பல நேஷனல் ஜியாகிராஃபி வீடியோக்களில்...
ஊன்உண்ணி மிருகம் ஒன்று . தாவரஉண்ணி மிருகத்தை துரத்தி துரத்தி வேட்டையாடி கடித்து குதறி உண்ணும் வீடியோவில்... பலரும் அந்த அந்த ஊன் உண்ணி மிருகத்தை கமென்டில் திட்டித் தீர்ப்பதை கண்டுள்ளேன்.
அப்புறம்.... சிலமுறை...
வேகமாய் ஓடக்கூடிய ஒரு தாவர உண்ணி மிருகம்... ஊன் உண்ணி மிருகத்திடம் சிக்காமல் நைச்சியமாக தாவி ஓடி தப்பித்து விட்டால்... மிகவும் மகிழ்ச்சி அடைந்து அந்த தாவர உண்ணி விலங்கை கமென்டில் பாராட்டுவதையும்... அத்தோடு நில்லாமல்... என்னமோ அந்த ஊன் உண்ணி மிருகத்தை இவரே தோற்கடித்து வென்றது போல... அப்பதிவை மகிழ்ச்சியோடு பகிர்வதையும்... அதில் அவரின் நண்பர்கள் அந்த தாவர உண்ணி விலங்குக்கு
congratulations
சொல்வதையும் நான் பலமுறை கண்டுள்ளேன்.இங்கேதான் எனது .மற்றும் இவர்களின் மனோநிலையை ஒப்பிட்டு பார்க்கிறேன்.
தாவர உண்ணிக்கான உணவை... துரத்தி வேட்டையாடி பிடிக்க வேண்டிய அவசியம் இன்றி ஒரே இடத்தில் முளைக்கச்செய்து அவற்றுக்கு உதவி இருக்கிறார் கடவுள்.
ஆனால்...
ஊன்உண்ணிக்கு தாவரம் உண்டால் செரிக்காத செரிமான மண்டலத்தை தந்துள்ள கடவுள் வேகமாக ஓடி துரத்தி தன் உணவை பிடித்து கடித்து குதறி உண்ணும்படியான திறமையுடன் படைத்துள்ளார்.
இங்கேயுள்ள அந்த உணவுச்சமநிலை நமக்கு ஊட்டும் ஆச்சரியம் என்னவென்றால்... இவ்வுலகில் தாவர உண்ணிகள்தான் மிக அதிகம். அவற்றை வேட்டையாடி உண்ணும் ஊன்உண்ணிகள் மிகவும் குறைவு. இதுதான் இவ்வுலகில் நிலவுகின்ற இயற்கைச் சமநிலை.
ஆனால், துவக்கப்பள்ளி முதலே... தாவரமும் உயிர்களே... என்று படித்து இருந்தும்... பட்டங்கள் பெற்றும்... Dr என்கிற அடைமொழி எல்லாம் இருந்தும்... தாவரஉண்ணியை வேட்டையாடி உண்ணும் புலியை சிங்கத்தை சிறுத்தையை திட்டி கமெண்ட் போடுவதும்.... அவற்றிடம் இருந்து தப்பிக்கும் புள்ளிமானை வாழ்த்தி பதிவு ஷேர் செய்வதும்... அதன் பின்னாடி உள்ள மனோநிலை என்ன மாதிரியானது எனபதை கண்டு உள்ளம் துவள்கிறேன்.
மனிதனான தன்னை அனைத்துண்ணி என்பதையே மறந்து... இயற்கைக்கு மாறாக... தாவரஉண்ணி ஆகவே வளர்ந்ததாலும்... தன்னை தாவர உண்ணி ஆகவே நினைப்பதுவும்தான்.... இந்த ஒரு சார்பு மனப்பான்மை ஏற்பட காரணமாக இருக்கமுடியும். ஆகவே, மேலே சொன்ன அவ்விரு வேட்டை காணொலிகளில் நடுநிலை பேணாமல்... தாவர உண்ணியின் பக்கம் இன உணர்வு கொண்டு ஜால்றா அடித்து சாய்கிறார்கள் போலும். அதனால்தான்... ஊன் உண்ணி தன் பசிக்கு வேட்டையாடி இறை தேடுவதை... ஓர் இயற்கை நிகழ்வையே... ஒரு குற்றமாக பார்க்கிறார்கள்.
தாவர உண்ணி தன் பசியாற்ற... தாவரங்கள் எனும் உயிர்களை திண்ண கட்டற்ற சுதந்திரம் தரும் இவர்கள்.....
ஊன் உண்ணிக்கு அதே சுதந்திரத்தை தர மறுக்கிறார்கள். வெளிப்படையாக நடுநிலை தவறுகிறார்கள். ஊன் உண்ணி வேட்டையாடும் தாவர உண்ணியை தன் இனமாக பார்க்கும் மனப்பான்மைக்கு காரணம், அவர்களின் இயற்கைக்கு மாறான உணவுப்பழகவழக்க வளர்ப்புமுறையும் அறிவியலுக்கு எதிரான கலாச்சார பண்பாட்டு உணவுப் புரிதலும் தான்..!
இதுதான்... மெத்தப்படித்த புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் கூட மிருகத்தனமாக இப்படியொரு சட்டவிரோத போஸ்டர் ஒட்டி கேவலமாக நடந்துகொள்ள வைக்கிறது.
அதன்மூலம்... தாவரம் மாமிசம் இரண்டுமே செறிக்கின்ற ஜீரண மண்டலத்தை கொண்ட மனிதன்... ஒரு மனிதனாக அனைத்துண்ணியாக உணவு உட்கொள்ளும் போது ஏன் தூற்றப்படுகிறான் என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
வேண்டுமானால்...
மனிதன் போல நடக்காமல்... தாவரஉண்ணி விலங்கு போல மாமிசம் சாப்பிடாமல் உள்ள மனிதமற்ற மனிதர்கள் மீது அபராதம் போட்டால் கூட... அதில் கொஞ்சோண்டு நியாயம் இருப்பதாக கூறலாம். ஆனால்... Sun News Tamil செய்தியில்... இந்த அபராதம் விதிப்பது எல்லாம் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. போஸ்டர் ஒட்டியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
வேரோடு கேரட்டை பிடுங்கி உண்ணும் முயல் போன்ற... தாவரங்களை கொன்று உணவு உண்ணும் தாவர உண்ணிக்கு நல்லவர் பட்டமும்... சாது எனும் புகழ் அடை மொழியும் தரப்படுகிறது..!
ஆனால்,
அதே இயற்கை சமநிலையில்... மானை கொன்று உணவு உண்ணும் புலிக்கு வில்லன் பட்டம் தரப்படுகிறது. கொடூரம் எனவும் தூற்றப்படுகிறது.
இதை... இனியும் நம்மால் சகித்துக்கொண்டு ஒதுங்கிச் செல்ல முடியாது. அப்படி சென்றதன் விளைவுதான்... Theekkathir செய்தி.
மிகவும் வன்மையான கண்டனங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக