இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 14 மே, 2017

திருந்திவாழ்வோர் இயக்கம்


தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் ஏறுமுகமாகவே உள்ளது. இதைப்பற்றி நாட்டின் ஆட்சியாளர்களுக்கு கவலையே இல்லை. சுயநல அரசியல்வாதிகளுக்கும் அறவே கவலையில்லை. ஆனால் நாட்டுமக்களின் நலனில் நாளைய நமது தலைமுறைகளின் நலனில்  உண்மையான ஆர்வம் கொண்டவர்கள் இதுபற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. மக்கள் இவ்வாறு வாழ்க்கையை வெறுக்கும் நிலை எப்படி உருவானது?
முக்கியமாக மனிதன் சகமனிதனுக்கு செய்யும் அநியாயங்களே இதற்கு முக்கியமான காரணம் என்பதை நாம் அறியலாம். சட்டம்ஒழுங்குநீதிமன்றம்காவல்துறைசட்டமன்றம்பாராளுமன்றம்ஆன்மீக போதனைகள்வழிபாட்டுத்தலங்கள்போன்ற அனைத்தும் இருந்தும் மக்கள் செய்யும் பாவங்களுக்கும் குற்றங்களுக்கும் கொடூரங்களுக்கும் எந்தக் குறைவும் இன்றி நாளுக்குநாள் மிக வேகமாக அதிகரித்தே வருகின்றன. எதைச்செய்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு மக்களில் பெரும்பாலானோரிடம் மேலோங்கி இருப்பதால் நம்மைச்சுற்றி என்னென்ன கொடுமைகள் நடக்கிறது பாருங்கள்:
= தாம் பெற்ற பிள்ளைகளைக் சகஜமாக தாமாகவே கொன்றொழிக்கும் பெற்றோர்கள். பெருகிவரும் கருக்கொலை, சிசுக்கொலை, பெண்சிசுக்கொலைகள்.
= வாழ்நாட்களை தங்களுக்காகவே அர்பணித்த பெற்றோர்களை வளர்ந்து ஆளானதும் மதிக்காத பிள்ளைகள்... பெருகிவரும் முதியோர் இல்லங்கள், கருணைக் கொலை என்ற பெயரில் நடக்கும் முதியோர் கொலைகள்,
= போற்றி வளர்த்த பெற்றோரை தூக்கி எறிந்து காதலர்களைக் கைப்பிடித்து ஓடிப்போகும் பிள்ளைகள்.
= காதல் என்ற பெயரில் காமப்பசி தீர்த்துவிட்டு கர்ப்பம் தரித்தபின் கன்னிப்பெண்களைக் கைவிட்டு ஓடும் காமுகர்கள்.
= திருமண ஒப்பந்தத்தை மீறி நடக்கும் கள்ளக்காதல் உறவுகள், கபட நாடகங்கள், கள்ளக்காதலனுக்காக அல்லது காதலிக்காக மணமுடித்த கணவனை அல்லது மனைவியை மற்றும் சொந்தக் குழந்தைகளைக் கொன்றொழிக்கும் கொடூரங்கள். 
= திருமணம் இல்லாமலே ஆணும் பெண்ணும் தகாத உறவு கொண்டு மனம்போன போக்கில் வாழுதல். அதில் பெற்றெடுக்கும் பிள்ளைகளை ஈவிரக்கமின்றி கொல்லுதல்.
= அந்நிய ஆண்களும் அன்னிய பெண்களும் தடைகளின்றி கலந்து படிக்கும், பணியாற்றும் ஏற்பாடுகளும் அங்கு நடைபெறும் தவறான பாலியல் உறவுகளும், வல்லுறவுகளும்! (தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 95 பெண்கள் கற்பழிப்பு)
= மதுபோதைப்பொருள் இவற்றின் கட்டுக்கடங்காத பெருக்கம். பள்ளி மாணவர்களும் வகுப்பறைக்கு குடித்துக்கொண்டு வரும் அவலம். பத்துவயதுக் குழந்தைகளும் கூட போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை.
என இவற்றின் நடுவே எந்தவித குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இன்றி சஞ்சரித்துக் கொண்டு வாழ்கிறது சமூகம்!
---------------------------- 
இந்த தீமைகளும் பாவங்களும் அநியாயங்களும் தட்டிக்கேட்கப் படாமலும் தடுக்கப் படாமலும் தொடருமானால் மனித வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.  இவற்றின் முற்றிய நிலையில் இன்று நாம் வாழ்ந்து வருகிறோம். மனிதன் வாழ்வதற்கே வெறுத்த நிலையை அடைந்து வருவதைத்தான் மேற்படி தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் (NCRB) அறிக்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது.

மக்கள் நலனில் உண்மையான ஆர்வம் கொண்டவர்கள் – குறிப்பாக இறைநம்பிக்கை கொண்டவர்கள் -  இதுபற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. இதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் ஆவன செய்யவும் வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ‘உலகம் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன?’ என்ற அலட்சியப் போக்கு ஆபத்தானது. ‘இறந்த பின் நாம்  மண்ணோடு மண்ணாகத் தானே போகிறோம்’ என்று நம்புவோர் வேண்டுமானால் அவ்வாறு மெத்தனமாக உலகின்  விபரீதப் போக்கைப்பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் இறைவனையும் மறுமையையும் நம்பும் இறைநம்பிக்கையாளர்கள் அவ்வாறு இருக்க முடியாது.

உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)
எனவே தீமைகளைத் தடுத்து நன்மைகளை  ஏவும் பணியில் இறைநம்பிக்கை கொண்டோர் களமிறங்கியாக வேண்டும். அத்தகையவர்களைப் பற்றி இறைவன் சிறப்பித்துக் கூறுகிறான்:
= மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)

அமைதி திரும்ப மனமாற்றம் தேவை
தீமைகள் கட்டுகடங்காமல் பெருகுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாகக் கீழ்கண்டவற்றை நாம் கூறலாம்:
அ) தன்னைத் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ யாரும் இல்லை என்ற தைரியம் மக்களிடையே பெருகி வருவது.
 குற்றங்களைப் பற்றிய வெட்க உணர்வு மழுங்கி வருவது. தீமைகளைக் காண்போர் அவற்றை சொல்லாலோ செயலாலோ தடுக்காமல் இருப்பது அத்தீமைகளுக்கு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது.
இ) சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை மக்கள் சொந்த மனோ இச்சைப்படி முடிவு செய்வதால் அவரவர் செய்யும் தவறுகளையும் நியாப்படுத்தும் போக்கு.

சமூகத்தில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டுமானால் கீழ்கண்டவை நடைபெறவேண்டும்:
அ) மனித மனங்களை சீர்திருத்த வேண்டும். அவற்றிற்கு வாழ்க்கையின் முக்கியமான உண்மைகளை உணர்த்தி அவற்றை நல்வழிப்படுத்த வேண்டும். 
ஆ) சீர்திருத்தங்களை வெறும் போதனைகளோடு நில்லாமல் அன்றாட வாழ்வில் நடைமுறைப்  படுத்த வழிவகை செய்யவேண்டும். 
இ) அவ்வாறு திருந்துவோர் கட்டுப்பாட்டோடும் பொறுப்புணர்வோடும் வாழ்வதற்கு   ஒருவருக்கொருவர் உறுதுணையாக இயக்கமாக செயல்பட வேண்டும்.
ஈ) சரி எது தவறு எது, பாவம் எது புண்ணியம் எது, நியாயம் எது அநியாயம் எது என்பவற்றை வரையறுக்கும் தெளிவான உறுதியான அளவுகோல் அல்லது சட்டங்கள் தேவை.  
உ) தீமைகள் மீண்டும் சமூகத்தில் ஊடுருவாமல் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் நம்மைப் படைத்த இறைவன் வழங்கும் வாழ்வியல் கொள்கையான இஸ்லாம் நிறைவு செய்வதை ஆராய்வோர் அறியமுடியும்.
----------------------- 
மனங்களின் சீர்திருத்தம் 
முதலில் மனிதன் பாவங்களிருந்து தவிர்ந்து வாழ வேண்டுமானால் என்னைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவன் ஒருவன் எனக்கு மேலே இருக்கிறான்அவன் என்னைக் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு  மிகமிக முக்கியமானது. அடுத்த படியாக அந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்நான் தவறு செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற பய உணர்வும் நல்லது செய்தால் பரிசளிப்பான் என்ற எதிர்பார்ப்பும் மிக முக்கியமானது. இதுவே இறையச்சம் எனப்படும்.
இறையச்சம் என்ற பொறுப்புணர்வு
 இந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வு இல்லை என்றால் மனிதன் எந்தப் பாவத்தையும் துச்சமாகவே கருதுவான். தன் மனோ இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும்  விபச்சாரம் உட்பட எந்த பாவங்களிலும் கூச்சமின்றி ஈடுபடுவான். அவற்றை நிறைவேற்றக் கொள்ள கொள்ளையும் கொலையும் துணிந்து செய்வான்.
இந்த இறையச்சம் என்பது இன்று இல்லாமல் போனது என்?
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன..
அறவே நிரூபிக்கப்படாத வெற்று மனித ஊகங்களைத் தொகுத்து பரிணாமக் கொள்கை என்ற பெயரில் தவறான அறிவியலை மக்களுக்குக்  கற்பித்து இறைவனை மறுக்கும் நாத்திகம் போதிக்கப்படுதல்.
இறைவனின் தூதர்கள் போதித்தபடி  படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன்’ என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டுகுழந்தைப் பருவம் முதல் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் உருவங்களையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி இதுதான் உன் கடவுள்’ என்று போதிக்கப்படுதல்.
 அதனால் சிறுவயதிலேயே கடவுளைப் பற்றிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் தலைமுறைகள் வளர்கின்றன. அவர்கள் பாவங்களில் துணிந்து ஈடுபடுகிறார்கள்.
இதை முதலில் திருத்தினால்தான் தனி மனித நல்லொழுக்கம் உருவாகும். மேலே கூறப்பட்ட தீமைகளில் இருந்து மனிதன் விலகி நிற்பான்.
இறையச்சம் விதைக்க...
இந்த இறையச்சம் மனித மனங்களில் நிலைத்து இருக்கவேண்டுமானால் இறைவனைப் பற்றிய இலக்கணங்களையும் அவனது தன்மைகளையும் கலப்படமற்ற முறையில் மக்களுக்கு போதிக்கவேண்டும். அவனது தன்மைகளை திருக்குர்ஆன் இவ்வாறு கற்பிக்கிறது:
சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவன் என்று ஒருவன் இருந்தால் அவனது தன்மைகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதை பகுத்தறிவோடு சிந்திக்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும். இறைவனை இவ்வாறு புரிந்துகொண்டு இடைததரகர்கள் யாருமின்றி அவனை நேரடியாக வணங்க இஸ்லாம் கற்றுத் தருகிறது. இவ்வாறு வணங்கும்போது கடவுளின் பெயரால் யாரும் யாரையும் ஏமாற்றவோ கடவுள் அல்லாதவற்றைக் காட்டி இவைதான் கடவுள் என்று கூறி ஏமாற்றி பணம் சம்பாதிக்கவோ முடியாது. இடைத்தரகர்களும் மூடநம்பிக்கைகளும் வீண் சடங்கு சம்பிரதாயங்களும் ஒழிகின்றன.  இடைத்தரகர்களுக்கு இடம்கொடாமல் படைத்த இறைவனை நேரடியாக வணங்கும்போது இனம்நிறம்இடம்மொழி இவற்றால் பிரிந்து கிடக்கும் மனிதர்களுக்கு இடையே பிணைப்பும் ஒருமைப்பாடும் சமத்துவமும் சகோதரத்துவமும் இயற்கையாகவே வளர ஆரம்பிக்கும்.

இறைவன் அல்லாதவற்றை இறைவனுக்கு ஒப்பாக்கி வழிபடும் செயல் இணைவைத்தல் என்று அறியப்படுகிறது. சமூகத்தில் பல குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் இந்தப் பாவத்தில் ஈடுபடுவோருக்கு மறுமையில் கடுமையான தண்டனை காத்திருக்கின்றது என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:
= அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
(அல்லாஹ் என்றால் 'வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்என்று பொருள்)
மறுமை நம்பிக்கை 
தெளிவான இறைநம்பிக்கைக்கு அடுத்தபடியாக  இந்த வாழ்க்கையைப்பற்றிய தெளிவான கண்ணோட்டத்தையும் பகுத்தறிவு பூர்வமான மறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கையையும் கற்பிக்கிறது இஸ்லாம்.
இன்று நாம் வாழும் பிரபஞ்சமும் தற்காலிகமானது. இதில் மனிதர்களாகிய நம் வாழ்வும் தற்காலிகமானது. இதில் நாம் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தவணையில் வந்து போகிறோம். இந்த குறுகிய வாழ்வில் யார் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் மறுமை வாழ்வில் வாய்க்கும். இந்த உண்மையை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவதுஇவ்வுலகில் நாம் செய்யும் பாவங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக சொர்க்கமும் கிடைக்கும்.
மறுமை சாத்தியமா?
மறுமை வாழ்க்கை சாத்தியமா என்று மனிதனின் உள்ளத்தில் எழும் கேள்விக்கும் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது. மனிதன்  இல்லாமையில் இருந்து இந்திரியத்த துளியாகி தொடர்ந்து அவன் கடந்துவந்த கட்டங்களை நினைவூட்டி இறைவன் மனிதனை சிந்தித்து உணர வைக்கிறான்:
= மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையாஅவ்வாறிருந்தும்அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான். மேலும்அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டுஅவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று கேட்கிறான்.
''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 36:77-79) 
மேலும் தொடர்ந்து இறைவனின் வல்லமைகளை நினைவூட்டி மறுமைவாழ்வு என்பது சாத்தியமே என்பதை நிறுவுகிறான்:
''பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனேஅதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள். வானங்களையும் பூமியையும் படைத்தவன்அவர்களைப் போன்றவர்களப்  படைக்கச் சக்தியற்றவனாஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவேஅவனே (பல வகைகளையும்) படைப்பவன்யாவற்றையும் நன்கறிந்தவன்.
எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால்அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ''குன்'' (ஆய்விடுக) என்று கூறுவதுதான்உடனே அது ஆகிவிடுகிறது. (திருக்குர்ஆன் 36:80-82)  

நமது வினைகள் பதிவாகின்றனவா?
இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் அவற்றின் பார்வையில் படும் நிகழ்வுகளை பதிவு செய்வதை நாம் அறிவோம்.  அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை மட்டுமல்லநமது காதுகளும் தோல்களும் அதுபோலவே பதிவு செய்கின்றன என்றும் அவை மறுமையில் மனிதனுக்கெதிராக சாட்சி கூறும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது:

=
மேலும்இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில்அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில்அவர்கள்(அத்தீயை) அடையும் போதுஅவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும்அவர்களுடைய கண்களும்அவர்களுடைய தோல்களும் அவை செய்துகொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)
வேறு பலவகையிலும் நமது செயல்களின் பதிவுகள் நடந்து கொண்டிருந்தாலும் இவை ஒன்றே போதுமானவையாக இருக்கும் என்பதை நாம் அறியலாம்.

ஆம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனோடு ஒட்டி உறவாடிக்கொண்டிருப்பவை அவனுடைய காதுகளும் கண்களும் தோல்களும். ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும் ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும் அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும் இன்றைய அறிவியல் நமக்கு சொல்லித் தருகிறது. இவற்றோடு தோல்களும் நம்  செயல்பாடுகளின் பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன என்று மேற்படி வசனம் எச்சரிக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணையின்போது அவை மனிதனைக் காட்டிக்கொடுக்கும்போது அங்கு நடக்கும் உரையாடலைப் படம்பிடித்துக் கட்டுகிறான் இறைவன்:
41:21.அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு  எதிராக  நீங்கள்  ஏன் சாட்சி  கூறினீர்கள்?” என்று  கேட்பார்கள்அதற்கு அவை: எல்லாப் பொருட்களையும் பேசும்படிச் செய்யும் அல்லாஹ்வேஎங்களைப் பேசும்படிச் செய்தான்;அவன்தான் உங்களை முதல்  தடவையும் படைத்தான்பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டுவரப்பட்டிருக்கிறீர்கள் என்று கூறும்.
41:22உங்கள் காதுகளும்உங்கள் கண்களும்உங்கள் தோல்களும்உங்களுக்குஎதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டுஉ(ங்கள் பாவ)ங்களை நீங்கள்மறைத்துக் கொள்ளவில்லைஅன்றியும்நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில்மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள்எண்ணிக்கொண்டீர்கள்.

இன்று நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் காதுகண்தோல் இவற்றை மறைத்துக் கொண்டு செய்ய முடியாது. நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இவை மறுமைநாளில் நமக்கெதிரான சாட்சிகளாக வரும் என்பதைத் திருக்குர்ஆனில் இறைவன் எச்சரிக்கிறான். இந்த உணர்வு நம்மில் எப்போதும் இருக்குமானால் நம்மைப்  பாவங்கள் அண்ட வாய்ப்புகள் குறைவு. 
நடைமுறை வழிகாட்டுதல்
மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலமும் வழங்கியுள்ளான் இறைவன். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுபவையாக அவை அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம்.
இறைவன் கூறும் இந்த வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று வாழ்பவர்களுக்கே அரபு மொழியில் முஸ்லிம்கள் (பொருள்: கீழ்படிபவர்கள்) என்று வழங்கப்படுகிறது. அவ்வாறு வாழ முற்படுபவர்களுக்கு ஐவேளைத் தொழுகைஜகாத் எனும் கட்டாய தானம்நோன்புஹஜ்ஜ் போன்றவைக் கடமையாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் சமூக நல்லொழுக்கத்தை வலுப்படுத்துவதை நீங்கள் காணலாம்.
ஒருவர் இஸ்லாத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தானின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டும். அதற்கு சதா இறைவனின் தொடர்பும் நினைவும் வேண்டும். உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் இறை நினைவும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது.  இதைப் பள்ளிவாசல்களில் கூட்டாக வரிசைகளில் அணிவகுத்து நிறைவேற்றும்போது சகோதரத்துவமும் சமத்துவமும் இயற்கையாகவே பேணும் பண்பு வந்துவிடுகிறது. மக்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அங்கு ஏற்படுவதால் சமூக உறவு வலுப்படுவதோடு சமூகத்தின் குறைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கும் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகள் உருவாகின்றன. நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானதுஅது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ்ஜ் என்ற கடமை!
இவ்வாறு இஸ்லாம் கூறும் நம்பிக்கைகளோடு இணைந்த நடைமுறைக்கு  மக்களை – குறிப்பாக குழந்தைகளைப் - பழக்கப் படுத்தினால் அவர்கள் பாவங்களில் இருந்து விலகி இருப்பார்கள். யாரும் காணாதபோதும் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவர்களை பாவச் செயல்களில் இருந்து தடுக்கும். உதாரணமாக அவர்கள் இணையம் செல்பேசிகள் தொலைக்காட்சிகள் இவற்றை தகுந்த முன்னெச்சரிக்கையோடு கையாள்வார்கள். இறை பொருத்தத்திற்க்காகவும் மறுமையில் வாய்க்க இருக்கும் இன்பங்களுக்காகவும் வாழ்வில் தானதர்மங்கள்தியாகங்கள்எளியோருக்கும் நலிந்தோருக்கும் உதவுதல்தீமைகளுக்கு எதிராகப் போராடுதல் என்பனவற்றை சுயமாக முன்வந்து செய்வார்கள். நல்லொழுக்கம் வாய்ந்த சமூகத்தை உலகெங்கும் கட்டியெழுப்புவார்கள்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2017

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2017 இதழ்
இதன் மின்பதிப்பை கீழ்காணும் இணைப்பிலும் வாசிக்கலாம்:  https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusdi1pQk1wdXFsN3c/view?usp=sharing
பொருளடக்கம்
எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? -2
நல்லதையே பேசுவோம -4
இயற்கையும் இஸ்லாமும் -5
திருந்தி வாழ வேண்டும் -6
அமைதியின்மைக்கான காரணங்களும் தீர்வுகளும் -8
தனிமனித சீர்திருத்தமும் மனிதகுல ஒற்றுமையும ;-12
பர்வீன் - நடராஜன் காதல் கதை -14
அமைதிகரமான இல்லறம் காண முதல்படி -20

பயங்கரவாதப் பட்டம்! -22

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

பயங்கரவாதிப் பட்டம்!

Related image
உங்களுக்குத் தெரியுமா?
= உலகத்தின் செல்வ வளங்களின் சரிபாதி வெறும் 62 கோடீஸ்வரர்களால் கையகப்படுத்தப் பட்டுள்ளது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? இன்று நாம் வாழும் உலகின் 10 சதவீத மக்கள் உலக வளங்களின் 87.7 சதவீத வளங்களை அநியாயமாகக் கையகப்படுத்தி உள்ளதால் உலகின்  666 கோடி மக்கள் எஞ்சியுள்ள 12.3  சதவீத வளங்களைத் தங்களுக்கிடையே பங்கீடு செய்யவேண்டிய அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். (Report by the Swiss bank Credit Suisse-). இந்த செல்வக் குவிப்பு ஏதோ தற்செயலாக நிகழ்ந்த ஒன்று என்று நீங்கள் தவறாகக் கணக்கிட்டு விடாதீர்கள். இது பெரும் திட்டமிட்டு நடத்தப்படும் அப்பட்டமான கொள்ளை!
= கோடிக்கணக்கான மக்கள் உணவுநீர்வீடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வறுமையில் வாடுவதற்கும் உண்ண உணவின்றி அன்றாடம் செத்து மடிவதற்கும் மூல காரணம் இந்தக் கொடியோர்களின் சுயநல வேட்கையே!
= சிறு நாடுகள் தங்கள் கைவசம் செல்வ வளங்கள் பல இருந்தும் இடைவிடாமல் போர்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கும் அப்பாவிகள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுவதற்கும் மூல காரணம் இக்கொடியோர்கள் தங்கள் வருமானங்களையும் ஆதிக்கத்தையும் அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் வஞ்சகத் திட்டங்களே!
இக்கொடியோர்களின் பிடியில் இருந்து உலகை விடுவிக்கப் போராடும் ஒரே மக்கள் சக்தியாக இஸ்லாம் உருவெடுத்து வருவதால்தான் இன்று அது கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகிறது என்பதை ஆராய்வோர் உணரலாம்.

இக்கொடியோர்கள் யார்?
காலனி ஆதிக்கத்தைத் தொடர்ந்து இன்று உலகத்தின் பொருளாதாரத்தை தங்கள் வஞ்சகத் திட்டங்களின் மூலம் கையகப்படுத்தி உலகநாடுகளை தங்கள் கைப்பாவை அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மூலம் ஆண்டுவரும் இவர்கள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 13 அல்லது 17 குடும்பத்தின் வம்சாவளியினரே என்று சொல்லப்படுகிறது. தங்கள் சூழ்ச்சிகரமான திட்டங்களுக்கு அமேரிக்காவை இவர்கள் தங்கள் ராணுவக் கரமாக பயன்படுத்துகிறார்கள்.
உலகநாடுகள் அனைத்தின் மேலும் ஆதிக்கம் செலுத்திவரும் இந்த இரகசிய சமுதாயத்தவர்கள் தங்கள் ஆயுத விற்பனையும் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது என்பதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகைடிவிரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் அராஜகங்களை நியாயப்படுத்துகிறார்கள். தங்களை சமாதானப் பிரியர்களாகவும் இவர்களின் எதிரிகளை பயங்கர வாதிகளாகவும் சித்தரிக்கிறார்கள். 

இவர்கள் நடத்திவரும் உலகக் கொள்ளைகளில் இருந்தும் அநியாயங்களில் இருந்தும் தங்கள் நாடுகளைக் காப்பாற்ற முனையும் விடுதலைப் போராட்ட வீரர்களை பயங்கரவாதிகளாகவும் இவர்களுக்கு எதிராக நிற்கும் மதங்களையும் கொள்கைகளையும் பயங்கரமானவையாகவும் பிற்போக்கானவை அல்லது காட்டுமிராண்டித்தனமாவை என்றும் சித்தரிக்கிறார்கள்.
அவ்வாறுதான் உலக மக்களை தொடர்ந்து மூளைச்சலவை செய்து தங்கள் காரியங்களை சாதித்து வருகிறார்கள் என்பதை சிந்திப்போர் அறியலாம்.

சொல்வதற்குப் பல உதாரணங்கள் இருந்தாலும் மிகச் சுருக்கமாக ஒரு சிலவற்றை மட்டும் கவனியுங்கள்.... 

பயங்கரவாதம் என்பது என்ன?
கத்தி முனையில் அல்லது துப்பாக்கி முனையில் அப்பாவியை அல்லது அப்பாவிகளை மிரட்டி தனது காரியங்களை அநியாயமாக சாதித்துக் கொள்வது போன்ற நடவடிக்கையே பயங்கரவாதம் என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் இந்த விலைபோன ஊடகங்கள் மக்களை எவ்வாறு மூளைசலவை செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள்: 
=
ஆங்கிலேயர்கள் சுமார் 300 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கள் வெள்ளை இனம் குடியேறுவதற்காக அமேரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா கண்டங்களில் அங்கு பூர்வகுடி மக்களை கொடூரமாக கூட்டம் கூட்டமாக இன அழிப்பு நடத்திய வன்கொடுமை இவர்களுக்கு பயங்கரவாதமாகப் படவில்லை!
=
வளங்கள் நிறைந்த நாடுகளுக்குள் வியாபாரிகளாக நுழைந்து அந்த நாட்டு அப்பாவிகளை ஆயுத முனையில் மிரட்டிக் கீழடக்கி அவற்றைத் தங்களின் காலனிகளாக்கி நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செய்தவர்களின் செயல்கள் இவர்களைப் பொறுத்தவரை பயங்கரவாதமே அல்ல! என்ன ஆச்சரியம் பாருங்கள்!
=
கைப்பற்றிய நாடுகளை பிற்காலத்தில் நிர்பந்தங்களுக்கு உள்ளாகி விட்டுச்செல்லும்போது பல தந்திரங்களைப் பிரயோகித்து தங்கள் வியாபார நிறுவனங்களை நிறுவி அந்நாடுகளின் வளங்களை தொடர்ந்து கொள்ளையடித்து வரும் செயலும்,
=
காலனிகளில் இருந்து விடுவித்த நாடுகளில் தங்களின் கைப்பாவை அரசர்களை அரியணையில் ஏற்றி அவர்களின் மூலமாக மறைமுகமாக ஆண்டுவருவதும் தங்களின் ஆயுத விற்பனை தொடர்வதற்காக அண்டைநாடுகளோடு போர்மூட்ட வைப்பதும் அப்பாவிகளை அநியாயமாக கொன்றோழிப்பதும், 

....
இவை எதுவுமே இவர்களின் பயங்கரவாதப்பட்டியலில் வருவதில்லை! 

=
ஹிரோஷிமா - நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி கோடிக்கணக்கான மக்களை அழிக்கவும் உடல் ஊனமுற்றவர்களாகவும் ஆக்கவும் செய்தது. அந்தக் கதிர்வீச்சின் பாதிப்பு இன்று பிறக்கும் தலைமுறைகள் வரைத் தொடர்கிறது. இதை மிஞ்சும் பயங்கரவாதத்தை உலகம் கண்டிருக்கிறதா? 

பயங்கரவாதத்தை மதத்தோடு இணைத்துப் பேசுதல் 

=
மேற்கூறிய கொடுமையாளர்களும் 

=
லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஹிட்லரும், 

=
போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலும் 
என இவர்கள் யாரும் செய்த கொடூரங்களை அவர்களின் மதத்தோடு இணைத்து இந்த ஊடகங்கள் பேசுவதில்லை என்பதை கவனியுங்கள்.
ஆனால் தங்கள் சொந்த நாட்டை ஆக்கிரமித்து மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடும் ஆப்கானிய, ஈராக்கிய மக்களையும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் பாலஸ்தீன மக்களையும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் கூறிவருவதைக் காண்கிறீர்கள். 

இது போக இன்று CIA மற்றும் MOSSAD கூட்டுமுயற்சியில் இவர்களின் கைக்கூலிகளைக் கொண்டு ISIS என்ற என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கி பல கோரமான நிகழ்வுகளை நடத்தி அவற்றை இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் உலகளாவிய வெறுப்பை உண்டாக்க அரும்பாடு படுகின்றனர்.

தீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது' என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை? இவ்வாறு உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்? 
அப்படியொரு வெறுப்பு ஏன் உலகெங்கும் உண்டாக்கப்படுகிறது? 
அதற்கு முக்கியமான காரணம் உள்ளது.... அது என்ன?
இஸ்லாம் என்பது வெகுவேகமாக வளர்ந்துவரும் மக்கள் சக்தி! அது அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரானது என்பதேயாகும்!

புதன், 12 ஏப்ரல், 2017

பர்வீன் – நடராஜன் காதல் கதை

Image result for victim alcohol tamil
இதைக் கதை அல்லது காவியம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். இது நிஜமா கற்பனையா என்ற ஆராய்ச்சியும் இங்கு தேவையில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. சிறு சிறு மாற்றங்களோடு அன்றாடம் நாட்டில் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு இது. இன்று காதல்வயப்பட்டுக் கொண்டிருக்கும் கன்னிப் பெண்களுக்கு இது சமர்ப்பணம்.
---------------------------------- 
 அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று தொடங்கித் தொடர்ந்தது அவர்களின் காதல் கதை. பர்வீன் குடியிருந்த அதே தெருவில் ஒரு ஐந்தாறு வீடு தள்ளி இருந்தது நடராஜனின் வீடு. பர்வீன் படித்துக்கொண்டிருந்து பிளஸ் டூ. நடராஜன் அப்போது பெயிண்டர் வேலைக்குப்போய்க் கொண்டு இருந்தான். பார்க்க அழகாக இருந்தான்.
 பர்வீனின் அப்பாவுக்கும் கூலிவேலைதான். வீட்டில் பெயரளவுக்குத்தான் இஸ்லாம். இஸ்லாம் கூறும் ஐவேளைத் தொழுகை எல்லாம் அவர்களின் வீட்டில் இல்லை. சடங்குக்கு வெள்ளிக்கிழமை மட்டும் பள்ளிக்குச் செல்வார் பர்வீனின் தந்தை பாரூக். தாய்க்கும் மகளுக்கும் அதுவும் இல்லை. அருகாமையில் உள்ள பள்ளிவாசலில் பாங்கு (தொழுகை அழைப்பு) ஒலி கேட்கும்போது தலையில் முக்காடு போட்டுக்கொள்ளும் பழக்கம் எப்படியோ தாய் சல்மாவுக்கு இருந்தது.
தினமும் பார்வைப் பரிமாற்றத்தில் தொடங்கிய பர்வீன்-நடராஜன் காதல் நாள் செல்லச்செல்ல மறைமுக சந்திப்புகளில் வளர்ந்தது. அது முற்றி பெற்றோர்களின் பலத்த எதிர்ப்புகளையும் கடந்து ரிஜிஸ்டர் திருமணத்தில் முடிந்தது. அனைவரையும் பகைத்துக்கொண்டு தனிக்குடித்தனமும் தொடங்கினர். திருமணத்திற்கு முன்னதாக நடராஜன் நாசராக மாறியிருந்தான். நாசருக்கும் இஸ்லாம் என்றால் என்ன என்பதை எடுத்துச்சொல்ல எவரும் அங்கு இல்லை.
துடிப்பும் துள்ளலுமாக, சிரிப்பும் சந்தோஷமுமாக இருந்த காதலர்கள் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பிறகு அவை அனைத்தும்  அசுர வேகத்தில்  களை இழக்க ஆரம்பித்தன. யாரைப் பற்றிய நினைப்பே ஆனந்தம் கொண்டு வந்ததோ, அவர்களின் அருகாமையே இப்போது மெல்லமெல்ல எரிச்சலாக மாறியது.  காதல் வயப்பட்டிருந்தபோது, அந்த உணர்வு மட்டுமே மேலோங்கியிருந்தது. வாழ்க்கையின் யதார்த்தங்கள் பற்றி சிந்திக்க மறந்தார்கள். திருமணத்திற்கு முன்னர் பெற்றோர்களும் மற்றவர்களும் அவற்றை நினைவூட்டிய போது அவை உள்ளே நுழையவில்லை. பர்வீனின் உற்ற பள்ளித்தோழி அஸ்மா படித்துப்படித்துச் சொன்ன அறிவுரைகள் எதுவும் பர்வீனிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அஸ்மாவுக்கு மார்க்கப் பற்று இருந்தது. அறிவும் இருந்தது. வகுப்பு இடைவேளையின்போது கூட தொழுகையை நிறைவேற்றுவாள். அஸ்மா எவ்வளவோ இறை எச்சரிக்கைகளை எடுத்துரைத்தும் எதுவும் எடுபடவில்லை. அவள் எடுத்துரைத்த குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் பர்வீனின் செவிகளைத் தாண்டி இதயத்திற்குள் நுழைந்தாலும் ஷைத்தான் குறுக்கே நின்று ‘விட்டுக்கொடுக்காதே பர்வீன், காதலே பெரிது’ என்றான்.
அன்று ‘வாழ்ந்தால் அவரோடுதான் வாழ்க்கை. இல்லையேல் மரணம்’ என்று அடம்பிடித்தாள்  பர்வீன். ‘அவளோடுதான்...’ என்று அடம்பிடித்தான் நடராஜன்.
இன்றோ... எவ்வளவு அற்புதமான தலைகீழ் திருப்பம்! 
--------------------------
குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகள் ஒவ்வொன்றாகத் தலைதூக்க ஆரம்பித்தபோது இருவருக்கும் அது அலுத்துப்போனது.  இரு தரப்பு பெற்றோர்களுக்கும் இவர்கள் விடயத்தில் ஈடுபாடு இல்லாது போனதால் அவர்களிடம் இருந்து எந்தவித உதவியும் ஆதரவும் இல்லாமல் இருந்தது. நாசரின் சம்பளம் ஒன்றுதான் அவர்களின் வருமானம்.  பர்வீன் கர்ப்பமாகி விட்டாள் என்று தெரிந்த உடன் அடுத்துவரக்கூடிய குடும்பப் பொறுப்புகள் பற்றிய கவலைகள் நாசரை வாட்டத் தொடங்கின.
நாள் செல்லச்செல்ல மாலையில் வீட்டுக்கு வருவதையே வெறுத்தான் நாசர். நண்பர்களின் சேர்க்கை வீட்டைவிட இனித்தது. மிகவும் தாமதமாகவே வீட்டுக்கு வந்தான். குடிப்பழக்கமும் தொற்றிக்கொண்டது. வறுமையும் பற்றாக்குறையும் தலைக்காட்ட ஆரம்பித்தன. குடிபோதையில் வீட்டுக்கு உளறிக் கொண்டே வருவான் நாசர். சிலவேளைகளில் நடுவீட்டில் வாந்தியும் எடுப்பதுண்டு. ஒருநாள் இருட்டில் டாய்லெட் என்று பாவித்து பீரோக் கதவைத்திறந்து மூத்திரமும் பெய்து வைத்திருந்தான் நாசர்.
ஒருநாள் நடு இரவில் வீடு திரும்பிய நாசர் குடிபோதையில் இருந்த தன் நண்பனையும் அழைத்து வந்திருந்தான். “பர்வீன் இவன்தான் சார்லி. பாவம், அவன் வீடு ரொம்ப தூரம். அதா அந்த ஓரத்தில படுத்துட்டு காலைல எந்திரிச்சுப் போயிருவான்.” சர்வ சாதாரணமாகச் சொன்னான் நாசர்.  விடியும்வரை இடித்துக்கொண்டிருந்த இதயத்தோடு உறங்காமலே கழித்தாள் பர்வீன்.
 நாசரின் நடவடிக்கைகளைப் பற்றி கண்டித்தால் அடியும் அடிமேல் அடியும் விழ ஆரம்பித்தது பர்வீனுக்கு. முறுக்கேறிய குடிபோதையில் வருபவனிடம் நியாயம் பேசவா முடியும்? எதிர்பேச்சு பேசப்பேச அடியின் வீரியம் கூடியது. வாழ்வே வெறுத்தது பர்வீனுக்கு. அன்று ‘உன்னை என் கண்ணின் மணியைப்போல் காப்பேன்’  என்று தேனொழுகப் பேசிய அவனா இவன்? ஏமாற்றத்திற்கும் விரக்திக்கும் ஆளான பர்வீனுக்கு ஆறுதல் சொல்லவோ நாசரைக் கண்டித்து நிறுத்தவோ எவரும் அங்கு இல்லை. தாளிடப்பட்ட வீட்டிற்குள் இரவுநேரத்தில் நடக்கும் கொடுமைகள் வேறு யாருக்குத்தெரியும்?
அன்றாட அராஜகங்களை வெதும்பிய மனதோடும் கண்ணீரோடும் சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியேதும் தெரியவில்லை கர்ப்பிணி பர்வீனுக்கு! கண்மூடித்தனமான காதலின் விளைவுகள் எவ்வளவு விபரீதமானவை என்பதை பர்வீன் தினமும் அனுபவித்து அறிந்தாள். கவிதைகளிலும் காவியங்களிலும் புனிதமானது என்று வருணிக்கப்படும் காதல் எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நேரடியாக உணர்ந்தாள்.
பக்கத்து வீட்டுக்காரிகள் அவ்வப்போது வந்து அனுதாபம் தெரிவித்தார்கள். அபூர்வமாக அம்மா சல்மா வந்தார். கண்ணீர் உகுத்துவிட்டுச் சென்றார். குடிகாரக் கணவனை நிதானத்தில் பார்த்தே மாதங்கள் பலவாயிற்று.
------------------------------
அரசு மருத்துவமனையில் பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள் பர்வீன். பெற்றெடுத்த மகளின் மலர்முகம் அவளுக்கு பாலைவனத்தில் கண்டடைந்த சோலை போல ஆறுதலளிப்பதாக இருந்தது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அண்டை வீட்டுக்காரிகள் வந்து உதவினார்கள்.
அதோ, வராண்டாவில் நாசரின் குடிகாரக் குரல்.... அங்கும் கூட குடிபோதையில்தான் வரவேண்டுமா பாவி? தான் பெற்றெடுத்த மகளின் முகம் காண வேண்டும் என்று ஏதோ ஒன்று நாசரைத் தள்ளிக்கொண்டு வந்தது. அருகே வந்தான்.. ஆனால் நிற்கமுடியாமல் தள்ளாடிக் கீழ்விழுந்தான். அவமானத்தில் துடித்தாள் பர்வீன்... ஆஸ்பத்திரிக் காவல்காரர்கள் வந்து அவனைத் தூக்கிக்கொண்டு போனார்கள். அப்படியே கொண்டுபோய் மருத்துவமனை காம்பவுண்டுக்கு வெளியே நடைபாதையில் போட்டுவிட்டுச் சென்றார்கள். ஆதரவற்ற குடிகாரனை வேறு என்னதான் செய்யமுடியும் அவர்களால்?
விரக்தியில் அயர்ந்து படுத்திருந்த பர்வீனுக்கு ஏனோ தோழி  அஸ்மாவின் அறிவுரைகள் நினைவுக்கு வந்து உறுத்தின. எவ்வளவு ஆழமான வார்த்தைகள் அவை! அன்று ஏன் நான் அவற்றை உள்வாங்கவில்லை? தன்னையே நொந்து கொண்டாள் பர்வீன். பாழாய்ப்போன இந்தக் காதல் என்ற பேய்... அனைத்தையும் கெடுத்து நாசமாக்கிவிட்டது... மனதுக்குள் புலம்பினாள் பர்வீன்...
-------------------
ஆம், அன்று நிலைமை முற்றிக்கொண்டு வந்தபோது அஸ்மா அவளுடைய அம்மாவோடு வீட்டுக்கு வந்திருந்தாள். எப்படியாவது பர்வீனைத் திருத்தவேண்டும் என்ற என்பது அஸ்மாவின் நோக்கம்.
“கேளடி பர்வீன், நாம இப்போ வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு தற்காலிக வாழ்க்கைன்னு தெரியுமில்ல? இது ஒரு பரீட்சை மாதிரி. இதுல நம்மைப் படைச்ச இறைவனை மறந்துட்டு  வாழக்கூடாது. அவனோட கட்டளைப்படி வாழனும். அதுக்குப் பேருதாண்டி இஸ்லாம். அவன் நம்ம கிட்ட எத செய்யணும் சொல்றானோ அதை நாம செய்யணும். அதுக்குப் பேருதான் புண்ணியம். எதைச் செய்யக்கூடாதுண்ணு தடுக்கிறானோ அதுக்குப் பேருதான் பாவம். இப்ப நீ செஞ்சுகிட்டு இருக்கிறது பாவம்டீ! அதுவும் சாதாரணப் பாவம் இல்லடீ, பெரும்பாவம்...!”
“ஏண்டீ காதல்ங்கிறது இயற்கையானது. இதப் போயி பெரும்பாவம்னு சொல்றே?
“பசிகூட இயற்கையானதுதான். அதுக்காக திருடி சாப்டா பாவந்தானே? அதுமாதிரிதான். அல்லாஹ்  தடுத்த வழில காதலையும் காமத்தையும் தணிக்கறது பாவம்தான். அதுக்குதான் கல்யாணம்னு ஒன்னு இருக்கு. அதுலே சட்டப்படி இணஞ்சதுக்குப் பின்னாடி மட்டும்தான் ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் காதலிக்க முடியும். காமத்தைத் தணிக்கவும் முடியும். அத விட்டுட்டு நீ எதைக் காதல்னு நெனச்சிட்டு சாகறியோ அதெல்லாம் கள்ளக்காதல்தான் அல்லது விபச்சாரம்தான் அல்லாஹ்கிட்ட.. புரிஞ்சுதா?”
கேட்டதும் அஸ்மாவின் மேல் கோபம்கோபமாக வந்தது பர்வீனுக்கு. பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள் அஸ்மா...
“ஏண்டி, இந்த உடல், உயிர், உணவு, நீரு, காற்று எல்லாம் அல்லாவுக்கு சொந்தமானது. எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு அவன ஏத்துக்காம அவன் சொன்னதுக்கு மாற்றமா நடந்தா அவன் தண்டிக்க மாட்டான்னு நெனச்சுட்டு  இருக்கியா? அல்லாஹ் நம்முடைய நன்மைக்கு வேண்டிதாண்டி அந்தக் கட்டுப்பாடுகளை வச்சிருக்கான். அவன் நமக்கு குர்ஆன் ஹதீஸ் மூலமா என்ன சொல்றானோ அப்படி வாழ்ந்தா இங்கேயும் உன் வாழ்க்கை ஒழுங்கா அமைதியா இருக்கும். மருமைல சொர்க்கத்துக்கும் போலாம். ஆனா அத அலட்சியம் பண்ணிட்டு உன் மன இச்சைப்படி போனா இங்கேயும் வாழ்க்கைல சீரழிஞ்சு போவே, மருமைல நரகம்தாண்டி கிடைக்கும்.” 
 “அது மட்டுமா? ஏண்டி உன்னப் பெத்துவளர்த்த உங்க அம்மா அப்பாவுக்கு நீ செய்யற வஞ்சனையைப் பத்தி யோசிச்சியா? நாளைக்கு நீயும் அம்மாவாயிருவே. அப்ப உன்னோட புள்ள இப்படி கண்டவனோட ஓடிபோச்சுன்னா உனக்கு எப்படிடி இருக்கும்? கொஞ்சம் நிதானமா யோசிச்சுப்பாருடீ...”
“நீ நினைக்கிற மாதிரி அவரொண்ணும் மோசமானவர் இல்லடி. ரொம்ப தங்கமானவருடி. உனக்கு சொன்னாப் புரியாது.. என்ன செய்ய?” 
“உனக்கு இப்ப காதல்ங்கற ஷைத்தான் பலமாப் பிடிச்சிருக்கு. அது விட்டுப்போற வரைக்கும் எதுவும் உள்ளே நுழையாது. பர்வீன் கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருடி, கல்யாணம்னு சொன்னா அது வாழ்க்கையோட ஒரு புதிய அத்தியாயம் தொடங்கற மாதிரி. சரியான துணையைத் தேர்ந்தெடுக்காட்டி வாழ்நாள் பூரா அவஸ்ததான். அல்லாகிட்ட நம்ம செயல்களுக்கு பதில்  சொல்லியாகணும் அப்படீங்கற பொறுப்புணர்வு கணவனுக்கும் வேணும் மனைவிக்கும் வேணும். அப்பதான் கல்யாண வாழ்க்கை சரிப்பட்டு வரும். ஆனா நீ இப்ப கட்டிக்கப்போற ஆளுக்கு இந்த நம்பிக்கை எல்லாம் கிடையாதுன்னு உனக்கே தெரியும்.”
“உனக்காக வேண்டி நான் முஸ்லிமா கூட மாறத் தயார்னு அவர் சொல்லியிருக்கார்டி, தெரியுமா உனக்கு?”
“உன்ன மாதிரி ஒரு முட்டாளப் பார்க்கவே முடியாதுடி. உனக்கே இஸ்லாம்னா என்னான்னு தெரியாது. நீ கட்டிக்கப்போற ஆளுக்கு என்ன  தெரியப் போகுது? இஸ்லாம் அப்படின்னு சொன்னா கீழ்படிதல்னு அர்த்தம். இங்கிலீஷ்ல டிசிப்ளின்னு சொல்லுவாங்க. அதாவது நம்மைப் படைத்து பரிபாலித்து வர்ற இறைவனுடைய கட்டளைக்கு கீழ்படிஞ்சு ஒழுக்கம் பேணி வாழ்வதற்குப் பேருதான் இஸ்லாம். அப்படி வாழறவங்களுக்கு பேருதாண்டி அரபிலே முஸ்லிம். அல்லாஹ் சொன்னதுக்கு அப்படியே மாற்றமா செஞ்சுட்டு இஸ்லாமா? கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதல்னு அல்லாஹ் சொல்றான். ஒழுக்கமா கட்டுப்பாடா வாழறவங்களுக்குப் பேருதாண்டி முஸ்லிம். சும்மா முஸ்லிம் குடும்பத்திலே பொறந்துட்டாலோ, புர்க்கா போட்டுட்டாலோ, தொப்பி மாட்டிகிட்டாலோ அரபிலே பேர வச்சிகிட்டாலோ யாரும் முஸ்லிம் ஆயிற முடியாது தெரியுமா? அப்படி காட்டுப்பாடா வாழ்ந்தாதாண்டி நாளைக்கு மறுமைல சொர்க்கத்துக்கு போக முடியும். இல்லாட்டி நரகந்தான். நரக வேதனைன்னா சும்மா இல்ல, உடம்பெல்லாம் நெருப்பு பத்தி எரிஞ்சுகிட்டு இருக்கும். கொஞ்சம் யோசிச்சுப்பாருடி”
ம்ஹூம், மசியவில்லை பர்வீன். ஆடாமல் அசையாமல் குத்துக்கல்லாய் அமர்ந்திருந்தாள். காதல் கண்ணையும் புத்தியையும் பலமாக மறைத்திருந்தது. பர்வீனின் அம்மா சல்மா பேச ஆரம்பித்தார்.
 “நாங்களும் தப்பு பண்ணிட்டோம் அஸ்மா. சின்ன வயசிலேருந்து எங்க குழந்தைகளை மதரசாவுக்கே அனுப்பல. இஸ்லாத்தைப் பற்றி நாங்களும் கத்துக்கல. இவங்களுக்கும் கத்துக் குடுக்கல. பக்கத்து வீடுக மாதிரியே வாழ்ந்துட்டோம். இவங்க அப்பாவுக்கும் தொழுகை இல்ல. நானும் பொடுபோக்கா இருந்துட்டேன். நீ சொன்ன மாதிரி உண்மையான முஸ்லிமா வாழ்ந்திருந்தா இந்த விபரீதமெல்லாம் நடந்திருக்காது.”
“ஆமா ஆன்டி, அஞ்சுநேர தொழுகைய அல்லா கட்டாயம் பண்ணியிருக்கறது கூட இந்த வாழ்க்கைல ஒழுக்கம் வரணுங்கறதுக்குதான் ஆன்டி. குழந்தைகள எப்படி வளர்க்கணும், என்ன கத்துக் குடுக்கணும், அம்மா அப்பாவ எப்படி கவனிக்கணும், உறவினர்கள் அண்டை வீட்டுக் காரங்களோடு எப்படி நடந்துக்கணும், யார் யாரைக் கல்யாணம் பண்ணிக்கலாம் இப்படி வாழ்க்கையோட எல்லா விஷயங்களப் பத்தியும் இஸ்லாம் நமக்கு தெளிவா சொல்லிக் குடுக்குது ஆன்டி. ரொம்ப முக்கியமா பெண் குழந்தைகள எப்படி பாதுகாப்பா அரவணைச்சு வளர்க்கணும், அவங்கள எப்படிப் பட்டவங்களோடு கல்யாணம் முடிச்சுக் குடுக்கணும், அவங்களுக்கு எப்படிப்பட்ட உடை அணிவிக்கணும் இன்னும் அதுபோல விஷயங்கள் தெளிவா சொல்லுது இஸ்லாம்.
“அப்படியா?”
“ஆமா ஆன்டி, பெண்கள்ல இருந்துதான் ஒரு சமூகமே உருவாகுது. பெண்கள் ஒழுக்கம் கெட்டுப்போனா சமூகமே ஒழுக்கம் கேட்டுப் போயிரும். அதனாலதான் இஸ்லாம் பெண்குழந்தை பாதுகாப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குது. பெண்ணை ஒழுக்கமா வளர்த்ததுக்கு அப்புறம் ஒழுங்கான ஆண்களா தேடிக் கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணியும் குடுக்கவேண்டியது பெற்றோருடைய கட்டாயக் கடமைண்ணு இஸ்லாம் சொல்லுது. அழகு, அந்தஸ்து, செல்வம் இதை எல்லாத்தையும் விட இறையச்சத்துக்கு முன்னுரிமை குடுத்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்க அப்படீன்னு நம்முடைய நபி சொல்லியிருக்காங்க. அப்புறம் அல்லா கூட குர்ஆன்ல சொல்றான் பாருங்க:    
 உங்கள் பெண்களை இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை - மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இறைநம்பிக்கையுடைய அடிமையான ஆண் (அடிமையில்லாத) இணைவைக்கக் கூடிய ஆணைவிடச் சிறந்தவன். அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 2:221)
ஆன்டி, நம்மைப் படைத்த இறைவனுக்குதான் அரபிலே அல்லாஹ் அப்படீன்னு சொல்றோம்.  இணைவைக்கறது அப்படீன்னா இறைவன் அல்லாதவற்றை வணங்கறது. அதாவது சூரியன் சந்திரன், மரம், செடி, உருவங்கள் சமாதிகள் இப்படிப்பட்டவைகள வணங்கறது. அதுதான் பாவங்கள் எல்லாத்துலேயும் மிகப்பெரிய பாவம்னு குர்ஆன் சொல்லுது. இந்தப் பாவத்தை மட்டும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான், இப்படிப்பட்டவங்களுக்கு நிரந்தரமான நரகம்னு அல்லாஹ் சொல்றான்.”
“ அப்போ, முஸ்லிம் பொண்ணுகள முஸ்லிம் அல்லாதவங்களுக்கு கட்டிகொடுக்கக் கூடாதுன்னு குர்ஆன் சொல்லுதா?”
“ கண்டிப்பா ஆன்டி, இப்போ காதல் கீதல் அப்படீன்னு போய் ஒட்டிக்குவாங்க, அப்புறம்தான் அதோட டேஞ்சர் எல்லாம் அனுபவிப்பாங்க. இஸ்லாம் ஒழுக்கமா கட்டுப்பாடா வாழறதுக்கு வழிகாட்டுது. எப்படி வேணுன்னா வாழு இல்லாட்டி உன் மனம்போன போக்கில வாழுன்னு மத்தவங்க சொல்றாங்க. ரெண்டும் எப்படி ஒண்ணாப் போக முடியும்? போனாலும் எவ்வளவு நாளைக்கு?”
“ஏண்டி, அவருதான் முஸ்லிம் ஆயிர்றேன்னு சொல்றாருல்ல. அப்புறம் என்ன?” வெடித்தாள் பர்வீன்.
“நீ ஒரே தீர்மானமா இருக்கிறேன்னு புரியுது. நான் சொல்லவந்தத சொல்லிட்டு போயிர்றேன். அப்புறம் உனக்கு என்ன தோணுதோ அதச் செய். பர்வீன், நீ மொதல்ல இஸ்லாம்னா என்னான்னு புரிஞ்சுகிட்டு அல்லாஹ்கிட்ட பாவமன்னிப்பு கேட்டு ஒரு உண்மையான முஸ்லிமா மாறு. அப்புறம்  இதுதான் இஸ்லாம் அப்படின்னு நடராஜனுக்கு சொல்லு. மனதார இஸ்லாத்த ஏத்துகிட்டு முஸ்லிம் ஆகறாரான்னு கேளு. ஒத்துகிட்டா ஒரு மாசம் நம்ம ஜமாஅத்துல இஸ்லாமிய அடிப்படைக் கல்விக்கான பயிற்சி ஏற்பாடு இருக்கு. அதுல சேர்த்து விடு. அது முடிஞ்சு மனமாற்றமும் குணமாற்றமும் வந்திருக்கான்னு பாரு. அப்படி இருந்தா மட்டும் அவர கல்யாணம் பண்ணிக்கோ. இல்லாட்டி மறந்துட்டு வேற மாப்பிளையத் தேடு. இதுதாண்டி நம்மப் படச்சவன் நம்முடைய நன்மைக்காக சொல்ற வழி. குர்ஆன்ல அவன் சொல்றதப் பாரு:
    (இணை வைக்கும்) அவர்கள் நரகத்தின் பால் உங்களை அழைக்கின்றனர். அல்லாஹ்வோ தனது உத்தரவின் மூலம் மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின் பாலும் அழைக்கிறான். அல்லாஹ் தனது வசனங்களை மக்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவுபடுத்துகிறான்'. (அல்குர்ஆன் 2:221)  
உனக்கு அமைதியான மணவாழ்க்கை வேணும்னா அல்லாஹ் சொன்னவழிய தேர்ந்தெடு. இங்கேயும் அமைதி கிடைக்கும். மருமைல நிரந்தரமான சொர்க்கமும் கிடைக்கும். அது வேண்டாம்னு உங்க மனம்போன வழில போனீங்கன்னா இங்கேயும் வேதனைதான். மருமைல அதைவிடப் பெரிய நரக வேதனைதான். .... இனி உன்னோட விருப்பம்!”
சொல்லிவிட்டு தன் அம்மாவையும் அழைத்துக்கொண்டு போய்விட்டாள் அஸ்மா.


நடந்ததை நினைக்க நினைக்க அழுகைக் கடலாகப் பொங்கியது. அருகே பாலுக்காக குழந்தை வாய்விட்டு அழுததைக் கேட்டு உணர்வுக்கு வந்தாள் பர்வீன். பால் கிடைத்ததும் குழந்தையின் அழுகை நின்றது. ஆனால் நிற்காமல் தொடர்ந்தது பர்வீனின் அழுகை!

எப்போது விழிப்போம்...? - ராஜ் சிவா

ஜெர்மனி அறிவியலாளர் ராஜ் சிவாவின் பதிவு ... இது பற்றிய விழிப்புணர்வு நாட்டுக்கு கட்டாயம் தேவை :


இன்றுள்ள கார்ப்பரேட் உலகில், கிட்டத்தட்டச் சம பலமுள்ள இரண்டு நாடுகளுக்கிடையில் ஒருபோதும் போர் என்பதே நடக்காது. நாடாளும் உயர்மட்ட அரசியல் தலைவர்களுக்கும், அவர்களை இயக்கும் கோடீஸ்வரர்களுக்கும், போர் என்ற ஒன்று நடைபெற்றால், அவர்கள் தலையிலும் குண்டு விழுமென்பது நன்றாகவே தெரியும். அணு ஆயுதத்தை சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் சிகரெட்டைப் போலச் சாதாரணமாக வைத்திருக்கின்றது ஒவ்வொரு நாடும். அவற்றுகிடையே போர் மூண்டால், இந்த அரசியல் தலைவர்களும், கோடீஸ்வரர்களும் வாழும் முக்கிய நகரங்களில்தான் அணுகுண்டு விழுமென்று தெரியாதவர்களா அவர்கள்? அதனால், போர் என்பது இனி எந்த இரு சம பலமுள்ள் நாடுகளுக்குமிடையிலும் நடைபெறப் போவதில்லை. மூன்றாம் உலக யுத்தம், நான்காம் உலக யுத்தம், எட்டாம் உலக யுத்தம் வரப் போகிறதென்ற தோற்றத்தை ஏற்படுத்துவதெல்லாம், மக்கள் எரிமலையின் உச்சியில் உட்கார்ந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே! எரிமலையின் உச்சியில் உட்கார்த்திருப்பவனுக்கு சாப்பாட்டு எண்ணமும் வராது. பக்கத்து வீச்சு சந்திரசேகரன் என்ன செய்கிறான் என்ற நினைப்பும் வராது. எல்லாமே, மக்களை ஒரு பதட்ட நிலையில் வைத்திருக்க முயலும் தந்திரம்.
அப்படி ஒருவேளை ஒரு போர் நடப்பதாக இருந்தால், அது வளமுள்ள நாடொன்றைக் கைப்பற்றி, அதன் வளங்களைச் சுரண்ட நினைக்கும் வல்லரசு நாட்டின் ஆக்கிரமிப்புப் போராகத்தான் இருக்கும். இப்போது சிரியாவில் நடக்கும் போர்போல. முன்னர் ஈராக்கிலும், லெபனானிலும் நடந்த போர்களைப் போல. அவற்றையெல்லாம் போரென்றே சொல்ல முடியாது. பேட்டை ரவுடிகள் சிலர் ஒன்று சேர்ந்து அப்பாவி ஆறுமுகத்தை அடிப்பதற்கு ஒப்பானது அது.
எப்போது, மக்கள் அரசுகளின் பித்தலாட்டங்களைப் புரிந்துகொண்டு அதிருப்தி அடைகிறார்களோ, அப்போது எல்லைப் போர், எல்லை தாண்டிய போரெல்லாம் கடவிழ்த்து விடப்படும். அதில் இறக்கப் போவது அப்பாவியான நாட்டுப்பற்றுள்ள சில இராணுவ வீரர்கள் மட்டும்தான். காப்டன்கள், மேயர்கள் கூட அதில் இறக்க மாட்டார்கள். “இங்கே பார்! நம் எல்லாருக்குமான பொது எதிரி ஒருவன் தோன்றிவிட்டான். அவனை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்” என்று நாட்டுப்பற்று என்ற முகமுடியை மாட்டிவிட்டு, மக்களை ஒரே திசையில் பார்க்க வைக்கும் தந்திரம். அந்தப் பரபரப்பில் சில நாட்கள் இருக்க வைக்கப்பட்டு மக்கள் முட்டாள்களாக்கப்படுவார்கள். மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் மறக்கடித்துவிடுவார்கள். அப்புறம் என்ன….? எல்லாமே மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கும். எல்லைப் போர்களால், ஒரு உயர்தர அரசியல்வாதி அல்லது அதிகார வர்க்கத்தில் உள்ள ஒருவன் அல்லது கார்ப்பரேட் கோடீஸ்வரன் எவனாவது இறந்திருக்கிறானா சொல்லுங்கள்? அல்லது குறைந்தபட்சம் சொத்துக்களினாலாவது பாதிக்கப்பட்டிருக்கிறானா? இறப்பதும், இழப்பதும் சாதாரண மக்களும், அவர்களின் வீட்டிலிருந்து சென்ற அப்பாவி இராணுவத்தினனும்தான்.
ஒன்றை மட்டும் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும். நாடாளும் மிகப்பெரிய அரசியல் தலைவர்களுக்கும், உலக மகாக்கோடீஸ்வரர்களுக்கும் இனம், மொழி, நாடு என்று எதுவும் இல்லை. அவர்கள் அனைவரும் ஒரே இனம். கோடீஸ்வரன் என்னும் இனம்.
‘மக்களும்கூட ஒரே இனம்தான். ஏமாளிகள் இனம்’
-ராஜ்சிவா-