கடந்து சென்றது இன்னொரு நவம்பர் 14. இந்த தினம் நம் நாட்டில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம். விரைவில் இந்த தினம் கொண்டாடப்படாமல் போகலாம்.. ஆம் குழந்தைகள் இருந்தால்தானே கொண்டாடுவதற்கு! உலகெங்கும் நடைபெற்று வரும் மக்கள் தொகை வீழ்ச்சி அல்லது சுருக்கம் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
இப்படிப்பட்ட அவல நிலை
உருவாகுவதற்க்குக் காரணம் இவ்வுலகைப் பற்றிய நமது சுயநலக் கண்ணோட்டம்தான். ரயிலில்
முதல் ஸ்டேஷனில் ஏறி இடம் பிடித்தவர்கள் ரயிலே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது
போல நடந்துகொள்வதை நாம் காணலாம். இடம் கிடைத்தவுடன் தங்களை அடுத்த காலி இருக்கைகளில்
எல்லாம் தங்கள் உடமைகளைப் பரப்பியும் காலை நீட்டியும் அடைத்துக் கொள்வதை அன்றாடம்
காணலாம். அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் யாரும் ஏறவும் கூடாது, ஏறுவோர் தங்கள் சுகங்களைக் கெடுத்துவிடவும் கூடாது! - இந்த மோசமான மனோபாவம்தான் நம்மில்
பெரும்பாலோருக்கும் உள்ளது. வரும் தலைமுறைகள் எக்கேடு கேட்டுப் போனால் என்ன,
நாம் சுகமாக வாழ்ந்தால் போதும். என்ற கொடிய
எண்ணம்தான் நம்மை நம் குழந்தைகளையே கொல்ல வைக்கிறது.
இன்று நடைபெறும்
இயந்திரமய வாழ்க்கை நடுவே ஆணும் பெண்ணும் பொருளாதாரத்தை சேர்ப்பதில் மிகுந்த
ஈடுபாடு காட்டுகிறார்கள் தங்கள் பாலியல் தேவைகளை காதல், கள்ளக்காதல், விபச்சாரம், டேட்டிங்,
லிவிங் டுகெதர் போன்ற சமூகப் பொறுப்பற்ற காரியங்கள் மூலம் நிறைவேற்றிக்
கொள்கிறார்கள். தானுண்டு தன் சம்பாத்தியமுண்டு என்ற எண்ணத்தோடு சுயநல வாழ்க்கை
வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இன்று திருமணங்கள் அபூர்வ நிகழ்வாக மாறி உள்ளன. அப்படியே
திருமணங்கள் ஆனாலும் அவர்களுக்கு குழந்தை பிறப்பில் ஆர்வம் இல்லை. மீறிப் பிறந்தாலும்
குழந்தைகளை சுமையாகவே கருதுகிறார்கள், ஈடுபாடோடு வளர்ப்பதில்லை. கருக்கொலை
சிசுக்கொலை குடும்ப கட்டுப்பாடு என எல்லா வகையிலும் குழந்தைகளின் எண்ணிக்கையை
குறைக்க முற்படுகிறார்கள்.
சமூகப் பொறுப்பற்ற இந்த
செயலில் பெரும்பாலான நாடுகள் விபரீதம் அறியாது கண்மூடித்தனமாக ஈடுபடுவதால் குழந்தை
பிறப்பு விகிதம் குறைந்து ஜப்பான் ஹாங்காங் போன்ற நாடுகள் அழியும் தருவாயில் உள்ளன.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் அந்த நிலை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றன.
இறைவனின் எச்சரிக்கை:
ஆனால் இவ்வுலகின் உண்மையான சொந்தக்காரனான இறைவனோ
இக்கொடிய செயல் தண்டனைக்குரியது என்கிறான். தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில்
இச்செயலைத் தடுப்பதைப் பாருங்கள்:
“வறுமைக்கு அஞ்சி
உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்”; (திருக்குர்ஆன் 17:31)
பெண் குழந்தைகளின்
முக்கியத்துவம்
குழந்தைகளை கொல்பவர்கள்
கூட குறிப்பாக பெண் குழந்தைகளை அவர்கள் மகத்துவத்தை உணராது கொன்று வருகிறார்கள்.
மக்கள்தொகை பெருக விளைநிலங்களைப் போன்றவர்கள் பெண்கள். அவர்களை கருவிலேயே கத்திகள்
பதம் பார்த்தால் வேறு கொடூரம் இருக்க முடியுமா?
- ஆய்வுகள் படி இந்தியாவில் 2000–2019 காலத்தில் தினமும் சுமார் 1,200–2,000 பெண் குழந்தைகள் கருக்கலைப்பு (sex-selective feticide) மூலம் “காணாமல் போயுள்ளனர்”.
உலகளவில்
- முக்கிய ஆய்வுகள் படி ஒவ்வொரு நாளும் சுமார் 1,300க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பாலினத் தெரிவுச்
செயல் காரணமாக (sex-selective abortion / feticide) “missing” என்று கணக்கிடப்படுகின்றன.
- மற்ற விரிவான மதிப்பீடுகள் இதை பல ஆயிரம் பேர்
வரை உயர்த்திக்
காட்டுகின்றன.
“உயிர்கள் மீண்டும்
(உடல்களுடன்) சேர்க்கப்படும் போது, என்ன பாவத்துக்காக
கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது, (உங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள்! )” (திருக்குர்ஆன்
81:7-9)
எனவே திருத்த
வேண்டியவற்றைத் திருத்திக் கொள்வோமாக!
================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக