இன்றைய செய்திகளும் இறைவனின் தீர்வுகளும்
புது தில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு
பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து
செய்தது உச்ச நீதிமன்றம். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா
பெயரை நீக்கி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், குற்றவாளிகள்
என்று அறிவிக்கப்பட்ட மூவரும் உடனடியாக சரணடையுமாறும், இறந்துவிட்டதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தண்டனையில்
இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் தெரிவித்திருந்தனர். (தினமணி செய்தி பிப்ரவரி 14)
-------------------
இறந்தவரைப்
பொறுத்தவரையில் தண்டனையில் இருந்து விடுவிக்கபடுகிறார். மற்றவர்கள் தண்டனைக்கு
உள்ளாகிறார்கள். இவ்வுலகத்தின் இயல்பில் இறந்தவர் அவர் சொத்துக் குவிப்பு அல்ல அதை
மீறிய எத்தனையோ குற்றங்களும் கொடூரங்களும் செய்தவராயிருப்பினும் அவரை தண்டிக்க
வழியே இல்லை என்பது தெளிவு. ஆனால் நீதியின் வேட்கை இங்கு நிறைவடையாமல் போவதைக்
காணலாம். நாட்டில் ஒரு அசைக்கமுடியாத செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட ஒரு குற்றவாளி
தான் வாழும்போது எத்தனயோ மக்களின் உரிமைகளையும் உடமைகளையும் மானத்தையும்
மரியாதையையும் ஏன் பல உயிர்களைக் கூட பறித்திருக்கலாம். ஆட்சியையும் அதிகாரமும்
கொண்டவராக குற்றவாளி இருந்தால் சட்டங்களை மட்டுமல்ல நீதித்துறையையும்
காவல்துறையையும் கூட வளைத்து குற்றவாளி தப்பிக்க வழிவகைகள் உண்டு. அப்படிப்பட்ட
ஒரு வழக்கைத்தான் கடந்த 20 வருடங்களாக நாம் கண்டு வருகிறோம். இறுதியில் என்ன
நடந்துள்ளது? முக்கியக் குற்றவாளியை தண்டிக்க முடியாமல் போய் விட்டது! இக்குற்றத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும் பரிகாரமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும்
எதிர்பார்ப்பும் யாருக்கும் இல்லை.
இந்த
வழக்கு நாட்டுநடப்புக்கு ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்ற மற்றும் இன்னும் இதைவிடக்
கொடுமையான குற்றங்கள் செய்த மற்றும் செய்து கொண்டிருக்கின்ற பல குற்றவாளிகள்
சட்டத்தின் கைகளுக்கு அகப்படாமலும் அகப்பட்டாலும் தண்டிக்கப்படாமலும் தப்பிக்கின்ற விந்தையை நாம்
காலாகாலமாக கண்டு வருகிறோம். இதற்கான முக்கிய காரணங்களாக நாட்டு மக்களிடையே
இறையச்சம் என்ற பொறுப்புணர்வு இல்லாமை, தனிநபர் நல்லொழுக்கம் பேணப்படாமை, மனிதர்களால்
இயற்றப்பட்ட மிகவும் பலவீனமான சட்டங்கள், ஆசைகாட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும்
வளைந்து கொடுக்கும் நீதித்துறை காவல்துறை, ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம்,
மக்களின் அப்பாவித்தனம், தனிநபர் வழிபாடு, அறியாமை என பல விஷயங்களைப்
பட்டியலிடலாம்.
இவற்றையெல்லாம் சீர்படுத்தினாலும் குற்றவாளிகளை
முழுமையாக தண்டிப்பது என்பது இவ்வுலகில் அசாத்தியமே. முழுமையான தீர்ப்பும்
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சரியான பரிகாரமும்
மறுமையில்தான் சாத்தியப்படும் என்பதை பகுத்தறிவு கொண்டு சிந்தித்தால் உணர
முடியும்.
உதாரணமாக
ஆயிரம் கொலைகளைச் செய்த ஒரு குற்றவாளிக்கு ஒருமுறை மட்டுமே இவ்வுலகில் மரணதண்டனை
விதிக்கமுடியும். ஆனால் நீதியின் வேட்கை தணிய வேண்டுமானால் செய்த கொலைகளின்
அளவுக்காவது குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உரிய
பரிகாரமும் வழங்கப் படவேண்டும்.
என்று தணியும் நீதியின் வேட்கை?
அதிபக்குவமாக
இவ்வுலகைப் படைத்துள்ள இறைவன் நீதி செலுத்துவதிலும் பக்குவமானவன் என்பதை பரந்த
நோக்கோடும் பகுத்தறிவோடும் ஆராய்பவர்கள் கண்டறிவார்கள். இந்தக் குறுகிய வாழ்வை ஒரு
பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்குரிய பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ள இறைவன் இந்த
பரீட்சையின் முடிவுகளை அறிவிக்கும் நாள்தான் இறுதித்தீர்ப்பு நாள்.
ஆம்,
இப்பரீட்சைக்கூடம் ஒருநாள் மூடப்படும். அதற்குப் பிறகு
மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது இப்பரீட்சையின் முடிவுகள்
வெளியாகும். அன்று முதல்மனிதன் முதல்
இறுதிமனிதன் வரை அனைவரும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள். அன்றுதான்
இறுதித் தீர்ப்புநாள் ஏற்படுத்தப் படுகிறது. யார் பரீட்சையில் வெற்றி பெறுகிறார்களோ
அவர்களுக்கு சொர்க்கமும் தோல்வியுறுவோருக்கு நரகமும்
விதிக்கப்படும்.
= ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185..)
ஆம், அன்றுதான் நீதியின் வேட்கை முழுமை பெறும். அன்று இவ்வுலகில் செய்யப்பட்ட அனைத்து அநீதிகளும் மோசடிகளும் மனித உரிமை மீறல்களும் ஒன்றுவிடாமல் வெளிப்படும். அவை யாருமே பார்க்க முடியாது என்று நினைத்து இரகசியமாக செய்யப்பட்டவையானாலும் சரியே. தட்டிக் கேட்பதற்கு யாருமே இல்லை என்ற மமதையில் அதிகாரம் கொண்டவர்கள் பலவீனமானவர்கள் மீது தொடுத்த அத்துமீறல்கள் ஆனாலும் சரியே. அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அனைவருக்கும் அவரவர் உரிமைகள் முழுமையாக மீட்டப்படும். எந்த அளவுக்கு என்றால் ஒவ்வொரு சின்னஞ்சிறு உரிமைமீறல்களும் கணக்கு தீர்க்கப்பட்டுவிடும்.
நியாயத் தீர்ப்பு நாளில் (பறித்த) உரிமைகளை உரியவர்களிடம் நீங்கள் வழங்கியாக வேண்டும். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆட்டிடம் கணக்குத் தீர்க்கப்படும் என்பது நபிமொழி.
(நூல்: முஸ்லிம் 4679)

Nice Article. Alhamdulillah!!
பதிலளிநீக்கு