இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 பிப்ரவரி, 2018

சூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்!


புகழ்  பெற்ற  ஒரு உணவகத்தில் மத்திய உணவை  டோர்  டெலிவரி ஆர்டர் செய்கிறீர்கள். உங்களைப்  போல் பலரும் ஆர்டர் செய்வார்கள். டெலிவரி  செய்யும் நபர்,  அனைத்து முகவரியையும் கணினியில்  கொடுத்தால் அனைத்துப் பாதைகளின் தூரத்தையும் ஆராய்ந்து, எல்லா வாடிக்கையாளர்களுக்கும்   டெலிவரி செய்து வர  பாதையைக் கொடுக்கும்.

ஆனால் கடுகின் அளவே உள்ள தேனீயின் மூளை எந்த வித கணினியின் உதவியும் இல்லாமல் உடனே  கணக்கிடுவது எப்படி?

தற்போதுள்ள மிகச் சிறந்த கணினிக்கு கூட, இந்த விடயம் மிகவும் சிக்கலாக, பல நாட்கள் எடுத்து கணிக்கக் கூடிய  ஒரு செயலாக இருந்தபோதிலும்  கடுகளவு உள்ள தேனீயின் மூளைக்கு இது  ஒரு சாதாரண சாதனை அல்ல.

"இயற்கையில் தேனீக்கள், தங்களின் பயண தூரத்தைக்   குறைக்கவும், எந்தவித  தடங்கலும் இல்லாமல் வீடு திரும்பவும், போகும் பாதையில் உள்ள நூற்றுக்கணக்கான பூக்களை வரிசைப்படுத்திக் கொள்ளும்", என்று பேராசிரியர் லார்ஸ் சிட்கா (Queen Mary's School of Biological and Chemical Sciences) கூறியுள்ளார். (1)
In the first part of the experiment, flowers were position at points 1-5 in the image above. In the second part of the experiment, the flower in location 3 was moved to location 6.  (4)

எளிதாக வழிகளைக் கண்டுபிடிப்பது என்பது குறுக்கு வழிகளை மட்டும் குறிக்காது. சரியான வழியையும் கண்டுபிடித்தால் தான் எளிதாக இருக்கும்.
கணினியின் தொடர்புள்ள செயற்கை பூக்களை ஆய்வகத்தில் உருவாக்கி தேனீக்கள் எப்படி  பாதையை தேர்வு செய்கின்றன  என்று கண்காணித்தனர். பூக்கள் இருக்கும் பாதையில் வரிசையாக பயணம்  செய்யாமல், அவைகளை ஆய்வு செய்து விட்டு, மிக விரைவான பாதையை தேர்ந்து எடுக்கின்றன.
ஒரு மலரில் அல்லது கனியில் தனக்கு உரிய உணவு உள்ளதா என்பதை மோப்ப சக்தி மூலம் சரியாகக் கண்டுபிடித்தால் தான் வழிகள் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பூவாகச் சென்று ஏமாந்தால் வழிகள் எளிதாக இருக்காது. அலைச்சல் தான் மிச்சமாகும். தேனீக்களின் மோப்பசக்தி மிகத் துல்லியமாக அமைந்துள்ளதயும் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
திருக்குர்ஆன் "தேனீக்கள்" என்ற அத்தியாயத்தில் இவ்வாறு கூறுகின்றது.


"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது." [16:68-69]

தேனின் மருத்துவ குணங்களைப்  பற்றியும், இன்னும் தேனீக்கள் பற்றிய பொதுவான கருத்துக்களைத் தான் அன்றைய மக்கள் (சரியாகவும் & தவறாகவும்) கூறி வந்தனர் ஆனாலும்  திருக்குர்ஆன் ஆணித்தரமாக அதன் பாதை அமைக்கும் திறனைப் பற்றி குறிப்பிட்டு கூறியது, தன்  நம்பகத் தன்மையை  முன்னிறுத்தும் செயலே அன்றி வேறில்லை. இதை அந்தத் தேனியைப் படைத்தவன் தவிர வேறு எவராலும் சொல்லியிருக்க முடியாது.

"சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது" என்று சொல்வதின் மூலம்,  தேனீயின் இந்த பாதை அறியும் தன்மையை நுண்ணியமாக ஆய்வு  செய்வதன் மூலம், மனித குலத்திற்கு நரம்பியல் மற்றும் முளைத் தொடர்பான பல விடயங்களுக்கு தெளிவு கிடைக்கும் என்பதும் உண்மை.

"இன்றைய அறிவியல் உலகில்   இது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், மனித மூளையில்  உள்ள  எந்த நரம்பியல் சுற்று மிகக் கடினமான விடயங்களை எளிதில் கண்டுபிடிக்கும்  என்பது பற்றிய  ஆய்வை தொடரவும் உதவுகின்றது"  என்கிறார் பேராசிரியர் லார்ஸ் சிட்கா.

நடுநிலையோடு சிந்திக்கும் மக்கள், இதை ஒரு கல்வி அறிவில்லாத, 1000 வருடங்களுக்கு முந்தய மனிதர் சொல்லியிருக்க முடியாது என்று ஏற்றுக்கொள்வார்கள்.

இது  படைத்த இறைவனால் அருளப்பட்ட வேதம். இந்த ஒரு  வசனத்தினால் மட்டும் தான் "திருக்குர்ஆன் இறைவேதமா" என்றால் நிச்சயமாக இல்லை. மேலும் விபரங்களுக்கு http://scienceprovesquran.blogspot.in/2016/12/blog-post_79.html
நன்றி : நாடோடி தமிழன் 
------------------------- 
தொடர்புடைய ஆக்கங்கள் :
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக