் பாசில் ஆகியோரும் கேரளத்தை சேர்ந்த ராவுத்தர்கள் தான்.
கீழே படியுங்கள்
1) சைவமே சரி! – என்பது சரியா?
2) கேரளாவும் தமிழ்நாடும் இணைய முடியுமா?
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_7.html
3) நாட்டைக் காப்போம்! நாட்டு மக்களை நேசிப்போம்!
http://quranmalar.blogspot.com/2015/08/blog-post_12.html
4) பாரதம் காப்போம் - மின் நூல்
http://quranmalar.blogspot.com/2014/04/blog-post_24.html
5) நாட்டுப்பற்று என்றால் என்ன?
http://quranmalar.blogspot.com/2014/03/blog-post_15.html
6) தீண்டாமை ஒழிக்க ஒரே வழி ஓரிறைக்கொள்கை!
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_13.html
7) இறைத்தூதர்கள் வரிசையில் முஹம்மது நபியும் இயேசு நாதரும்
8) இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
9) முந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்
http://quranmalar.blogspot.com/2012/09/blog-post_6053.html
10) இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக