இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 நவம்பர், 2024

பெண் இனத்துக்கு இறைவன் கொடுத்துள்ள அதிகாரமும் அங்கீகாரமும்.

 பெண் இனத்துக்கு அல்லாஹ் கொடுத்துள்ள

அதிகாரமும் அங்கீகாரமும்.
--------------------------
நுண்ணுயிரியலில் (Microbiology) ஆராய்ச்சிக் கல்வியை முன்னெடுப்பதின் மூலம் அல்லாஹ்வுடைய படைப்புத் திறனை அறிந்து வியந்து அவனது சட்டங்களுக்கு முழுமையாக கீழ்ப்படிந்து நடக்க முடியும். அல்லாஹ்வுடைய அருகாமையை உணர்வதற்கும் அது காரணமாக இருக்கும்.
குறிப்பாக பெண் இனத்திற்கு அல்லாஹ் வழங்கியுள்ள அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் ஆன்மிக ரீதியாகவும் உயிரியல் ரீதியாகவும் புரிந்து கொள்ள முடியும்.
இல்லற வாழ்வில் ஈடுபடும் கணவனின் விந்தில் 40 லட்சத்திலிருந்து 1.2 கோடி அணுக்கள் (குழந்தைகள்) பெண்ணின் கருமுட்டையை நோக்கி முண்டியடித்துக் கொண்டு செல்கின்றன.
இத்தனை லட்சம் அணுக்களும் பாய்ந்து வரும் நிலையில் மனைவியின் கருப்பையும் அதனுள் இருக்கும் கருமுட்டையும் Follicular Fluid என்ற வேதியியல் திரவத்தை பயன்படுத்தி அதிக திறன்வாய்ந்த அணுவை மட்டும் கண்டறிந்து அதற்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறது.
நுண்ணிய படைப்பாளனாகிய அல்லாஹ் பெண் இனத்துக்கு அளித்திருக்கும் இந்த அதிகாரத்தை உயிரியல் ஆராய்ச்சி செய்பவர்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
இந்த நடவடிக்கையை முஸ்லிம்கள் இப்படி புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடைபெறாது - இது ஷரீஅத் ரீதியான அதிகாரம்.
கணவனாக இருந்தாலும் பெண் விரும்பாமல் அனுமதிக்காமல் ஆண் இல்லற வாழ்வில் ஈடுபட்டுவிட முடியாது - இது உளவியல் ரீதியான அதிகாரம்.
இல்லற வாழ்வில் ஈடுபட்டாலும் கூட செலுத்தப்படும் லட்சக்கணக்கான அணுவில் எந்த அணுவை (எந்த குழந்தையை) தேர்வு செய்வது என்பதும் அந்த பெண்ணின் விருப்பத்தில் தான் இருக்கிறது - இது உயிரியல் ரீதியான அதிகாரம்.
கருமுட்டையில் அனுமதிக்கப்பட்ட அணு படிப்படியாக எப்படி சிசுவாக குழந்தையாக வடிவம் பெறுகிறது என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் நமக்கு பாடம் நடத்துகிறான். (அல்குர்ஆன் 23:12-14)
ஆக....
பெண் படைப்பு இயல்பையும் பெண் இனத்திற்கு அல்லாஹ் வழங்கியுள்ள அக புற அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் புரிந்து கொள்வதற்கு முஸ்லிம்களின் கல்விமுறை இப்படி அமைய வேண்டும்.
அல்குர்ஆன்
ஹதீஸ்
தஃப்ஸீர்
ஃபிக்ஹ்
Anatomy
Physiology
Microbiology
Molecular Biology
Genetics
ஒரு கையில் அல்குர்ஆன். மறுகையில் உயிரியல் (படைப்புகளின்) ஆராய்ச்சி. இது தான் முஸ்லிம்களின் பாரம்பரிய கல்விமுறை.
மத்தியகால வரலாறு முழுவதும் ஷரீஅத்தைப் படித்த ஆயிரக்கணக்கான உலமாக்கள் உலகின் தலைசிறந்த உயிரியல் வல்லுனர்களாக மருத்துவர்களாக உருவாகி வந்தது இந்த கல்வி முறையின் மூலமாகத் தான்.
முஸ்லிம்கள் தங்களது மரபுக் கல்வியை விட்டு எவ்வளவு தூரம் விலகியிருக்கின்றோம் என்பதையும் அதனால் ஏற்பட்டுள்ள ஆன்மிகப் பின்னடைவுகளையும் இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
- CMN SALEEM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக