= கருக்கொலை, சிசுக்கொலை, பெண்சிசுக்கொலை
என்று தாம் பெற்ற பிள்ளைகளைக் சகஜமாக தாமாகவே கொன்றொழிக்கும் பெற்றோர்கள்,
= பெற்றோரை மதிக்காத பிள்ளைகள்,
பெருகிவரும் முதியோர் இல்லங்கள், கருணைக் கொலை என்ற பெயரில் நடக்கும் முதியோர்
கொலைகள்,
= காதலர்களைக் கைப்பிடித்து போற்றி
வளர்த்த பெற்றோரை தூக்கி எறிந்து செல்லும் பிள்ளைகள்.
= காதல் என்ற பெயரில் காமப்பசி
தீர்த்துவிட்டு கர்ப்பம் தரித்தபின் கைவிட்டு ஓடும் காமுகர்கள்.
= திருமண ஒப்பந்தத்தை மீறி நடக்கும்
கள்ளக்காதல் உறவுகள், இவ்வாறு குடும்பத்துக்கு செய்யப்படும் வஞ்சகங்கள், கபட
நாடகங்கள்,
= திருமணம் இல்லாமலே ஆணும் பெண்ணும் தகாத
உறவு கொண்டு பெற்றெடுக்கும் பிள்ளைகள்.
= அந்நிய ஆண்களும் அன்னிய பெண்களும்
தடைகளின்றி கலந்து படிக்கும், பணியாற்றும் ஏற்பாடுகளும் அங்கு நடைபெறும் பாலியல்
உறவுகளும், வல்லுறவுகளும்!
என இவற்றின் நடுவே எந்தவித குற்ற உணர்வும்
வெட்க உணர்வும் இன்றி சஞ்சரித்துக் கொண்டு வாழ்கிறது சமூகம்!
= மறுபுறம் இலஞ்சம் ஊழல், கொலைகள்,
கொள்ளைகள், அடக்குமுறைகள், வன்முறைகள் போன்றவற்றை இவற்றைத் தடுக்க முடியாது என்று
முடிவுகட்டி ஒதுங்கியும் பதுங்கியும் பயந்தும் பணிந்தும் வாழ்க்கையைக்
கழித்துக்கொண்டு வாழ்கிறது சமூகம்!
= அதிக மகசூல் மூலம் கொள்ளை லாபம் காணலாம்
என்று ஆசைகாட்டி ஆட்கொல்லி இரசாயனங்களை
எருவாக விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள்!
= அவற்றை பயன்படுத்தி பழங்களும்
காய்கறிகளும் தானியங்களும் உற்பத்தி செய்து அவற்றை பரவலாக பயிரிட்டு விற்கும் பாமர
விவசாயிகள்!
= படைத்த இறைவனை நேரடியாக எளிமையாக
வணங்குவதற்கு பதிலாக மூடநம்பிக்கைகளைப் பரப்பி
அவர்களை அடிமைப்படுத்தி வாழும் இடைத்தரகர்களும் அவர்களை பயன்படுத்தி நாட்டைக்
கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகளும்!
= இனம், மொழி, நிறம், இடம் இவற்றின்
பெயரால் மக்களைப் பிரித்தாளும் தலைவர்களும் அரசியல்வாதிகளும்!
= மனிதனுக்கு நோய்களை உருவாக்கும்
வைரஸ்களைப் பரப்பி அவற்றை எதிர்கொள்ளும் மருந்துகளையும் உற்பத்தி செய்து உலகளாவிய
கொள்ளை நடத்தும் மேற்கத்திய கொடுரங்கள்!
= தங்கள் ஆயுதங்களின் விற்பனை நடக்க
வேண்டும் என்பதற்காக நாடுகளுக்கு இடையே குழப்பங்கள் உண்டாக்கி சண்டைகள் மூட்டி
அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொன்று
குவிக்கும் வல்லரசு பயங்கரவாதம்!
சிறியது முதல் பெரியது வரை இன்று சரளமாக
நடக்கும் அநியாயங்களையும் தீமைகளையும் பட்டியல் அவ்வளவு எளிதாக போட்டுவிட
முடியாது.
இந்த தீமைகளும் பாவங்களும் அநியாயங்களும்
தட்டிக்கேட்கப் படாமலும் தடுக்கப் படாமலும் தொடருமானால் மனித வாழ்க்கை என்பது
கேள்விக்குறியாகவே இருக்கும்.
இவற்றின் முற்றிய நிலையில் இன்று நாம் வாழ்ந்து வருகிறோம்.
இத்தீமைகள் கட்டுகடங்காமல் பெருகுவதற்கு முக்கிய காரணங்களாக கீழ்கண்டவற்றை நாம் கூறலாம்:
அ) மனிதனுக்கும் சக மனிதனுக்கும் இடையே உள்ள உறவு உணரப்படாதது அல்லது அதுபற்றி கற்பிக்கப் படாதது.
ஆ) தன்னைத் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ யாரும் இல்லை என்ற தைரியம்
உலகில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டுமானால் மனித மனங்களை சீர்திருத்த வேண்டும். முக்கியமான உண்மைகளை உணர்த்தியே ஆகவேண்டும்:
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே
ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர்
மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து,
அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச்
செய்தான்; ..... நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
அதாவது அனைத்து மனித குலமும்
ஒரே குடும்பமே, நம் அனைவருக்கும் ஒரே இறைவனே என்று உலகளாவிய சகோதரத்தையும்
சமத்துவத்தையும் வலியுறுத்துவதோடு அந்த இறைவனின் பரிபாலனத்திலும் கண்காணிப்பிலும்
அனைவரும் உள்ளோம் என்பதை மனித மனங்களில் அடிப்படையாக விதைப்பதுதான் மேற்கூறிய தீமைகளை தடுப்பதற்கான முதல் படி. அப்போதுதான் மக்களை சீர்திருத்தி ஒழுக்கம்
நிறைந்த ஓர் உலகை மறுபடியும் சமைக்க முடியும்.
தனிநபர் ஒழுக்க சீர்கேடுகள், குடும்பங்கள் சீரழிப்பு, சமூகத் தீமைகள் தொடங்கி வல்லரசு பயங்கரவாதக் கொடுமைகள் வரை அனைத்து தீமைகளையும் ஒழித்துக் கட்ட வேண்டுமானால் இஸ்லாம் பரிந்துரைக்கும் இது ஒன்று மட்டுமே வழியாக உள்ளது.
முறையான இறைநம்பிக்கையும் வாழ்க்கையைப் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தையும் மறுமை வாழ்வையும் கற்பிப்பதன்வழி இக்கொள்கையை ஏற்பவர்களை சீர்திருத்துவதோடு அவர்களை இனம், குலம், நிறம், மொழி, இடம் போன்ற வேற்றுமைகளைக் கடந்து ஒருங்கிணைக்கிறது இஸ்லாம். அவ்வாறு மேற்படி தீமைகளுக்கு எதிரான உலகளாவிய வலுவான சக்தியாக உருவாக்குகிறது.
= மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)
நன்மையை எவுவதையும் தீமையைத் தடுப்பதையும் இறைநம்பிக்கையின்
ஒரு
பாகமாகவே கற்பிக்கிறது இஸ்லாம்:
= இறைத்தூதர் முஹம்மது
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரேனும்
தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும்.
அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின்
இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)
= பூமியில் சீர்திருத்தம்
செய்யப்பட்டபின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம்
பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.
(திருக்குர்ஆன்
7:56)
= நம்பிக்கை கொண்ட
ஆண்களும், பெண்களும்
ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத்
தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள்.
அல்லாஹ்வுக்கும், அவனது
தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ்
மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(திருக்குர்ஆன் 9:71)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது
பொருள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக