நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச் செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டுவரப் படுவீர்கள் (திருக்குர்ஆன் 2:28)
இந்த உலகில் உங்கள் முதல் இருப்பிடம் கருவறை. ஓர் உயிர் தனக்குள்ளிருந்து இன்னொரு உயிரைப் புதிதாக உருவாக்கித் தரும் அற்புத விஷயம்தான் மனிதப் பிறப்பு என்பது! அதில் நிகழும் அறிவியல் அதிசயங்கள் கொஞ்சநஞ்சமா? ஒரு சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஒரு சைக்கிள் தயாரிக்கப்பட்டு வெளிவருவதற்கு என்னென்ன தேவை என்பதை யோசித்துப் பாருங்கள்... கச்சாப்பொருட்கள், பக்குவமான இயந்திரங்கள், உபகரணங்கள், திறன் மூலம், பணியாளர்கள், பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்தல், திட்டமிடுதல், கண்காணிப்பு, தரக்கட்டுப்பாடு என பற்பல இன்றியமையாத தேவைகள் இருப்பதை அறிவீர்கள். அதேவேளையில் புதிதாக ஓர் உயிர் உருவாவதற்கும் அதே உயிர் மீண்டும் ஒரு உயிரை உற்பத்தி செய்வதற்கும் பின்னால் என்னென்ன தேவைகள் இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா?
எண்ணற்ற ஜீவிகளை அவற்றின் பக்குவத்தோடும் நுணுக்கங்களோடும் ஆரம்பம் முதலே படைத்தது மட்டுமல்ல பக்குவமான முறையில் அவற்றின் இனப்பெருக்கத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவனின் படைப்பாற்றலைப் பற்றி வியக்காமல் இருக்கமுடியுமா?
= இறைவன் எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை
மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது
எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனுக்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன் 29:19)
இன்னும் மனிதன் தன்னுள் அடங்கியுள்ள அற்புதங்களையும் தன்னுள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதங்களின் பக்கமும் தனது சிந்தையைத் திருப்பினாலே இறைவனின் பேராற்றலையும் அளவிலா கருணையையும் உணர முடியும்.
நாமே உங்களைப்
படைத்தோம். பிறகு ஏன் நீங்கள் உண்மை என ஏற்றுக்கொள்வதில்லை? நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப்
பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதனைக் கொண்டு குழந்தையை நீங்கள்
உருவாக்குகின்றீர்களா; அல்லது அதனை உருவாக்குவது நாமா? நாமே மரணத்தை உங்களிடையே விதித்திருக்கின்றோம். (திருக்குர்ஆன் 56:57-60)
மேற்படி விடயங்களில் எந்த மறுப்பையும் முன்வைக்க நமது பகுத்தறிவு அனுமதிப்பதில்லை. அப்படியானால் நாம் இறுதித்தீர்ப்பு நாள் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுக்கப் படுவோம் என்பதை எவ்வாறு மறுக்க முடியும்?
மேலும், உங்களின் வடிவங்களை
மாற்றுவதற்கும் நீங்கள் அறியாத வடிவங்களில் உங்களைப் படைப்பதற்கும் நாம்
இயலாதவரல்லர். உங்களின் முதல்
பிறப்பைப் பற்றி நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். பிறகு,
ஏன் நீங்கள் படிப்பினை பெறுவதில்லை? (திருக்குர்ஆன் 56: 61-62)
“உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச்
சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” (திருக்குர்ஆன் 18:37)
================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக