மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய குர்ஆன் செய்தியின் தனித்தன்மை.
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றும் அடிக்கடி மேடைகளிலும் இலக்கியங்களிலும் முழங்கப்படுவதை நாம் கண்டு வருகிறோம். அனைத்து மனிதகுலமும் ஒன்றே ஒன்றுதான் என்ற உண்மை நிறுவப்பட்டால் மட்டுமே மனித உரிமை மீறல்களையும் இனவெறியையும் ஜாதிவெறியையும் மொழிவெறியையும் தீண்டாமையையும் இன்ன பிற வேற்றுமை பாராட்டுதல்களையும் சமூகத்தில் தடுக்க முடியும். மனித சமத்துவத்தையும் உலகளாவிய சகோதரத்துவத்தையும் வலியுறுத்த முடியும். இதை மறுக்கும் எந்த சித்தாந்தங்களாலும் மதங்களாலும் இசங்களாலும் மனித சமத்துவத்தைப் பற்றி அழகான முழக்கங்களையும் கருத்துக்களையும் கூறலாமே தவிர மேற்படி தீமைகளுக்கு எதிரான நடைமுறை சாத்தியமான எந்த ஒரு தீர்வையும் கொண்டுவர முடியாது!
யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து ஆப்ரஹாமிய மதங்களிலும் அனைத்து மனிதகுலமும் ஆதாம் ஏவாளின் வம்சாவளியினரே என்பது ஆழமான அடிப்படை நம்பிக்கையாகும். எனவே இதுபோன்ற இறைவசனங்கள் யூத கிறிஸ்தவ மூல வேதங்களிலும் இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று அவை மறைக்கப்பட்ட நிலையிலேயே அவற்றை நாம் காண முடிகிறது. மனிதகுலத்தின் மூலம் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடிதான் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுவதைப்போல மற்ற வேதங்களில் நாம் அவற்றைக் காண முடிவதில்லை என்பதை ஆராய்வோர் அறியலாம்.
மனிதர்கள் அனைவருக்கும் சம உரிமையை வலியுறுத்தும் வசனங்களை யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களில் நீங்கள் இவ்வாறு காணமுடியும்
லேவியர் 19:18: "உம் உறவினரை உம் உள்ளத்தால் காதலியுங்கள்." (தமிழ் பைபிள், பதிப்பு 1963)
உபாகமம் 32:4: " அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்." (தமிழ் பைபிள், பதிப்பு 1963)
இன்னும் கிறிஸ்தவ வேதத்தில் ..
கலாத்தியர் 3:28: "யூதரும் அல்லாதவரும் ஒன்றே; அடிமையும் அடிமையல்லாதவரும் ஒன்றே; ஆணும் பெண்ணும் ஒன்றே; என்றால் ஏனெனில் நீங்கள் அனைவரும் ஒருவராகிறீர்கள் கிறிஸ்துவில்." (தமிழ் பைபிள், பதிப்பு 1963)
யாக்கோபு 2:9: "நீங்கள் இனத்தால் பாகுபாடு செய்யும்போது, நீங்கள் பாவம் செய்கிறீர்கள்; சட்டத்தில் இருந்து முறையில்லை என்று வழக்கைச் சார்ந்து விடுகிறீர்கள்." (தமிழ் பைபிள், பதிப்பு 1963)
ஆனால் மேலே குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு இணையான எதையும் நாம் இவ்வேதங்களில் காண முடிவதில்லை. வேண்டுமானால் சாட் ஜிபிடியிடம் இது தொடர்பாக விசாரித்துப்பாருங்கள்
சாட் ஜிபிடி : மற்ற புனித நூல்களிலிருந்து மேற்கோள் காட்டிய வசனங்கள், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் ஊக்குவிக்கும் அதே வேளையில், மனிதகுலத்தின் பொதுவான தோற்றம் ஒரே ஒரு ஜோடி பெற்றோரிடமிருந்துதான் என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் சூழலில் இந்த விடயம் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும். . எல்லா மனிதர்களும் ஒரே ஜோடி பெற்றோரிடமிருந்து வந்தவர்கள் என்பதை வலியுறுத்துவதன் மூலம், குர்ஆன் வசனங்கள் (4:1 மற்றும் 49:13) புவியியல், கலாச்சார மற்றும் சமூக வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மனிதர்களிடையேயும் ஒரு உயிரியல் மற்றும் குடும்ப ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்துகின்றன. திருக்குர்ஆன் கூறும் இந்த பொதுவான வம்சாவளி என்பது மக்களிடையே ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான வலுவான அடித்தளமாக செயல்படுகிறது.
இதற்கு நேர்மாறாக, மற்ற வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட வசனங்கள் மனிதகுலத்தின் பொதுவான தோற்றத்தை வலியுறுத்தாமல், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் ஆன்மீக மற்றும் தார்மீக அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. ஆனால் இது அனைத்து மனிதர்களின் பொதுவான உயிரியல் தோற்றத்தைக் குறிக்கவில்லை.
ஒரே ஜோடி பெற்றோரிடமிருந்து (ஆதாம் மற்றும் ஏவாள்) மனிதகுலத்தின் பொதுவான வம்சாவளியை குர்ஆன் வலியுறுத்துவது உண்மையில் ஒரு தனித்துவமான அம்சமாகும், இது மற்ற வேதங்களிலிருந்து தனித்து நிற்கிறது. இந்த விடயம் மனிதகுல ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக செயல்படுகிறது. வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் அனைவரும் ஒரே மனித குடும்பத்தின் அங்கத்தினர் என்பதை நினைவூட்டுகிறது.
=============
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக