இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

நபிகளாரை அழவைத்த நபித்தோழர்!


 நபிகளாரை அழவைத்த நபித்தோழர்!

நபிகளார் தோழர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இஸ்லாம் வருவதற்கு முந்தைய காலமான அறியாமைக் காலத்து நிகழ்வுகள் பற்றிய பேச்சு எழுந்தது. ஒரு தோழர் தன் அடி மனதில் உறைந்து கிடந்த நிகழ்வைச் சொல்லத் தொடங்கினார்.
“இறைத் தூதரே! அந்த அறியாமைக் காலத்தில் என் மனைவி நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த நேரம். நான் வியாபார விஷயமாகப் பயணம் செல்ல வேண்டிய கட்டம். என் மனைவியிடம், ‘ஆண் குழந்தை பிறந்தால் பத்திரமாகப் பார்த்துக் கொள். பெண் குழந்தை பிறந்தால் கொன்று புதைத்து விடு’ என்று சொன்னேன். பிறகு நான் பயணத்தில் இருந்து திரும்பியபோது மனைவி என்னிடம், ‘நமக்குப் பெண் குழந்தை பிறந்தது. நல்லவேளை அது இறந்து விட்டது’ என்று சொன்னாள்.
சில ஆண்டுகள் சென்றன. ஒருநாள் என் வீட்டிற்கு ஒரு அழகான பெண் குழந்தை வந்து விளையாடுவதைக் கண்டு, ‘யாரவள்?’ என்று திடுக்கிட்டுக் கேட்டேன். அதற்கு என் மனைவி, ‘பக்கத்து வீட்டுக் குழந்தை’ என்றாள். அந்தக் குழந்தை என்னிடம் பழகத் தொடங்கியது. குழந்தைக்கும் எனக்கும் இடையே இருந்த பாசத்தைக் கண்ட என் மனைவி, ‘இந்தக் குழந்தை மீது உங்களுக்கு அவ்வளவு பாசமா?’ என்று கேட்டாள். ‘ஆம்.. இவள் என் உயிரல்லவா?’ என்றேன். அப்போது என் மனைவி, ‘அன்று நான் சொன்னது பொய். இது பக்கத்து வீட்டு குழந்தை அல்ல. நம் குழந்தைதான். உங்களுக்குப் பயந்து நான் அப்படிச் சொன்னேன்’ என்றாள்.
நான் மகிழ்ச்சியில் நனைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அறியாமைக் காலத்து வெறித்தனத்தில் நான், அந்தக் குழந்தையைக் கொல்ல முடிவு செய்தேன். ஆனாலும் பாசம் என்னை விடவில்லை. பாசத்திற்கும், அறியாமைக் கால சிந்தனைகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் பாசம் தோற்றது.
ஒருநாள் என் அன்பு மகளைப் பாலை வெளிக்கு அழைத்துச் சென்றேன். என்னுடன் அவள் விளையாடிக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் இருந்தாள். ஒரு இடத்தில் குழி தோண்டினேன். பாலை வனத்தின் மணல் என் தாடியில் பதிந்தன. அந்தச் செல்ல மகள் ஏதும் அறியாமல், தன் பிஞ்சு விரல்களால் என் தாடியில் உள்ள மணலைத் தட்டி விட்டாள். இறைத்தூதரே! நான் கல்நெஞ்சக்காரன். என் மகளைக் குழியில் தள்ளி மணலைப் போட்டு, உயிரோடு புதைத்து விட்டேன்” என்று நபித் தோழர் சொன்னபோது, நபிகளார் அழ ஆரம்பித்து விட்டார்.
அருகில் இருந்த தோழர்கள், அந்தத் தோழரைப் பார்த்து, “என்ன காரியம் செய்தீர்? நபிகளாரையே அழச் செய்து விட்டீரே!” என்றபோது, நபிகள் நாயகம், “அந்தக் காலம் மறைந்து விட்டது. நாம் பாவமன்னிப்பைத் தேடி மீண்டு விட்டோம்” என்று கூறியவண்ணம் தனது தாடி நனையும் அளவு அழுதார்கள்.
பின்னர் நபிகள் நாயகம் கூறினார்கள்: “நாம் எவ்வளவு கல் நெஞ்சகர்களாய் இருந்துள்ளோம். (இஸ்லாத்தின் வருகைக்கு முந்தைய) அறியாமைக் காலத்தில் செய்த செயல்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுவான். ஆகவே உமது நற்செயல்களை புதுப்பித்துக் கொள்வீராக!” என்று அத்தோழரைப் பார்த்துக் கூறினார்கள்.
நபிகளார் செய்த மாபெரும் புரட்சி!
---------------------------------
நபிகள் நாயகம் தாம் வாழ்ந்த காலத்திலேயே பெண் குழந்தைகளைப் புதைக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அன்று அவர் எடுத்த நடவடிக்கை காரணமாக பதினான்கு நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக கோடிக்கணக்கான பெண் சிசுக்களும் கருக்களும் பெண் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். மானுட வரலாற்றிலேயே ஒரு ஈடிணையில்லாத புரட்சியல்லவா இது!
= மறுமையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையிடம், “எந்தக் குற்றத்திற்காக நீ கொல்லப்பட்டாய்?” என்று கேட்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்று திருக்குர்ஆன் வசனம் (81:7-9) எச்சரிக்கிறது.
= "நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பாவமாகும்." (திருக்குர்ஆன் 6:151)
===================

வெள்ளி, 13 அக்டோபர், 2023

நபிகள் நாயகம் - வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள் மின்னூல்


நபிகள் நாயகம்
- வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள் 
பொருளடக்கம்:
இறைத்தூதர்கள் ஏன் வரவேண்டும்? -43
இறுதி இறைத்தூதரே முஹம்மது நபி (ஸல்) -6
மனங்களை வென்ற மாமனிதர்! -7
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் சுருக்கமான வரலாறு- 8
போதனைகள்:
நபிகள் நாயகம் அவர்களின் இறுதிப்பேருரை -20
நபிகளார் போதித்த மார்க்கம் - 27
இறுதித் தூதருக்கு அருளப்பட்ட இறைமறை -30
திருக்குர்ஆனின் மாறாத்தன்மை 31
திருக்குர்ஆனின் தனித்தன்மைகள் 32
இறைத்தூதர்களிடையே நபிகளாரின் தனிச்சிறப்புகள் -35
சாதனைகள்
உலக வரலாறு போற்றும் ஒப்பிலா சாதனையாளர் !-38
நபிகளார் நிகழ்த்திய உலக சாதனைகள்!-340
ஆன்மீக சுரண்டலிலிருந்து உலகைக் காக்கும் சாதனை!-41
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு உலகை இணைத்தவர்!-43
கோடிக்கணக்கான பெண் சிசுக்கொலைகளைத் தடுத்த சாதனையாளர்! -45
பெண்ணுரிமைகளைப் பெற்றுத்தந்த உலக சாதனை!-48
முடியாட்சிக்கு முடிவுகண்ட மாமனிதர்!-51
விமர்சனங்கள்
சத்தியத்துக்கு எதிரான பரிகாசங்கள் – அன்றும் இன்றும்! 53
நூற்றாண்டுகள் கடந்த விமர்சனங்களின் பின்னணி -55
அதர்மவாதிகளின் தொடரும் பயம்- 59
குறை காண முடியாத வாழ்க்கை!-61
விமர்சகர்களைப் புரிந்து கொள்வோம்!-63
சரி எது? தவறு எது? – பிரித்தறியும் அளவுகோல்! -65
நபிகளாரின் மணவாழ்க்கை 
    -குற்றச்சாட்டுகளுக்கு பதில்கள் -68
================ 

வியாழன், 12 அக்டோபர், 2023

தற்கொலையில் தவறுண்டா?


 #தற்கொலையில்_தவறுண்டா?

இன்று படித்தவர்களும் பட்டதாரிகளும் உழைத்து பாடுபட்டு உயர் பதவி அடைந்தவர்களும் திடீரென்று அல்லது பொசுக்கென்று தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதை சகஜமாகக் கண்டு வருகிறோம்.
இவர்களை நம்பிய பெற்றோர்களை, உறவினர்களை, பிள்ளைகளை, இவர்களைச் சார்ந்த மக்களை, வேலைசெய்யும் நிறுவனங்களை, வாடிக்கையாளர்களை, மாணவர்களை எல்லாம் துச்சமாக அலட்சியப் படுத்திவிட்டு இவர்கள் செய்துகொள்ளும் தற்கொலை அனைவரையும் சங்கடத்திலும் மீளாத்துயரிலும் ஏமாற்றத்திலும் ஆக்கி விடுகிறது.
தற்கொலை செய்து கொண்டவர் இவை ஒவ்வொன்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அவற்றை எல்லாம் தட்டிக் கழித்துவிட்டு அவர் பொசுக்கென போய்விட்டாலும் படைத்தவன் அவரை விடுவதாயில்லை.
மற்ற கொள்கைகளும் மதங்களும் இதை அலட்சியமாகக் கருதக்கூடும். ஆனால் உண்மை இறை மார்க்கம் இஸ்லாம் இந்த விஷயத்தில் தெளிவான வழிகாட்டலைக் கொண்டிருக்கிறது. தற்கொலை கண்டிப்பாக பெரும் பாவம் என்றும் அதற்கு தண்டனைகள் உண்டென்றும் கூறுகிறது.
தற்கொலை பற்றி இறைவன் என சொல்கிறான்?
= உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! (அல்குர்ஆன்2:195)
= உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!- (குர்ஆன் 4:29)
இறைவனின் எச்சரிக்கையையும் மீறி தற்கொலை செய்து கொள்வோரின் நிலை என்ன என்பது பற்றி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுவதையும் பாருங்கள்:
"ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்து கொண்டவர் (மறுமையில்) தீசூழ் நரகிலும் தமது கையில் அந்தக் கூராயுதத்தை வைத்துக் கொண்டு, அதனால் தமது வயிற்றில் தாமே என்றென்றும் முடிவின்றிக் குத்திக் கொண்டே இருப்பார். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகிலும் என்றென்றும் முடிவின்றி விஷத்தைக் குடித்துக் கொண்டேயிருப்பார். மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகில் (மீண்டும் மீண்டும்) தள்ளப் பட்டு, மேலும் கீழும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி
மட்டுமல்ல, #இறுதித்தீர்ப்பு_நாள் இல் அவற்றுக்கான முழு தண்டனையை அவர் அடைவார்.
"மரணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு...செத்துவிட்டால் எல்லாமே முடிந்துவிடும்" என்ற மூடமான சிந்தனைதான் இதற்கு காரணம்.
உண்மையில் மரணம், முடிவில்லா மற்றொரு வாழ்க்கையின் ஆரம்பம். இந்த உலகில் நாம் செய்யும் செயல்கள் தான் அந்த நிரந்தர வாழ்க்கையின் வசதிகளை முடிவு செய்யும் என்ற சிந்தனை முழுமையாக விதைக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற தற்கொலைகளை தவிர்க்க முடியும்.
இடிதாங்கிகளாக வாழும் முஸ்லிம் சமூகம்!
---------------------------------------------------------
முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாகிறார்கள்...வசதியாக வாழ்ந்தவர்கள் துரத்தப்பட்டு அகதிகளாக்கப் படுகின்றனர்..பொருட்கள் சூறையாடப் படுகின்றன.. இருந்தும் முஸ்லிம்களில் பெரும்பாலோர் தற்கொலைகளில் தஞ்சம் புகுவதில்லை! .. காரணம்?
இந்தக் குறுகிய வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இந்தத் தற்காலிக உலகத்தை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் இறைவன் படைத்துள்ளான் என்ற அடிப்படை உண்மை சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் நிச்சயம் சோதிக்கப்படுவோம். இறுதி வெற்றி பொறுமையுடன், சோதனைகளை எதிர்கொண்டவர்களுக்கே என்ற சிந்தனை தாய்ப்பாலோடு சேர்த்து உள்ளத்தில் விதைக்கப் படுகிறது.
"மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!" (திருக்குர்ஆன் 2:155)
இறைவனிடமே மீளுதல் என்ற அஸ்திவாரம்
---------------------------------------------------------
இறைவன் மீதும் மறுமை மீதும் கொள்ளும் உறுதியான நம்பிக்கையின் காரணமாக வாழ்க்கையில் எத்தனை பெரிய ஆபத்துகள் நேரிட்டாலும் சோதனைகள் அலைக் கழித்தாலும் இவர்கள் மனம் தளருவதில்லை. மறுமையில் இறைவனிடம் மீள இருக்கிறோம், இவற்றிற்கான பரிசுகள் நிரந்தரமான சொர்க்கச்சோலைகளின் வடிவில் காத்திருக்கின்றன என்ற ஆழமான நம்பிக்கை வாழ்க்கையை மன உறுதியோடு எதிர்கொள்ளத் துணைபோகின்றது.
"அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்! (திருக்குர்ஆன் 2: 156, 157
==============
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

திங்கள், 9 அக்டோபர், 2023

திருக்குர்ஆன் நற்செய்திமலர் - ப்ரோமோ

இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை போன் நம்பர் சேர்த்து பதிவு செய்யுங்கள்.. இந்தியாவில் மட்டுமே இந்த சலுகை.. இலங்கைவாசிகள் www.quranmalar.com என்ற இந்த தளத்தில் இதழின் pdf அவ்வப்போது வாசிக்கலாம்

வியாழன், 5 அக்டோபர், 2023

மனிதகுல ஒற்றுமையை மறுக்கும் ஆத்திகர்கள்


=
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம், இன்னும், ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான், நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) நன்கறிந்தவன், நன்குணர்பவன். (திருக்குர்ஆன் 49:13)

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நாமறிந்த தொன்மையான முழக்கம். அனைத்து மனித குலமும் ஆதம் என்ற முதல் மனிதர் மற்றும் அவரது துணைவி ஏவாள் (ஹவ்வா) இவர்களின் பின்தோன்றல்களே என்பது அனைத்து ஆப்ரஹாமிய (யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய) மதங்களும் கூறும் பொதுவான கருத்து. ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின்னால் சில இடைத்தரகர்கள் தங்கள் மனம்போன போக்கில் இறைவேதங்களில் அடங்கியிருந்த உண்மைகளை மறைக்கவும் திரிக்கவும் செய்தார்கள். மனிதன் சக மனிதனுக்கு சமமே மற்றும் சகோதரனே என்ற கருத்தை வன்மையாக மறுத்தார்கள். சுயநல ஆதிக்க சக்திகளுக்கு துணை போனார்கள்.

அதனால் உலகெங்கும் நலிந்த நாடுகளை தங்கள் ஆயுத பலத்தால் கீழடக்கி அந்நாட்டு வளங்களைக் கொள்ளையடித்த காலனி ஆதிக்க சக்திகளுக்கு குற்ற உணர்வே சற்றும் எழுந்ததில்லை. ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற கண்டங்களில் வசித்த பழங்குடியினரும் அப்பாவிகளும் சக மனிதர்களே – தங்களைப் போன்ற உணர்வுகள் கொண்டவர்களே- என்ற சகதாபம் அவர்களுக்கு சற்றும் எழவில்லை. எனவே நிராயுதபாணிகளாக நின்ற அவர்களை இலட்சக்கணக்கில் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தார்கள். ஆப்பிரிக்காவின் அப்பாவிக் கறுப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து தங்கள் காலனி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்றார்கள். இலாபம் ஈட்டினார்கள்.

நூற்றாண்டுகளாகத் தாங்கள் செய்து வந்த மனித உரிமை மீறல்களுக்கும் கொடுமைகளுக்கும் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோ பாவங்களுக்கு இறைவனிடம் கடுமையான தண்டனைகள் உள்ளன என்ற அச்சமோ அவர்களுக்கு துளியும் இருக்கவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்ககூடும்?

இறைவேதங்களில் இனவெறி

காலனி ஆதிக்க கொடுமைகளுக்கு தலைமை வகித்தவர்கள் யூதர்கள். இந்தியாவை காலனிப்படுத்தி ஆண்டுகொண்டிருந்தது ஆங்கிலேயர்கள் அல்லது வெள்ளையர்கள் என்று பொதுவாக அறியப்பட்டாலும் ஒரு தனியார் வியாபாரக் குழுமம்தான் அப்போதைய ஆங்கிலேய அரசின் ஆதரவோடு அதை நிகழ்த்திக் கொண்டு இருந்தது. நமக்குத் தெரிந்த கிழக்கிந்திய கம்பெனி (East India Company) ரோத்சைல்ட் (Rothchild) என்ற யூத குடும்பத்தின் உடமையாக இருந்தது. 1760 களில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இயங்கி வந்த பன்னாட்டு வங்கிக் குழுமங்களின் சொந்தக்காரர்களாக விளங்கியது இந்த ரோத்சைல்ட் குடும்பம்.

யூத இனம் என்பது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பது இவர்களின் வலுவான நம்பிக்கை. இவர்களைப் பொறுத்தவரையில் யூத இனம் இறைவனுக்கு மிக நெருங்கிய - கண்ணியம் வாய்ந்த - இனம். வானவர்கள் யாருக்கும் கூட கிட்டாத உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். தங்கள் இனத்தைத் தவிர மற்றவை அனைத்தும் தாழ்ந்தவையே, அவை தங்களுக்கு அடிமைப்பட்டுத்தான் அல்லது தங்கள் தயவில்தான் வாழவேண்டும், யூதரல்லாத அனைத்து மக்களும் இவர்களுக்கு பணிந்து சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பன போன்ற கருத்து இவர்களால் புனிதமாகப் போற்றப்படும் வேதங்களில் திணிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.

தல்முத் (Talmud)
யூத வேதஞ்சார்ந்த சட்ட நூலான தல்முத் (Talmud) மிக மிகப் புனித சாசனமாகக் யூதர்களால் கருதப்படுகிறது. வேத நூலான பழைய ஏற்பாட்டை (Old Testament) விட மிக மேலாக மதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஹீப்ரு மொழியில் உள்ளது. யூதர்கள் யூதரல்லாதவர்களோடு எவ்வளவு கடுமையான போக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதை இவர்களின் புனித சாசனம் கற்றுக்கொடுக்கிறது. உதாரணமாக சிலவற்றை கீழே காணலாம். யூதரல்லாத மக்களை அதாவது புறஜாதியினரை (gentiles) ‘கோயிம்’ என்ற இழிசொல் கொண்டே இவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

“All children of the ‘goyim’ (Gentiles) are animals.” (Yebamoth 98a)
= புற ஜாதியினரின் மக்கள் அனைவரும் விலங்குகளே (Yebamoth 98a)

= ஒரு புறஇனத்தான் யூதனைத் தாக்கினால் அவனுக்கு மரணமே தண்டனை. ஒரு யூதனை தாக்குவது என்பது கடவுளின் பார்வையில் கடவுளை தாக்குவது போன்றதாகும். (Sanhedrin 58b).

= புறஇனத்தினர் அனுபவிக்கும் அனைத்து அருட்கொடைகளுக்கும் இஸ்ரேலுக்கு இறைவன் வழங்கிய தனி சிறப்பே காரணமாகும். (Yebamoth 63a).

= ஒரு யூதன் புறஇனத்தான் செய்யும் வேலைக்குக் கூலி கொடுக்க வேண்டியதில்லை. (Sanhedrin 57a)

= புறஇனத்தான் ஒருநாள் முழுக்க ஓய்வெடுத்தால் அவன் கொல்லப்படவேண்டும். (Sandendrin 58b).

= புற இனத்தானை உபசரிப்பது கடவுளை அதிருப்திப் படுத்தும் செயலாகும் (Sanhendrin 104a).

= புறஇனத்தானுக்கு சட்டம் கற்பிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். (Hagigah 13a).

= சட்டம் கற்கும் புறஇனத்தான் கொல்லப்பட வேண்டியவன். (BT Sanhedrin 59a)


================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

புதன், 4 அக்டோபர், 2023

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 23 இதழ் PDF


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 23 இதழ்

இதழ் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை எண்ணுக்கு SMS மூலம் அனுப்புங்கள் - தனி இதழ் விலை ரூ. 10 - நான்கு மாத சந்தா இலவசம்.   

பொருளடக்கம்:

மானுட சமத்துவத்தை பறைசாற்றும் வேதம்-2

கட்டாயம் படிக்க வேண்டிய வேதம்! -4

சிறுவருக்கு நபிகளாரின் அறிவுரை! -6

எங்களுக்கும் வேதங்கள் வந்துள்ளனவே? -7

திருக்குர்ஆன் மாற்றப்படவில்லையா? -9

கருணையாளனின் அரவணைப்பில் நபிகளார் -11

நபியவர்களின் அழகிய செயல்பாடு -15

குழந்தைகளுக்குத் தேவை வாழ்க்கை பற்றிய கல்வி! -17

மனிதகுல ஒற்றுமையை மறுக்கும்  ஆத்திகர்கள் ! -21

மனஅழுத்தமும் தற்கொலையும் -22

செவ்வாய், 3 அக்டோபர், 2023

அதர்மப் போரும் தர்மத்திற்கான போரும்!

 காட்சி ஒன்று

"ஜனாதிபதி அவர்களே...! நேற்று இரவு நன்றாகத் உறங்கினீர்களா?" - இது செய்தியாளர்களின் கேள்வி.

"ஆமாம்...! எப்போதையும் விட நேற்று அமைதியாகத் தூங்கினேன். எங்கள் பரிசோதனை வெற்றி பெற்று விட்டது. இந்த உலகத்தில் நாங்கள்தான் இப்போது பலம் வாய்ந்தவர்கள்." - இப்படி பதில் சொன்னவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன்.

இதற்கு முதல் நாள்தான் ஜப்பான் நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. நாகசாகி, ஹிரோஷிமா எனும் இரு நகரங்களும் வரைபடத்திலேயே இல்லாமல் ஆகிவிட்டன. எப்படிச் செத்தோம் என்று அறியாமலேயே இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார்கள்.

எல்லா வகையான போர் தர்மங்களையும், சர்வதேச சட்டங்களையும், மனித நாகரிகங்களையும் மீறி, உலகிற்கு தன் வல்லமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நடத்தப்பட்ட கொடூரம் இது...!

அன்று வீசப்பட்ட அணுகுண்டுகளின் கதிர்வீச்சுக்களால் இன்றைக்கும் அந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நுரையீரல் கோளாறுகள், புற்றுநோய், பிறவியிலேயே ஊனம் போன்ற பல நோய்கள் வாட்டி வருகின்றன.

இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்த பிறகுதான் ஜனாதிபதி நிம்மதியாக உறங்கினாராம்...!

===================

காட்சி இரண்டு:

அது ஒரு போர்க்களம். அந்தக் களத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாகச் செய்தி வந்தது. அந்தச் செய்தியைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துடித்துப் போய் விட்டார்கள்.

அந்த இடத்துக்கு விரைந்தார். அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தார். பிறகு முகம் சிவக்க, தம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் கேட்கிறார்கள். "இவள் போர் செய்யவில்லையே! பிறகு ஏன் இவள் கொலைக்கு ஆளானாள்? "இவ்வாறு கேட்டு, போர் சமயத்திலும் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

மனிதத் தன்மைகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும் கொடூரப் போர்க்களத்திலும் இஸ்லாம் மானுட நாகரிகத்தைக் கடைப்பிடித்தது. 1400 ஆண்டுகளுக்கு முன்பே அது மிக உயர்வான போர் ஒழுங்கு முறைகளை

வகுத்துத் தந்து விட்டது.

நபிகள் நாயகம் (ஸல்...) அவர்கள் கூறினார்கள்:

* போரில் பங்கு கொள்ளாத வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோரைக் கொள்ளாதீர்கள்.

* மடங்களில் உள்ள துறவிகளையும், வணக்கத்தலங்களில் இருக்கும் மக்களையும் கொல்லாதீர்கள்.

* நெருப்பால் தண்டனை வழங்குவதற்கு நெருப்பின் அதிபதியைத் தவிர (இறைவனைத் தவிர) வேறு யாருக்கும் உரிமை கிடையாது.

* விளை நிலங்களையும், மக்கள் வாழும் பகுதிகளையும் அழிக்காதீர்கள்.

இப்படிப் பல கட்டளைகள், நெறிமுறைகள்!

இவை எல்லாவற்றையும் விட திருக்குர் ஆனில் ஓர் அருமையான வசனம் உண்டு. மனித உயிர்களை இஸ்லாம் எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை அதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

" நியாயமின்றி ஒருவன் மற்றவனைக் கொலை செய்து விட்டால் அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். எவன் ஒருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போலாவான்!"

(திருக்குர் ஆன் - 5:32)

அநியாயமாக மனித இரத்தம் சிந்தப்படுவதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால், தவிர்க்க முடியாத நிலையில் போர் மேகங்கள் சூழுமேயானால் அப்போதும் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக உள்ளது.

===================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!