இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 டிசம்பர், 2021

பாலியல் விஷயத்தில் இறைவழிகாட்டுதல்

 


மனிதகுல இனப்பெருக்கத்தின் ஒரு முக்கியமான காரணியாக விளங்குபவை மனிதனுக்குள் அமைந்துள்ள பாலியல் உணர்வுகள். இந்த பாலியல் உணர்வுகளை எவ்வாறு மக்கள் தணிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே மனித வாழ்வில் அமைதியும் அமைதியின்மையும் உண்டாகின்றன. இவற்றைத் தான்தோன்றித்தனமாக தணிக்கும்போது அங்கு குழப்பங்களும் கலகங்களும் உருவாகின்றன. அதேவேளையில் கட்டுப்பாட்டோடும் நல்லோழுக்கத்தொடும் இந்த இயற்கையான உணர்வுகளைத் தணிக்கும்போது அங்கு அமைதியான கட்டுக்கோப்பான சமூகம் உருவாகிறது. எனவே பாலியல் கொடூரங்கள் திடீரென நிகழும்பொழுது சமூகம் ஒட்டுமொத்தமாக விழித்தெழுந்து குற்றவாளிகளை சபிப்பதாலோ அரசையும் காவல்துறையையும் நீதித்துறையையும் திட்டித் தீர்ப்பதாலோ பிரச்சினை தீரப்போவதில்லை. உண்மையான தீர்வு சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து இறைவன் விதிக்கும் கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துவதில்தான் உள்ளது.

அதற்காக மனித மனங்களைப் பண்படுத்தி நம்மைப் படைத்த இறைவன் விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும் அவை வீண்போவதில்லை என்ற நம்பிக்கையை விதைத்து தனி மனித நல்லொழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம். இறைவனின் வேதமாகிய திருக்குர்ஆனும் நபிகளாரின் போதனைகளும் அப்படிப்பட்ட நம்பிக்கையை ஆழமாக விதைக்கின்றன.

= பெண்கள்ஆண் மக்கள்பொன்னிலும்வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடுமாடுஒட்டகை போன்ற) கால் நடைகள்சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறதுஇவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்இறைவனிடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.

(நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமாதக்வா - பயபக்தி - உடையவர்களுக்குஅவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டுஅவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றனஅவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டுஇன்னும் இறைவனின்  திருப் பொருத்தமும் உண்டு. இறைவன் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன்  3:14,15)

அதாவது இந்தக் குறுகிய வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதில் நம் இச்சைகளைக் கட்டுப்படுத்தி நெறியோடு வாழ்ந்தால் அவற்றுக்காக அளவிலா இன்பங்கள் நிறைந்த சுவனப்பதியில் அமர வாழ்வு வாழும் வாய்ப்பை இறைவன் வழங்க உள்ளான். மாறாக நிலையற்ற இந்தத் தற்காலிக வாழ்வில் இறைவனையும் மறுமையையும் மறுத்து தான்தோன்றித்தனமாக வாழ்பவர்களுக்கு இப்பூவுலகிலும் அமைதியின்மையே. மறுமையில் நரக தண்டனையும் காத்திருக்கிறது.

மனித வாழ்வின் இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துக்கொண்டு அனைவரும் பேணுதலோடு வாழ்ந்தால் இந்த பூமியில் ஆரோக்கியமான சமூகம் அமையும். சுயகட்டுப்பாடு, பொறுப்புணர்வு, சகிப்புத்தன்மை, தியாகம் போன்ற அரிய பண்புகள் தனிநபர்களில் உருவாகும். பரஸ்பர அன்பு, உரிமை மற்றும் கடமை பேணுதல், விட்டுகொடுத்தல், கூட்டுறவு போன்றவற்றால் சமூக உறவுகள் செழிக்கும். அப்போதுதான் அங்கு பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளும், பொறுப்புணர்வு உள்ள பெற்றோர்களும், கணவனை மதிக்கும் மனைவிகளும் மனைவியை மதிக்கும் கணவன்மார்களும் சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் சமூகம் உருவாகும். பூமியே சிறந்த ஒரு வாழ்விடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

அவ்வாறு ஒரு ஆரோக்கியமான சமூகம் அமைய வேண்டுமானால் நாம் காலதாமதமின்றி மக்களின் சீர்திருத்தத்திற்கான வழிகளைக் கைகொள்ளவேண்டும். அதற்கு ஒன்றே மனித குலம் என்ற சகோதர உணர்வு, படைத்தவனே அனைவருக்கும் இறைவன், அவனது கண்காணிப்பில் உள்ளோம்,  அவனிடமே நம் மீழுதல், மறுமையில் இறைவனது விசாரணையும் சொர்க்கமும் நரகமும் உண்டு என்ற உறுதியான நம்பிக்கைகளை மனித மனங்களில் விதைத்து இறைவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழும் பண்பை சிறுவயது முதலே மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக