ஒரு ஆய்வின் முடிவு:
இஸ்ரேல்
நாட்டைச் சேர்ந்த கிளினிக்கல் மனோதத்துவ நிபுணரும் டெல்ஹாய் கல்லூரியின் பெண் கல்வித்துறைத் தலைவருமான
அவிகைல் மூர் (Avigail Moor,
Clinical psychologist and head of the Women Studies program at Tel Hai College
in Israel.)
என்பவர் “பெண்ணின் ஆடைக்கும், பாலியல்வன்முறைகளுக்கும் இடையிலான தொடர்பைக்
குறித்து ஓர் ஆய்வை நடத்தினார்.
உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி ஆடை அணியும் பெண்களைக் காணும் போது ஆண்களுக்கு உண்டாகும்
பாலியல் உணர்வு எவ்வளவு என்று கண்டுபிடிப்பதுதான் அந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். அவர் ஆய்வை நடத்தி முடித்த பின்னர் மக்கள் மன்றத்தில் தம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். ஆய்வறிக்கையின் தலைப்பு: அவள் கவரவே ஆடை அணிகிறாள்.. அவன்
காமத்திற்கு தூண்டப்படுகிறான்’
= ஆய்வில் பங்கெடுத்த ஆண்களில் 29.8 சதவீதம் பேருக்கு பெண்களை அரைகுறை ஆடைகளில் பார்க்கும் போதெல்லாம் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர்.
= 58.1 சதவீதம் பேருக்கு பெரும்பாலான சமயங்களில் உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி ஆடை அணியும் பெண்களைக் கண்டால் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர். (Journal Of International Women`s Studies,
Vol. II 4 May 2010)
அதாவது, அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களைக் காண்கிற 88 சதவீத ஆண்களுக்கு பாலியல் தூண்டல்
(காம உணர்வு) உணர்வு ஏற்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
( தகவல்: https://vc.bridgew.edu/jiws/vol11/iss4/8 )
இச்செயல் சமூகத்தில் பல சீர்கேடுகள் நிகழ இச்செயல் ஏதுவாகின்றது. தேசிய குற்றவியல் ஆவணக்காப்பக (NRCB) அறிக்கைப்படி நாட்டில் நாளொன்றுக்கு 90 பெண்கள் கற்பழிக்கப்படுவதாக இந்திய காவல் நிலையங்களில் பதிவாகின்றன. (பதிவாகாதவை இன்னும் ஆறு மடங்கு என்கிறது இன்னொரு புள்ளிவிவரம். இந்தக் கற்பழிப்பு மட்டுமல்லாமல் காதல், கள்ளக்காதல், விபச்சாரம், அநியாயமாக அந்நியனின் கற்பம் சுமத்தல், பெற்று வளர்த்தவர்களுக்கு நன்றிகேடு, குடும்பத்தில் டென்ஷன், கருக்கொலை, சிசுக்கொலை, கொலை, தற்கொலை, குடும்ப அங்கத்தினர் மத்தியில் கலகம் போன்ற பலதும் இதைத் தொடருகின்றன.
இவ்வளவுக்கும் காரணமாகும் இந்த பாவச் செயல் முற்போக்குத்தனம் என்ற போர்வையில் எவ்வளவு முரட்டுத்தனமாக முன்னேறுகிறது பாருங்கள். பெரும்பான்மையினர் செய்கிறார்கள் என்பதற்காக கண்டிக்கப்படுவதேயில்லை! என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.
பெண்களின்
ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை
சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை அந்தப் பெண்களின் உடல் அழகை அந்நிய
ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் படைக்கின்றன. ஆண்களின் கழுகுக் கண்களை அந்த ஜன்னல்கள்
கவரும்போது அவர்களில் சிலர் அதை ஒரு விருந்துக்கான அழைப்பாக எடுத்துக்
கொள்கின்றனர். இனிப்புக் கடைகளில் வாடிக்கையாளர்களைக்
கவருவதற்காக அவை ஷோ கேஸ்களில் கவர்ச்சிகரமான வெளிச்சம் போட்டு வைக்கப் படுவதுபோல்
பெண்களின் அங்க அழகு அவர்களை ஈர்ப்பதற்காகப் பிரதர்சனம் செய்யப்படுகிறது என்பதாக
அவர்கள் உணர்கிறார்கள். இந்த விருந்து அழைப்பு விபரீதமாக மாறுவதை நாம்
அன்றாடம் கண்டு வருகிறோம். கடந்த இதழ்களில் கொடுக்கப்பட்ட தகவல்களின் படி நாளொன்றுக்கு 600 கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிந்தோம்.
===================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக