இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 17 மே, 2019

ஆடை ஒழுக்கம் மோட்சம் தரும்!


கவர்ச்சிக்காகவே வடிவமைக்கப்படும் பெண் ஆடைகள்


Related image'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்று பெண்களைக் கட்டிபோட்ட காலம் இருந்தது. இன்று நாகரீக முன்னேற்றத்தில் பெண்கள் படிப்பு தொழில் போன்றவற்றில் ஆண்களுக்கு நிகராகப் பங்கேற்கும் நிலையை அடைந்துள்ளார்கள். ஆனால் இத்துடன் இணைந்து வந்த விபரீதங்களை – அதாவது பஞ்சையும் நெருப்பையும் அருகருகே வைக்கும் போது கையாளவேண்டிய - முன்னெச்சரிக்கைகளை சமூகம் மேற்கொண்டிருக்க வேண்டாமா? பொது வாழ்வில் ஆணோடு பெண் ஈடுபடும்போது அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் புறக்கணித்ததும் பாலியல் கொடுமைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன 
ஆண்களின் ஆடையும் பெண்களின் ஆடையும்
ஆண்களின் உடைகள் உடலை முழுமையாக மறைக்கும் வண்ணமும் உடலோடு ஒட்டாமல் காற்றோட்டம் உள்ளவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் காண்கிறோம். ஆனால் ஆண்களை விட பலவீனமானதும் மென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம். சிறுவயது குழந்தைகளின் உடையில் உட்படஏன் பள்ளிக்கூட சீருடைகளில் கூட இந்த ஆடைக்குறைப்பு  பின்பற்றப்படுவதைக் கண்டுவருகிறோம். குறிப்பாக சில ஆன்மீக அல்லது மத அமைப்புகள் நடத்துகின்ற கல்விக்கூடங்களில் பெண்களின் ஆடைகுறைப்பை சட்டம் போட்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று!

காற்றோட்டத்திற்கான ஜன்னல்களா?
  இவை உஷ்ணத்தைத் தாங்கமுடியாததால் காற்றோட்டத்திற்காக திறக்கப்பட்ட ஜன்னல்களா  துணிப் பற்றாக்குறை காரணமாக அவ்வாறு தைக்கப்பட்டனவாஅல்லது வறுமை காரணமா? ...இப்படி இதற்கான பதிலை எப்படி சிந்தித்தாலும் இவை எதுவுமே அல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் ஒரேயொரு காரணத்தை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.... அது என்ன?
  ஆம்பெண்ணின் கவர்ச்சிகரமான உடல் உறுப்புக்கள் பொது மக்களின் அதாவது அந்நிய ஆண்களின் பார்வைக்கு விருந்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கமே இதன் பின்னணியில் உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை! பெண் என்பவள் பலவீனமானவள்அவளது உடலின் கவர்ச்சி கண்டு  ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம். அதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் எதுவும் தேவையில்லை.

பெண்ணுரிமைவாதிகள் மௌனம்:
 நமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில்  நாம்  குறியாக   இருக்கிறோம்.  நமது  குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில் ஒவ்வொருவரதும் விருப்பம். நமது குடும்பத்து பெண்கள் யாரும் அந்நியரால் காதலிக்கப் படுவதையோ அவர்களோடு ஓடிப் போவதையோ கற்பழிக்கப்படுவதையோ அந்நியனின் கர்ப்பத்தை சுமப்பதையோ நம்மில் பொறுப்புணர்வு கொண்ட யாருமே விரும்பமாட்டோம். 'விருப்பம்போல் ஆடை அணிவது பெண்களின் உரிமை!என்று வாய்கிழியப் பேசும் பெண்ணுரிமை வாதிகளாக இருந்தாலும் மாதர் சங்கங்களின் பொறுப்புதாரிகளாக இருந்தாலும் தங்கள் குடும்பத்தினர் விடயத்தில் இதை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை நன்றாகவே நாம் அறிவோம். ஆகயாருமே இது நம் குடும்பத்தில் நடைபெறுவதை விரும்பாவிட்டாலும் இத்தீமைக்கு முக்கிய காரணமான ஆடைக்குறைப்பை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்?

பெற்றோர் அல்லது பொறுப்புதாரிகளின் மெத்தனம்  
பொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம். காரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம். இங்கு நம் அன்புக்குரியவர்களின் உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பது போலல்லவா அமைகிறது பெண்களின் ஆடைஇவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட  விலைமதிக்கமுடியாத நம்மவர்களின் கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது?
ஷைத்தான் என்ற மனிதகுல விரோதி
 மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் இதுதான்.. இந்த உலக வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரோடும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஷைத்தான் என்ற மனிதகுல விரோதியின் தாக்கமே இதற்குக் காரணம். நம்மைப் படைத்தவன் இதோ எச்சரிக்கிறான்:
= ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம்.  (திருக்குர்ஆன் 7:27) 
ஆம் அன்பர்களே, நமது ஆதித் தந்தையும் ஆதித் தாயுமான ஆதாம் மற்றும் ஏவாள் தம்பதியினர் இங்கு பூமிக்கு அனுப்பப்படுவதற்கு முன்னால் சொர்க்கத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள். அங்கு சொர்க்கத்தின் அருமையை உணராத காரணத்தினாலும் ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளான காரணத்தினாலும் அவர்கள் அங்கு இறைகட்டளைகளுக்கு மாறு செய்தார்கள். அதன் காரணமாக அங்கு இறைவன் அவர்களுக்கு இயற்கையாக அமைத்திருந்த ஆடை களையும் நிலை உண்டானது. அதனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பூமியில் குடியேற்றப்பட்டார்கள். அவர்களின் சந்ததியினர்தான் நாம். இந்த பூமி வாழ்க்கையை ஒரு குறுகிய பரீட்சை போன்றதாக இறைவன் அமைத்துள்ளான். இதில் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்களுக்கு மீண்டும் மறுமை வாழ்வில் சொர்க்கம் கிடைக்க உள்ளது. ஆனால் யார் ஷைத்தானின் தூண்டுதல்களுக்கு ஆளாகி இறைகட்டளைகளுக்கு மாறு செய்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கம் தடை செய்யப்படுகிறது. மாறாக நரகமே அவர்களின் புகலிடமாக அமைகிறது.

எனவே நாம் இந்த வாழ்க்கை என்ற பரீட்சையை வென்று மறுமையில் சொர்க்கம் செல்லவேண்டுமானால் ஆடை விஷயத்தில் இறைவன் விதித்த வரம்புகளைப் பேணுதல் என்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதை மேற்படி வசனத்தில் இருந்து அறியலாம்.
============== 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

அல்லாஹ் என்றால் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக