அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
என்கிறது வள்ளுவனின் குறள்.
‘மனைவி
பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை
நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும்
அதுவே; பயனும் அதுவே.’ என்று இதற்கு விளக்கமளித்து இருக்கிறார் சாலமன் பாப்பையா
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு
அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை என்கிறார் கலைஞர்.
செய்யுள்களிலும் கவிதைகளிலும்
வர்ணிக்கப்படும் இல்வாழ்க்கை உண்மையில் அவ்வாறு பண்போடும் பயனோடும் அமைய வேண்டுமானால்
அதற்கு முறையான இறையச்சமும் மறுமைக் நம்பிக்கையும் அங்கு கற்பிக்கப்பட வேண்டும்.
நாத்திகமும் முரண்பாடான தெளிவில்லாத கடவுள் கொள்கைகளும் அதற்கு அறவே உதவாது என்பது
தெளிவு..
முறையான
இறையச்சமும் மறுமை நம்பிக்கையும்
மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக அவனுக்குள் இறையச்சம்
இருக்கவேண்டும். அதாவது என்னைப் படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான். இன்று நாட்டில் உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வருவதன் விளைவாக மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கை
மூலம் இந்த அபாயகரமான போக்கைத் தடை செய்கிறது.
நபியே நீர் கூறுவீராக! “இறைவன்- அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும்
யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)
இவ்வாறு இறைவனின்
தன்மைகளைத் தெளிவாக போதித்து அவனை மட்டுமே மனிதன் வணங்கவேண்டும் என்றும் அவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வழிபட வேண்டும்
என்றும் கற்றுக் கொடுக்கிறது. அத்துடன் இவ்வுலக வாழ்வின் நோக்கம் மனிதனைப்
பரீட்சிப்பதே என்பதையும் இவ்வுலகில் மனிதன் செய்யும் செயல்களுக்கு மறுமையில்
விசாரணை உண்டு என்பதையும் மறுமையில் நல்லோர்க்கு சொர்க்கமும் தீயோர்க்கு நரகமும்
காத்திருக்கிறது என்பதையும் அறிவுப்பூர்வமாக கூறுகிறது.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக்
கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச்
சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து
விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை
மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அந்த நிரந்தர
இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தை அடைவதை இலட்சியமாகக் கொண்டு இறைவன் விதிக்கும்
ஏவல் விலக்கல்களைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும் அவை வீண்போவதில்லை
என்ற நம்பிக்கையை தனி மனித ஒழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம்.
இந்த அடிப்படையை
அனைவரும் பேணி வாழ்ந்தால் அங்கு ஆரோக்கியமான சமூகம் அமையும். சுயகட்டுப்பாடு,
பொறுப்புணர்வு, சகிப்புத்தன்மை, தியாகம் போன்ற அரிய பண்புகள் தனிநபர்களில்
உருவாகும். பரஸ்பர அன்பு, உரிமை மற்றும் கடமை பேணுதல், விட்டுகொடுத்தல், கூட்டுறவு
போன்றவற்றால் குடும்ப உறவுகள் செழிக்கும்.
அவ்வாறு அமைய
வேண்டுமானால் நாம் காலதாமதமின்றி மக்களின் சீர்திருத்தத்திற்கான வழிகளை
கைகொள்ளவேண்டும். அதற்கு மேற்கண்ட என்ற உறுதியான நம்பிக்கைகளை மனித மனங்களில்
நிலைநாட்டி இறைவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழும் பண்பை சிறுவயது முதலே
மக்களுக்குக் கற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும். அப்போதுதான் அங்கு பெற்றோரை
மதிக்கும் பிள்ளைகளும், பொறுப்புணர்வு உள்ள பெற்றோர்களும், கணவனை மதிக்கும்
மனைவிகளும் மனைவியை மதிக்கும் கணவன்மார்களும் சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும்
சமூகமும் உருவாகும். பூமியே சிறந்த ஒரு வாழ்விடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
--------------------
இஸ்லாம் என்றால் என்ன?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
--------------------
இஸ்லாம் என்றால் என்ன?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக