இன்று நாம் வாழும் வாழ்க்கை என்பது என்ன? இதன்
நோக்கம் என்ன? தற்காலிகமான இவ்வாழ்வுக்குப் பிறகு நமக்கு என்ன காத்திருக்கிறது? இங்கு நாம்
எப்படி வாழவேண்டும்? இதுபோன்ற கேள்விகள் அனைத்துக்கும் தெளிவான மற்றும் உறுதியான
பதில்களையும் வழிகாட்டுதல்களையும் இறுதிவேதமான
திருக்குர்ஆனில் இருந்தும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்களில்
இருந்தும் நாம் பெறலாம்
அதை சுருக்கமாகக்
கூறுவதென்றால்........
vஇவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது ஒரு
பரீட்சை போன்றது.
67:2 .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர்
என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும்
வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன்
(யாவரையும்) மிகைத்தவன்; மிக
மன்னிப்பவன்.
18:7. (மனிதர்களில்)
அழகிய செயலுடையவர்கள் யார்என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக
பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
2:155 .நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள்
ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால்
பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
v இங்கு நமது வினைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகின்றன.
36:12 .நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே
உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்)
அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள்
விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம்
ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
நமதுசெயல்கள்பதிவாகின்றனஎன்பதைஉணரமிகப்பெரியஆராய்ச்சிகள்ஒன்றும்தேவைஇல்லை. சற்றுநம்மூளையைப்பற்றிசிந்தித்தாலேபோதும். நாம்கவனித்துசெய்யும்செயல்கள்மட்டுமல்லகவனம்செலுத்தாமல்செய்யும்செயல்கள்(conscious and subconscious)எனஅனைத்தும்அங்குபதிவாகின்றன. இவைபோகஒலி, ஒளிவாசம்போன்றஅனைத்துமேமின்காந்தஅலைகள்என்பதைநாம்அறிவோம். அவைதன்பாதையில்எதிகொள்ளும்திடப்பொருட்களின்மீதுதங்கள்பதிவுகளைஏற்படுத்துகின்றன. இந்தஅடிப்படையில்தான்ஆடியோ, வீடியோபதிவுகள்நடைபெறுகின்றனஎன்பதைஅனைவரும்அறிந்தேஇருக்கிறோம்.
vஇறைவனிடமிருந்து கட்டளை வரும்போது
ஒருநாள் இவ்வுலக அழிவு ஏற்படும். தொடர்ந்து மீண்டும் இறைக் கட்டளை வரும்போது
அனைவரும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள்.
36:49. அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக்
கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது
அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
36:50. அப்போது அவர்கள் மரணசாசனம் சொல்ல சக்தி
பெறமாட்டார்கள்; தம்
குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
78:17-20 .நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே
இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
இன்னும், வானம்
திறக்கப்பட்டு பல வாசல்களாகி விடும். மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
vமீண்டும் ஒரு இறைக் கட்டளை வரும்போது
இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் ஒருவர் விடாமல் மீண்டும்
உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள்.
64:7 (மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே
மாட்டார்கள் என்று நிராரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; ''அப்படியல்ல! என்னுடைய
இறைவன் மீது சத்தியமாகநீங்கள் நிச்சயமாக
எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக
அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்'' என்று (நபியே!) நீர்
கூறுவீராக.
36:51- 52 .மேலும்ஸூர் ஊதப்படடதும்உடனே அவர்கள்
சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள். ''எங்களுடைய துக்கமே!
எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?'' என்று அவர்கள்
கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும் (அவனுடைய) தூதர்கள்
உண்மையெனக் கூறியதும் இதுதான்'' (என்று அவர்களுக்குக்
கூறப்படும்).
vஒவ்வொரு மனிதர்களும் அவரவர்களின்
வினைப் பட்டியல் அவர்களின் முன் சமர்ப்பிக்கப்பட்டு விசாரிக்கப் படுவார்கள்
36:65 .அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது
முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக்
கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும்
சாட்சி சொல்லும்.
99:7-8 .எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை
செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை
செய்திருந்தாலும், அ(தற்குரிய
பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
vயாருடைய நன்மைகள் அதிகமோ அவர்களுக்கு
சொர்க்கச் சோலைகளில் இருப்பிடம் வழங்கப்பட்டு அங்கு நிரந்தரமாக இன்ப வாழ்வு
வாழ்வார்கள்.
10:9
நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு
அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்¢ இன்பமயமான
சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
43:71
பொன் தட்டுகளும், கிண்ணங்களும்
அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்¢ இன்னும்
அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு
இன்பம் தருவதும் அதிலுள்ளன¢ இன்னும், 'நீங்கள்
இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என
அவர்களிடம் சொல்லப்படும்.)
vயாருடைய தீமைகள் அல்லது பாவங்கள்
அதிகமோ அவர்களுக்கு தண்டனையாக நரகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு தொடர் வேதனைகளை
அனுபவிப்பார்கள்.
20:74 நிச்சயமாக எவன் தன்
இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக
இருக்கிறது, அதில்
அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
7:41 அவர்களுக்கு
நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு
மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம்
கூலி கொடுப்போம்.
நாம் ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்க இருக்கிறோம்
என்பதும் இன்று நாம் காணும் இவ்வுலகம்
என்பது தற்காலிகமானது என்பதும் மிகத் தெளிவான உண்மைகள். நமது
நாளைய இருப்பிடம் சொர்க்கமா இல்லை நரகமா என்பதை முடிவு செய்யும் பரீட்சைக் கூடமே
இந்தத் தற்காலிக உலகம் என்னும் பாடத்தைப் பெறுவோர்தான் உண்மையில் அறிவாளிகள்.
அதன்படி இந்தப் பரீட்சை வாழ்வைப் புரிந்துகொண்டு அதை உறுதியான உள்ளத்தோடு
எதிர்கொண்டால் இம்மை வாழ்வும் அமைதியாக இருக்கும். மறுமையில் மோட்சமும் அதாவது
சொர்க்கமும் கிடைக்கும். ஆக, இறைவன்
அமைத்த இந்தப் பரீட்சையை உரிய முறையில் வெல்ல இறைவனே வடிவமைத்து தந்த வாழ்க்கைத்
திட்டத்திற்குப் பெயர்தான் இஸ்லாம் என்பது. (இறைவனுக்குக் கீழ்படிதல் என்பதே
இவ்வார்த்தையின் பொருள்). அதற்கான முழுமையான வழிகாட்டிகளே திருக்குர்ஆனும் நபிகள்
நாயகமும் (அவர்மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக)
தூத்துக்குடியைச் சார்ந்த பர்னபாஸ்
என்ற ஒரு கிறிஸ்தவ மதபோதகர் இஸ்லாம் எவ்வாறு வன்முறையை போதிக்கிறது பாருங்கள் என்று
சொல்லி அவர்கள் நபிமொழிகளில் இருந்தும்
பைபிளில் இருந்தும் வசனங்களை மேற்கோள்காட்டி அவற்றை ஒப்பிட்டு குர்ஆன் வன்முறையை
போதிக்கிறது என்றும் பைபிள் மென்முறையை போதிக்கிறது என்பதையும் பதிவை
அனுப்பியிருந்தார்.
விபச்சாரக் குற்றமும் தண்டனையும்
என்ற தலைப்பில் அவர் எடுத்துக் கட்டியுள்ள ஹதீசையும் பைபிள் வசனங்களையும் இங்கு ஆய்வுக்கு
எடுத்துக் கொள்வோம்:
முஹம்மது
நபி அவர்களின் நடைமுறை:
= இம்ரான் பின் ஹுஸைன் அவர்கள்
கூறியதாவது:
விபச்சாரத்தால் கர்ப்பமுற்றிருந்த
ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "இறைத்தூதரே!
தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன். என்மீது தண்டனையை நிலை
நாட்டுங்கள்" என்று கூறினார். நபியவர்கள் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்துவரச்
செய்து, "இவளை நல்ல
முறையில் கவனித்து வாருங்கள். குழந்தை பிறந்ததும் இவளை என்னிடம் அழைத்து
வாருங்கள்" என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார். பின்னர் நபியவர்கள்
உத்தரவிட அவள்மீது அவளுடைய துணிகள் சுற்றப்பட்டன.பிறகு நபியவர்கள் உத்தரவிட அவளுக்குக் கல்லெறி தண்டனை
நிறைவேற்றப்பட்டது.பிறகு நபியவர்கள்
அவளுக்காக இறுதித் தொழுகை நடத்தினார்கள்.
அப்போது உமர் அவர்கள், "அல்லாஹ்வின்
தூதரே! இவளுக்காகத் தாங்கள் தொழ வைக்கிறீர்களா? இவள்
விபச்சாரம் புரிந்தவள் ஆயிற்றே?" என்று
கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள், "அவள் அழகிய
முறையில் மன்னிப்புத் தேடிவிட்டாள். மதீனா வாசிகளில் எழுபது பேரிடையே அது
பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக அமையும். உயர்ந்தோன்
அல்லாவுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த இப்பெண்ணின் பாவ மன்னிப்பை விடச் சிறந்ததை
நீர் கண்டுள்ளீரா?" என்று
கேட்டார்கள்.
(முஸ்லிம் : நூல் 29, ஹதீஸ் எண் 3501)
இயேசுவின்
நடைமுறை:
பைபிள் (யோவான் 8:3-11) -
அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும்
அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே
நிறுத்தி:போதகரே, இந்த ஸ்திரீ
விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக்
கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளை
இட்டிருக்கிறாரே, நீர் என்ன
சொல்லுகிறீர் என்றார்கள். அவர் மேல் குற்றம் சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்
பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டு இருக்கையில், அவர்
நிமிர்ந்து பார்த்து:உங்களில் பாவம் இல்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன்என்று
சொல்லி, மறுபடியும்
குனிந்து, தரையிலே
எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள்
மனச்சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு, பெரியோர்
முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய் விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு
நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள்
எங்கே? ஒருவனாகிலும்
உன்னை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி:நானும்
உன்னை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ் செய்யாதேஎன்றார்.
இவ்வாறு நபிகளார் விபச்சாரம் செய்த
குற்றவாளிக்கு கல்லெறி தண்டனை கொடுத்து மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்கள்
என்றும் இயேசு அதே குற்றவாளியை மன்னித்து விட்டார்கள் என்றும் பர்னபாஸ் அவர்கள்
குறிப்பிட்டு இருந்தார்கள்.
இந்தக்
குற்றச்சாட்டிற்கான விளக்கம்:
விளக்கம் கூறும்முன் நாம் கவனிக்கவேண்டிய
சில விடயங்கள் உள்ளன:
= இறைத்தூதர்கள் இந்த பூமிக்கு
அனுப்பப்படுவதன் நோக்கம் மக்களிடையே இறை உணர்வை ஊட்டி அவர்களை நல்லொழுக்கம்
பேணுபவர்களாக ஆக்குவதோடு இறைவனின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சமூகத்தில்
தர்மத்தை நிலைநாட்டுவதும் ஆகும். அவ்வாறு தர்மத்தை, நீதியை, ஒழுங்கை நிலைநாட்ட
நன்மைகளை எவுவதோடு தீமைகளைத் தடுக்கவும் வேண்டும்.
= மனித சமூக அமைப்பின் அடிப்படையையே
தகர்த்தெறியும் மகாப்பாவம் விபச்சாரம்! தலைமுறைகளை பாதிக்கவும் குடும்ப அமைப்பில்
பல குழப்பங்களை உருவாக்கவும் செய்யும் பாவம் அது! பொறுப்புணர்வில்லா
பெற்றோர்களையும் தந்தைகளில்லா குழந்தைகளையும் அனாதைகளையும் உருவாக்கும் பாவம் அது!
இப்பாவத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டு தாயையோ தந்தையையோ மனைவியையோ கணவனையோ
இழந்தவர்களைக் கேட்டால்தான் இப்பாவத்தின் கடுமை புரியும். சமூகத்தை சீர்குலைக்கும்
இந்தப்பாவத்தை தடுப்பது எப்படி என்பது சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும்
விடைகாணத் துடிக்கும் கேள்வியாகும்.
= விபச்சாரம், திருட்டு, கொலை,
கொள்ளை போன்ற மற்ற மனிதர்களை பாதிக்கும் பாவங்களை சமூகத்தில் இருந்து ஒழிக்க
மக்களுக்கு உபதேசம் மட்டும் செய்தால் போதாது. மக்களின் குடும்ப வாழ்வையும் சமூக
அமைப்பையும் சீர்குலைக்கும் பாவங்களும் திருட்டு கொலை போன்ற பயங்கரவாத செயல்களும்
சமூகத்தில் பரவாமலிருக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளும் கொடுக்கப்பட வேண்டும்.
= பூமியில் தர்மத்தை நிலைநாட்டும்
பணியில் மக்களுக்கு முன்மாதிரிகளாக விளங்கும் இறைத்தூதர்கள் பொதுவாக மக்களோடு
இரக்ககுணத்தோடு நடந்துகொண்டாலும் மேற்படி தண்டனைகள் விஷயத்தில் கண்டிப்பு
காட்டாவிட்டால் அது நீதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயலும் தவறான முன்மாதிரியும்
ஆகிவிடும். பெருங்குற்றங்கள் செய்வோரை சர்வசாதாரணமாக மன்னித்துவிட்டால் என்ன
நடக்கும் என்பதை அனைவரும் அனுபவபூர்வமாகவே அறிவோம். நீதி, நேர்மை, சட்டம், ஒழுங்கு
என்பவை அர்த்தமற்றுப் போய் நாட்டில் தீராத குழப்பமே மிஞ்சும். மனிதன் வாழ்வதற்கே
வெறுத்துப் போகும் நிலை ஏற்படுத்தும். (தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின்
அறிக்கைப்படி இன்று இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் 30 வயதுக்குஉட்பட்டஒருவர்தற்கொலைசெய்கிறார்)மேலும்
அக்குற்றங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு செய்யப்படும் பெரும் அநீதியாகவும் அது
ஆகிவிடும்.
மேற்படி விடயங்களைக்
கருத்திற்கொண்டு இங்கு எடுத்துக்காட்டப்பட்ட நபிமொழியையும் பைபிள் வசனத்தையும் இப்போது
படியுங்கள். குற்றம் சாட்டுபவரைப் பொறுத்தவரை, நபிகளார் விபச்சாரக் குற்றத்திற்கு
தண்டனை கொடுத்துள்ளதாகவும் இயேசு விபச்சாரிக்கு தண்டனை கொடுக்காமல் மன்னித்து
விட்டதாகவும் எடுத்துக் கூறுகிறார். இப்போது யாருடைய செயல்பாடு பாவத்தைத்
தடுக்கும், யாருடைய செயல்பாடு பாவத்தை வளர்க்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட எது நடைமுறையான தீர்வைத் தரும் என்பதை
சீர்தூக்கிப் பாருங்கள். சமீபத்தில் நாட்டில் பரவலாகி வரும் பாலியல் வன்முறைக்கு
இஸ்லாமிய சட்டங்களே சிறந்த தீர்வு என்று நாடு உணர்ந்துவருவதை அனைவரும் அறிவோம்.
தர்மத்தை நிலைநாட்டிய இறைத்தூதர்கள்
இவ்வுலகுக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரையும் புனிதர்களாகவே சித்தரிக்கிறது
இஸ்லாம். இறைத்தூதர்களிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்று கற்பிக்கிறது. அவர்கள் அனைவரும்
நம் மனிதகுலத்திற்கு வழிகாட்டுவதற்காக வெவ்வ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு
நாடுகளில் இறைவனால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் நம் மனிதகுலம் என்ற
மாபெரும் குடும்பத்தவருக்கு வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களே. அவர்களின்
பெயரைக் கேட்கும்போது அலைஹிஸ்ஸலாம் (அவர்கள் மீது இறை சாந்தி உண்டாகட்டும்) என்று
பிரார்த்திக்கவும் கற்றுக் கொடுக்கிறது இஸ்லாம்.
இஸ்லாத்தின்
மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்பின் தொடர்புகளை மறுத்து (out of context)
உண்மையைத் திரித்துக் கூறுவதால் இங்கு இயேசுவைத் தவறாகப் புரிந்து விடாதீர்கள்.
இயேசு மற்ற இறைத்தூதர்களைப் போலவே தான் அனுப்பப்பட்ட இடத்தில் தர்மத்தை
நிலைநாட்டுவதற்கான அனைத்தையும் செய்தார் என்றே குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு
அறிவிக்கின்றன.
மேற்படி
நபிமொழியை கவனமாகப் படிக்கும்போது நபிகளார் குற்றவாளியை உரிய முறையில் கவனித்து
குழந்தை பெற்ற பின்னரே தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுகிறார்கள். வேறு ஒரு
அறிவிப்பில் குழந்தை பிறந்தபின் இரண்டு வருடம் தாய்ப்பால் ஊட்டியபின் தண்டனை
நிறைவேற்றப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஆக, நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தபோது மக்களிடம் கருணை உள்ளத்தோடு நடந்து கொண்ட
போதும் நீதி வழுவாமல் நடந்து கொண்டார். இறைவனின்கட்டளைகளை முன்னுதாரணமாக நின்று நடைமுறைப் படுத்தினார். தன்
உணர்வுகளுக்கு ஆட்பட்டு சட்டத்தை நிலைநிறுத்துவதில் அவர் வளைந்து கொடுத்திருந்தால்
அந்த முன்னுதாணத்தின் அடிப்படையில் பிற்காலத்தில் மக்களால் சட்டம் வளைக்கப்
பட்டிருக்கும் என்பதை மேற்படி நிகழ்வில் இருந்து காணலாம்.
அதேவேளையில் இயேசு அவர்கள் விபச்சாரியை
மன்னித்ததாகக் கூறப்படும் நிகழ்வை முன்னுதாரணமாகக் காட்டி அதை
நடைமுறைப்படுத்தினால் உலகில் சட்டம் நீதி என்பவை என்ன விபரீதங்களுக்கு உள்ளாகும்
என்பதை அனைவரும் அறிவோம். பாவம் செய்யாதவர் மட்டுமே குற்றவாளியை தண்டிக்கலாம் என்ற
சட்டம் நடைமுறைக்கு வருமானால் சட்டம் ஒழுங்கு, காவல், நீதிமன்றம் இவை அனைத்துமே
கேலிக்குரியதாக ஆகிவிடும். ஆக, நீதியை, தர்மத்தை நிலைநாட்ட வந்த இயேசு
கிறிஸ்துவின் வாழ்வில் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததா என்பது கேள்விக்குரியதே.
இஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் கொள்கை உலகில் வேகமாகப் பரவிவருவது தங்களின் சுயநல நோக்கங்களுக்கு தடையாக அமையும் என்பதை அறிந்த ஆதிக்க சக்திகள் இஸ்லாத்தை மக்களிடையே தவறான ஒளியில் சித்தரிக்கக் கடுமையான பிரச்சாரங்களை தங்களின் ஊடகங்கள் மூலம் மேற்கொள்கிறார்கள். அதற்காக முன்பின் தொடர்புகளை மறுத்து (out of context ) திருக்குர்ஆனின் வசனங்களை மேற்கோள் காட்டி இஸ்லாம் வன்முறையைத் தூண்டுகிறது என்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.
உதாரணமாக கீழ்கண்ட வசனங்களை பாருங்கள்.
4:74 - இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ,வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியை பின்னர் வழங்குவோம்.4:76 - நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர்.மறுப்போர் தீய சக்திகளின் பாதையில் போரிடுகின்றனர்.எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்குஎதிராகப் போரிடுங்கள்!ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.
இதைப் படிக்கும் வாசகர்களின் மனதில் இஸ்லாம் போரை ஊக்குவிக்கும் மார்க்கம் என்ற ஒரு எண்ணத்தை உண்டாக்க முயல்கிறார்கள். இங்கு உண்மை என்னவென்றால் மேற்படி வசனங்களின் தொடரில் வசன எண் 4:75 இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏன்? காரணம் அந்த வசனத்தையும் சேர்த்துப் படிக்கும்போது வாசர்களுக்கு உண்மை விளங்கிவிடும் என்பதுதான்!
4:75 "பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்."
அக்கிரமக்காரர்களுக்கு எதிரான போரை பற்றி தான் இந்த வசனங்கள் பேசுகின்றன. இது தான் அறப்போர். தர்மத்தை நிலைநாட்டும் போர்.
இருட்டடிப்பால் திரிக்கப்படும் நூல்கள்
உலகில் எந்த புத்தகத்தை எடுத்து படித்தாலும், அந்த புத்தகத்தின் நோக்கம் என்ன, என்ன கருத்தை சொல்ல அந்த புத்தகம் முயற்சிக்கிறது, எந்த சுழலில் அந்த கருத்துக்கள் சொல்லப்படுகின்றன, என்பதையெல்லாம் கணக்கில் கொள்வது அவசியம். இது அல்லாமல், தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல், நடுவில் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்தால், அது தவறாகவே இருக்கும். இந்த விதிக்கு எந்த புத்தகமும் விலக்கல்ல.
உதாரணமாக:
பகவத் கீதை:
ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய். 2:18
"கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்." 2:37
இது போல் வரும் வசனங்களை வைத்துக் கொண்டு, போர் செய்து வன்முறையை கீதை தூண்டுகிறது என்று எவரேனும் விமர்சனம் செய்தால் அது சரியாகுமா?
அதர்வ வேதம்:
"வேத வன்னியே, வேதங்களை விமர்சிப்பவரை நீ வெட்டி வீழ்த்து. (இன்னும் அவரை) நீ கிழித்து, எரித்து சாம்பலாகி விடு." அதர்வ வேத மந்திரம் 12/5/62
இது போல் வரும் வசனங்களை வைத்துக் கொண்டு, வேதங்கள், விமர்சனம் செய்வோரை கொல்ல சொல்கிறது என்று ஒருவர் கூறினால் அது சரியாகுமா?
கம்ப ராமாயணம்:
கம்ப ராமாயணத்தில், வாலி வதை படலம் மிக பிரபலமானது. வாலியை இராமன் மறைந்திருந்து கொல்கிறான். இதை பற்றி வாலியே "ஒளித்து நின்று,வரி சிலை குழைய வாங்கி, வாய் அம்பு மருமத்து எய்தல்தருமமோ? பிறிது ஒன்று ஆமோ?” என்றெல்லாம் இராமனை நோக்கி கேள்வி எழுப்புகிறான்.
வாலி வதை படலத்தை மட்டும் படிப்போர், இராமனை அநியாயக்காரன் என்று கூறினால் அது சரியாகுமா?
திருக்குறள்:
தமிழின் ஒப்பற்ற ஓர் இலக்கியம் திருக்குறள். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. கீழே உள்ள குரளைப் படியுங்கள்.
கற்புடைய பெண், தெய்வத்தைக்கூட வணங்க மாட்டாள் தெய்வத்துக்குப் பதிலாகத் தினத்தினம் காலையில் கணவனைத் தொழுதுவிட்டுத்தான் படுக்கையை விட்டு எழுதிருப்பாள், அவள் 'பெய்; என்று சொன்ன உடனேயே மழை பெய்யும் என்பதே இந்த குறளின் பொருள்.
ஒரு "பகுத்தறிவுவாதி" அது எப்படி மழை ஒரு பெண்ணின் பேச்சுக்காக பெய்யும். வானத்தில் ஏற்படும் இரசாயன மாற்றமெல்லாம் என்ன ஆனது? எனவே இந்த குறள் விஞ்ஞானத்திற்கு எதிராக உள்ளது என்று வாதிட்டால், அது சரியாகுமா?
ஒரு பெண்ணியவாதி, இந்த குறளை படித்து விட்டு, மனைவி கணவனுக்கு கீழே என்று சொல்லி இருக்கிறார்.
எனவே திருவள்ளுவர் ஆண்ணாதிக்க சிந்தனை கொண்டவர் என்று கூறினால் அது சரியாகுமா?
முன்பின் தொடர்புகளை மறுத்து (out of context ) எல்லா புத்தகங்களையும் தவறானதாக சித்தரிக்க முடியும். உதாரணமாக ....
பைபிள்:
பெற்றோரையும், மனைவியையும், பிள்ளைகளையும் வெறுக்க சொல்லும் பைபிள்:
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். லூக்கா 14:26
இயேசுவை ஏற்காதவர்களை கொல்ல சொல்லும் பைபிள்:
"அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்." லூக்கா 19:27
இயேசு பிரிவினையே உண்டாக வந்ததாக சொல்லும் பைபிள்:
நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்." லூக்கா 12:51-53
பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. மத்தேயு 10:34-36.
தேவனை ஏற்காதவர்களை கொல்ல சொல்லும் பைபிள்:
"அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்." உபாகமம் 17:12
கர்த்தரை எதிர்ப்பவரை கல்லெறிந்து கொள்ள சொல்லும் பைபிள்:
ஆக, எந்த புத்தகத்தை விமர்சனம் செய்தாலும், அந்த புத்தகத்தின் நோக்கம் என்ன, என்ன கருத்தை சொல்ல அந்த புத்தகம் முயற்சிக்கிறது, எந்த சுழலில் அந்த கருத்துக்கள் சொல்லப்படுகின்றன, என்பதையெல்லாம் கணக்கில் கொள்வது அவசியம்.
மாறாக, ஆங்காங்கே ஓரிரு வசனங்களை எடுத்து கொண்டு விமர்சனம் செய்தால் அது தவறாகவே முடியும். இது போல் தவறான விமர்சனம் எல்லா புத்தகங்களிலும் செய்ய முடியும்.
நன்றி: invitetogod.com இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
மனிதர்களே! உங்கள்
இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே
ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர்
மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும்
பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து
கொள்ளுங்கள்; ..... நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே
இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத்
தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்று பொருள்)
‘ஒன்றே குலம் ஒருவனே இறைவன்’ என்ற மனித சகோதரத்துவ
தத்துவத்தைத்தான் இஸ்லாம் இன்று போதித்து வருகிறது. இதையேதான் இந்த பூமிக்கு வந்த நபிகள்
நாயகத்திற்கு முன் வந்த இயேசு கிறிஸ்து, மோசே ஆகியோர் உட்பட அனைத்து இறைவனின்
தூதர்களும் தத்தமது மக்களுக்கு எடுத்துரைத்து அதன் அடிப்படையில் தர்மத்தை
நிலைநாட்டிவிட்டுச் சென்றார்கள். ஆனால் அவர்களுக்குப் பிற்காலங்களில் வந்த ஆதிக்க
வெறி கொண்ட கூட்டங்களும் கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கப் புறப்பட்ட
இடைத்தரகர்களும் ஆன்மீகத்தை போதிக்கும்போது தங்கள் ஆதிக்கத்திற்குத் தடையாக நின்ற
இறை போதனைகளை திரித்துக் கூறினார்கள்.
அவ்வாறுதான் ஒன்றே மனித குலம் என்ற உண்மையைத் தந்திரமாக
மறைத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி பிற மக்களை அடிமைகளாக நடத்தினார்கள்.
சகமனிதனும் சகோதரனே என்ற உண்மையை மறைத்து அவர்களின் உரிமைகளை மறுத்தார்கள்.
உடமைகளைப் பறித்தார்கள். எதிர்த்தோரைக் கொன்றார்கள், நாடுகடத்தினார்கள், அடிமைகளாக
ஆக்கி வேறு நாடுகளில் விற்றார்கள்!
அவ்வாறு இந்த பூமியில் நடந்த அக்கிரமங்களுக்கும்
கொடுமைகளுக்கும் அளவே இல்லை. அதற்கு ஒரு உதாரணமே இன்று உலகையெல்லாம் தன்
ஆளுகைக்குள் கொண்டுவந்து அடக்குமுறை செய்துகொண்டிருக்கும் அமேரிக்கா என்ற
வல்லரசின் வரலாறு!
கொலம்பஸ்
போட்ட ஆக்கிரமிப்பு விதை!
"கொலம்பஸ் 1492 ம் ஆண்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்." உலக நாடுகள் எங்கும்
பள்ளிச் சிறுவர்களின் மனதில் புகுத்தப்படும் சரித்திர பாடம் இது! அமெரிக்கா
ஒன்றும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் அடியில் மறைந்திருக்கவில்லை, கொலம்பஸ் வந்து கண்டுபிடிப்பதற்கு! கொலம்பஸ்
வருவதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரிக வளர்ச்சி அடைந்திருந்த மக்கள் வாழ்ந்துக்கொண்டிருந்த
கண்டமே அமெரிக்கா!
கண்டுபிடித்தார்
என்பதை விட ‘பிடித்தார்’ என்ற சொல்லே பொருத்தமானது. அமெரிக்கா மட்டுமல்ல, இன்றுள்ள
முன்னேறிய ஏகாதிபத்திய நாடுகளின் வரலாறுகள் ஆக்கிரமிப்புகளால் ஆனவையே! ஐரோப்பாக்
கண்டத்தின் அருகில் ஒரு தீவில் (இங்கிலாந்தில்) பேசப்பட்ட ஆங்கில மொழி இன்று
எங்கெல்லாம் முக்கிய மொழியாக ஆகி இருக்கிறதோ அந்தக் கண்டங்களும் நாடுகளும் தீவுகளும்
அவர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானவையே!
கொலம்பசும்
அவரது குழுவும், 1492ல்
அமெரிக்கக் கண்டத்தில் கால் பதித்தது தற்செயலான ஒரு நிகழ்வாக வரலாறுகளில்
சித்தரிக்கப் பட்டாலும் ஐரோப்பிய முதலாளிகளின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின்
ஒரு பகுதியாக, செல்வம்
தேடி, தங்கம் தேடி, வளங்கள் தேடி அலைந்த பயணங்களே அவை
என்பதே உண்மை! கொலம்பஸ் குழுவினரும் அவரைப் பின்தொடர்ந்தவர்களும்அங்கிருந்த
பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அடக்குமுறைகளைக் கையாண்டு அடிமைப்படுத்தினார்கள்.
அவர்களை அடிமைகளாக ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்தனர். அவர்களது தங்க வயல்களைக்
கபளீகரம் செய்தனர்.
கொலம்பசும்அவருக்குப் பின் அது போன்று
வந்தவர்களும் 2 ஆண்டுகளில், தூக்கிலிட்ட, கொலை செய்த, எரித்த, சிதைத்த, தற்கொலைக்குத் தள்ளிய
செவ்விந்தியர்களின் எண்ணிக்கை 2,50,000 என்று
கணக்கிடப்படுகிறது. இத்தகைய ஆக்கிரமிப்புகள், அமெரிக்கக்
கண்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. அமெரிக்க கண்டத்தின் பல பகுதிகளில் பல
நூறாண்டுகளாக வாழ்ந்த மக்களை இனப் படுகொலை செய்து ஐரோப்பாவின்
பல பகுதிகளிலிருந்து மற்ற இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர்.
வெள்ளை
தேசத்தின் விரிவாக்கம்
அட்லாண்டிக் சமுத்திரத்தின்
கடலோரம் துவங்கி, பசிபிக்
சமுத்திரக் கரை வரை, அத்தனை
பூர்வ குடியினரையும் அழித்தொழித்து, அமெரிக்க
சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு சுமார் 300
ஆண்டுகள் பிடித்தன. இந்த 300
ஆண்டுகளும் உலகமே அதிர்ந்து போகிற அளவுக்கான கொடுமைகள் மனித
குலத்தின் மீது தொடுக்கப்பட்டன. 1830ல், அமெரிக்க அதிபராக இருந்த ஜாக்சன், “பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலப்
பரப்பில் இருந்த காட்டுமிராண்டிகளை வெளியேற்றிவிட்டு, நாகரீகமான வெள்ளை இன மக்களை
அடர்த்தியாகக் குடியேற்றுவதுதான் அமெரிக்காவின் நோக்கம்” என்று பகிரங்கமாக
அறிவித்தார். அமெரிக்காவின் எல்லைகள் இப்படித்தான் விரிவடைந்தன. தங்களின்
கட்டுமானப்பணிகளுக்காக ஏற்கனவே அடிமைப்படுத்தி வைத்திருந்த தென்னாப்பிரிக்காவின்
கருப்பு இனத்தவரை இறக்குமதி செய்து ஆடு மாடுகளை
விற்பதை போல விற்றார்கள். இந்த ‘வெள்ளை தேசத்தின்’ விரிவாக்கத்திற்காக உள்ளூர்
மக்கள் மீது படுகொலைகள், உயிருடன்
எரிப்பு, ஏமாற்று
வேலை, மோசடி, பெண்கள் மீது சொல்ல முடியாத
பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
மனிதாபிமானம்
எங்கே போயிற்று?
சகமனிதன்
தன் சகோதரனே என்று உணர்வோ அல்லது சக மனிதனுக்கும் இந்த பூமியில் தன்னைப் போலவே
உரிமைகள் உள்ளன என்ற உணர்வோ அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு இறைநம்பிக்கை இருந்தது, IN GOD WE TRUST (கடவுளின்
மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்) என்பது இவர்களின் முக்கிய மந்திரம். இதை
தங்கள் டாலர் நோட்டுகளிலும் ஆவணங்களிலும் எழுதி வைத்திருப்பதைக் காணலாம். ஆனால்
தாங்கள் செய்யும் மனித உரிமை மீறல்களுக்கும் கொடுமைகளுக்கும் இறைவனிடம் பதில்
சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோ பாவங்களுக்கு இறைவனிடம் கடுமையான தண்டனைகள்
உள்ளன என்ற அச்சமோ அவர்களுக்கு துளியும்
இருக்கவில்லை. ஒருவேளை அவர்கள் தங்களின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவை
என்று கருதினார்களோ? இல்லை, தங்கள் இனத்தைத் தவிர மற்றவை அனைத்தும் தாழ்ந்தவையே,
அவை தங்களுக்கு அடிமைப்பட்டுத்தான் அல்லது தங்கள் தயவில்தான் வாழவேண்டும் என்று
நினைத்தார்களோ? இன்று சில இஸ்லாமியர்கள்
செய்பவற்றை இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சித்தரிப்பதைப் போல இவர்கள் செய்த
கொடூரங்களை இன்றுவரை இவர்களின் மதத்தோடு தொடர்பு படுத்திப் பேசவிடாமல் இவர்களது
ஊடகங்கள் வெகு கவனமாகப் பார்த்துக் கொண்டன.
ஈவிரக்கமற்ற கொடூரங்களை பெருமளவில் நிறைவேற்றி
அதன்பின் அமைந்த வல்லரசுதான் அமேரிக்கா! இவர்கள்தான் இன்று மனித உரிமைக்
காவலர்கள்! சமாதானப் பிரியர்கள்! உலகத்திற்கே போலீஸ்காரர்கள், நீதிபதிகள்! வல்லரசாக நின்றுகொண்டு உலக நாடுகளையும்
அவற்றின் வளங்களையும் கையகப்படுத்துவதற்காக இவர்கள் தொடரும் கொடூரங்களை உலகத்தின்
அனைத்து நாடுகளும் அனுபவித்துள்ளன. இன்னும் தொடர்ந்து அனுபவித்து வருகின்றன. அன்று
ஹிரோஷிமாவிலும் இன்று ஈராக்கிலும் இவர்கள் நடத்திய படுகொலைகள் பிரசித்தமானவையே!
ஆயினும் இவற்றை யாரும் இன்றுவரை இவர்கள் சார்ந்துள்ள மதங்களோடு இணைத்துப்
பேசுவதில்லை... காரணம் அனைத்து ஊடகங்களும் இவர்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளன!
----------------
வல்லரசாக நின்றுகொண்டு உலக நாடுகளையும் அவற்றின்
வளங்களையும் கையகப்படுத்துவதற்காக இவர்கள் தொடரும் கொடூரங்களை உலகத்தின் அனைத்து
நாடுகளும் அனுபவித்துள்ளன. இன்னும் தொடர்ந்து அனுபவித்து வருகின்றன. அன்று
ஹிரோஷிமாவிலும் இன்று ஈராக்கிலும் இவர்கள் நடத்திய படுகொலைகள் பிரசித்தமானவையே!
அன்று
ஹிரோஷிமாவில்...
1945 ஆண்டு
ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி மீது இவர்கள் வீசிய அணுகுண்டுகளின்
விளைவுகளை உலகம் நன்றாகவே அறியும். இதுவே வரலாற்றில் முதல்முறையாக
அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த இரு
குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2-4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000-166,000 மக்களும், நாகசாக்கியில் 60,000-80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக
உயிர் இழந்தார்கள்.
குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில்
இறந்தோரில் பெரும்பாலோர் தீக்காயங்களாலும், மற்றவர்கள்
இடிமானங்கள் தங்கள்மேல் விழுந்ததாலும், இன்னபிற காரணங்களாலும் கொல்லப்பட்டனர்.
குண்டுவீச்சைத் தொடர்ந்த மாதங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும்
இறந்தனர். அந்தக் கதிர்வீச்சின் தாக்கம் இன்றும் தொடர்கிறது. இன்று பிறக்கும்
குழந்தைகளையும் அது ஊனமுற்றவர்களாகவும் புற்றுநோய்க்கு ஆளானவர்களாகவும்
ஆக்குகிறது.
இன்று
ஈராக்கில்...
பேரழிவு
இரசாயன ஆயுதங்கள் ஈராக் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் பொய்யுரைத்து ஆக்கிரமிப்பு
நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்காதான் வெள்ளைப் பாஸ்பரஸ் என்ற இரசாயனப் பொருளை
மிகப் பெரும் அளவில் ஃபலூஜா நகரின் மீதான தாக்குதலில் பயன்படுத்தியது.
போர்க்களத்தை ஒளியூட்டவே வழக்கமாய் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனம் மரணத்தை
விளைவிக்கும் பயங்கரமான இரணங்களை ஏற்படுத்தக் கூடியது. கதவுகள், சன்னல்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும்
மக்களின் உடைகள் என தன் வழிப்பட்ட தடைகள் அனைத்தையும் எரித்துக்கொண்டு முன்னேறி இறுதியில்
மனிதத் தோலையும், உள்ளிருக்கும் எலும்பையும் தின்று
செறிக்கும் அகோரப்பசி கொண்டது அந்த இரசாயனம்.
மக்கள்
பதுங்கி இருக்கும் பாதுகாப்பான குடியிருப்புக் கட்டிடங்களின் உள்ளிருக்கும் பிராண
வாயுவையும் உரிஞ்சி எடுத்துவிடும் தன்மை கொண்ட வெள்ளைப் பாஸ்பரஸ் இத் தாக்குதலில்
ஏராளமாகப் பயன்படுத்தப்பட்டது.இத்தோடு
நில்லாமல் சொல்லொணாத் துயரைத் தலைமுறை தலைமுறைக்கும் விளைவிக்கும் கதிர்வீச்சுத்
தன்மைகொண்ட ஏராளமான குண்டுகள் இந்த நகரத்தின் மீதான குவிந்த தாக்குதலில்
பயன்படுத்தப்பட்டன என்றும் அஞ்சப்பட்டது.
ஃபலூஜா
நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இந்த
பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க
அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக
இருக்கிறது என்ற
உண்மையை இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.
சக்தி
வாய்ந்த பொருளாதாரம், ஆயுதங்கள், வலிமையான ஊடகங்கள் இவற்றைக் கொண்டு இவர்கள்
நிகழ்த்திய கொடூரங்களை உலக மக்களின் முன்னால் நியாயப் படுத்துவதும் உலக மக்களை
மூளைச்சலவை செய்வதும் இவர்களின் வாடிக்கை. அன்று இவர்கள் கொன்று குவித்த
அப்பாவிகளை காட்டுமிராண்டிகள் என்று ஊடகங்களின் மூலம் சித்தரித்தார்கள். இன்று
தங்களின் கைப்பாவை அரசர்களைக் கொண்டு உலக வளங்களை கையகப்படுத்தியுள்ள நிலையில்
அந்த அரசர்களுக்கு எதிராக உரிமை கோரிப் போராடுபவர்களை தீவிரவாதிகள் அல்லது
பயங்கரவாதிகள் என்று தங்களின் சக்திவாய்ந்த ஊடகங்கள் மூலம் இடைவிடாது பரப்புரை
செய்கிறார்கள்! இவர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் செய்யும் போராட்டங்களை
இஸ்லாமிய தீவிரவாதம் என்றும் பயங்கரவாதம் கூறி உலக மக்களிடையே மூளைச்சலவைச்
செய்கிறார்கள்.
மட்டுமல்ல,
இந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசை திருப்பும்
நோக்கிலும் இஸ்லாத்தின் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும் இவர்களே தங்கள்
கைக்கூலிகளை அமர்த்தி அவர்கள் மூலம் தங்கள் வஞ்சகத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
உதாரணமாக, இன்று ஈராக்கில் ஆதிக்கம் பெற்று படுபயங்கரமான கொலைகளையும்
கழுத்தறுப்புக்களையும் நிறைவேற்றி வரும் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு இவர்களின்
கைக்கூலிப் படைகளே!
இஸ்ரேலின்
மொசாத் என்ற பயங்கரவாத அமைப்பும் அமெரிக்காவின் CIA என்ற உளவுத்துறையும் சேர்ந்து
உருவாக்கியதே ஐஎஸ்ஐஎஸ் என்பது சமீபகாலங்களில் கசிந்துள்ள உண்மையாகும். இவர்கள்
மூலம் கோர சம்பவங்களை நிறைவேற்றி அவற்றை உலகோர் மத்தியில் தங்கள் ஊடகங்கள் மூலம்
பரப்பி இஸ்லாத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி அதன் வளர்ச்சியை தடுக்கப்
பார்க்கிறார்கள். ஆனால் இறைவனின் மார்க்கம்
இஸ்லாமோ இந்த சூழ்ச்சிகளை எல்லாம் முறியடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இன்று பொதுவாக மக்களிடையே இறையச்சம் என்பது
குறைந்து வருவதால் கலாச்சார சீர்கேடுகள் மிகைத்து அதன் காரணமாக அவர்கள்
திருமணங்களிலும் குழந்தைப்பேறுகளிலும் மக்கள் ஆர்வமிழந்து காணப்படுவதை அறிவோம். ஆனால்
இஸ்லாம் அதனை ஏற்றுக்கொண்ட மக்களிடையே திருமண அமைப்பையும் குழந்தைகளையும் முதியோர்களையும்
பேணிக்காக்குமாறு பணிக்கிறது. இதனால் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இயற்கையாகவே
வளர்ந்து வருகிறது. அதுபோக சமீப காலங்களில் உலகெங்கும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக
ஏற்கும் மக்களின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. சமீபத்திய
புள்ளிவிவரங்கள் படி வருடத்திற்கு அமேரிக்காவில் 20000 பேரும் பிரிட்டனில்
5200
பேரும் பிரான்சில் 4000 -7000 பேரும்
ஜெர்மனியில் 4000 பேரும்
இஸ்லாத்தை ஏற்றுவருவதாக அறிகிறோம். இஸ்லாத்தின் இந்த அபார வளர்ச்சியும் ஏற்கெனவே
இவர்களால் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் இஸ்லாமிய நாடுகளில் மக்கள்
பெற்றுவரும் இஸ்லாமிய விழிப்புணர்வும் இவர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றன. ஏனெனில்
இஸ்லாம் என்ற மக்கள் இயக்கம் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரானது.
இவர்களின் சதித்திட்டங்களை முறியடித்து செயலிழக்கச் செய்துவிடும் என்பதை இவர்கள்
நன்றாகவே அறிந்துள்ளார்கள்.
இன்று இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை அகில உலக மக்களாலும் அதிவேகமாக
ஏற்கப்பட்டு பரவிவருவது அனைவரும் அறிந்த உண்மை! இந்த இஸ்லாத்தின் அபார
வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கத்தோடு இஸ்லாத்தின் எதிரிகளால் திட்டமிடப்பட்டு
நடத்தப்பட்ட ஒன்றுதான் பிரான்சில் சார்லி ஹெப்டோ தாக்குதல் என்பது
ஏகாதிபத்திய சக்திகள் தங்களது கைக்கூலிகளைக் கொண்டுஇப்படி ஒன்றை நிகழ்த்தி இஸ்லாத்திற்கு
அவப்பெயரை உண்டாக்கி இம்மார்க்கத்தை ஏற்கும் மக்களைத் தடுத்து நிறுத்த
முயற்சித்தார்கள்.. ஆனால் இறைவன் அவ்வாறு நாடவில்லை. சார்லி ஹெப்டோ
தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக ஆகியிருப்பதை
செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
இதை இறைவன் தன திருமறைக் குர்ஆனில் ஏற்கனவே கூறியும் உள்ளான்:
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)
அணைத்துவிடஅவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும்
இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)
ஊடகங்களின் இரட்டை நிலை:
தாங்கள் அச்சடிக்கும் டாலர் என்ற
வெற்றுக் காகிதத்தை தந்திரபூர்வமாக உலகெங்கும் திணித்து தங்களின் அடக்குமுறை மூலம்
உலக நாடுகளையும் அவற்றின் வளங்களையும் தங்களது ஆதிக்கத்தின் கொண்டுவந்துள்ள இரகசிய
சமுதாயம்தான் இன்று அமேரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் இயக்கி வருகின்றது.
இவர்கள் உலகத்திலுள்ள கொழுத்த வருமானங்கள் ஈட்டும் அனைத்து வியாபார, உற்பத்தி,
போக்குவரத்து, பொழுதுபோக்கு (entertainment), கட்டுமான (infrastructure), நிறுவனங்களையும்
அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலமும் தங்களின் ஆளுகைக்குக் கீழ்
கொண்டுவந்துள்ளார்கள். மருத்துவம், கல்வி, மதம் இவையும் வருமானங்கள் கொழிக்கும்
துறைகளல்லவா? ஆம், இவற்றையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை! இவற்றையும் இவர்கள்
தங்களின் திட்டங்களின் மூலமும் கையாட்கள் மூலமாகவும் திறம்பட நிர்வகித்து
வருகிறார்கள்.
இவர்கள் முக்கியமாக மிகவும் கவனத்தோடு
நிர்வகித்து வருவது ஊடகத்துறை. உலகில் உள்ள தலையாய பத்திரிகைகள், தொலைகாட்சி
சேனல்கள், ஊடக ஏஜென்சிகள் போன்றவை இவர்கள் கைவசமே உள்ளன. இவர்கள் சொல்வதை உலகின்
பெரும்பான்மை மக்கள் நம்பும் விதத்தில் இவர்கள் இவற்றைக் கையாள்கிறார்கள். நடக்காத
ஒன்றை நடந்ததாகவும் நடந்ததை நடக்காததாகவும் இவர்களால் காட்ட முடியும்.
அமெரிக்காவின் இரட்டை கோபுர இடிப்பு சம்பவத்தை ஒசாமா பின் லாடனும் கூட்டாளிகளும்
நிகழ்த்தினார்கள் என்று உலகை நம்ப வைத்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கோபுரங்களை
விமானம் மூலம் இடித்து வீழ்த்துவது அசாத்தியம் என்பதும் கட்டிடங்கள் டைனமைட்
வைத்துத்தான் (implosion) தகர்க்கப்பட்டு உள்ளன என்பதும் இது அமெரிக்காவின்
உள்வேலை(inside job) என்பதும் இன்று ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள். இச்சம்பவத்தின்
மூலம் இராக்கையும் ஆப்கானிஸ்தானையும் தங்கள் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்துள்ளதில்
இருந்தே இவர்களின் நோக்கம் என்ன என்பதை யாரும் அறியமுடியும்.