இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- பிப்ரவரி 2026

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- பிப்ரவரி 2026

 திருக்குர்ஆன் நற்செய்தி மலர்- பிப்ரவரி 2026

உலக நடைமுறைகளை திருத்திய இஸ்லாமிய மன மாற்றம் -2
சமத்துவம் – உலக அமைதிக்கான அஸ்திவாரம் -6
அடிமைத்துவத்தை உடைத்தெறிந்த இறையச்சம் -8
சுயமரியாதையின் அடித்தளமும் இறையச்சமே! -10
பெண்ணை வாழவிடாமல் மனிதகுலம் தழைக்காது! -12
பாவங்களை மன்னிக்கக் காத்திருப்பவன்! -14
இன்றைய செய்திகளும் இறைவனின் வழிகாட்டலும் -15
கேள்விகள் பல – விடை தெரிந்ததே! -17
புதிய கேள்வி -பதில் பகுதி -20
ஆசிரியர் - வாசகர் நேரடி சந்திப்பு நிகழ்ச்சி.-21


ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

முடிவுக்கு வரும் குழந்தைகள் தினங்கள்


 கடந்து சென்றது இன்னொரு நவம்பர் 14. இந்த தினம் நம் நாட்டில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம்.  விரைவில் இந்த தினம் கொண்டாடப்படாமல் போகலாம்.. ஆம் குழந்தைகள் இருந்தால்தானே கொண்டாடுவதற்கு! உலகெங்கும் நடைபெற்று வரும் மக்கள் தொகை வீழ்ச்சி அல்லது சுருக்கம் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

இப்படிப்பட்ட அவல நிலை உருவாகுவதற்க்குக் காரணம் இவ்வுலகைப் பற்றிய நமது சுயநலக் கண்ணோட்டம்தான். ரயிலில் முதல் ஸ்டேஷனில் ஏறி இடம் பிடித்தவர்கள் ரயிலே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது போல நடந்துகொள்வதை நாம் காணலாம். இடம் கிடைத்தவுடன் தங்களை அடுத்த காலி இருக்கைகளில் எல்லாம் தங்கள் உடமைகளைப் பரப்பியும் காலை நீட்டியும் அடைத்துக் கொள்வதை அன்றாடம் காணலாம். அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் யாரும் ஏறவும் கூடாது, ஏறுவோர் தங்கள் சுகங்களைக் கெடுத்துவிடவும் கூடாது!  - இந்த மோசமான மனோபாவம்தான் நம்மில் பெரும்பாலோருக்கும் உள்ளது. வரும் தலைமுறைகள் எக்கேடு கேட்டுப் போனால் என்ன, நாம் சுகமாக வாழ்ந்தால் போதும். என்ற கொடிய எண்ணம்தான் நம்மை நம் குழந்தைகளையே கொல்ல வைக்கிறது.

இன்று நடைபெறும் இயந்திரமய வாழ்க்கை நடுவே ஆணும் பெண்ணும் பொருளாதாரத்தை சேர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறார்கள் தங்கள் பாலியல் தேவைகளை காதல், கள்ளக்காதல், விபச்சாரம், டேட்டிங், லிவிங் டுகெதர் போன்ற சமூகப் பொறுப்பற்ற காரியங்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். தானுண்டு தன் சம்பாத்தியமுண்டு என்ற எண்ணத்தோடு சுயநல வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இன்று திருமணங்கள் அபூர்வ நிகழ்வாக மாறி உள்ளன. அப்படியே திருமணங்கள் ஆனாலும் அவர்களுக்கு குழந்தை பிறப்பில் ஆர்வம் இல்லை. மீறிப் பிறந்தாலும் குழந்தைகளை சுமையாகவே கருதுகிறார்கள், ஈடுபாடோடு வளர்ப்பதில்லை. கருக்கொலை சிசுக்கொலை குடும்ப கட்டுப்பாடு என எல்லா வகையிலும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்க முற்படுகிறார்கள்.

சமூகப் பொறுப்பற்ற இந்த செயலில் பெரும்பாலான நாடுகள் விபரீதம் அறியாது கண்மூடித்தனமாக ஈடுபடுவதால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து ஜப்பான் ஹாங்காங் போன்ற நாடுகள் அழியும் தருவாயில் உள்ளன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் அந்த நிலை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றன.

இறைவனின் எச்சரிக்கை:

 ஆனால் இவ்வுலகின் உண்மையான சொந்தக்காரனான இறைவனோ இக்கொடிய செயல் தண்டனைக்குரியது என்கிறான். தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் இச்செயலைத் தடுப்பதைப் பாருங்கள்:

“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்”;   (திருக்குர்ஆன் 17:31)

பெண் குழந்தைகளின் முக்கியத்துவம்

குழந்தைகளை கொல்பவர்கள் கூட குறிப்பாக பெண் குழந்தைகளை அவர்கள் மகத்துவத்தை உணராது கொன்று வருகிறார்கள். மக்கள்தொகை பெருக விளைநிலங்களைப் போன்றவர்கள் பெண்கள். அவர்களை கருவிலேயே கத்திகள் பதம் பார்த்தால் வேறு கொடூரம் இருக்க முடியுமா? 

  • ஆய்வுகள் படி இந்தியாவில் 2000–2019 காலத்தில் தினமும் சுமார் 1,200–2,000 பெண் குழந்தைகள் கருக்கலைப்பு (sex-selective feticide) மூலம் “காணாமல் போயுள்ளனர்”.

உலகளவில்

  • முக்கிய ஆய்வுகள் படி ஒவ்வொரு நாளும் சுமார் 1,300க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பாலினத் தெரிவுச் செயல் காரணமாக (sex-selective abortion / feticide) “missing” என்று கணக்கிடப்படுகின்றன.
  • மற்ற விரிவான மதிப்பீடுகள் இதை பல ஆயிரம் பேர் வரை உயர்த்திக் காட்டுகின்றன.

 இந்த தடையையும் மீறி யாராவது இப்பாவத்தைச் செய்தால் அவர்களுக்கு மறுமை நாளில் இவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே இவர்களுக்கு  தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்பதையும் இறைவன் கூறுகிறான்:

“உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது, என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது, (உங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள்! )” (திருக்குர்ஆன் 81:7-9)

எனவே திருத்த வேண்டியவற்றைத் திருத்திக் கொள்வோமாக!

================ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

புதன், 4 பிப்ரவரி, 2026

எல்லா ஃபைல்களும் திறக்கப்படும் நாள்!


நீங்கள் எந்த மதத்தை, நாட்டை, இனத்தை, நிறத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இருந்தாலும் சரி.. உண்மை இதுதான்.. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இது நம்மைப் படைத்த இறைவனுக்கு சொந்தமான உலகம். இங்கு நமது குறுகிய தற்காலிக வாழ்க்கை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைக்கப் பட்டுள்ளது. இதில் இறைவன் நம்மிடம் எவற்றை ஏவுகிறானோ அவை நமக்கும் மனித குலத்திற்கும் நன்மை பயப்பவை. அவற்றை செய்தால் அவை புண்ணியங்களாக இறைவனிடம் பதிவு செய்யப்படுகின்றன. எவற்றை செய்யக்கூடாது என்று நம்மைத் தடுக்கிறானோ அவை நமக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. அவையே பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த வாழ்க்கைப் பரீட்சையில் வென்று மறுமையில் சொர்க்கத்தை நமது நிரந்தர வாழ்விடமாக அடையவேண்டுமானால் நாம் அவனது எவல்-விலக்கல்களை பேணியே ஆகவேண்டும்.
இந்த வாழ்க்கைப் பரீட்சையில் இறைவனால் தடை செய்யப்பட்ட  அந்நிய ஆண்பெண் உறவுகள்,  கள்ளக்காதல், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள், மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு  உள்ளிட்ட ஒழுக்ககேடுகள் அனைத்தும் தண்டனைக்கு உரியவை ஆகும்.  இவை மனிதனின் தனிநபர் வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய தீங்கு விளைவிப்பவை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அவனது தடையை மீறி அவற்றை செய்வதால்  மனிதனுக்கு இங்கு உண்டாகும் தீமைகளை விட மறுமையில் உண்டாகக்கூடிய வேதனைகளும் நரகத்து தண்டனைகளும் அதிபயங்கரமானவை. இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் கூறுகிறது:

= 20:74 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
= 7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
= 78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!


அற்பமான தற்காலிக வாழ்க்கை

இன்று நாம் வாழும் தற்காலிகவாழ்கை என்பது மறுமையோடு ஒப்பிடும்போது மிகமிக அற்பமானதே.
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவன் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த அதாவது சுட்டு விரலை கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (நூல் :முஸ்லிம் 5490)

செயல்களின் பதிவேடு 
இறைவன் கூறுகிறான்:

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7 -9)

இங்கு மனிதன் செய்யும் அத்துமீறல்கள் ஒவ்வொன்றும் தவறாமல் பலவகைகளில் பதிவாகின்றன. இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் பதிவு செய்கின்றனவோ அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. வேறு பலவகையிலும் நமது செயல்களின் பதிவுகள் நடந்து கொண்டிருந்தாலும் இவை ஒன்றே போதுமானவையாக இருக்கும் என்பதை நாம் அறியலாம்.

நமது வினைப் பதிவு இயந்திரங்கள்

இன்று நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் காது, கண், தோல் இவற்றை மறைத்துக்கொண்டு செய்ய முடியாது. நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இந்த உணர்வு நம்மில் எப்போதும் இருக்குமானால் நம்மைப் பாவங்கள் அண்ட வாய்ப்பில்லை.

மேலும், இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)

ஆம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவை அவனுடைய காதுகளும் கண்களும் தோல்களும். ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும் ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும் அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும் இன்றைய அறிவியல் நமக்கு சொல்லித் தருகிறது. இவற்றோடு தோல்களும் நம் செயல்பாடுகளின் பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன என்பது மேற்படி வசனம் எச்சரிக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணையின்போது அவை மனிதனைக் காட்டிக்கொடுக்கும்போது அங்கு நடக்கும் உரையாடலைப் படம்பிடித்துக் கட்டுகிறான் இறைவன்:

41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்;அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
41:22. “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
41:23. ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).

41:24. ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
================= 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்