இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 நவம்பர், 2021

காமுகனே கொஞ்சம் நில்!



பலவந்தமாக நடத்தப்படுவதோ அல்லது சூழல் காரணமாக நடப்பதோ எந்த வகை  கற்பழிப்பாகவோ இருக்கட்டும். ஒரு பெண்ணை முழுமையாக அடையும் வாய்ப்பு உங்களுக்கு வாய்த்துவிட்டது என வைத்துக் கொள்வோம். நீங்களும் அந்தப் பெண்ணும் மட்டும் தனிமையில் இருக்கிறீர்கள்.  அவளின் பெற்றோரோ உடன்பிறப்புக்களோ, உறவினர்களோ காவல் துறையோ அல்லது வேறு ஏதேனும் கண்காணிப்போ என எதுவுமே அங்கு இல்லை. உங்கள் இச்சையை நிறைவேற்ற எந்தத் தடையும் அங்கு இல்லை. இன்னும் அந்தப் பெண்ணே கூட உங்களுக்கு முழு சம்மதம் தெரிவிக்கிறாள் என்றே எடுத்துக் கொள்வோம். இன்னும் ஒருபடி மேலே போய் அந்தப் பெண்ணே உங்களை காமத்துக்குத் தூண்டுகிறாள் என்றே கூட வைத்துக் கொள்வோம்.

இப்படிப்பட்ட சூழலில் அப்பெண்ணை அனுபவிப்பதில் தவறேதும் இல்லை, தடையேதும் இல்லை என்று நினைக்கிறீர்களா? உங்களுக்குள் எழுந்துள்ள காமவெறி அல்லது காமுகன் என்ற ஷைத்தான் உங்களை அவ்வாறு எண்ணவைப்பான். முக்கியமான உண்மைகளை மறக்கடித்துவிடுவான்.

அவை யாவை? அவற்றை நீங்கள் நிதானத்தில் இருக்கும்போதே சிந்தித்து உணர்ந்தால் மேற்கொண்டு இக்குற்றச்செயலை செய்யத் துணியமாட்டீர்கள்!

உங்களை அறியுங்கள்:

1.முதலில் நீங்கள் யார்? உங்களது நிலை என்ன என்பன பற்றி அறியுங்கள்:

-    இம்மாபெரும் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு அற்பத்திலும் அற்பமான துகள் போன்றவர் நீங்கள்.

-    இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட உங்களுக்கு பங்களிப்பு இல்லை.

-    மட்டுமல்ல நீங்கள் என்னுடையது என்று சொல்லிக்கொள்ளும் உங்கள் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே உங்களுடையது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக உங்கள் கைவசம் இல்லை.

-     நீங்கள் இங்கு வருவதும் போவதும் - அதாவது உங்கள் பிறப்பும் இறப்பும் உங்கள்  விருப்பப்படி நடப்பது அல்ல.

-    உங்களை மீறிய உங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது என்பதை மறுக்க மாட்டீர்கள். அந்த சக்தியையே தமிழில் இறைவன் அல்லது கடவுள் என்கிறோம். அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறுகிறோம்.

இவ்வுலக வாழ்க்கையை அறியுங்கள்:

2. அந்த இறைவன் இந்தக் குறுகிய தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளான். இதில் இறைவன் நம்மிடம் எவற்றை ஏவுகிறானோ அவை நமக்கும் மனித குலத்திற்கும் நன்மை பயப்பவை. அவற்றை செய்தால் அவை புண்ணியங்களாக இறைவனிடம் பதிவு செய்யப்படுகின்றன. எவற்றை செய்யக்கூடாது என்று நம்மைத் தடுக்கிறானோ அவை நமக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. அவையே பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த வாழ்க்கைப் பரீட்சையில் வெல்பவர்கள் மறுமையில் சொர்க்கத்தை நிரந்தர வாழ்விடமாக அடைகிறார்கள்.  இதில் தோல்வி அடைபவர்கள் நரகத்தை அடைகிறார்கள்.

சாட்சிகளுக்குப் பஞ்சமில்லை

3. நீங்கள் செய்யவிருக்கும் செயலுக்கு உங்கள் இருவரைத்தவிர சாட்சிகள் ஏதும் இல்லையென்று நீங்கள் கருதலாம். ஆனால் அது தவறு.  இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் அவற்றின் பார்வையில் படும் நிகழ்வுகளை பதிவு செய்வதை நாம் அறிவோம். அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை மட்டுமல்லநமது காதுகளும் தோல்களும் அதுபோலவே பதிவு செய்கின்றன என்றும் அவை மறுமையில் மனிதனுக்கெதிராக சாட்சி கூறும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது:

= தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையாமேலும் நாவையும்இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7-9 )

=மேலும்இறைவனின்  பகைவர்கள் (நரகத்)தீயின்  பால்  ஒன்று  திரட்டப்படும்  நாளில்அவர்கள் ( தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.   இறுதியில்அவர்கள் (அத்தீயை) அடையும்  போதுஅவர்களுக்கு எதிராக   அவர்களுடைய காதுகளும் அவர்களுடைய  கண்களும்அவர்களுடைய  தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை  பற்றி சாட்சி  கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)

ஏன் பாவம்?

4. இவ்வுலகின் சொந்தக்காரனான இறைவன் சமூக நலன் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு கருதி இங்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று தனது  வரையறைகளை வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் அவ்வப்போது அறிவித்துள்ளான். அந்த வரிசையில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் அவர்களின் மொழிகளும் அவர் மூலமாக அனுப்பப்பட்ட திருக்குர்ஆனும் அந்நிய ஆண்- பெண் உறவின் வரையறைகளை அறிவிக்கின்றன. அதன்படி 

= தாம்பத்தியம் அல்லது உடலுறவு  என்பதை  திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது.

.= ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

=  ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் உடலுறவு கொள்வது பெரும் பாவமாகும். கற்பழிப்பு அல்லது விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான கசையடிகள் மற்றும் சாகும் வரை கல்லால் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமையாகும்.

அந்தப் பெண் யார்?

5. அடுத்ததாக நீங்கள் அனுபவிக்க உள்ள பெண்ணைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள்:

= அவள் யாருக்கேனும் மகளாக அல்லது சகோதரியாக அல்லது மனைவியாக அல்லது தாயாக இருக்கக்கூடும். உங்கள் மகளிடம் அல்லது சகோதரியிடம் அல்லது மனைவியிடம் அல்லது தாயிடம் நீங்கள் செய்ய நினைத்த காரியத்தை வேறு யாராவது அந்நியன் செய்வதை விரும்புவீர்களா?

 மீறினால் என்ன நடக்கும்?

இனி மேற்கூறப்பட்ட வரம்புகளையெல்லாம் மீறி விட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்து எறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நீங்கள் நடந்து கொள்ளலாம். காவல்துறை அல்லது நீதிமன்றத்தை சரிக்கட்டி தண்டனையேதும் பெறாதவாறு தப்பிக்கவும் செய்யலாம்.  ஆனால் அவை அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் மூளையிலும் அதன் பதிவைக் காணலாம்! இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று உங்களுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும்.

= அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)

= எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும்எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும்அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:7,8)

விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.

அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.

= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோகுடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30)

.....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘ (திருக்குர்ஆன் 18:29)  

எந்த உடலைக்கொண்டு அனைத்து அட்டூழியங்களையும் நிகழ்த்தினீர்களோ அதன் கதி நாளை இதுதான்! இது நூறு சதவீத உண்மை! இது வேண்டுமா? சிந்தியுங்கள்! இன்றே திருந்தி உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள்! உங்கள் வாழ்க்கையை சீர்திருத்திக்கொள்ளுங்கள்!

= நபியே!) கூறுவீராக: தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக, அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். (திருக்குர்ஆன் 39:53)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

அவ்வாறு சீர்திருந்தி இறைவனுக்குப் பொருத்தமான வாழ்வை வாழ்ந்து செல்வோருக்கு மறுமையில் சொர்க்கச் சோலைகளும் காத்திருக்கின்றன.

================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

வெள்ளி, 5 நவம்பர், 2021

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் நவம்பர் 2021 இதழ் PDF


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் நவம்பர் 2021 

பொருளடக்கம்:

பெண்ணினத்திற்கு எதிரான ஊடக வஞ்சகம்! -2

நபிகளாருக்கு நிகரான சாதனையாளர் யாருளர்? -5

பெண் சிசுக்கொலைகளை பெருமானார்

எவ்வாறு தடுத்தார்கள்? -8

இயற்கணிதம் (ALGEBRA) தந்த அரபு முஸ்லிம்கள் -11

வாசகர் எண்ணம் -12

இஸ்லாத்தை இருட்டடிக்கும் ஊடகங்கள்! -13

பொதுமக்களின் அடிமையாக ஓர் ஆட்சித்தலைவர்! - 15

இறைவன் கற்பிக்கும் ஊடக ஒழுங்குகள் -16

ஊடகப் பணியாளர்கள் கவனத்திற்கு..-18

தாய்மதம் திரும்புதல் என்றால் என்ன? -21

அல்லாஹ்வுக்கு அரபி மட்டும்தான் தெரியுமா? -24

----------------------------------------- 

இதழின் pdf ஐ கீழ்கண்ட லின்கிலும் நீங்கள் வாசிக்கலாம்  

https://drive.google.com/file/d/18PlfIOUqR_TxfMePMMCpsl34oDKLnJrZ/view?usp=sharing

----------- 

பெண்ணின அழிப்பை பெருமானார் எவ்வாறு தடுத்தார்கள்?


அன்று – அதாவது பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் - அரபு நாட்டில் பெண்குழந்தை என்றாலே இழிவு என்று சொல்லி பிறந்த உடனேயே புதைத்து மூடினார்கள். ஒரு சிலர் வளர்ந்த பிறகும் கூட அவர்களை ஈவிரக்கமின்றி குழி தோண்டிப் புதைத்தார்கள். அந்த அளவுக்கு பெண்கள் மீது கருணை என்பதே இல்லாமல் கல்லாக இறுகி இருந்தது அம்மக்களின் மனம். அந்தக் கற்களை எவ்வாறு கரைய வைத்தார்கள் நபிகளார்?

மனமாற்றம் ஒன்றே மாற்றத்திற்கான வழி

சமூகத்தில் பொதுவாக பாவங்கள் பெருகுவதற்கும் பாவங்களில் மக்கள் நிலைத்து இருப்பதற்கும் மூடநம்பிக்கைகளில் காலாகாலமாக மூழ்கி இருப்பதற்கும் முக்கியமான காரணமாக இருப்பது படைத்தவனின் உள்ளமையும் வல்லமையும் பற்றி உணராமல் இருப்பதும் இந்த உலகம்தான் எல்லாமே, இதற்கப்பால் ஒன்றுமே இல்லை என்ற குறுகிய சிந்தனையும்தான். இதன் விளைவாக தான் எதைச் செய்தாலும் தனக்கு மேலே தட்டிக் கேட்க யாருமில்லை என்ற அறியாமை உணர்வு மேலிடுகிறது. அப்படிப்பட்ட உணர்வில் திளைத்து இருந்த மக்களிடையே உண்மை இறைவனைப் பற்றியும் வாழக்கையின் நோக்கத்தைப் பற்றியும், இந்தத் தற்காலிக பரீட்சை வாழ்க்கை பற்றியும் இறுதித்தீர்ப்பு நாள் பற்றியும் மறுமையில் வரவுள்ள சொர்க்கம் நரகம் பற்றியும் பகுத்தறிவு பூர்வமாக – இறைவேதம் திருக்குர்ஆனின் துணையோடு- போதித்தார்கள்.

நபிகளாரின் சீரிய போதனைகள்:

சிலை வணக்கத்தில் மூழ்கி இருந்த மக்களுக்கு படைத்த இறைவனை பற்றிய பகுத்தறிவு பூர்வமான அறிமுகத்தை வழங்கி அவர்களை சீர்திருத்தினார்கள். 

= சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)

ஏகனான, தன்னிகரற்ற, ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனின் வல்லமையையும் உள்ளமையையும் போதித்ததோடு இந்த தற்காலிக வாழ்க்கைக்கு பிறகு இங்கே நாம் செய்த ஒவ்வொரு செயலுக்கும் இறைவனிடம் மறுமையில் விசாரணையும் அதற்கு அதற்கேற்ப வெகுமதியும் தண்டனையும் உண்டு என்ற உணர்வை ஊட்டினார்கள்:

 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார்கள்.

மறுமை வாழ்க்கை பற்றிய சந்தேகம்:

ஆயினும் இறந்தபின் மீண்டும் உயிரோடு வருவோம் என்பதில் அம்மக்கள் சந்தேகத்திலேயே நீடித்தார்கள். மண்ணோடு மண்ணாகி மக்கிப்போன எலும்புகளையெல்லாம் கொண்டுவந்து இவையெல்லாம் மீண்டும் உயிரோடு வர முடியுமா என்று கூறி எள்ளிநகையாடினார்கள். அப்போது இறைவன் புறத்திலிருந்து இறங்கிய வசனங்களே கீழ்கண்டவை:

மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையாஅவ்வாறிருந்தும்அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும்அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டுஅவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 36:77-79)

இன்னும் இவைபோன்ற திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் இறைவனின் வல்லமையைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் மக்கள் தெளிவு பெற்றார்கள்.

இறைவனின் ஏவல்- விலக்கல்கள்

தொடர்ந்து இறைவன் வழங்கும் வாழ்வியல் நெறிப்படி வாழவேண்டியதை வலியுறுத்தினார்கள் நபிகளார். இறைவனுக்கு சொந்தமான இவ்வுலகில் நாம் அவனுக்குக் கீழ்படிந்து வாழக் கடமைப்பட்டுள்ளோம். இதில் தான்தோன்றித்தனமாக வாழவோ சட்டங்கள் இயற்றவோ இறைவன் மனிதனுக்கு அதிகாரம் வழங்கவில்லை. ஒருவேளை நாம் இவ்வுலகில் நம் அத்துமீறல்களுக்கான தண்டனையைப் பெறாவிட்டாலும்மறுமை வாழ்வில் அதைப் பெற்றேயாக வேண்டும்.

குழந்தைகளைக் கொல்வது பாவம்!

கண்ணுக்குத் தெரியும் உயிராயினும் தெரியாத உயிராயினும் சரி பெரிதாயினும் சிறிதாயினும் அவற்றை அநியாயமாக நோவினை செய்தாலோ அல்லது கொன்றாலோ அது இறைவனிடம் பாவமே! மறுமை நாளில் அதற்கான விசாரணை உண்டு. அந்த வகையில் சிசுக்கொலைகளுக்கும் தண்டனை உண்டு என்று இறைவன் எச்சரிக்கிறான்
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்
; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (திருக்குர்ஆன் 17:31)

இன்று உயிரோடு புதைக்கப்பட்ட பெண்குழந்தைகள் மறுமை நாளில் உயிரோடு வருவார்கள் என்ற இறைவசனங்களை அம்மக்களுக்கு நினைவூட்டினார்கள் நபிகளார். அவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே அவர்களின் பெற்றோர்கள் செய்த குற்றத்திற்கு சாட்சியாக நிற்பார்கள் என்றார்.

= உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று- (திருக்குர்ஆன் 81:7-9)

பெண்குழந்தைகளை வளர்ப்போருக்கு நற்செய்தி:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 "ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு இறைவன்  வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள்: "வீட்டில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" பின்னர் அக்குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள். மேலும் அதன் தலை மீது கரங்களால் தடவியவாறு கூறுகின்றார்கள் "இது ஒரு பலவீனமான ஆன்மாவாகும். இக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமைநாள் வரையில் இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்" அறிவிப்பாளர்:  நபித்இப்னு ஷுரைத் (ரலி)  ஆதாரம்: அல்முஅஜமுஸ் ஸகீர்

எவருக்கு பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து 

பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சொர்க்கம் கடமையாகி விட்டது’ என்றார்  நபிகளார் 

(ஆதாரம்:அஹ்மத்)

 பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும்போது அதுவே இம்மையில் தொடர்ந்து இறை உதவி கிடைப்பதற்கும் மறுமையில் நாம் சொர்க்கம் செல்வதற்கும் காரணமாகி விடுகிறது என்பதை மக்களுக்குப் புரியவைத்தார்கள்.

================== 

நாம் ஏன் பிறந்தோம்?
வாழ்க்கைத் துணை தேர்வு

திங்கள், 1 நவம்பர், 2021

அவரது சாதனைகளுக்கு நிகராகுமா எதுவும்?


 அநியாயங்களுக்கு விருதுகள் வழங்குவோரும் ஒத்து ஊதும் ஊடகங்களும்:

ஆண்டு தோறும் நாடுகள் தோறும் அற்பமான சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்குக் கூட அரசுகள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கவுரவிப்பதை அவ்வப்போது கண்டு வருகிறோம். இன்னும் பலரை அவர்கள் இறந்து ஆண்டுகள் பல கழிந்தும் அரசுகள் நாட்டின் உயர்விருதுகள் வழங்கி கவுரவிப்பதையும் காணலாம். அதிலும் குறிப்பாக சினிமாவில் அட்டைக் கத்தி வீரர்களுக்கும் திரையில் அப்பட்டமாக விபச்சார சாகசங்கள் நிகழ்த்தி கலாச்சார சீரழிவை நிகழ்த்துவோருக்கும் மக்களின் வரிப்பணங்களில் இருந்து அரசுகள் வழங்கும் கவுரவமும் அலாதியானவை. இவர்களுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் வியப்புக்குரியவை! அந்த “சாதனையாளர்களைப்” பற்றி பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் செய்தி சேனல்களும் யூடியூபர்களும் எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் வாரம் வாரமாக நீட்டி முழக்குவதை நாம் காண்கிறோம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிகழ்த்திய – நூற்றாண்டுகளாக நிகழ்த்திக் கொண்டு இருக்கின்ற – பயனுள்ள சாதனைகளுக்கு இணையான எதையும் ஊடகங்களால் காட்ட இயலுமா? மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் அவர் புரிந்த மற்றும் தொடர்ந்து புரிந்து வருகின்ற சாதனைகள் ஈடிணையற்றவை. ஒரு சிறு உதாரணமாக கீழ்கண்ட விடயத்தைப் பாருங்கள்:

சர்வசாதாரணமான பெண் கருக்கொலைகள்:
= 2020 வருட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை 2013 முதல் 2017 வரை ஒவ்வொரு ஆண்டும் 4.6 லட்சம் சிறுமிகள் பிறக்கும்போது “காணவில்லை” (missing at birth) என்று கூறுகிறது. அதாவது அவை கருவிலேயே கொன்றொழிக்கப் படுகின்றன என்பது இதன் பொருள்! இதற்குக் காரணம் பாலியல் தேர்வின் விளைவாக ஆண் குழந்தையை பெறுவதை மக்கள் விரும்புவதும் பெண் குழந்தை பிறப்பதை வெறுப்பதுமே! கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் இவ்வாறு "காணாமல்" போயுள்ளார்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் பாலியல் தேர்வு சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆயினும் இடையறாது நிகழ்கிறது இக்கொடுமை!
= உலக மக்கள் தொகை அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் உலகளவில், "காணாமல் போன" பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 14.2 கோடி என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (United Nations Population Fund) கூறியுள்ளது. (ஆதாரம்: UN’s World Population Report, 2020 says 4.6 crore women are ‘missing’ in India due to sex selection (scroll.in)
ஆனால் உலகில் நான்கில் ஒரு பங்கு மக்கள் – அதாவது இஸ்லாமியர்கள் - இக்கொடுமையை நிகழ்த்தாமல் தங்களைத் தாங்களே தடுத்து வருகிறார்கள் என்பது நபிகளாரால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் சாதனை அல்லவா?

இவ்வாறு  இஸ்லாம் வழங்கிவரும் பெண்ணுரிமைகள் காரணமாக 

-    உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்சிசுக்களும் கருக்களும் கொல்லப்படாமல் தடுக்கப்பட்டு உயிர்வாழ்ந்து வருவதும் பெற்றோர் அரவணைப்பில் வளர்ந்து வருவதும்..   

-    உலகங்கும் கோடிக்கணக்கான பெண்கள் வரதட்சணைக் கொடுமையில் இருந்து காப்பாற்றப்படுவதும்.. அதற்கு எதிரான மஹர் என்ற வதுதட்சனை பெற்று மணமுடிப்பதும்... 

-    உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் முதியோர் இல்லங்களுக்கு விரட்டப்படாமலும் கருணைக் கொலைக்கு உட்படுத்தப்படாமலும் தங்கள் பிள்ளைகள் அரவணைப்பில் வாழ்ந்து வருவதும்..

-    உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் குடிகார ஆண்களின் அடிக்கும் குத்துக்கும் சித்திரவதைக்கும் ஆளாகாமல் வாழ்வதும்..

-    உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் பெண்ணுடலை வேட்டையாடி தூக்கி எறிந்துவிட்டு செல்லும் காம வெறியர்களுக்கு பலியாகாமல் இருப்பதும், அந்நியனின் கருவை அநியாயமாக சுமந்து சீரழியாமல் இருப்பதும்..

-    உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை, போன்று ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெற்று வாழ்வதும்.. எல்லாம் அந்த மாமனிதர் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திச் சென்ற இஸ்லாம் என்ற சித்தாந்தத்தின் விளைவே!

இப்படிப்பட்ட ஒரு புரட்சி சித்தாந்தத்தை வழங்கி அவற்றைப் பின்பற்றி வாழும் உலகளாவிய ஒரு சமூகத்தை உருவாக்கி அதன்மூலம் பெண்ணினத்தின் உரிமைகளை நிலைநாட்டிய  எவராக இருந்தாலும் அவர் கவுரவிக்கப்பட வேண்டியவர்தானே? 

அவர் இவ்வுலகில் இருந்து மறைந்து பதினான்கு நூற்றாண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அதே புரட்சி தொடர்கிறது என்றால் எப்பேர்பட்ட கவுரவத்திற்கு உரிய மனிதர் அவர் என்பதை கற்பனை செய்து பார்க்கலாம்.

ஆனால் அந்த மாமனிதருக்கு அரசுகளோ ஊடகங்களோ உரிய கவுரவம் கொடுப்பதோ மரியாதை செய்வதோ நினைவுகூரல் நடத்துவதோ எதுவுமே இல்லை. மட்டுமல்ல, அவர் மனிதகுலத்துக்கு குறிப்பாக பெண்ணினத்துக்கு செய்த சாதனைச் சேவைகளைக் குறித்து மூச்சு விடுவதும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பள்ளிக்கூட பாடப்புத்தகங்களிலும் கூட அவரைப் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளதை நீங்கள் காணலாம்.


இந்த பாரபட்சமான போக்குக்கு என்ன காரணம்?

இதற்கு முக்கிய காரணம், நபிகளார் அறிமுகப்படுத்திய இஸ்லாம் அனைத்து  தீய சக்திகளுக்கும் எதிரானது. இஸ்லாமின் பரவல் உலக மக்களைப் பிரித்தாண்டு அவர்களின் வளங்களையும் உழைப்பையும் சுரண்டி வாழும் ஆதிக்க சக்திகளுக்கும் பாசிச மதவாத சக்திகளுக்கும் தடையாக உள்ளதால் அதன் வளர்ச்சியை தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு செய்கிறார்கள். மட்டுமல்ல இஸ்லாத்தை தீவிரவாதமாகவும்  இஸ்லாமியர்களை தீவிரவாதமாகவும் தங்கள் கைப்பாவை ஊடகங்கள் மூலம் சித்திரிக்கிறார்கள். 

ஆனால் இஸ்லாம் இவ்வுலகைப் படைத்தவன் வகுத்து வழங்கிய வாழ்வியல் கொள்கை. அது யார் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் மென்மேலும் மெருகோடு பரவவே செய்யும். படைத்தவனே இதைப் பற்றி கூறுகிறான் கேளுங்கள்:

'தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதிஅணைத்துவிட அவர்கள்  விரும்புகின்றார்கள். ஆனால் சத்தியமறுப்பாளர்கள்  வெறுத்த போதிலும் இறைவன்  தன் ஒளியை  பூர்த்தியாக்கி  வைக்காமல் இருக்க மாட்டான்.' (திருக்குர்ஆன் 9:32)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

மேலும் இஸ்லாம் என்ற இறைவனின் அருட்கொடையை மக்களிடம் இருந்து இருட்டடிப்பு செய்யும் அரசாள்வோரும், ஆதிக்க வாதிகளும் அவர்களின் அடிமையாக செயல்படும் ஊடக செயல்பாட்டாளர்களும் இறைவனின் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கிறது திருக்குர்ஆன்:

= அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) சத்திய மறுப்பாளர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,? (திருக்குர்ஆன்  29:68) 

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

பெண்ணினத்திற்கு எதிரான ஊடக வஞ்சகம்!

இஸ்லாம் என்றவுடனேயே அது பெண்களை அடிமைப்படுத்தும் மார்க்கம் என்கின்ற தவறான சித்தரிப்பை ஊடகங்கள் இன்றுவரை இலகுவாகவும் தீவிரமாகவும் செய்து வருகின்றன. அறவே மனசாட்சியற்ற, அற்பமும் நீதி என்பதே இல்லாத ஒரு போக்கு இது என்பதை சுட்டிக் காட்டவே இப்பதிவு! ஆபாசங்களையும் திரையுலக கிசுகிசுக்களையும் பரபரப்பூட்டும் கட்டுக்கதைகளையும் மக்களிடையே பரப்பி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட ஊடக முதலைகளிடம் நியாயம் நீதி இவற்றை எதிர்பார்ப்பது தகாத ஒன்றுதான். இருந்தாலும் நடுநிலையாக சிந்திக்கும் மக்களிடம் உண்மையை கொண்டு செல்லவேண்டிய கடமை நமக்கு உள்ளதல்லவா?

இஸ்லாத்திற்கு முன்னிருந்த பெண்ணடிமைத்தனம்:  

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக அனுப்பப்பட்ட காலகட்டத்தில் - அதாவது கிபி 625 இல் - அரேபியாவில் பெண்ணடிமைத்தனமும், பெண்கள் போகப்பொருளாக நடத்தப்படும் அவலமும் இருந்து வந்தது. பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கக்கூடிய கொடூரமான நடைமுறை கேட்பாரின்றி நடந்து கொண்டிருந்தது! மறுபுறம் உலகின் வேறு பல பாகங்களில் பல்வேறு வடிவில் பென்ணடிமைத்தனங்கள் அரங்கேறிக் கொண்டு இருந்தன.

= பெண்ணுக்கு ஆன்மா உண்டா என்ற சர்ச்சை நடத்தி பெண் இகழப்பட்டாள்!
= முதல் பாவத்துக்கு பெண்ணே மூலகாரணம் என்று தூற்றப்பட்டாள்!
= திருமணத்தில் பெண்ணின் சம்மதம் பற்றி யாரும் கவலைப்படவில்லை!
= கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கட்டியவனால் கொடுமைப்படுத்தப்பட்டாலும் அவனோடு வாழ கட்டாயப்படுத்தப்பட்டாள் பெண்!
= அவள் பெற்றது பெண்ணென்றால் அதற்கும் அவளே சபிக்கப்பட்டாள்!
= மாதவிடாய் காலங்களில் ஒரு சிலரால் தீட்டு என்று ஒதுக்கி வைக்கப் பட்டாள்!
= விதவை மறுமணம் என்பது மறுக்கப்பட்டது, அவளைக் காண்பது கூட அபசகுனம் என்று அவமானப்படுத்தப்பட்டாள்!
= கணவன் அல்லது தந்தையரின் சூதாட்டங்களுக்கும் மதுபோதை வெறிக்கும் பெண்ணின் கற்பு விலைபோனது!
=கணவன் இறந்துபோனால் உடன்கட்டை ஏறும் நிர்பந்தத்துக்கு ஆளானாள்
பெண்!
= இன்னும் பல வடிவங்களில் பெண்ணினத்துக்கு எதிரான கொடுமைகள் உலகெங்கும் நிகழ்ந்து கொண்டு இருந்தன. 

  இஸ்லாத்தின் வரவால் உயிர்பெற்ற பெண்ணுரிமைகள்:
உலகம் இவ்வாறு இருக்கையில்தான் இஸ்லாம் என்ற கண்ணியமான வாழ்வியல் கொள்கையை அரபு நாட்டு மக்களுக்கிடையே அறிமுகம் செய்து அதன் வாயிலாக பெண்களைப் பற்றிய இழிவான கண்ணோட்டத்தை சமூகத்திலிருந்து அகற்றி அவர்களை மரியாதைக்குரியவர்களாக மதிக்கும் நிலையை உருவாக்கினார்கள் நபிகளார்!

அதற்கான அடித்தளங்களை அன்றே பலமாக இட்டுச் சென்றார்கள் அவர்கள். ஆன்மீக உபதேசம் என்பதோடு நில்லாமல் பெண் விடுதலைக்கும் பெண்ணுரிமைகளுக்குமான உரிய சட்டங்களும் இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தும் உயர்ந்த சமூகத்தையும் நிறுவிச் சென்றார்கள் அண்ணலார்! அதன் காரணமாக அன்று முதல் இன்றுவரை கோடிக்கணக்கான பெண்களை – தலைமுறை தலைமுறையாக இஸ்லாம் காப்பாற்றி வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை! உண்மையில் எந்த பெண்களைக் குறிப்பிட்டு இஸ்லாம் அடிமைப்படுத்துகிறது என்று ஊடக முதலைகள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனவோ அந்த கோடிக்கணக்கான பெண்கள் உயிர் வாழ்வதே இஸ்லாத்தின் வரவால்தான் என்பதை அறிவார்களா அவர்கள்? இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. புள்ளிவிவரங்களை கவனியுங்கள்:

சர்வசாதாரணமான பெண் கருக்கொலைகள்:
= 2020 வருட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை 2013 முதல் 2017 வரை ஒவ்வொரு ஆண்டும் 4.6 லட்சம் சிறுமிகள் பிறக்கும்போது “காணவில்லை” (missing at birth) என்று கூறுகிறது. அதாவது அவை கருவிலேயே கொன்றொழிக்கப் படுகின்றன என்பது இதன் பொருள்! இதற்குக் காரணம் பாலியல் தேர்வின் விளைவாக ஆண் குழந்தையை பெறுவதை மக்கள் விரும்புவதும் பெண் குழந்தை பிறப்பதை வெறுப்பதுமே! கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் இவ்வாறு "காணாமல்" போயுள்ளார்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் பாலியல் தேர்வு சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆயினும் இடையறாது நிகழ்கிறது இக்கொடுமை!
= உலக மக்கள் தொகை அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் உலகளவில், "காணாமல் போன" பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 14.2 கோடி என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (United Nations Population Fund) கூறியுள்ளது. (ஆதாரம்: UN’s World Population Report, 2020 says 4.6 crore women are ‘missing’ in India due to sex selection (scroll.in)

ஆனால் உலகில் நான்கில் ஒரு பங்கு மக்கள் – அதாவது இஸ்லாமியர்கள் - இக்கொடுமையை நிகழ்த்தாமல் தங்களைத் தாங்களே தடுத்து வருகிறார்கள் என்பது நபிகளாரால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் சாதனை அல்லவா?

இவருக்கு நிகரான சாதனையாளர் யாருளர்?

அன்று அராபியாவில் உருக்கொண்ட இஸ்லாம் இடைவிடாமல் பரவப்பரவி இன்று உலக மக்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் மேலானோரை ஆட்கொண்டு விட்டது. அக்கொள்கை நிகழ்த்திய மனமாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் வாயிலாக பெண்ணின வரலாற்றில் இன்று நிகழ்ந்த மற்றும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் புரட்சிகளை கவனியுங்கள்..

- உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்சிசுக்களும் கருக்களும் கொல்லப்படாமல் தடுக்கப்பட்டு உயிர்வாழ்ந்து வளர்ந்து வருவதும்..

- உலகங்கும் கோடிக்கணக்கான பெண்கள் வரதட்சணை கொடுமையில் இருந்து காப்பாற்றப்படுவதும்.. அதற்கு எதிரான மஹர் என்ற வதுதட்சனை பெற்று மணமுடிப்பதும்...

- உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் முதியோர் இல்லங்களுக்கு விரட்டப்படாமலும் கருணைக் கொலைக்கு உட்படுத்தப்படாமலும் தங்கள் பிள்ளைகள் அரவணைப்பில் வாழ்ந்து வருவதும்..

- உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் குடிகார ஆண்களின் அடிக்கும் குத்துக்கும் சித்திரவதைக்கும் ஆளாகாமல் வாழ்வதும்..

- உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் பெண்ணுடலை வேட்டையாடி தூக்கி எறிந்துவிட்டு செல்லும் காம வெறியர்களுக்கு பலியாகாமல் இருப்பதும், அந்நியனின் கருவை அநியாயமாக சுமந்து சீரழியாமல் இருப்பதும்..

- உலகெங்கும் கோடிக்கணக்கான பெண்கள் கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை, போன்று ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெற்று வாழ்வதும்.. எல்லாம் அந்த மாமனிதர் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திச் சென்ற இஸ்லாம் என்ற சித்தாந்தத்தின் விளைவே!

அநியாயங்களுக்கு விருதுகள் வழங்குவோரும் ஒத்து ஊதும் ஊடகங்களும்:
ஆண்டு தோறும் நாடுகள் தோறும் அற்பமான சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்குக் கூட அரசுகள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கவுரவிப்பதை அவ்வப்போது கண்டு வருகிறோம். இன்னும் பலரை அவர்கள் இறந்து ஆண்டுகள் பல கழிந்தும் அரசுகள் நாட்டின் உயர்விருதுகள் வழங்கி கவுரவிப்பதையும் காணலாம். அதிலும் குறிப்பாக சினிமாவில் அட்டைக் கத்தி வீரர்களுக்கும் திரையில் அப்பட்டமாக விபச்சார சாகசங்கள் நிகழ்த்துவோருக்கும் மக்களின் வரிப்பணங்களில் இருந்து அரசுகள் வழங்கும் கவுரவமும் அலாதியானவை. இவர்களுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் வியப்புக்குரியவை! அந்த “சாதனையாளர்களைப்” பற்றி பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் செய்தி சேனல்களும் யூடியூபர்களும் எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் வாரம் வாரமாக நீட்டி முழக்குவதை நாம் காண்கிறோம்.

ஆனால் நபிகளார் நிகழ்த்திய – நூற்றாண்டுகளாக நிகழ்த்திக் கொண்டு இருக்கின்ற – சாதனைகளுக்கு இணையான எதையும் ஊடகங்களால் காட்ட இயலுமா? கோடிக்கணக்கான பெண்களின் பிறக்கும் உரிமையை நிலைநாட்டியவரும், கற்பைக் காப்பாற்றியவரும், கோடிக்கணக்கான பெண்கள் கொல்லப்படுவதிலிருந்தும் சித்திரவதைகளுக்கு ஆளாவதிலிருந்தும் தடுத்த அந்த மாமனிதரின் சாதனைக்கு ஈடு செய்ய எந்த ஒரு விருதும் பட்டமும் எவராலும் கொடுத்துவிட முடியாது, படைத்த இறைவனைத் தவிர! ஆயினும் குறைந்தபட்ச நியாயம் பேணி உங்கள் வாசகர்களுக்கு, பார்வையாளர்களுக்கு, ரசிகர்களுக்கு அவரது சாதனைகளை இருட்டடிப்பு செய்யாமல் எடுத்துரைக்கக் கூடாதா?

இனி இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையின் பரவலைத் தடுப்பதே உங்கள் இருட்டடிப்புக்குக் காரணம் என்று இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள்.. இஸ்லாம் இவ்வுலகைப் படைத்தவன் வகுத்து வழங்கிய வாழ்வியல் கொள்கை! அது யார் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் மென்மேலும் மெருகோடு பரவவே செய்யும். படைத்தவனே இதைப் பற்றி கூறுகிறான் கேளுங்கள்:

='தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் சத்தியமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (திருக்குர்ஆன் 9:32)

உங்களுக்கு இறைவனின் எச்சரிக்கை:
= அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,? (திருக்குர்ஆன் 29:68)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
========================= 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?