இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 பிப்ரவரி, 2018

இஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்


  
சமீபத்தில் பியூ ஆய்வு மையம் (www.pewresearch.org) வெளிப்படுத்தும் தகவல்கள்:
= 2015  - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் இருமடங்காகி விடும். உலக கிருஸ்துவர் எண்ணிக்கையை அது முந்தி விடும்.
= வரக்கூடிய ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 32% என்ற விகிதத்தில் உயரும்போது இஸ்லாமியர் எண்ணிக்கை  70% அதிகரிக்கும். – அதாவது  2015 இல் 1.8 பில்லியன் ஆக உள்ள இஸ்லாமியர் எண்ணிக்கை 2060 இல் சுமார்  3 பில்லியனாக உயரும். 2015 இல் இஸ்லாமியர் மொத்த உலக மக்கள் தொகையில் 24.1% இருந்தார்கள். 45 ஆண்டுகளுக்குப்பின் அது  31.1% ஆக உயரும். 


வளர்ச்சிக்கான காரணங்களாக சொல்லப்படுபவை:
உலகில் இன்றைய இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம் 2.9.  இஸ்லாம் அல்லாத ஏனையவர்களின் பிறப்பு விகிதம் 2.2 ஆக உள்ளது இதில் கிறிஸ்தவர்களின் பிறப்பு விகிதம் மட்டும் தற்போது 2.6 ஆக உள்ளது. (ஒரு இனம் வளர வேண்டுமானால் தேவைப்படும் குறைந்தபட்ச பிறப்பு விகிதம் 2.1)  இஸ்லாமியர் அதிகமாக வாழும் நாடுகளில் இஸ்லாமியர்களின் கருவுருந்தன்மை (fertility) மற்றவர்களை அதிகமாக உள்ளது. இஸ்லாமியர்களின் சராசரி வயது (median age) 2015 இல் 24 ஆக இருக்கையில் மற்றவர்களின் சராசரி வயது 32 ஆக உள்ளது.
= மனித இதயங்களில் இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் முறையான நம்பிக்கை விதைக்கப் படுவதால் பாவங்கள் விலகும்மனிதனை சுயக்கட்டுப்பாடு மிக்கவனாக கடமை உணர்வு மிக்கவனாக அது வார்த்தெடுக்கும் அநீதியும்,அக்கிரமங்களும் மோசடிகளும் அழிந்து அங்கே தர்மங்களும்நல்லறங்களும் நீதியும் நேர்மையும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் பண்பும் நாட்டுவளங்களை நெறியோடு பங்கிட்டுக் கொள்ளும் மனப்பாங்கும் மக்களிடையே வளர்ந்து வரும்.
= மனித உள்ளங்களில் உண்மையான இறை உணர்வும் பக்தியும் மறுமை உணர்வும் விதைக்கப் படுவதாலும் அவனோடு நேரடித் தொடர்பு ஏற்படுவதாலும் தனி நபர் வாழ்வில் தன்னம்பிக்கைசுயமரியாதை உணர்வுவீரம்பாவங்களில் இருந்து விலகியிருத்தல் தியாகமனப்பான்மைபொறுமைபிற உயிர்களிடம் அன்புபணிவு போன்ற நற்பண்புகள் மக்களின் வாழ்வில் தழைக்கும்.
= பொய்க் கடவுளர்களும் போலி தெய்வங்களும் இடைத்தரகர்களும் ஒழிவதால் கடவுளின் பெயரால் சுரண்டப்படுதலும் கொள்ளைகளும் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கவழக்கங்களும் வீண்சடங்குகளும் ஒழியும்பொருட்செலவின்றி நேரடியாக இறைவனை வழிபடுவார்கள்இந்த நிமிடம் வரையும் அயராமல் நடைபெறும் பகல் கொள்ளைகள் முடிவுக்கு வரும்தொடர்ந்து நாட்டில் செல்வ வளம் செழித்தோங்கும்ஆக்கபூர்வமான வழிகளில் நாட்டின் செல்வம் செலவிடப்படும்.
= ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை மேலோங்க ஜாதிகளும் தீண்டாமையும் ஏற்றதாழ்வுகளும் இனவெறியும் நிறவெறியும் ஒழியும்இனத்துக்கு ஒரு நீதிநாட்டுக்கு ஒரு நீதி மாநிலத்துக்கு ஒரு நீதி என்னும் நிலைமாறி அனைத்து மக்களுக்கும் ஒரே நீதி என்பது நடைமுறைக்கு வரும்மனித சமத்துவமும் சகோதரத்துவமும் சுயமரியாதையும் பரஸ்பர அன்பும் மலரும்.
  சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு அளிக்காத பொருளாதார திட்டங்கள் நடைமுறைக்கு வரும். நாட்டின் செல்வம் செல்வந்தர்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அனைவரிடையேயும் புழங்கும் வண்ணம் பொருளாதாரம் சீரமைக்கப்படும்.

  = செல்வந்தர்களிடம் நீதமான முறையில் ஜகாத்(ஏழைவரி) தவறாமல் வசூலிக்கப்படும். அது ஏழைகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கே விநியோகம் செய்யப்படும். இன்று நாட்டில் நிலவிலுள்ள 40% வருமான வரி விதிப்பின் விளைவாக உண்டாகும் கருப்புப்பணம், சுவிஸ் வங்கிகளில் பதுக்குதல் போன்றவை ஒழிந்து உள்நாட்டிலேயே அந்த பணம் புழங்க வழிவகை உண்டாகும். (செல்வந்தர்கள் இறைப் பொருத்ததிற்காக தானாகவே முன்வந்து ஜகாத்தை வழங்குவார்கள் என்பது வேறு விஷயம்)
  . = வட்டியில்லா பொருளாதாரம் நடைமுறைக்கு வரும். வெற்றுப்பணம் குட்டிபோடுவதும் வங்கிகள்    
   வெற்றுக்காகிதங்களை புழக்கத்தில் விட்டு லாபம் சம்பாதிப்பதும் நிற்கும். அதனால் பணத்துக்கு உண்மையான மதிப்பு உண்டாகி, பணவீக்கம், ஊக வாணிபம், மோசடிகள் ஒழிக்கப்படும். பணக்காரர்களை மேலும் பெரிய பணமுதலைகளாகவும் ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றும் இன்றைய பொருளாதார அமைப்பு மாறி முனைவோர் அனைவருக்கும் தக்க வாய்ப்பளிக்கும் திட்டங்கள் அமுலுக்கு வரும்.
= பகுத்தறியும் பண்பு தூண்டப்படுவதால் அங்கு அறியாமை அகன்று மனிதகுலத்துக்கு பயனுள்ள கல்வியும் அறிவியலும் வளரும்இறையச்சத்துடன் இணைந்து கற்கப்படும் கல்வியும் அறிவியலும் மனித இனத்தை அழிக்கவோ அதன்மேல் ஆதிக்கம் செலுத்தவோ பயன்படுத்தப்பட மாட்டாதுமாறாக ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தப்படும்இறைவனின் வல்லமையையும் மறுமையின் உள்ளமையையும் உணரவும் இறையச்சத்தை வளர்க்கவும் பயன்படும்.
= பகைமைகளும் மோசடிகளும் அகன்று போவதால் பாதுகாப்பும் அமைதியும் சூழ ஒரு புத்துலகு பூத்து வரும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கோட்பாடு உண்மையாகப் பின்பற்றப்படும் நாடுகளைப் பிரித்து நிற்கும் எல்லைகள் மறையும்நாடுகளின் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரத்தை விழுங்கி நிற்கும் இராணுவங்கள் மறையும்.
= இறை நேசத்துக்காகவும் மறுமை இன்பங்களுக்காகவும் வேண்டி எதையும் தியாகம் செய்யும் தன்னலமில்லாத சான்றோர்களால் அவ்வுலகு நிறைந்திருக்கும்
---------------------   

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக