நமது ஆதித் தந்தையும் ஆதித் தாயுமான ஆதாம் மற்றும் ஏவாள் தம்பதியினர் இங்கு பூமிக்கு அனுப்பப்படுவதற்கு முன்னால் சொர்க்கத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள். அங்கு சொர்க்கத்தின் அருமையை உணராத காரணத்தினாலும் ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளான காரணத்தினாலும் அவர்கள் அங்கு இறைகட்டளைகளுக்கு மாறு செய்தார்கள். அதன் காரணமாக அங்கு இறைவன் அவர்களுக்கு இயற்கையாக அமைத்திருந்த ஆடையைக் களையும் நிலை உண்டானது. அதனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பூமியில் குடியேற்றப்பட்டார்கள். அவர்களின் சந்ததியினர்தான் நாம்.
= நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும்
இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி
கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித
அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். அன்றி யார்
(அதை) ஏற்றுக்கொள்ள மறுத்து, எம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ
அவர்கள்தாம் நரகவாசிகளாவர்; அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து
கிடப்பார்கள்!” (திருக்குர்ஆன்
2:38,39)
அதாவது இந்த பூமி வாழ்க்கையை ஒரு குறுகிய பரீட்சை போன்றதாக இறைவன் அமைத்துள்ளான். இதில் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்களுக்கு மீண்டும் மறுமை வாழ்வில் சொர்க்கம் கிடைக்க உள்ளது. ஆனால் யார் ஷைத்தானின் தூண்டுதல்களுக்கு ஆளாகி இறைகட்டளைகளுக்கு மாறு செய்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கம் தடை செய்யப்படுகிறது. மாறாக நரகமே அவர்களின் புகலிடமாக அமைகிறது.
ஆடை ஒழுக்கம்
பேணுவோம்
= ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம். (திருக்குர்ஆன் 7:27)
எனவே நாம் இந்த வாழ்க்கை என்ற பரீட்சையை வென்று மறுமையில் சொர்க்கம் செல்லவேண்டுமானால் ஆடை விஷயத்தில் இறைவன் விதித்த வரம்புகளைப் பேணுதல் என்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதை மேற்படி வசனத்தில் இருந்து அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக